background img

புதிய வரவு

Showing posts with label Rajinikanth. Show all posts

பாட்ஷா படத்தின் இந்திப் பதிப்பான பாஷாவின் ஆடியோ ரிலீஸ் ஸ்டார் கூட்டத்திற்கு மத்தியில் கோலாகலமாக நடந்தேறியது. இந்த விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்கவில்லை. இருப்பினும் விழா சிறப்பாக நடந்தேற வாழ்த்து தெரிவித்திருந்தார்.

தமிழில் வெளியான பாட்ஷா சூப்பர் ஹிட் திரைப்படம் தற்போது பாஷா என்ற பெயரில் இந்தியில் ரிலீஸாகிறது. இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முன்பு அஜய் தேவ்கன் விருப்பம் தெரிவித்திருந்தார். இருப்பினும் இது தற்போது நேரடியாக இந்தியில் டப் ஆகியுள்ளது. இப்படத்தை டிஜிட்டல் முறையில் சீர்திருத்தி பத்ரகாளி ரமேஷ், நரேந்திர சிங் ஆகியோர் இந்தியில் வெளியிடுகின்றனர்.

இப்படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில்நடந்தது. இசைத் தட்டுக்களை இசையமைப்பாளர் மான்டி சர்மா வெளியிட அதை நடிகர் பாயல் ரோஹத்தி பெற்றுக் கொண்டார். இதில் ஏராளமான இந்தி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

இப்படத்தை டிஜிட்டல் முறையில் சீரமைத்து வெளியிடுகின்றனர். டைட்டில் கார்டு முதல் அனைத்தையும் சரி செய்து நவீன முறையில் மாற்றியுள்ளனர். 5.1 டிஜிட்டல் ஆடியோ முறையில் ஒலி, ஒளியமைப்பு சரி செய்யப்பட்டுள்ளது. தமிழில் இசையமைத்த தேவாவே இந்திப் படத்தின் இசையையும் கவனித்துள்ளார்.

விழாவில் ரஜினி வரலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் ரஜினி வரவில்லை. மாறாக அவரது வாழ்த்துச் செய்தி வந்திருந்தது. மே மாத இறுதியில் படத்தை திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனராம்.

இந்தி பாஷா பாட்டு ரிலீஸ்... ரஜினி வாழ்த்து!

சிறுநீரக பாதிப்புக்காக நவீன சிகிச்சை தேவைப்பட்டதால், நடிகர் ரஜினிகாந்த் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். சிங்கப்பூருக்கு சென்ற ரஜினிகாந்த், அங்குள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்குள்ள டாக்டர்கள் குழுவினர் ரஜினிகாந்துக்கு, டயாலிசிஸ் சிகிச்சை அளித்தனர். இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, 29.05.2011 அன்று காலை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு ரஜினிகாந்த் மாற்றப்பட்டார்.

டாக்டர்கள் மற்றும் குடும்பத்தினர்களிடம் ரஜினிகாந்த் உற்சாகமாக பேசினார். பேரக்குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தார். அவருடைய உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்துவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

