background img

புதிய வரவு

Showing posts with label AR Rahman. Show all posts

தன்னை அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்தது குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பூரிப்புடன் பேட்டியில் கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமெரிக்காவில் உள்ள மியாமி பல்கலைக்கழகம் டாக்டர்  பட்டம் வழங்க தீர்மானித்தது.
அதையேற்று கடந்த சனிக்கிழமை ரஹ்மான் அமெரிக்கா சென்றார். அங்கு மியாமி பல்கலைக்கழக விழாவில் கலந்து கொண்ட அவருக்கு டாக்டர்  பட்டம் வழங்கப்பட்டது.
பின்னர் அவர் கூறியதாவது: அமெரிக்க ஜனாதிபதியும் அவரது குடும்பத்தினரும் தனிப்பட்ட முறையில் கையெழுத்திட்டு என்னை வெள்ளை மாளிகை விருந்திற்கு வரச்சொல்லி கடிதம் அனுப்பி இருந்தனர்.
இதை கற்பனை செய்துகூட பார்க்கவில்லை. இந்நேரத்தில் எனது வாழ்க்கையில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தி தந்தவர்களை நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன் என்றார்.
எனது தந்தை, தாயார் என் வாழ்க்கையை ஒழுக்க நெறிகளுடன் செம்மையாக அமைத்து தந்தனர்.
கொலிவுட்டில் ‘ரோஜா’ படம் மூலம் எனக்கு முதன்முதலாக வாய்ப்பளித்தவர் மணிரத்னம். இஸ்லாமிய ஞானிகள் என்னை நானே உணர்ந்துகொள்ள வழிகாட்டினார்கள்.
இந்திய ரசிகர்கள் என்னையும், எனது இசையையும் எந்த பாகுபாடும் இல்லாமல் அரவணைத்துக்கொண்டனர்.
அதேபோன்று ஹாலிவுட்டிலும் என்னை ஏற்றுக்கொண்டிருப்பதை உணர்கிறேன் என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார்

எ ஆர் ரஹ்மானுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது மியாமி யுனிவர்சிட்டி- ஒபாமா வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைப்பு: ரஹ்மான் பூரிப்பு

தன்னை அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்தது குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பூரிப்புடன் பேட்டியில் கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமெரிக்காவில் உள்ள மியாமி பல்கலைக்கழகம் டாக்டர்  பட்டம் வழங்க தீர்மானித்தது.
அதையேற்று கடந்த சனிக்கிழமை ரஹ்மான் அமெரிக்கா சென்றார். அங்கு மியாமி பல்கலைக்கழக விழாவில் கலந்து கொண்ட அவருக்கு டாக்டர்  பட்டம் வழங்கப்பட்டது.
பின்னர் அவர் கூறியதாவது: அமெரிக்க ஜனாதிபதியும் அவரது குடும்பத்தினரும் தனிப்பட்ட முறையில் கையெழுத்திட்டு என்னை வெள்ளை மாளிகை விருந்திற்கு வரச்சொல்லி கடிதம் அனுப்பி இருந்தனர்.
இதை கற்பனை செய்துகூட பார்க்கவில்லை. இந்நேரத்தில் எனது வாழ்க்கையில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தி தந்தவர்களை நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன் என்றார்.
எனது தந்தை, தாயார் என் வாழ்க்கையை ஒழுக்க நெறிகளுடன் செம்மையாக அமைத்து தந்தனர்.
கொலிவுட்டில் ‘ரோஜா’ படம் மூலம் எனக்கு முதன்முதலாக வாய்ப்பளித்தவர் மணிரத்னம். இஸ்லாமிய ஞானிகள் என்னை நானே உணர்ந்துகொள்ள வழிகாட்டினார்கள்.
இந்திய ரசிகர்கள் என்னையும், எனது இசையையும் எந்த பாகுபாடும் இல்லாமல் அரவணைத்துக்கொண்டனர்.
அதேபோன்று ஹாலிவுட்டிலும் என்னை ஏற்றுக்கொண்டிருப்பதை உணர்கிறேன் என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார்

ஏற்கனவே 2 ஆஸ்கார் விருது பெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த தடவை 2 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தார். “127 ஹவர்ஸ்” என்ற படத்துக்கு இசை அமைத்ததற்காக சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடல் இசை ஆகிய 2 பிரிவுகளில் அவரை விருதுக்கு பரிந்துரை செய்து இருந்தனர். ஆனால் இந்த இரு பிரிவுகளிலுமே அவருக்கு விருது கிடைக்கவில்லை.

சிறந்த பின்னணி இசை பிரிவில் “தி சோசியல் நெட்வொர்க்” படத்துக்கு இசை அமைத்த டிரன்ட் ரேஸ்னர், ஆட்டிகஸ்ரோஸ் ஆகியோர் ஆஸ்கார் விருதை தட்டி சென்றனர். சிறந்த பாடல் இசை பிரிவில், “டாய் ஸ்டோரி-3” என்ற படத்தில் “வி பிலாங் கு கெதர்” என்ற பாடலுக்கு இசை அமைத்த ரேன்டி நியூமென் விருதை பெற்றார். எ.ஆர்.ரகுமானுக்கு இந்த தடவையும் விருது கிடைக்கும் என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் விருது கிடைக்காதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

“தி பைட்டர்” படத்தில் நடித்த கிறிஸ்டியன் பாலேவுக்கு சிறந்த துணை நடிகர் விருதும் அதே படத்தில் நடத்த மெலிசாவுக்கு லியோ சிறந்த துணை நடிகைக்கான விருதும் கிடைத்தது. சிறந்த வெளிநாட்டு மொழி படத்துக்கான விருதை டென்மார்க் நாட்டை சேர்ந்த “இன் ஏ பெட்டர் வோர்ல்டு” படம் பெற்றது.

2 போட்டிகளிலும் வாய்ப்பு நழுவியது: ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை

முக நூல்

Popular Posts