background img

புதிய வரவு

Showing posts with label prime minister. Show all posts

பிரதமர் உள்ளிட்ட உயர் பதவியில் உள்ளவர்களையும் ஊழல் புகார் தொடர்பாக மக்கள் கோர்ட்டில் நிறுத்தி விசாரித்து தண்டிக்கும் வகையில், லோக்பால் சட்டம்' உருவாகி வருகிறது.

அந்த சட்டத்துக்காக நாடு முழுவதும் ஆதரவு திரட்டி வரும் காந்தியவாதி அன்னா ஹசாரே, பெங்களூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், லோக்பால் சட்ட மசோதா உருவாக்கும் குழுவில் மக்கள் பிரதிநிதிகளை 50 சதவீதம் அளவுக்கு சேர்த்துக் கொள்ள மத்திய அரசு இறுதியாக இறங்கி வந்தது.

ஆனால், இன்னமும் அரசிடம் இருந்து பல்வேறு பிரச்சினைகளை அந்த குழு எதிர் கொண்டு வருகிறது. நமது பிரதமர் சுத்தமானவர். நல்ல மனிதர். ஆனால், ரிமோட் கண்ட்ரோல் போல செயல்படும் பின்னணி சக்திகள் தான் பிரச்சினைகளை உருவாக்குகின்றன என்றார்.

நமது பிரதமர் சுத்தமானவர்: அன்னா ஹசாரே!!

டெல்லி: தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தனர்.

அதே போல மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மேலும் பாஜக தலைவர் எல்.கே.அத்வானி, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந் நிலையில் அ.தி.முக. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து, முதல் அமைச்சராக பொறுப்பேற்க உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு, குஜராத் மாநில முதல் மந்திரி நரேந்திர மோடி, டெல்லி மாநில முதல் மந்திரி ஷீலா தீட்சித், ஒரிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக், மேற்கு வங்க ஆளுநர் எம்.கே.நாராயணன் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, எம்.பி., நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமி உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் ஜெயலலிதாவிடம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

ஜெயலலிதாவை, திரைப்பட நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

மேலும், பல்வேறு துறைகளை சார்ந்த ஐ.ஏ.எஸ். உயர் அதிகாரிகளும், காவல் துறையைச் சார்ந்த ஐ.பி.எஸ். உயர் அதிகாரிகளும் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, மலர் கொத்துக்களை அளித்து, தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். தொடர்ந்து, பல்வேறு துறை அதிகாரிகளும், கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும், தோழமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகளும், திரைப்பட துறையை சார்ந்தவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும், ஜெயலலிதா, தனது இதயம் நிறைந்த நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார் என்று கூறப்பட்டுள்ளது.

ஜெ.வுக்கு பிரதமர்-சோனியா, அத்வானி போனில் வாழ்த்து: விஜய் நேரில் வாழ்த்து

புதுதில்லி, மே 9: ஜவஹர்லால் நேரு விருதுக்கு ஜெர்மன் நாட்டுப் பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2009-ம் ஆண்டிற்கான இந்த விருதுக்கு உரியவரைத் தேர்வு செய்ய துணை குடியரசுத் தலைவர் முகமது ஹமீது அன்சாரி தலைமையிலான குழு தில்லியில் கூடி ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கெலைத் தேர்ந்தெடுத்துள்ளதாக வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதில் ரூ.1 கோடி ரொக்கம், கேடயம் மற்றும் பாராட்டுப் பத்திரமும் அடங்கும்.

நேரு விருதுக்கு ஜெர்மன் பிரதமர் தேர்வு

டெல்லி: சிபிஐ யாருக்கும் பயப்படாமல் சுதந்திரமாகவும் நடுநிலையாகவும் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

சிபிஐக்கு டெல்லியில் புதியதாக கட்டப்பட்டுள்ள தலைமை அலுவலகத்தை இன்று திறந்து வைத்து பேசிய அவர்,

இந்தியாவின் புலனாய்வு துறைகளில் சிபிஐ முதன்மை துறையாக விளங்குகிறது. இதன் பணிகள் எப்போதும் சிறப்பாக இருக்க வேண்டும்.

முக்கிய வழக்குகளை கையாள்வது சிபிஐ அதிகாரிகளுக்கு ஒரு பரிசோதனை போன்றது. சிபிஐயின் நடவடிக்கைகள் அப்பாவிகளுக்கு துன்புறுத்தல் இல்லாத வகையில் இருக்க வேண்டும்.

சட்டத்தை மீறுபவர்கள், எவ்வளவு பெரிய பதவிகளில் இருந்தாலும் ஊழல் புரிந்தவர்களாக இருந்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சிபிஐ தயங்கக் கூடாது. சட்டத்தின் முன்னாள் அனைவரும் சமம்.

தங்கள் பணிகளில் எந்த குறுக்கீடு வந்தாலும் அதற்கு சிபிஐ அதிகாரிகள் பயப்படக் கூடாது. தங்கள் கடமைகளை விருப்பு, வெறுப்பின்றி செய்ய வேண்டும். அதே நேரத்தில் நடுநிலை தவறக் கூடாது என்றார்.

'தைரியமா இருக்கனும்..': சிபிஐக்கு மன்மோகன் அறிவுரை!

சென்னை: பூகம்பம்-சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பான் நாட்டுக்கு வருகைத் தரும்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, அந்த நாட்டின் பிரதமர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

சுனாமி பாதித்த ஜப்பான் மக்களுக்காக சென்னையில் நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் இந்த தகவலை ரஜினி வெளியிட்டார்.

