background img

புதிய வரவு

Showing posts with label Rajini. Show all posts

சென்னை: சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக நடிகர் ரஜினி அடுத்த சில நாட்களில் லண்டன் கொண்டு செல்லப்படவுள்ளார்.

முன்னதாக அவரை அமெரிக்கா அழைத்துச் செல்ல திட்டமிட்டனர். பின்னர் அமெரிக்க டாக்டர் குழுவை சென்னைக்கு வரவழைக்கப்பட்டது. இந் நிலையில் அவரை லண்டனுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 29ம் தேதி ராணா படப்பிடிப்பில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டது.ஆனால் அவருக்கு என்ன பிரச்சனை என்பதைச் சொல்லாமல் மூடி மறைத்தனர் அவரது குடும்பத்தினர்.

இதையடுத்து முதலில் இசபெல்லா மருத்துவமனையிலும் இப்போது ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையிலும் ரஜினி சிகிச்சை பெற்று வருகிறார். கிட்டத்தட்ட 1 மாத காலமாகவே ரஜினி உடல்நலக் குறைவுடன் உள்ளார்.

மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கு முன்பே, ரஜினிகாந்துக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை, ஆரம்ப நிலை சர்க்கரை நோய் ஆகியவை இருந்துள்ளன. இவற்றுக்கு உரிய சிகிச்சையை எடுக்காமல் இருந்ததால், சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டன.

சிறுநீரகச் செயல்பாடு பாதிப்பு காரணமாக அவருக்கு ஹீமோ-டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை அவருக்கு 5 முறை ஹீமோ-டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் சிறுநீரக பாதிப்புக்கு உயர் சிகிச்சை அளிக்க அவரை லண்டன் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வாரம் அவர் லண்டன் பயணமாவார் என ரஜினி குடும்பத்துக்கு வேண்டியவர்கள் தெரிவித்தனர். பயண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன

சிறுநீரகங்கள் பாதிப்பு-5 முறை டயாலிசிஸ்: சிகிச்சைக்காக லண்டன் கொண்டு செல்லப்படும் ரஜினி

தீவிர சிகிச்சை பிரிவில் அளிக்கப்படும் தொடர் சிகிச்சை காரணமாக, நடிகர் ரஜினிகாந்த், இயல்பு நிலைக்கு திரும்புகிறார். இதனால் அவர் நேற்றிரவு தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். மேலும் அவரே உணவை எடுத்துக் கொண்டார். மனைவி மற்றும் மகள்களுடன், "டிவி பார்த்தார்.

உடல்நிலை பாதிப்பு காரணமாக, கடந்த 13ம் தேதி, போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினி காந்திற்கு, தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறுநீரக செயல்பாடு திடீரென மந்தமான நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன், ரஜினிக்கு அல்ட்ரா பில்ட்ரேஷன் ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, ரத்தத்தில் அதிகரித்திருந்த, "கிரியேட்டின் அளவு குறையத் துவங்கியது. இந்த சிகிச்சையைத் தொடர்ந்து, ரஜினியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாலும், நேற்று தன் மனைவி, மகள்களுடன், "டிவி பார்த்தார். வழக்கமான உணவே அவருக்கு கொடுக்கப்பட்டது.

இது குறித்து, ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கடந்த 18ம் தேதி முதல், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள ரஜினிகாந்த், இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார். இருப்பினும், அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிலேயே வைக்கப்படுவார். அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. நேற்று அவரே உணவை எடுத்துக் கொண்டார். மனைவி மற்றும் மகள்களுடன், "டிவி பார்த்தார். ரஜினியின் உடல்நிலை சீரான பிறகே, அவர் தனி வார்டுக்கு மாற்றப்படுவார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிவார்டுக்கு மாற்றம்: தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ரஜினிக்கு மருத்துவக் குழுவினரால் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பல்வேறு நவீன பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர் சிகிச்சையின் காரணமாக, அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, நேற்று இரவு 7 மணியளவில், தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து தனி வார்டுக்கு ரஜினி மாற்றப்பட்டார். இருப்பினும், நோய் தொற்று ஏற்படாமல் இருக்க, இன்னும் சில நாட்களுக்கு அவர், பார்வையாளர்களை சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என, மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

தனிவார்டுக்கு ரஜினி மாற்றம்!

