background img

புதிய வரவு

Showing posts with label Monmohan singh. Show all posts

இப்போது நடைபெற்று வரும் மன்மோகன் சிங்கின் ஆட்சி, இதுவரை இல்லாத அளவுக்கு மிகமோசமான ஆட்சி என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தெரிவித்தார்.

மேற்குவங்கத்தில் தேர்தல் கூட்டத்தில் பேசிய பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி,

2008ம் ஆண்டில் ஆட்சிக்கு ஆதரவாக எம்.பி.களை விலைக்கு வாங்கி லஞ்ச, ஊழலை பெரிய அளவில் தொடங்கியது மன்மோகன் அரசு. தொடர்ந்து 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டில் ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் என கிடைத்த இடத்தில் எல்லாம் ஊழல் செய்து, எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு கோடிகளை சுருட்டியது மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு. அரசியல்வாதியாக இல்லாத மன்மோகன் சிங் ஆட்சிக்கு வந்தபோது நான் அவர் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தேன். ஆனால் அவர் மிகமிக மோசமாக ஆட்சி நடத்துகிறார்.

1952ம் ஆண்டில் இருந்து நான் நமது நாட்டில் நடைபெற்று வரும் ஆட்சியை கவனித்து வருகிறேன். இதுவரை நடைபெற்ற ஆட்சிகளிலேயே மிகவும் மோசமானது மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சிதான் என்றார்.

மன்மோகன் ஆட்சி மோசமானது: அத்வானி

புதுடில்லி:"இஸ்ரோ' அனுப்பும் செயற்கைக்கோள்களில் உள்ள "எஸ்-பாண்ட்' டிரான்ஸ்பாண்டர்களை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாக வந்த செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை. இது குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. அப்படியிருக்கையில், வருவாய் இழப்பு என்ற கேள்விக்கே இடமில்லை' என்று, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோ செயற்கைக்கோள்களில், "எஸ்-பாண்ட்' டிரான்ஸ்பாண்டர்களை தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ததில், அரசுக்கு, இரண்டு லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது, மத்திய தணிக்கைத் துறை நடத்திய ஆய்வில் தெரியவந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்த வகை ஸ்பெக்ட்ரம் உயர் ரகம் என்பதால், இதில் ஏற்பட்ட நஷ்டம் இரண்டு லட்சம் கோடி ரூபாய் என்று கூறப்பட்டது. ஆனால், தணிக்கைத்துறை தன் ஆய்வு முழுவதும் முடிவுறவில்லை என்று கூறியிருக்கிறது.பிரதமரின் நேரடி கண்காணிப்பில் உள்ள விண்வெளி கமிஷனின் கீழ் "இஸ்ரோ 'வருவதால், இது குறித்து பிரதமர் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் கோரிக்கை எழுப்பின. இந்நிலையில், மத்திய தணிக்கை துறையும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமும்(இஸ்ரோ) உண்மை நிலையை விளக்கி நேற்று முன்தினம் இரவே அறிக்கை வெளியிட்டன.
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர், "டிவி' ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இஸ்ரோவின் வேலை, செயற்கைக்கோள்களை அனுப்புவதும், பராமரிப்பதும்தான். டிரான்ஸ்பாண்டர்களை ஒதுக்கீடு செய்வதில் சம்பந்தம் இல்லை' என்று குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், நேற்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருந்ததாவது: தொலைத்தொடர்பில் அதிநவீன தொழில்நுட்பத்திற்கு பயன்படும், "எஸ்-பாண்ட்' டிரான்ஸ்பாண்டர்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அப்படியிருக்கையில், இரண்டு லட்சம் கோடி ரூபாய், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறுவதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒதுக்கீடே நடக்காதபோது எப்படி இழப்பு:ரூ.2 லட்சம் கோடி இழப்பா? பிரதமர் மறுப்பு

கடும் போட்டி நிலவும் உலக வர்த்தக சூழலில், இந்தியத் தொழிலகங்கள் வெற்றி பெற வேண்டுமானால் தயாரிப்புகளின் தரத்தில் முன்னணியில் இருப்பது அவசியம் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