ஜப்பானில் பூகம்பத்தாலும், சுனாமியாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் 'இந்தோ-ஜப்பான் சேம்பர் ஆப் காமர்ஸ்' சார்பில் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அந்த அமைப்பின் தலைவர் வீரமணி தலைமை தாங்கினார்.

அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டு ரஜினி பேசியதாவது:

ஜப்பானிய மக்கள் எவ்வளவு பெரிய துன்பங்கள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு, உடனே திரும்ப எழுந்துவிடுவார்கள். கடினமாக உழைக்கிற மக்கள் அவர்கள்.

அந்த மக்களுக்கு இயற்கை தொடர்ந்து இன்னல்களைக் கொடுத்து வருகிறது. எவ்வளவு இன்னல்கள் வந்தாலும், தியானம்-பிரார்த்தனை மூலம் அவர்கள் மீண்டும் சகஜ நிலையை அடைந்துவிடுவார்கள். அவர்களுக்காக இறைவனிடம் நான் பிரார்த்தனை செய்கிறேன்.

ஜப்பானிய மக்கள் மிகவும் கட்டுக்கோப்பானவர்கள். கடமை தவறாதவர்கள். அங்கு சுனாமி வந்தபோது, ஒரு ரெயிலில் டிக்கெட் பரிசோதகர் சோதனை செய்துகொண்டிருந்தார். அப்போது அவர், பயணிகளிடம் 'நம் நாட்டை சுனாமி தாக்கியிருக்கிறது. என்றாலும் நான் கடமையில் இருந்து தவறமாட்டேன்' என்று கூறி, தொடர்ந்து தனது கடமையை செய்திருக்கிறார்.

இன்னொரு இடத்தில் மக்கள் வரிசையாக நின்று பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள். சுனாமி தாக்கியதும் அவர்கள் சிதறிப் போனார்கள். சுனாமி அடங்கியபின் மீண்டும் அவர்கள் அதே வரிசையில் நின்று பொருட்களை வாங்கியிருக்கிறார்கள். இதுபோன்ற கட்டுக்கோப்பும், கடமை உணர்வும்தான் ஜப்பானியர்களின் மிகச் சிறந்த குணம்.

ஜப்பானுக்கு வரும்படி என்னை, அந்த நாட்டின் பிரதமரும், சில முக்கியஸ்தர்களும் அழைத்திருக்கிறார்கள். ஜப்பானிய மக்கள் மீண்டும் சகஜ நிலையை அடைவதற்காக நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்," என்றார் ரஜினி.

இந்த கூட்டத்தில், கவிஞர் வைரமுத்து, நடிகர் சிவக்குமார், பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம், முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், இரா.செழியன், படஅதிபர்கள் எல்.சுரேஷ், ராம்குமார், எஸ்.தாணு, எடிட்டர் மோகன், புஷ்பாகந்தசாமி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

ரஜினிக்கு ஜப்பான் பிரதமர் அழைப்பு!