சென்னை போரூர் ஸ்ரீ ராமச்​சந்​திரா மருத்​து​வ​ம​னை​யில் சேர்க்​கப்​பட்​டுள்ள நடி​கர் ரஜினி காந்த் இயல்பு நிலைக்​குத் திரும்​பிக் கொண்​டி​ருப்​ப​தாக டாக்​டர்​கள் தெரி​வித்​த​னர்.​

திட உணவை அவரே எடுத்​துச் சாப்​பி​டு​வ​தா​க​வும் மருத்​து​வ​மனை தரப்​பில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.​

சுவா​சப் பாதை நோய்த் தொற்று,​​ நிமோ​னியா காய்ச்​சல் கார​ண​மாக நடி​கர் ரஜினி காந்​துக்கு இரண்டு வாரங்​க​ளுக்கு முன்பு உடல் நலக் குறைவு ஏற்​பட்​டது.​

மே 13-ம் தேதி இரவு ஸ்ரீ ராமச்​சந்​திரா மருத்​து​வ​ம​னை​யில் உள்ள சிறப்பு அறை​யில் மருத்​து​வப் பரி​சோ​த​னை​க​ளுக்​காக சேர்க்​கப்​பட்​டார்.​

தீவிர சிகிச்​சைப் பிரி​வில்...​ ரஜி​னிக்கு சிறப்பு மருத்​துவ நிபு​ணர்​கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்​த​னர்.​ சிறப்​புப் பிரி​வில் சிகிச்சை பெற்று வந்த அவ​ரின் சுவா​சத்தை சீராக்க தீவிர சிகிச்​சைப் பிரி​வுக்கு மாற்​றப்​பட்​டார்.​

டயா​லி​ஸிஸ்...​ அங்கு நுரை​யீர​லில் சேர்ந்​துள்ள நீரை அகற்ற நவீன சிகிச்சை அளிக்​கப்​பட்​டது.​ மேலும் ரத்​தத்​தைச் சுத்​தி​க​ரிக்க,​​ ​ ஹீமோ​ட​யா​லி​ஸிஸ் சிகிச்சை அளிக்​கப்​பட்​டது.​ ரத்​தத்​தில் அதி​க​ரித்​து​விட்ட தாது உப்​புக்​கள்,​​ ​ "அல்ட்ரா ஃபில்ட்​ரே​ஷன்' எனப்​ப​டும் மருத்​துவ சிகிச்சை மூலம் அகற்​றப்​பட்​டன.​ ​

இத்​த​கைய சிகிச்​சை​க​ளால் ரஜி​னி​யின் உடல் நிலை​யில் நல்ல முன்​னேற்​றம் ஏற்​பட்​டுள்​ளது.​ அவர் இயல்பு நிலைக்​குத் திரும்​பிக் கொண்​டி​ருக்​கி​றார்.​ அவர் தனது குடும்​பத்​தா​ரி​டம் தனது நேரத்​தைக் செல​வ​ழித்​துக் கொண்​டி​ருக்​கி​றார் என​வும்,​​ திட ஆகா​ரத்தை எந்​த​வித உத​வி​யும் இன்றி அவரே சாப்​பி​டு​வ​தா​க​வும் மருத்​து​வ​மனை நிர்​வா​கம் தெரி​வித்​துள்​ளது.​

நீடிக்​கும் தீவிர சிகிச்சை...நோய்த்​தொற்று ஏற்​ப​டா​மல் இருக்​க​வும்,​​ பார்​வை​யா​ளர்​களை தவிர்க்​க​வும் ரஜி​னி​காந்த் தொடர்ந்து தீவிர சிகிச்​சைப் பிரி​வி​லேயே வைத்து கண்​கா​ணிக்​கப்​பட்டு வரு​கி​றார்.​

நலம் விசா​ரிப்பு:​​ மத்​திய கப்​பல் போக்​கு​வ​ரத்து துறை அமைச்​சர் ஜி.கே.வாசன் சனிக்​கி​ழமை லதா ரஜினி காந்தை தொலை​பே​சி​யில் அழைத்து ரஜி​னி​யின் உடல் நலம் குறித்து விசா​ரித்​தார்.​ முன்​னாள் மத்​திய அமைச்​சர் திரு​நா​வுக்​க​ர​சர் மருத்​து​வ​ம​னைக்​குச் சென்று ரஜினி காந்​தின் உத​வி​யா​ளர் சுப்​பை​யா​வி​டம் நலம் விசா​ரித்து,​​ விரை​வில் குணம் பெற வாழ்த்து தெரி​வித்​தார்

