background img

புதிய வரவு

Showing posts with label Audi q5. Show all posts

மும்பை: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக ஆடி தொடர்நாயகன் விருது வென்ற யுவராஜ் சிங்குக்கு க்யூ5 எஸ்.யூ.வீ., காரை ஆடி கார் நிறுவனம் பரிசாக வழங்கியுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் ஆனது. 28 ஆண்டுகளுக்கு பின் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டுகளும், பரிசுகளும் குவிந்தவண்ணம் உள்ளன.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் சிறப்பாக ஆடி, ஆல்இன்ஆல் அழகு ராஜாவாக வலம் வந்த யுவராஜ் சிங்குக்கு கார் பரிசளிக்கப்போவதாக ஆடி நிறுவனம் அறிவித்தது. கார் பரிசு வழங்கும் விழா விரைவில் நடைபெறும் என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், மும்பையில் நடந்த விழாவில் க்யூ5 எஸ்.யூ.வீ., காரை யுவராஜ் சிங்குக்கு ஆடி நிறுவனம் பரிசாக வழங்கியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ரவிசாஸ்திரி மற்றும் ஆடி இந்தியா தலைவர் மைக்கேல் பெர்ச்சேகேவும் இணைந்து கார் சாவியை யுவராஜ் சிங்கிடம் வழங்கினர்.

ஆடி காரை பரிசாக பெற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜ் சிங்,"28 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி உலக்க்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதை பெருமைப்படுத்தும் விதமாக ஆடி நிறுவனம் காரை எனக்கு பரிசாக வழங்கியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது," என்றார்.

யுவராஜ்சிங்குக்கு வழங்கப்பட்ட க்யூ5 மாடல் சொகுசு எஸ்.யூ.வீ., ரகத்தை சேர்ந்த காராகும். இந்த கார் ரூ.39 லட்சம் மதிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக்கோப்பை கிரிக்கெட்டில் ஜொலித்த யுவராஜுக்கு ஆடி க்யூ5 கார் பரிசு

முக நூல்

Popular Posts