புது தில்லி, மார்ச் 18: ரியல் எஸ்டேட் துறையில் கறுப்புப் பண புழக்கம் அதிகரித்திருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். முத்திரைத்தாள் கட்டணத்தைக் குறைத்தால் இது குறைய வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 'இந்தியா டுடே'-யின் 10-ம் ஆண்டு மாநாட்டில் பங்கேற்று அவர் பேசியது:
முத்திரைத்தாள் கட்டண விகிதம் அதிகமாக இருப்பதால்தான் சொத்துகளின் மதிப்பை குறைத்துக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. இதனாலேயே ரியல் எஸ்டேட் துறையில் அதிக அளவில் கறுப்புப் பணப் புழக்கம் அதிகரித்துள்ளது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது.
இதைக் கட்டுப்படுத்த ஒரு வழி உள்ளது. அது முத்திரைத்தாள் கட்டணத்தைக் குறைப்பதுதான். இருப்பினும் நமது நாட்டில் முத்திரைத்தாள் பதிவு கட்டணம் மிகவும் குழப்பான விஷயம். இதை சரி செய்வது மிகவும் சிரமமான விஷயமாக உள்ளது என்று மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.
ரியல் எஸ்டேட் துறையில் மிக அதிக அளவில் கறுப்புப் பணம் புழங்குவதாகவும், இதற்கு அடுத்தபடியாக உற்பத்தித் துறையில் அதிக அளவில் கறுப்புப் பணம் உள்ளதாகவும் நிதி அமைச்சகம் கருத்து தெரிவித்திருந்தது. இந்நிலையில் பிரதமர் இக்கருத்தை தெரிவித்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ரியல் எஸ்டேட் துறையில் தனியார் முதலீடு அதிகரிக்கும்போது இத்தகைய கறுப்புப் பண புழக்கம் குறைந்து இத்துறைக்கு தூய்மையான ஒரு தோற்றம் ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஸ்திரத்தன்மை: சர்வதேச அளவில் அரசியலில் ஸ்திரமற்ற நிலை நிலவும் சூழலில் இந்திய அரசியலில் ஸ்திரத்தன்மை நிலவுகிறது. அணுகுமுறையில் பல புதுமைகளும், நெகிழ்வுத் தன்மையும் சேர்ந்தால் அது மேலும் பொலிவுபெறும் என்று பிரதமர் குறிப்பிட்டார். இதற்கு அதிகார பகிர்வு மிகவும் அவசியம் என்று சுட்டிக்காட்டினார். சர்வதேச அளவில் ஏற்படும் மாற்றங்களுக்கு உரிய வகையில் மாறிக்கொள்ளும் சாதகமான சூழல் இந்தியாவில் காணப்படுகிறது.
சர்வதேச அளவில் நிதி நெருக்கடி நிலவியபோது அதிலிருந்து மீள்வதற்கு இந்தியா உதவியது என்று பிரதமர் குறிப்பிட்டார். நமது நிர்வாக செயல்பாடுகளில் சில குறைகள் உள்ளதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர் குறிப்பாக ஊழலை ஒழிக்க வேண்டும் என்றார். அனைத்து நிலையிலும் நிர்வாகத் திறன் மேம்பட ஊழலை ஒழிப்பது மிகவும் அவசியம் என்றார்.
பழைய முறைகள் முற்றிலுமாக மாறி வருகின்றன, புதிய முறை என்ன என்பதை இனிமேல்தான் வரையறுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அத்தகைய புதிய முறையின் மூலம் நாம் வளர்ச்சியடைய வேண்டும் என்றார்.
ஜனநாயக இந்தியா இப்போது தனது சகோதர நாடுகளான மேற்கு ஆசியா, வட ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சியைப் பார்த்து பூரிப்பதோடு அவை தங்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்க காரணமாக அமைந்துள்ளது என்றார். ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பு சர்வதேச சரிவுக்குப் பிறகு மிக முக்கிய தளமாக உருவெடுத்துள்ளது. இதைப் போலவே அரசியல், பாதுகாப்பு சார்ந்த துறைகளில் ஐக்கிய நாடுகள் சபையைப் போன்று பல நாடுகளின் கூட்டமைப்பு இப்போதைய சூழலுக்கு ஏற்ப உருவாக வேண்டும் என்றே இந்தியா விரும்புகிறது என்றார் பிரதமர்.
உள்நாட்டிலும் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டுக்குள் 50 கோடி இளைஞர்களின் திறனை மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்திரமான வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவில் இப்போது அரசியலில் அதிகார பரவல் நிகழ்ந்து வருகிறது. சாதாரண மக்களிடமும் அரசியல் அதிகாரத்தை ஒப்படைக்கும் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. ஜனநாயக மாற்றத்தை அர்த்தமுள்ளதாக்க அரசு முழு முயற்சி எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார் பிரதமர் மன்மோகன் சிங்.
பிரதமர் கூறியது முழுக்க முழுக்க உண்மை. ரியல் எஸ்டேட் துறையில் மிக அதிக அளவில் கறுப்புப் பணம் புழங்குகிறது. முத்திரைத்தாள் கட்டணத்தைக் குறைக்கும் யோசனை வரவேற்கத்தக்கது என்று டாடா ஹவுசிங் மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குநர் புரோடின் பானர்ஜி தெரிவித்தார்.
முத்திரைத்தாள் கட்டணம் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. மும்பையில் 4 சதவீதமாக உள்ள கட்டணம் கேரளத்தில் 13 சதவீதமாக உள்ளது. ஹரியாணாவில் 6 சதவீதமாகவும், உத்தரப் பிரதேசத்தில் 8 சதவீதமாகும், பிற மாநிலங்களில் 6 சதவீதம் முதல் 8 சதவீதம் வரையிலும் உள்ளது.
முத்திரைத்தாள் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே உள்ளது. அனாவசிய கட்டணம் காரணமாக குறைந்த விலையில் வீடுகளைக் கட்டித் தர முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் அரசு மீது சுமத்தப்படுகிறது.
இப்போது முத்திரைத்தாள் கட்டணம் கட்டட மேம்பாட்டாளர்களிடமும் வசூலிக்கப்படுகிறது. வீடு வாங்குவோரிடமும் வசூலிக்கப்படுகிறது. முத்திரைத் தாள் கட்டணத்தை நாடு முழுவதும் 4 சதவீதமாக நிர்ணயித்தால், சொத்து மதிப்பை குறைத்து காட்டுவோரை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்று பானர்ஜி குறிப்பிட்டார்.
மத்திய அரசு ஒரு நிதியத்தை ஏற்படுத்தி முத்திரைத்தாள் கட்டண குறைப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்கிறது. இதை தில்லி, உத்தரப் பிரதேசம் பயன்படுத்திக் கொள்வதற்காக வரி குறைப்பு செய்துள்ளது. இதே முறையை பிற மாநிலங்களும் பின்பற்றலாம் என்று பர்சாவந்த் மேம்பாட்டு தலைவர் பிரதீப் ஜெயின் குறிப்பிட்டார்.

ரியல் எஸ்டேட் துறையில் கறுப்புப் பண புழக்கம் துரதிருஷ்டவசமானது: பிரதமர் குமுறல்

கெய்ரோ:எகிப்து பிரதமர் அகமது ஷபீக், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக, அந்நாட்டின் ராணுவ உயர்மட்ட கவுன்சில் தெரிவித்துள்ளது.எகிப்தில் ஏற்பட்ட அரசியல் புரட்சியை அடுத்து, நீண்ட காலமாக அந்த நாட்டின் அதிபராக இருந்த முபாரக், கடந்த மாதம் பதவி விலகினார். பதவி விலகுவதற்கு சில நாட்களுக்கு முன், அகமது ஷபீக் என்பவரை பிரதமராக நியமித்தார். தற்போது ராணுவ உயர்மட்டக் கவுன்சிலின் கட்டுப்பாட்டில் எகிப்து அரசாங்கம் நிர்வகிக்கப்படுகிறது.
இந்நிலையில், பிரதமர் ஷபீக்கிற்கு எதிராகவும் போராட்டம் வெடித்தது. ஷபீக், முன்னாள் அதிபர் முபாரக்கின் ஆதரவாளர் என்றும், உடனடியாக அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் குரல் எழுப்பினர்.இதைத் தொடர்ந்து ராணுவ உயர்மட்ட கவுன்சில் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில்,"பிரதமர் பதவியில் இருந்து ஷபீக் ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு விட்டது. முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எசாம் ஷராப்புக்கு, புதிய அரசு அமைக்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது'என, தெரிவிக்கப்பட்டுள்ளது.எசாம் ஷராப், கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன், அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். அன்று முதல், அதிபர் முபாரக்கிற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்தார். கடந்த மாதம் நடந்த போராட்டத்திலும், அவர் கலந்து கொண்டார்.