புது தில்லியில் திங்கள்கிழமையன்று, உற்பத்தித் திறன் மேம்பாடு, தரம் குறித்த சர்வதேச மாநாட்டில் பேசும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியது: ""பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஆய்வு, மேம்பாட்டுக் கூடங்களை நடத்தி வருகின்றன. ஆனால் இந்திய நிறுவனங்கள், தர மேம்பாட்டைத் தங்களுடைய உற்பத்தி, செய்முறையின் ஒரு அங்கமாக ஆக்கிக் கொள்ள இன்னும் போதிய முயற்சி எடுக்கவில்லை.
கடும் போட்டியும், வேகமான தொழில்நுட்ப மேம்பாடுகளும் நிகழ்ந்துவரும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இதனால் நமக்குப் பல தொழில்களில் புதிய பொருள்களும் சேவைகளும் கிடைத்து வருகின்றன. மேலும், புதியவர்கள் ஒரு தொழிலில் பிரவேசிப்பதற்கு எதிராக உள்ள முட்டுக்கட்டைகளை தொழில்நுட்பம் நொறுக்கி வருகிறது.
தர மேம்பாட்டுக்கு உதவும் தொழில் நுட்பங்கள் தனியார் துறைக்கு மட்டுமல்லாமல், பொதுத்துறை சார்ந்த சேவைகளின் வினியோகத்துக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
அரசின் பல சேவைகளை குறைந்த செலவில், மிக நம்பகமான முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதைத் திட்டமிட இவை பயன்படும். உதாரணமாக, உற்பத்தித் திறன் மேம்பாட்டுத் தொழில்நுட்பமானது, விவசாய உற்பத்தியை அதி
கரிக்க உதவும். பொருள்களை பரவலாகவும் சீராகவும் மக்களிடம் கொண்டு செல்லவும் உதவும்.
உற்பத்தியைத் திட்டமிடுவதிலும், பொருள்களை சந்தைக்குக் கொண்டு செல்வதை சீர் செய்வதிலும் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவதால் உற்பத்தி பெருகும் வாய்ப்புள்ளது. இதனால் உற்பத்தி சுழற்சியும் வேகமாக நடக்கிறது. சரக்கு இருப்பும் கணிசமாகக் குறையும்,'' என்றார் அவர்.
இந்திய விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை சீராகவும் பரவலாகவும் சந்தைக்குக் கொண்டு செல்வதிலுள்ள சிக்கல்களினால்தான் அவ்வப்போது உணவுப் பணவீக்கம் உயர்வதாகக் கருதப்படுகிறது.
அண்மைக்காலமாக இந்தக் குறைபாடுகள் அரசின்
கவனத்தை ஈர்த்து வருகின்றன என்றும் குறிப்பிட்டார் மன்மோகன் சிங்.

அன்னிய நிறுவனங்களுக்கு அழைப்பு
இந்தியாவில் கட்டமைப்புத் துறையில் முதலீடு செய்யும் சர்வதேச நிறுவனங்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார்.
உலகின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான மிட்சுபிஷியின் தலைவரும், செயல் இயக்குநருமான கெயிச்சி நககாக்கி, தலைமைச் செயல் அலுவலர் கென் கொபயாஷி ஆகியோர் பிரதமரை திங்கள்கிழமை புதுதில்லியில் சந்தித்தனர். அப்போது பிரதமர் இவ்வாறு கூறினார்.
இந்திய கட்டமைப்புத் துறையில் மிட்சுபிஷி பங்குபெறுவதை வரவேற்ற பிரதமர், ஜப்பானைச் சேர்ந்த பிற நிறுவனங்களுக்கும் அனைத்துவிதமான வசதிகளும் இந்திய அரசு செய்து தரும் என்று உறுதி கூறியதாக பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பு குறித்து கூறிய கொபயாஷி, ""இந்தியக் கட்டமைப்புத்துறை மட்டுமல்லாமல், அணுசக்தி உள்பட எரிசக்தி, சுற்றுச்சூழல் ஆகிய துறைகளிலும் மிட்சுபிஷி நிறுவனம் முதலீடு செய்ய விரும்புகிறது'' என்றார்.
பிராந்திய-சர்வதேச அளவில் இந்தியாவின் முக்கியத்துவத்தை அந்நிறுவனம் அறிந்திருப்பதாகவும், கட்டமைப்பு மேம்பாட்டில் தனியார்-பொதுத்துறை கூட்டு முயற்சியில் தங்கள் நிறுவனத்துக்கு ஈடுபாடு உண்டென்றும் கொபயாஷி கூறினார்.