இயல்பு நிலைக்கு திரும்​பு​கி​றார் ரஜினி, திட உணவு சாப்​பி​டு​கி​றார்

ரஜினிகாந்த் உடல்நிலை நன்றாக இருக்கிறது என்று நேரில் பார்த்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். நடிகர் ரஜினிகாந்திற்கு நேற்று முன்தினம் இரவு உடல்நிலை மோசமானதால், தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். டாக்டர் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிறப்பான சிகிச்சை அளித்து வருகின்றனர். "ரஜினிகாந்த் விரைவில் வீடு திரும்புவார். அவர் குணமடைய அனைவரும் பிரார்த்திக்க வேண்டும், என்று ரஜினிகாந்த் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிக்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். நள்ளிரவே டாக்டர் குழுவினர் வரவழைக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மூச்சுத்திணறல் காரணமாக செயற்கை சுவாசமும் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் உடல்நிலை மோசமானதால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, பல்வேறு பகுதிகளில் இருந்தும் அவரது ரசிகர்கள் மருத்துவமனை முன் குவிந்தனர். போலீசார் குவிக்கப்பட்டனர். பத்திரிகையாளர்களும் குவிந்தனர். யாரையும் மருத்துவமனைக்குள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.

ரஜினியின் உடல் நலம் குறித்து விசாரித்த போது, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் நலமுடன் உள்ளார் என்று மட்டும் பதிலளிக்கப்பட்டது. இதற்கிடையே ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், மருமகன் தனுஷ், ராமச்சந்திரா மருத்துவமனையின் இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர்தணிகாசலம் ஆகியோர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்கினர்.

லதா ரஜினிகாந்த் கூறுகையில், "அவர் மீது அன்பு வைத்திருக்கும் ரசிகர்களுக்கு மிக்க நன்றி. அவர் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கிறார். அவர் உடல்நிலை குறித்து விசாரிக்க உறவினர்கள், நண்பர்கள் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதை தவிர்க்கவும், அமைதியான சூழல் வேண்டும் என்பதற்காக தான் அவர் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். டயாலிசிஸ் சிகிச்சை என்பது டாக்டர்கள் அவருக்கு அளிக்கும் சிகிச்சையின் ஒரு பகுதி.

இந்த சிகிச்சை தேவை என்பதால் டாக்டர்கள் மேற்கொண்டனர். இதை வைத்து உடலின் பாகங்கள் செயல்படவில்லை என்று கூறக்கூடாது. டாக்டர் குழுவினர் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். விரைவில் வார்டுக்கு அவர் வருவார். விரைவில் வீடு திரும்புவார். மீடியாக்கள் உட்பட யாரும் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர் விரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்றார்.

டாக்டர் தணிகாசலம் கூறுகையில், "ரஜினிகாந்த் ஒரு ஆரோக்கியமான மனிதர். படப்பிடிப்புக்களுக்காக பல்வேறு இடங்களுக்கு செல்லக்கூடியவர். அவருக்கு சளி பிடிப்பது என்பது இயற்கை தான். அதன் மூலம் மற்ற சில பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது. பெரிய டாக்டர் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. ஒரு டாக்டர் என்ற முறையில் நோயாளியை பற்றி, அவருடைய முழு தகவல்களையும் சொல்ல முடியாது. ஆனால், அவர் ஆரோக்கியமாக இருக்கிறார். இன்று (நேற்று) காலை கூட என்னிடம் "ஜோக் அடித்தார். காலை 2 இட்லி, ஒரு வடை சாப்பிட்டார். இட்லி சாப்பிடும் அளவிற்கு உடல் ஆரோக்கியமாக தான் இருக்கிறது. ரஜினிகாந்திற்கு மூச்சுத்திணறல், பேதி இருந்தது. நுரையீரலில் உள்ள நீரை வெளியே எடுப்பதற்காக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்துள்ளோம் என்றார்.

நடிகர் தனுஷ் கூறுகையில், "அவர் நலமுடன் உள்ளார். ரசிகர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். திருநெல்வேலியில் கடையடைப்பு போன்ற சம்பவங்கள் நடந்ததாக கூறப்படுகிறது. யாரும் அதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டாம். விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றார்.