எகிப்து பிரதமர் ராஜினாமா

இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி. இவர் மீது பல செக்ஸ் புகார் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவர் 17 வயது நடன அழகி ரூபி என்கிற கரிமாவுடன் செக்ஸ் உறவு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள புகார் பெரும் பிரச்சினையை கிளப்பியுள்ளது.

18 வயதுக்குட்பட்ட பெண்ணுடன் செக்ஸ் உறவு கொண்டதால் அவர் மீது விபசார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

செக்ஸ் உறவுக்காக அழகி ரூபிக்கு, பெர்லுஸ்கோனி ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் வழங்கியுள்ளதாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இவற்றில் ரூ. 42 லட்சம் மதிப்புள்ள விலை மதிப்புள்ள 2 ரோலக்ஸ் கை கடிகாரங்கள் அடங்கும்.

இதை ரூபி ஒப்பு கொண்டார். ஆனால் பெர்லுஸ் கோனியுடன் செக்ஸ் உறவு வைத்து கொள்ளவில்லை என மறுத்துள்ளார்.

காதலிக்கு ரூ. 1 1/2 கோடி பரிசு கொடுத்த இத்தாலி பிரதமர்

நேபாள பிரதமராக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜலநாத் கணல் இன்று பதவியேற்றார்.

அதிபர் ராம் பரண் யாதவ் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
61 வயதான ஜலநாத் கணல் இதற்கு முன்னதாக நேபாளத்தின் தகவல் தொடர்புத்துறை அமைச்சராக பணியாற்றியவர்.
நேபாள பிரதமரை தேர்ந்தெடுக்க அந்நாட்டு அரசியல் கட்சிகளிடையே கடந்த 7 மாதங்களாக சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில், ஜலநாத்துக்கு மாவோயிஸ்ட் கட்சித் தலைவர் பிரசந்தா ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேபாள பிரதமர் பதவியேற்பு

புதுதில்லி, பிப். 4: நல்ல ஆட்சியைக் கூட ஊழல் சீர்குலைத்துவிடும் என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்தார்.
மத்திய அரசுக்கு எதிராக அடுத்தடுத்து பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டு நிலையில் பிரதமர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் அவர் பேசினார்.
உலக அரங்கில் நமது நாட்டின் மீதான நன்மதிப்புக்கு ஊழல் கேடு விளைவிக்கும். நமது சொந்த மக்களிடமே நம்மை மதிப்பிழக்கச் செய்துவிடும். இப்போது நம் முன் உள்ள மிகப் பெரிய சவால் ஊழல் தான். எனவே, ஊழலுக்கு எதிராக துணிவாகவும் விரைவாகவும் முனைப்பாக போராட வேண்டியது அவசியம் என்று அவர் கூறினார்.
நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது. சமூக மேம்பாட்டுக்கான நமது திட்டங்களை ஊழல் நீர்த்துப் போகச் செய்துவிடும் என்றும் அவர் கூறினார்.
ஊழலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் மூத்த அமைச்சர்கள் குழு ஏற்படுத்தப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
நிர்வாக ரீதியிலும் சட்ட ரீதியிலும் ஊழலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அவர் விவரித்தார்.
ஊழலுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் 2 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிப்பதற்கான மசோதா, மற்றொன்று ஊழலை அம்பலப்படுத்தும் நபர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான மசோதா. இந்த இரு மசோதாக்களோடு ஊழலை ஒழிக்கும் வகையில் பல்வேறு நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள் மீது விரைவில் விசாரணை நடத்தி, தண்டனை அளிக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் பிரதமர்.
பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் மரபு மீறிய செயல்களிலும் ஈடுபடுவது அதிகரித்து வருவதை சமூக பொறுப்புள்ள பலர் சுட்டிக்காட்டி உள்ளனர்.
வெளிப்படையான நிர்வாகம், போட்டியை ஊக்குவிப்பது, நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் ஊழல் செய்வதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைக்கப்பட வேண்டும்.
எனவே ஊழலற்ற நிர்வாகத்தைக் கொடுக்க உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றார் மன்மோகன்.
உள்நாட்டு பாதுகாப்பு: சில பகுதிகளில் உள்நாட்டு பாதுகாப்பு கவலை அளிக்கும் வகையில் பதற்றமாக உள்ளதை பிரதமர் சுட்டிக்காட்டினார். மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் செயல்பாடுகள், காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக்கைகள் ஒடுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
பயங்கரவாத மற்றும் இடதுசாரி தீவிரவாத அமைப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசின் உதவி தேவைப்படுகிறது என்றார் அவர்.
பயங்கரவாதத்தை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்த வகையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எல்லா உதவிகளையும் அளிக்கத் தயாராக உள்ளது. நவீன ஆயுதங்கள் வழங்குவது, உளவுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வது, போலீஸôருக்கு நவீன பயிற்சி என எல்லா வகையான உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றார் அவர். இந்த விஷயத்தில் நிதி ஒரு பிரச்னையே அல்ல. தேவையான நிதியை ஒதுக்க 13-வது நிதிக் கமிஷன் பரிந்துரைத்துள்ளது என்றார் அவர்.
பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு எதிரான வன்முறையைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