பேரக்குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்த ரஜினி

சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு அங்கு சிறுநீரக ஆபரேஷன் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த், மேல் சிகிச்சைக்காக நேற்று (27ம்‌தேதி) இரவு விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றார். ராணா படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்திற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த மே 18ல் அவரது உடல்நிலை மோசமானதால், அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அல்ட்ரா பில்ட்ரேஷன், ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ரத்தத்தில் இருந்த "கிரியேட்டின் அளவு குறையத் துவங்கியது. இதையடுத்து, உடல்நலம் தேறிய அவர், மீண்டும் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். பார்வையாளர்கள் அவரை சந்திப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. தனி வார்டில் இருந்த நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலையை, அமெரிக்க நிபுணர்கள் மற்றும் ராமச்சந்திரா மருத்துவமனை நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ரஜினியின் நுரையீரலில் அழுத்தமாக படிந்துள்ள நீர்கோப்பு மற்றும் சிறுநீரக பாதிப்பு ஆகியவற்றுக்கு சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் நவீன முறையில் சிகிச்சை அளிக்கலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அவரை சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று இரவு 11.30 மணிக்கு, சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில், ரஜினி சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார். அவருடன் மகள்கள் சவுந்தர்யா, ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ் ஆகியோரும் சென்றனர். ரஜினி இருந்த ஆம்புலன்ஸ் வேன், விமானம் வரை செல்ல முதல்வர் ஜெயலலிதா சிறப்பு அனுமதி பெற்றுக் கொடுத்ததால் விமானம் வரை ஆம்புலன்ஸ் சென்றது. பின்னர் ரஜினி மருத்துவ குழுவினரின் உதவியுடன் விமானத்தில் ஏற்றப்பட்டார். சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் ரஜினி சில வாரங்களுக்கு தங்கி சிகிச்சை எடுப்பார் என்றும், அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினி வாய்ஸ் : முன்னதாக ரஜினியின் வாய்ஸ் அடங்கிய சிடி ஒன்றை பத்திரிகையாளர்களுக்கு அவரது மகள் ஐஸ்வர்யா அனுப்பி வைத்தார். அதில் பேசிய ரஜினி, நான் உங்க ரஜினிகாந்த் பேசுறேன். நான் நல்லா இருக்கேன். யாரும் கவலைப்படாதீங்க. நான் பணம் வாங்குறேன். நடிக்குறேன். அதுக்கு நீங்க என் மேல இவ்ளோ அன்பு செலுத்துறீங்க. உங்களுடைய பிரார்த்தனை, அன்புக்கு கைமாறா என்ன செய்வேன்னு, செய்யப்போறேன்னு தெரியல. என் பேன்ஸ் எல்லாரும் கடவுள் ரூபத்தில் இருக்குறதா நினைக்கிறேன். உங்க பிரார்த்தனையால சிங்கப்பூர் போயிட்டு நான் சீக்கிரமே, நல்லபடியா திரும்ப வந்து உங்களையெல்லாம் சந்திக்குறேன். உங்க அன்பால தலைநிமிந்து நிற்பேன், என்று கூறியுள்ளார்.

லதா ரஜினி அறிக்கை : ரஜினியின் மனைவி லதா வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், எனது கணவர் ரஜினிகாந்த் உடல் நலம் பெற தாங்கள் செய்து வரும் பூஜைகளுக்கும், கூட்டு பிரார்த்தனைகளுக்காக முதலில் நான் எனது குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ரஜினிகாந்த் நலமுடன் உற்சாகமாகவும் உள்ளார். அவருக்கு முழு ஓய்வு தேவைப்படுவதாலும், உடல் நலத்தை கவனித்துக் கொள்வதற்காகவும் குடும்பத்துடன் சிங்கப்பூர் செல்கிறோம். அவரைப் பற்றி தேவையில்லாத செய்திகள் வந்து கொண்டிருப்பதை கண்டு தாங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். அவருக்கு முழு மருத்துவ கவனிப்பு அளிக்கப்பட்டு வருகிறது, என்று கூறியுள்ளார்.

மருத்துவமனை அறிக்கை : ரஜினி உடல்நிலை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரஜினிகாந்த் கடந்த 13ம்தேதி மூச்சுத் திணறல், காய்ச்சல் உள்ளிட்ட காரணங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக அவருக்கு குடும்ப டாக்டர் மூலம் இசபெல்லா மருத்துவமனையில் 2 முறை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ரஜினிகாந்த்துக்கு அளிக்கப்படும் தொடர் சிகிச்சையின் காரணமாக அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு தேறி வருகிறார். நலமுடன் உள்ளார். அவரே உணவருந்துகிறார். குடும்பத்தினருடன் பொழுதை கழிக்கிறார். அவர் சூழ்நிலை மாற்றத்துக்காகவும், ஓய்வுக்காகவும் அதே நேரம் குறிப்பிட்ட பரிசோதனைக்காகவும் வெளிநாடு செல்கிறார், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நல்லபடியா திரும்பி வருவேன்! ரஜினி உருக்கமான வாய்ஸ்!!

