background img

புதிய வரவு

Showing posts with label Super star. Show all posts

சென்னை போரூர் ஸ்ரீ ராமச்​சந்​திரா மருத்​து​வ​ம​னை​யில் சேர்க்​கப்​பட்​டுள்ள நடி​கர் ரஜினி காந்த் இயல்பு நிலைக்​குத் திரும்​பிக் கொண்​டி​ருப்​ப​தாக டாக்​டர்​கள் தெரி​வித்​த​னர்.​

திட உணவை அவரே எடுத்​துச் சாப்​பி​டு​வ​தா​க​வும் மருத்​து​வ​மனை தரப்​பில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.​

சுவா​சப் பாதை நோய்த் தொற்று,​​ நிமோ​னியா காய்ச்​சல் கார​ண​மாக நடி​கர் ரஜினி காந்​துக்கு இரண்டு வாரங்​க​ளுக்கு முன்பு உடல் நலக் குறைவு ஏற்​பட்​டது.​

மே 13-ம் தேதி இரவு ஸ்ரீ ராமச்​சந்​திரா மருத்​து​வ​ம​னை​யில் உள்ள சிறப்பு அறை​யில் மருத்​து​வப் பரி​சோ​த​னை​க​ளுக்​காக சேர்க்​கப்​பட்​டார்.​

தீவிர சிகிச்​சைப் பிரி​வில்...​ ரஜி​னிக்கு சிறப்பு மருத்​துவ நிபு​ணர்​கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்​த​னர்.​ சிறப்​புப் பிரி​வில் சிகிச்சை பெற்று வந்த அவ​ரின் சுவா​சத்தை சீராக்க தீவிர சிகிச்​சைப் பிரி​வுக்கு மாற்​றப்​பட்​டார்.​

டயா​லி​ஸிஸ்...​ அங்கு நுரை​யீர​லில் சேர்ந்​துள்ள நீரை அகற்ற நவீன சிகிச்சை அளிக்​கப்​பட்​டது.​ மேலும் ரத்​தத்​தைச் சுத்​தி​க​ரிக்க,​​ ​ ஹீமோ​ட​யா​லி​ஸிஸ் சிகிச்சை அளிக்​கப்​பட்​டது.​ ரத்​தத்​தில் அதி​க​ரித்​து​விட்ட தாது உப்​புக்​கள்,​​ ​ "அல்ட்ரா ஃபில்ட்​ரே​ஷன்' எனப்​ப​டும் மருத்​துவ சிகிச்சை மூலம் அகற்​றப்​பட்​டன.​ ​

இத்​த​கைய சிகிச்​சை​க​ளால் ரஜி​னி​யின் உடல் நிலை​யில் நல்ல முன்​னேற்​றம் ஏற்​பட்​டுள்​ளது.​ அவர் இயல்பு நிலைக்​குத் திரும்​பிக் கொண்​டி​ருக்​கி​றார்.​ அவர் தனது குடும்​பத்​தா​ரி​டம் தனது நேரத்​தைக் செல​வ​ழித்​துக் கொண்​டி​ருக்​கி​றார் என​வும்,​​ திட ஆகா​ரத்தை எந்​த​வித உத​வி​யும் இன்றி அவரே சாப்​பி​டு​வ​தா​க​வும் மருத்​து​வ​மனை நிர்​வா​கம் தெரி​வித்​துள்​ளது.​

நீடிக்​கும் தீவிர சிகிச்சை...நோய்த்​தொற்று ஏற்​ப​டா​மல் இருக்​க​வும்,​​ பார்​வை​யா​ளர்​களை தவிர்க்​க​வும் ரஜி​னி​காந்த் தொடர்ந்து தீவிர சிகிச்​சைப் பிரி​வி​லேயே வைத்து கண்​கா​ணிக்​கப்​பட்டு வரு​கி​றார்.​

நலம் விசா​ரிப்பு:​​ மத்​திய கப்​பல் போக்​கு​வ​ரத்து துறை அமைச்​சர் ஜி.கே.வாசன் சனிக்​கி​ழமை லதா ரஜினி காந்தை தொலை​பே​சி​யில் அழைத்து ரஜி​னி​யின் உடல் நலம் குறித்து விசா​ரித்​தார்.​ முன்​னாள் மத்​திய அமைச்​சர் திரு​நா​வுக்​க​ர​சர் மருத்​து​வ​ம​னைக்​குச் சென்று ரஜினி காந்​தின் உத​வி​யா​ளர் சுப்​பை​யா​வி​டம் நலம் விசா​ரித்து,​​ விரை​வில் குணம் பெற வாழ்த்து தெரி​வித்​தார்

இயல்பு நிலைக்கு திரும்​பு​கி​றார் ரஜினி, திட உணவு சாப்​பி​டு​கி​றார்

மும்பை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'கஜினி' ஆமிர்கான் மற்றும் டோணி ஆகியோர் ஒரே இடத்தில் குழுமியிருக்கும்போது சாதிக்க முடியாதது என்று எதுவுமே இல்லை என்று இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றி குறித்து சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வர்ணித்துள்ளார்.

அமிதாப் பச்சனுக்கு ஒரு மூட நம்பிக்கை உண்டு. அதாவது அவர் இந்திய அணி விளையாடுவதை டிவியில் பார்க்க மாட்டாராம். அப்படிப் பார்த்தால் இந்தியா தோற்று விடும் என்பது அவரது நம்பிக்கை. ஆனால் நேற்று அவரால் அப்படிப் பார்க்காமல் இருக்க முடியவில்லையாம்.

போட்டியை முழுமையாக வீட்டில் உட்கார்ந்து டிவியில் பார்த்துள்ளார் அமிதாப். அந்த அனுபவத்தை ட்விட்டரில் இப்படிக் கூறியுள்ளார் அமிதாப்.

என்னால் டோணி தலைமையிலான இந்திய அணி விளையாடியதை பார்க்காமல் இருக்க முடியவில்லை. 2 விக்கெட் இழப்புக்கு 33 ரன்களை இந்தியா எடுத்திருந்தபோது ஏன் டிவி முன்பு உட்கார்ந்தோம் என்றுதான் நினைத்தேன். ஆனால் போகப் போக என்னால் எழுந்திருக்க முடியவில்லை. டோணி அடித்தாரே அந்த கடைசி சூப்பர் சிக்ஸ், அதை விளக்கவே வார்த்தை இல்லை.

அதுசரி, ஒரே இடத்தில் ரஜினி, கஜினி (ஆமிர்கான்), டோணி ஆகியோர் இருந்தால், சாதிக்க முடியாதது என்று எதுவுமே கிடையாதே!.

ஏதோ நாடே சுதந்திரமடைந்தது போல இந்த வெற்றியை மக்கள் கொண்டாடியது என்னைக் கவர்ந்துள்ளது. என்ன ஒரு ஆட்டம், என்ன ஒரு ஆட்டம். அட்டகாசமான போட்டி. என்னால் மறக்க முடியாது என்று கூறியுள்ளார் அமிதாப்.

ரஜினி, கஜினி, டோணி ஒன்றாக இருந்தால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை-அமிதாப்

முக நூல்

Popular Posts