நல்ல ஆட்சியைக் கூட ஊழல் சீரழிக்கும்: பிரதமர் எச்சரிக்கை

சிறந்த ஆளுமையின் வேரை அழிப்பது மட்டுமின்றி, நமது நாட்டின் மதிப்பை பன்னாட்டு அளவில் தாழ்த்துகிறது ஊழல் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

தனது தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிற்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாற்றுகள் கூறப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் நடைபெற்றுவரும் மாநில அரசுகளின் தலைமை செயலர்கள் மாநாட்டில் இன்று காலை உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சி்ங் இவ்வாறு கூறியுள்ளார்.
\
“மிகச் சிறந்த ஆளுமையின் வேலை ஊழல் அழிக்கிறது. வேகமான வளர்ச்சிக்கு எதிரானது ஊழல், அனைத்து தரப்பு மக்களையும் முன்னேற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் நாம் மேற்கொள்ளும் அனைத்து திட்டகங்கள் எல்லாவற்றையும் சிதைக்கிறது அல்லது தடுத்துவிடுகிறது. இது நமது நாட்டின் மதிப்பை பன்னாட்டு அளவில் குறைக்கிறது. நமது மக்களே நம்மை மதிப்பின்றி பார்க்கும் நிலையை ஏற்படுத்தி விடுகிறது” என்று கூறியுள்ள மன்மோகன் சிங், ஊழலை நேரிடையாக, துணிச்சலாக, உடனடியாக எதிர்கொண்டு வீழ்த்த வேண்டும் என்றார்.

ஆளுமையின் வேரை அழிக்கிறது ஊழல்: பிரதமர்

ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வரும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து அந்நாட்டு அதிபர் ஹமீத் கர்சாயுடன் இன்று விவாதித்தார்.

இந்தியா வந்துள்ள கர்சாய் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

அப்போது ஆப்கானில் பணியாற்றி வரும் சுமார் 4,000 இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து அவருடன் விவாதித்த மன்மோகன்,அவர்களின் பாதுகாப்புக்கு மீண்டும் உத்தரவாதம் அளிக்குமாறும் கர்சாயை கேட்டுக்கொண்டதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியர்களின் பாதுகாப்பு: ஆப்கான் அதிபரிடம் மன்மோகன் வலியுறுத்தல்

ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வரும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து அந்நாட்டு அதிபர் ஹமீத் கர்சாயுடன் இன்று விவாதித்தார்.

இந்தியா வந்துள்ள கர்சாய் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

அப்போது ஆப்கானில் பணியாற்றி வரும் சுமார் 4,000 இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து அவருடன் விவாதித்த மன்மோகன்,அவர்களின் பாதுகாப்புக்கு மீண்டும் உத்தரவாதம் அளிக்குமாறும் கர்சாயை கேட்டுக்கொண்டதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

‌ெ‌ல்‌லி‌‌யி‌ல் நடைபெ‌ற்ற காம‌‌ன்வெ‌ல்‌‌த் போ‌ட்டி‌யி‌ல் நடைபெ‌ற்ற ஊழ‌ல் கு‌றி‌த்து அமை‌க்க‌ப்ப‌ட்ட ‌விசாரணை குழு ‌பிரதம‌ரிட‌ம் அ‌றி‌க்கை தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளது.

டெல்லியில் கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகளை தொலை‌க்கா‌ட்‌சிக‌ளி‌ல் ஒளிபரப்ப உரிமை வழங்கியதில் ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டது.

இது பற்றி ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய, ஆடிட்டர் ஜெனரல் வி.கே.சுங்லு தலைமையிலான கமிட்டி ஒ‌ன்று அமைக்கப்பட்டது.

இந்த கமிட்டி நட‌த்‌திய விசாரணை‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல், பிரதமர் மன்மோகன் சிங்கிடம், 236 பக்க இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்து இருக்கிறது.

அதில், காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஒளிபரப்பு உரிமை வழங்கியதில், அய‌ல்நாட்டு நிறுவனத்துக்கு பிரசார் பாரதி, தூர்தர்ஷன் அதிகாரிகள் சலுகை காட்டினார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

காமன்வெல்த் ஊழ‌‌ல்: ‌பிரதம‌ரிட‌ம் அறிக்கை தாக்கல்

மாநாட்டை இ‌ன்று காலை தொட‌ங்‌கிய வை‌த்த பிரதமர் மன்மோகன் ‌சி‌ங் உரை ‌நிக‌ழ்‌த்‌தி வரு‌கிறா‌ர்.

