background img

புதிய வரவு

Showing posts with label Earthquake in Japan. Show all posts

டோக்கியோ: ஜப்பானில் மீண்டும் சுனாமி தாக்குதலால் அணு உலைகள் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க கடலில் தடுப்புச்சுவர் கட்டுவதற்காக மூன்று அணு உலைகளில் மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி நிகழ்ந்த சுனாமி தாக்குதலில் புகூஷிமா, டெய்ச்சி அணு உலைகள் வெடித்து சிதறி கதிர்வீச்சை ஏற்படுத்தின. 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாயினர். ஜப்பானில் மொத்தம் 54 அணுஉலைகள் உள்ளன.

இந்நிலையில் சுனாமி போன்று மீண்டும் நிகழாமல் தடுக்கு அந்நாட்டில் மேலும் கடல்கரையை ஒட்டியுள்ள அணு உலைகளில்பாதுகாப்பு குறித்த கூட்டம் நடந்தது. இதில் ஹ‌ேமோகா எனும் மிகப்பெரிய அணு உலை பசிபிக் கடற்கரையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.. இதனை சுனாமி தாக்காதவாறு கடல் மேல் தடுப்புச்சுவர் எழுப்ப முடிவு செய்து அதற்கான கட்டுமானப்பணிகளை துவக்கியுள்ளது. இதற்காக அப்பகுதியில் உள்ள மேலும் இரண்டு அணு உலைகளில் மின் உற்பத்தியை ஜப்பான் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த தடுப்புச்சுவர்கள் இரண்டு வருடங்களில் கட்டிமுடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஜப்பான் பிரதமர் நெளட்டோ கான் கூறுகையில், இத்தகைய தடுப்புச்சுவர்கள் எப்படிப்பட்ட சுனாமி தாக்குதல்களையும் தாங்கும் அளவுக்கு 90 சதவீதம் உறுதியாக இருக்கும் என்றார்.

ஜப்பானில் 3 அணுஉலைகள் நிறுத்தி வைப்பு

கடந்த மாதம் 11-ந் தேதி ஜப்பானின் வடகிழக்கு கடலோரத்தில் உள்ள மியாகிபகுதியில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. இதில் 28 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர். இந்நிலையில் இப்பகுதியில் நேற்று இரவு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.

இதையடுத்து அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். நிலநடுக்கம் காரணமாக வழக்கத்துக்கு மாறாக கடலில் 3 அடி உயரத்துக்கு மேலாக அலைகள் எழும்பின. இதனால் இரவு 11.32 மணியளவில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர் அதிகாலை 1 மணியளவில் அது வாபஸ் பெறப்பட்டது.

இதற்கிடையே, மியாமியை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் 40 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. மியாகி, யமகாடா, அவோமோரி, வ்வட், அகிதா உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நில நடுக்கத்தால் சில இடங்களில் வீடுகள் இடிந்தன. இடிபாடுகளுக்குள் சிக்கி 2 பேர் பலியானார்கள். 100 பேர் படுகாயம் அடைந்தனர்.

மீட்பு பணி நடைபெற்று வருகிறது. நிலநடுக்கத்தின் போது மியாகியில் புல்லட்ரயில் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஜபாரகி பகுதியில் உள்ள அணுமின்நிலையங்கள் பாதிக்கப்பட்டவில்லை. எனவே அவை வழக்கம் போல் இயங்கின. அதே வேளையில் மியாகியில் உள்ள அங்காவா அனுமின் நிலையத்தில் உள்ள 5 அணுஉலைகளில் உலைகள் செயல் இழந்தன. எனவே அவற்றின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

அகிடா, அலோமோதியில் உள்ள அனல்மின் நிலையங்களிலும் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதற்கிடையே ஏற்கனவே ஏற்பட்ட பூகம்பத்தின்போது பாதிக்கப்பட்ட புருஷிமா அணு மின்நிலையத்தில் குளிர் விக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்: 2 பேர் பலி; 100 பேர் காயம்

முக நூல்

Popular Posts