தரமே வெற்றியின் தாரக மந்திரம்: தொழில்துறையினருக்கு மன்மோகன் அறிவுரை

புதுதில்லி, பிப். 4: நல்ல ஆட்சியைக் கூட ஊழல் சீர்குலைத்துவிடும் என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்தார்.
மத்திய அரசுக்கு எதிராக அடுத்தடுத்து பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டு நிலையில் பிரதமர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் அவர் பேசினார்.
உலக அரங்கில் நமது நாட்டின் மீதான நன்மதிப்புக்கு ஊழல் கேடு விளைவிக்கும். நமது சொந்த மக்களிடமே நம்மை மதிப்பிழக்கச் செய்துவிடும். இப்போது நம் முன் உள்ள மிகப் பெரிய சவால் ஊழல் தான். எனவே, ஊழலுக்கு எதிராக துணிவாகவும் விரைவாகவும் முனைப்பாக போராட வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.
நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது. சமூக மேம்பாட்டுக்கான நமது திட்டங்களை ஊழல் நீர்த்துப் போகச் செய்துவிடும் என்றும் அவர் கூறினார்.
ஊழலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் மூத்த அமைச்சர்கள் குழு ஏற்படுத்தப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
நிர்வாக ரீதியிலும் சட்ட ரீதியிலும் ஊழலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அவர் விவரித்தார்.
ஊழலுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் 2 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிப்பதற்கான மசோதா, மற்றொன்று ஊழலை அம்பலப்படுத்தும் நபர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான மசோதா. இந்த இரு மசோதாக்களோடு ஊழலை ஒழிக்கும் வகையில் பல்வேறு நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள் மீது விரைவில் விசாரணை நடத்தி, தண்டனை அளிக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் பிரதமர்.
பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் மரபு மீறிய செயல்களிலும் ஈடுபடுவது அதிகரித்து வருவதை சமூக பொறுப்புள்ள பலர் சுட்டிக்காட்டி உள்ளனர்.
வெளிப்படையான நிர்வாகம், போட்டியை ஊக்குவிப்பது, நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் ஊழல் செய்வதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைக்கப்பட வேண்டும்.
எனவே ஊழலற்ற நிர்வாகத்தைக் கொடுக்க உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றார் மன்மோகன்.
உள்நாட்டு பாதுகாப்பு: சில பகுதிகளில் உள்நாட்டு பாதுகாப்பு கவலை அளிக்கும் வகையில் பதற்றமாக உள்ளதை பிரதமர் சுட்டிக்காட்டினார். மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் செயல்பாடுகள், காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக்கைகள் ஒடுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
பயங்கரவாத மற்றும் இடதுசாரி தீவிரவாத அமைப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசின் உதவி தேவைப்படுகிறது என்றார் அவர்.
பயங்கரவாதத்தை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்த வகையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எல்லா உதவிகளையும் அளிக்கத் தயாராக உள்ளது. நவீன ஆயுதங்கள் வழங்குவது, உளவுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வது, போலீஸôருக்கு நவீன பயிற்சி என எல்லா வகையான உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றார் அவர். இந்த விஷயத்தில் நிதி ஒரு பிரச்னையே அல்ல. தேவையான நிதியை ஒதுக்க 13-வது நிதிக் கமிஷன் பரிந்துரைத்துள்ளது என்றார் அவர்.
பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு எதிரான வன்முறையைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

நல்ல ஆட்சியைக் கூட ஊழல் சீரழிக்கும்: பிரதமர் எச்சரிக்கை

முக நூல்

Popular Posts