மாநாட்டில் மத்திய உள்துறை அமை‌ச்ச‌ர் ப.சிதம்பரம், தமிழக முதலமைச்சர் கருணாநிதி உள்பட பல்வேறு மாநில முதலமை‌ச்ச‌ர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

உ‌ள்நா‌ட்டு பாதுகா‌ப்பு, மாவோயிஸ்ட் ‌பிர‌ச்சனை, காவ‌ல் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள், காஷ்மீர் நிலைமை, புலனாய்வு, உளவு தகவல்களை பகிர்ந்து கொள்வது, கடலோர பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

மாநில முதலமை‌ச்ச‌ர்கள் மாநாடு தொடங்கியது

''மீனவர்கள் நலனைக் காக்க வேண்டிய வழிமுறைகளைக் கண்டறிய இல‌ங்கை அரசுட‌ன் பே‌சி முடிவு செய்து உள்ளோம்” எ‌ன்று ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோவு‌க்கு பிரதமர் மன்மோகன் சிங் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொட‌ர்பாக ம.தி.மு.க தலைமை அலுவலகம் இ‌ன்று வெளியிட்டுள்ள செ‌ய்‌தி‌யி‌ல், ஜனவரி 22ஆம் தேதி வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து, இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் கயல்விழியை விடுவித்துத் தமிழகம் கொண்டு வந்தது சேர்த்ததற்கு நன்றி தெரிவித்ததோடு, இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்தும், தமிழக மீனவர் பிரச்சனை குறித்தும் பிரதமரிடம் கடிதத்தைக் கொடுத்து, தனது கருத்துகளையும் தெரிவித்தார்.

ஆனால், அதே நாளில் புஷ்பவனத்தைச் சார்ந்த மீனவர் ஜெயக்குமார், இலங்கைக் கடற்படையினரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட செய்தி குறித்து அதிர்ச்சியையும், கண்டனத்தையும் தெரிவித்து ஜனவரி 23ஆம் தேதி வைகோ அவர்கள் பிரதமருக்குத் தொலைநகல் செய்தி அனுப்பினார்.

ஜனவரி 25ஆம் தேதியிட்டு பிரதமர், வைகோவுக்கு எழுதியுள்ள கடிதம் இன்று கிடைத்தது.

‌மீனவ‌ர்க‌ள் நல‌ன் கா‌க்க வ‌‌ழிமுறை: வைகோவுக்கு, பிரதமர் கடிதம்

த‌‌மிழக ‌மீனவ‌ர்‌க‌ள் ‌மீதான தா‌க்குதலை தடு‌த்த ‌நிறு‌த்த இல‌ங்கையை அ‌றிவு‌று‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கை நே‌ரி‌ல் ச‌ந்‌தி‌த்து முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

டெ‌ல்ல‌ி ரே‌ஸ்கோ‌ர்‌ஸ் சாலை‌யி‌ல் உ‌ள்ள ‌பிரதம‌ர் ‌வீ‌ட்டி‌ற்கு செ‌ன்ற முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, ‌மீனவ‌ர்க‌ள் ‌விவகார‌ம் தொட‌ர்பாக ஆலோசனை மே‌ற்கொ‌ண்டா‌ர்.

அ‌ப்போது, ஒரே மாத‌த்‌தி‌ல் த‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் 2 பே‌ர் இல‌ங்கை கட‌ற்படை‌யினரா‌ல் கொ‌ல்ல‌ப்ப‌ட்டது கு‌றி‌த்து‌ ‌பிரதம‌ரிட‌ம் தனது கவலையை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மேலு‌ம் ‌மீனவ‌ர்‌க‌ள் ‌மீதான தா‌க்குதலை தடு‌த்த ‌நிறு‌த்த இல‌ங்கையை அ‌றிவு‌று‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌பிரதமரை அ‌ப்போது கருணா‌நி‌தி கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து ‌பி‌ற்பக‌‌‌லி‌ல் ஜ‌ன்த‌க் சாலை‌யி‌ல் உ‌ள்ள கா‌ங்‌கிர‌‌ஸ் தலைவ‌ர் சோ‌னியா கா‌ந்‌தி ‌வீ‌ட்டி‌ற்கு செ‌ல்லு‌ம் கருணா‌நி‌தி, த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை தே‌ர்த‌ல் தொட‌ர்பாக தொகு‌தி ப‌ங்‌கீடு கு‌றி‌‌த்து ஆலோசனை ம‌ே‌ற்கொ‌ள்ள உ‌ள்ளா‌ர்.

பிரதமருட‌ன் கருணா‌நி‌தி ச‌ந்‌தி‌ப்பு: மீனவ‌ர்க‌ள் ‌‌மீதான தா‌க்குத‌லை தடு‌த்து ‌நிறு‌த்த கோ‌ரி‌க்கை

த‌‌மிழக ‌மீனவ‌ர்‌க‌ள் ‌மீதான தா‌க்குதலை தடு‌த்த ‌நிறு‌த்த இல‌ங்கையை அ‌றிவு‌று‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கை நே‌ரி‌ல் ச‌ந்‌தி‌த்து முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

டெ‌ல்ல‌ி ரே‌ஸ்கோ‌ர்‌ஸ் சாலை‌யி‌ல் உ‌ள்ள ‌பிரதம‌ர் ‌வீ‌ட்டி‌ற்கு செ‌ன்ற முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, ‌மீனவ‌ர்க‌ள் ‌விவகார‌ம் தொட‌ர்பாக ஆலோசனை மே‌ற்கொ‌ண்டா‌ர்.

