background img

புதிய வரவு

Showing posts with label Nagpur. Show all posts

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் ஆட்டம் வருகிற 12-ந்தேதி நாக்பூரில் நடக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் இன்று நடந்தது. டிக்கெட் வாங்க ஏராளமான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். குறைவான டிக்கெட்டுகளே இருந்ததால் சில ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு முன்னே சென்றனர்.

சில ரசிகர்கள் டிக்கெட் கிடைப்பதற்காக போலீசாருடன் தகராறு செய்தனர். ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினார்கள். பலமுறை லேசான தடியடி நடத்தப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு முன்பு இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டிக்கான பெங்களூரில் நடந்த டிக்கெட் விற்பனையிலும் ரசிகர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மற்ற எந்த விளையாட்டுக்கும் இல்லாத அதிக அளவு புகழ் கிரிக்கெட்டுக்கு உள்ளது. அதுவும் உலக கோப்பை என்பதால் எப்படியாவது மைதானத்துக்கு சென்று பார்த்து விட வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். டிக்கெட் எண்ணிக்கையே குறைவு. ஆனால் அதை வாங்குவதற்கு திரளுவதோ ஏராளமான கூட்டம். இதன் காரணமாகத்தான் கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடி சம்பவம் நடைபெறுகிறது.

நாக்பூரில் 12-ந்தேதி போட்டி: டிக்கெட் விற்பனையில் ரகளை; ரசிகர்கள் மீது தடியடி

முக நூல்

Popular Posts