சென்னை போரூர் ஸ்ரீ ராமச்​சந்​திரா மருத்​து​வ​ம​னை​யில் சேர்க்​கப்​பட்​டுள்ள நடி​கர் ரஜினி காந்த் இயல்பு நிலைக்​குத் திரும்​பிக் கொண்​டி​ருப்​ப​தாக டாக்​டர்​கள் தெரி​வித்​த​னர்.​

திட உணவை அவரே எடுத்​துச் சாப்​பி​டு​வ​தா​க​வும் மருத்​து​வ​மனை தரப்​பில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.​

சுவா​சப் பாதை நோய்த் தொற்று,​​ நிமோ​னியா காய்ச்​சல் கார​ண​மாக நடி​கர் ரஜினி காந்​துக்கு இரண்டு வாரங்​க​ளுக்கு முன்பு உடல் நலக் குறைவு ஏற்​பட்​டது.​

மே 13-ம் தேதி இரவு ஸ்ரீ ராமச்​சந்​திரா மருத்​து​வ​ம​னை​யில் உள்ள சிறப்பு அறை​யில் மருத்​து​வப் பரி​சோ​த​னை​க​ளுக்​காக சேர்க்​கப்​பட்​டார்.​

தீவிர சிகிச்​சைப் பிரி​வில்...​ ரஜி​னிக்கு சிறப்பு மருத்​துவ நிபு​ணர்​கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்​த​னர்.​ சிறப்​புப் பிரி​வில் சிகிச்சை பெற்று வந்த அவ​ரின் சுவா​சத்தை சீராக்க தீவிர சிகிச்​சைப் பிரி​வுக்கு மாற்​றப்​பட்​டார்.​

டயா​லி​ஸிஸ்...​ அங்கு நுரை​யீர​லில் சேர்ந்​துள்ள நீரை அகற்ற நவீன சிகிச்சை அளிக்​கப்​பட்​டது.​ மேலும் ரத்​தத்​தைச் சுத்​தி​க​ரிக்க,​​ ​ ஹீமோ​ட​யா​லி​ஸிஸ் சிகிச்சை அளிக்​கப்​பட்​டது.​ ரத்​தத்​தில் அதி​க​ரித்​து​விட்ட தாது உப்​புக்​கள்,​​ ​ "அல்ட்ரா ஃபில்ட்​ரே​ஷன்' எனப்​ப​டும் மருத்​துவ சிகிச்சை மூலம் அகற்​றப்​பட்​டன.​ ​

இத்​த​கைய சிகிச்​சை​க​ளால் ரஜி​னி​யின் உடல் நிலை​யில் நல்ல முன்​னேற்​றம் ஏற்​பட்​டுள்​ளது.​ அவர் இயல்பு நிலைக்​குத் திரும்​பிக் கொண்​டி​ருக்​கி​றார்.​ அவர் தனது குடும்​பத்​தா​ரி​டம் தனது நேரத்​தைக் செல​வ​ழித்​துக் கொண்​டி​ருக்​கி​றார் என​வும்,​​ திட ஆகா​ரத்தை எந்​த​வித உத​வி​யும் இன்றி அவரே சாப்​பி​டு​வ​தா​க​வும் மருத்​து​வ​மனை நிர்​வா​கம் தெரி​வித்​துள்​ளது.​

நீடிக்​கும் தீவிர சிகிச்சை...நோய்த்​தொற்று ஏற்​ப​டா​மல் இருக்​க​வும்,​​ பார்​வை​யா​ளர்​களை தவிர்க்​க​வும் ரஜி​னி​காந்த் தொடர்ந்து தீவிர சிகிச்​சைப் பிரி​வி​லேயே வைத்து கண்​கா​ணிக்​கப்​பட்டு வரு​கி​றார்.​