அ‌ப்போது, ஒரே மாத‌த்‌தி‌ல் த‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் 2 பே‌ர் இல‌ங்கை கட‌ற்படை‌யினரா‌ல் கொ‌ல்ல‌ப்ப‌ட்டது கு‌றி‌த்து‌ ‌பிரதம‌ரிட‌ம் தனது கவலையை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மேலு‌ம் ‌மீனவ‌ர்‌க‌ள் ‌மீதான தா‌க்குதலை தடு‌த்த ‌நிறு‌த்த இல‌ங்கையை அ‌றிவு‌று‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌பிரதமரை அ‌ப்போது கருணா‌நி‌தி கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து ‌பி‌ற்பக‌‌‌லி‌ல் ஜ‌ன்த‌க் சாலை‌யி‌ல் உ‌ள்ள கா‌ங்‌கிர‌‌ஸ் தலைவ‌ர் சோ‌னியா கா‌ந்‌தி ‌வீ‌ட்டி‌ற்கு செ‌ல்லு‌ம் கருணா‌நி‌தி, த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை தே‌ர்த‌ல் தொட‌ர்பாக தொகு‌தி ப‌ங்‌கீடு கு‌றி‌‌த்து ஆலோசனை ம‌ே‌ற்கொ‌ள்ள உ‌ள்ளா‌ர்.

பிரதமர் மன்மோகன்சிங்கை சனிக்கிழமையன்று டில்லியில் சந்தித்த வைகோ, அவருடன் அரசியல் பேசவில்லை; தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை தடுத்து நிறுத்தும்படி வலியுறுத்தினேன் என்று கூறியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கை சனிக்கிழமை காலை டில்லியில் அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா குறித்து அவர் எழுதிய `யெஸ் வி கேன்' என்ற நூலைக் கையெழுத்திட்டு பிரதமரிடம் கொடுத்தார். பிரதமரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கயல்விழி என்கிற அங்கயற்கண்ணி, இலங்கை ராணுவத்தினரால், ஓமந்தையில் கைது செய்யப்பட்டு உள்ள செய்தியை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தேன். அவர்களை உடனடியாக விடுவித்து, பாதுகாப்பாகத் தமிழகம் திரும்பிட ஆவன செய்திடுமாறு தங்களிடம் கேட்டுக்கொண்டேன்.

நேற்று இரவு, அவர்கள் பாதுகாப்பாகத் தமிழகம் திரும்பி விட்டார்கள். அதற்காக தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

விடுதலைப்புலிகளை எதிர்த்துப் போரிடுகிறோம் என்ற போர்வையில், இலங்கை அரசு தமிழர் இனக்கொலையை நடத்தி இருக்கிறது. அந்தப் படுகொலைகளைத் தடுப்பதற்குப் பதிலாக, இந்திய அரசு, இலங்கைக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து இருக்கிறது.

அதற்கும் மேலாக, இலங்கைக் குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவை, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் சிறப்பு விருந்தினராக, சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுப் பெருமைப்படுத்தியது தமிழரின் மனக்காயங்களை மேலும் குத்திக் கிளறி இருக்கிறது.

கடந்த 30 ஆண்டுகளில், தமிழ்நாட்டு மீனவர்கள் சிந்திய வியர்வையும், சிங்களக் கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளாகி அவர்கள் உடலில் இருந்து கொட்டிய ரத்தமும், பாக் நீரிணையில் கலந்து இருக்கிறது. இந்திய கடற்படையும், கடலோரக் காவல்படையும், அத்தனை கொடுமைகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததே தவிர, சிங்களக் கடற்படையினரின் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவில்லை. தமிழக மீனவர்களைக் காப்பாற்ற வேண்டியது, இந்திய கடற்படை, கடலோரக் காவல்படையினரின் கடமை இல்லையா?

குஜராத் மீனவர்கள் எத்தனையோ முறை கடல் எல்லையைத் தாண்டிச் சென்றபோதிலும்கூட, பாகிஸ்தான் கடற்படை ஒருபோதும் அவர்களைத் தாக்கியது இல்லை. ஆனால், இலங்கைக் கடற்படை, 500 தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்று விட்டது. இந்தப் பிரச்சனையின் கடுமையை உணர்ந்து, இலங்கை அரசை எச்சரிக்க வேண்டியது இந்திய அரசின் கடமை அல்லவா? எனவே, இந்தப் பிரச்சினையை தொலைநோக்குப் பார்வையோடு அணுகுமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன்.

இவ்வாறு வைகோ குறிப்பிட்டு உள்ளார். சந்திப்பு முடிந்து வெளியில் வந்தபோது, வைகோவிடம் செய்தியாளர்கள், `நீங்கள் வேறு அரசியல் பற்றிப் பேசினீர்களா?' என்று கேட்டனர்.

`இல்லை. நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் வலுவாக இருக்கிறோம். தி.மு.க., காங்கிரசைத் தமிழ்நாட்டில் தோற்கடிக்க உறுதியோடு இருக்கிறோம். அந்த அணி, படுதோல்வி அடையும். அ.தி.மு.க. அணி வெல்லும். அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும். அதனால், நான் வேறு அரசியல் எதுவும் பிரதமரிடம் பேசவில்லை' என்றார் வைகோ.

பிரதமருடன் அரசியல் பேசவில்லை: வைகோ!

மீனம்பாக்கம்: பிரதமர் மன்மோகன் சிங் காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் கல்லூரி நிகழ்ச்சி முடிந்ததும் ஹெலிகாப்டரில் 12.05 மணிக்கு மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து 12.35 மணிக்கு தனி விமானத்தில் மன்மோகன் சிங் டெல்லி புறப்பட்டார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அரசு தலைமை செயலாளர் மாலதி, டிஜிபி லத்திகா சரண், புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் மற்றும் ஆற்காடு வீராசாமி உள்பட தமிழக அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள் சால்வை கொடுத்து வழியனுப்பினர். மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் அதே விமானத்தில் டெல்லி சென்றார்

டெல்லி சென்றார் பிரதமர்!