நலம் விசா​ரிப்பு:​​ மத்​திய கப்​பல் போக்​கு​வ​ரத்து துறை அமைச்​சர் ஜி.கே.வாசன் சனிக்​கி​ழமை லதா ரஜினி காந்தை தொலை​பே​சி​யில் அழைத்து ரஜி​னி​யின் உடல் நலம் குறித்து விசா​ரித்​தார்.​ முன்​னாள் மத்​திய அமைச்​சர் திரு​நா​வுக்​க​ர​சர் மருத்​து​வ​ம​னைக்​குச் சென்று ரஜினி காந்​தின் உத​வி​யா​ளர் சுப்​பை​யா​வி​டம் நலம் விசா​ரித்து,​​ விரை​வில் குணம் பெற வாழ்த்து தெரி​வித்​தார்

இயல்பு நிலைக்கு திரும்​பு​கி​றார் ரஜினி, திட உணவு சாப்​பி​டு​கி​றார்

நடிகர் ரஜினிகாந்த் கடந்த மூன்று வாரங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இதையடுத்து அவரது உடல் நிலை குறித்து அதிர்ச்சி தரும் வதந்திகளும் பரவின.

ரஜினிகாந்தை திமுக தலைவர் கருணாநிதி உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தை சந்தித்து நலம் விசாரிக்கிறார் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி.

சென்னையில் இன்று தமிழக முதல்வராக பதவியேற்கிறார் நரேந்திரமோடி. இந்த விழாவிற்கு நேரில் வருகை தரவிருக்கும் மோடி, விழா முடிந்ததும் ரஜினியை சந்திக்கிறார்.

ரஜினியை சந்தித்து நலம் விசாரிக்கிறார் நரேந்திரமோடி

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவர்களின் அனுமதியோடு செவ்வாய்க்கிழமை அன்று காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று வழிபட்டு திரும்பினார்.

ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த மாதம் 29ந் தேதி மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அஜீரண கோளாறு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

சிகிச்சைக்குப் பின் குணமடைந்து அன்று மாலையே வீடு திரும்பினார். டாக்டர்கள் ஆலோசனைப்படி வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார்.

இதற்கிடையில் கடந்த 4ந் தேதி மீண்டும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசர பிரிவில் வைத்து ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் கிஷோர் ஆகியோர் சிகிச்சை அளித்தார்கள்.

காய்ச்சலும், இருமலும் இருப்பதாக கூறப்பட்டது. மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என்றனர். ஆனால் தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

இன்று 7வது நாளாக ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மகள் ஐஸ்வர்யா தெரிவித்தார். தினமும் அதிகாலையில் எழுந்து மருத்துவமனைக்கு உள்ளேயே ரஜினி நடைபயிற்சி மேற்கொண்டார்.

இந்நிலையில் செவ்வாய்கிழமை மருத்துவர்களின் அனுமதியோடு பாம்பன் சுவாமி கோயிலுக்கு சென்று தியானத்தில் ஈடுபட்டார். பின்னர் காளிகாம்பாள் கோயிலில் அவர் வழிபட்டு மருத்துவமனை திரும்பினார்.

நடிகர் ரஜிகாந்த் உடல் நலம் தேறி வருவதாகவும், மருத்துவர்களின் கவனிப்புக்காகவே அவர் மருத்துவமனையில் இருந்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் மூன்று நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவிலில் வழிபட்டு மருத்துவமனைக்கு திரும்பிய ரஜினிகாந்த்!

சட்டசபை தேர்தலில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் இன்று போயஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் உடன் இருந்தார். முன்னதாக எம்.ஜி.ஆர் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனை அவரது இல்லத்தில் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நடிகர் ரஜினிகாந்த்துடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சட்டசபை தேர்தலில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் இன்று போயஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் உடன் இருந்தார். முன்னதாக எம்.ஜி.ஆர் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனை அவரது இல்லத்தில் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

முக நூல்

Popular Posts