""நான் ஓடி ஒளிவதாகவும், ஏதோ சில விஷயங்களை மறைக்க முற்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் என்மீது குற்றம் சாட்டுகின்றன. சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக  இருக்க வேண்டும். எனவே, ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழு முன் விசாரணைக்கு ஆஜராக தயாராக உள்ளேன். இது குறித்து விரைவில் அக்குழுவின் தலைவருக்கு கடிதம் எழுதவுள்ளேன்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

டில்லியை அடுத்த புராரியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், பிரதமர் மன்மோகன் சிங் நேற்று பேசியதாவது:ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், தவறான பிரசாரத்தை பா.ஜ., மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக என் மீது கடும் விமர்சனம் வைக்கப்படுகிறது. இவ்விஷயத்தில் நான் ஓடி ஒளிவதாகவும், ஏதோ சில விஷயங்களை மறைக்க  முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் என் மீது சந்தேகம் கிளப்புகின்றன மற்றும் குற்றம் சாட்டுகின்றன.இந்நாட்டின் பிரதமர் பதவியில் உள்ளேன். மக்களுக்கு பதில் கூற வேண்டிய கடமையும், பொறுப்பும் உள்ளது. சீசரின் மனைவி என்பவள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருந்தாக வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பார்லிமென்டின் பொதுக்கணக்கு குழு விசாரிக்க முடிவு செய்துள்ளது.அந்த குழு விரும்பினால், தேவைப்பட்டால், பிரதமர் பதவியில் உள்ள நானே அந்த குழு முன்பாக, எப்போது வேண்டுமானாலும் ஆஜராகி விளக்கம் அளிக்கத் தயார். எனது இந்த முடிவை, பொதுக்கணக்கு குழுவின் தலைவருக்கு தெரிவிக்க, முறைப்படி கடிதம் எழுதவுள்ளேன்.பார்லிமென்டில் கூச்சலும், குழப்பத்தையும் ஏற்படுத்தி முடக்குவதிலேயே எதிர்க்கட்சிகள் குறியாக உள்ளன.

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தை பொறுத்தவரை, விசாரணை செய்ய முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீவிரமான புலன் விசாரணை ஆரம்பமாகியுள்ளது.தப்பிக்க முடியாது: நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு ஒரே சத்தியத்தை இந்நேரத்தில் அளிக்க விரும்புகிறேன். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், தப்பிவிடாதபடி நடவடிக்கை எடுக்கப்படும். எந்த கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சமூகத்தில் எத்தனை பெரிய அந்தஸ்தில் இருந்தாலும் அவர்கள் தப்பிக்க முடியாது. இதுதான் நடக்கப் போகிறது.ஊழல் குறித்த விஷயங்களை கையாளும்போது, இந்த அரசு சில தவறுகளை செய்திருக்கலாம். சில குறைகளும் இருந்திருக்கலாம். அவற்றையெல்லாம் நிவர்த்தி செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் அனைத்து விவரங்களையும் ஆராய சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்துள்ளோம்.சி.பி.ஐ., உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளும் விசாரணையில் இறங்கியுள்ளன. அப்படியிருக்க ஏன் தேவை இல்லாமல் பார்லிமென்ட்  கூட்டுக்குழு அமைக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் பிடிவாதம் பிடிக்கின்றன என்பது தெரியவில்லை.பார்லிமென்ட் ஜனநாயகத்தின் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இழந்துவிட்டால், அது மிகப்பெரிய ஆபத்தாக முடியும். தற்போது நாட்டில் நிலவும் பணவீக்கம் கவலையளிப்பதாக தெரிகிறது. இதை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்போது நாட்டின் பணவீக்கம் 7.5 சதவீதமாக உள்ளது. இது மேலும்  குறைந்து, வரும் மார்ச்சில் 5.5 சதவீதமாக குறையும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு பிரதமர் பேசினார்.

தீர்மானத்தில் இலங்கை விவகாரம் : அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட வெளியுறவு சம்பந்தப்பட்ட தீர்மானத்தில் இலங்கை விஷயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், "இலங்கையில் போர் முடிந்துள்ள நிலையில் அங்கு நல்லதொரு அரசியல் தீர்வு எட்டப்படுவதற்கு உரிய அறிகுறிகள் தென்படுகின்றன. ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குள்ள சிங்கள, தமிழ் மற்றும் சிறுபான்மை இனங்கள் என, அனைத்து தரப்புமே சமமாக மதிக்கப்பட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

எப்போதும் இந்தியா தரப்பில் இலங்கை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படும்போது, அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றும்போது, வடக்கு கிழக்கை இணைக்கும் 13வது சட்டத் திருத்தத்தை வலியுறுத்தும் ராஜிவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என கூறப்படுவதுண்டு.இப்போது அதுபோல அல்லாமல் வெறும் அரசியல் தீர்வு என்றே கூறப்பட்டுள்ளது. தவிர எப்போதுமே இலங்கை குறித்த தீர்மானம் என்றாலே, அதில் தமிழர்கள் பற்றியே இருக்கும். முதன்முறையாக சிங்களர்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.அதேபோல, வெளியுறவு குறித்து பிரதமர் நேற்று பேசும்போது, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட அண்டை நாடுகள் குறித்து பேசினார். இலங்கை குறித்து பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுக்கணக்கு குழு முன் விசாரணைக்கு ஆஜராக தயார் :பிரதமர் சவால்

முக நூல்

Popular Posts