இரு தினங்களில் தனி வார்டுக்கு திரும்புவார் :

ரஜினி உடல்நிலை குறித்து ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 13ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் எங்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் மார்பில் அளவிற்கு அதிகமாக நீர்கோர்ப்பு இருந்தது. அது அல்ட்ரா பில்ட்ரேஷன், ஹீமோ டயாலிசிஸ் ஆகிய நவீன சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் உடல்நலம் திருப்திகரமாக உள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த், அடுத்த இரண்டு நாட்களில் தனி வார்டுக்கு திரும்புவார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பொதுவாக நோய்வாய்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது அந்த சிகிச்சை பலனளித்து, உடல்நலம் தேறுவது என்பது ஒரு நல்ல அறிகுறி. நடிகர் ரஜினிகாந்த் விஷயத்திலும் கொடுக்கப்பட்ட சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வக சோதனைகளும், அவர் உடல்நலம் தேறி வருவதை உறுதி செய்கின்றன. தற்போது கொடுக்கப்பட்ட அல்ட்ரா பில்ட்ரேஷன் மற்றும் ஹீமோ டயாலிசிஸ் ஆகிய சிகிச்சைகள், அவர் உடல்நலம் தேறுவதற்கு உதவியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது, என்று கூறப்பட்டுள்ளது.

நலம் விசாரித்தார் விஜயகாந்த் :

ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து நலம் விசாரிக்க, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று மாலை 3 மணிக்கு வந்தார். 20 நிமிடம் மருத்துவமனையில் இருந்த அவர், பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

விஜயகாந்த் கூறுகையில், "ரஜினிகாந்தை பார்க்க வந்தேன். அவர் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். தொந்தரவு செய்யாமல், லதா ரஜினிகாந்திடம் உடல்நிலை குறித்து விசாரித்தேன். ரஜினிகாந்த் நன்றாக இருக்கிறார். உடல்நிலை பாதிக்கப்படுவது, இயற்கையான விஷயம். நான் கூட உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றேன். அப்போதெல்லாம் இதுபோன்ற பரபரப்பு ஏற்படவில்லை. ரஜினிகாந்த் விஷயத்தில் மீடியாக்கள் தான் இந்த விஷயத்தை பெரிதுபடுத்தி பரபரப்பாக்கி விட்டன, என்றார்.

ரஜினி உடல்நிலை! நேரில் பார்த்த விஜயகாந்த் பேட்டி!!

திருப்பூர்: ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டி திருப்பூர் ஓம் சக்தி கோவிலில் 1008 பெண்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

மனிததெய்வம் ரஜினிகாந்த் மகளிர் சேவை மையம்

திருப்பூரில் “மனிததெய்வம் ரஜினிகாந்த் மகளிர் சேவை மையம்” இயங்கி வருகிறது. கடந்த சில வாரங்களாக நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார். தற்போது நுரையீரலில் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரார்த்தனை

இந்நிலையில் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டி ரஜினிகாந்த் மகளிர் சேவை மையம் சார்பில் திருப்பூர் ஓம் சக்தி கோவிலில் 1008 பெண்கள் சிறப்பு அபிஷேக பூஜை மற்றும் பிரார்த்தனை செய்தனர். இது தவிர, 51 பக்தர்கள் திருமூர்த்தி மலை அமணலிங்கேசுவரர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் இருந்து பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு 50 கிமீ தூரம் பாத யாத்திரையாக செல்கிறார்கள்.

அன்னதானம்

சேவை மையத்தின் சார்பில் பக்தர்களுக்கு வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மனிததெய்வம் ரஜினிகாந்த் இயக்க நிர்வாகிகள், ரஜினி ரசிகர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

ரஜினிகாந்த் குணமடைய திரூப்பூரில் 1008 பெண்கள் சிறப்பு பிரார்த்தனை

நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை குறித்து வெளியாகி வரும் குழப்பமான செய்திகளால் மன வருத்தமடைந்த அவரது ரசிகர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு என்ன பிரச்சினை என்பது சரிவரத் தெரியவில்லை. அவரை அடிக்கடி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர் அவரது குடும்பத்தினர்.

ரஜினிகாந்த் சாதாரண மனிதர் அல்ல. கோடானு கோடி ரசிகர்களைக் கொண்ட மிகப் பெரிய சூப்பர் ஸ்டார். எனவே அவருக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகத் தமிழர்கள் அத்தனை பேரும் குழப்பமடைந்துள்ளனர், வருத்தமடைந்துள்ளனர். ஆனால் அவரது உடல் நலம் குறித்து தெளிவான தகவல் எதுவும் வெளியாகாமல் ஏதோ மர்மம் போல வைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களும், மக்களும் குழப்பமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பெரம்பலூர் அருகே 19 வயதான இளைஞர் ஒருவர் ரஜினி உடல் நலம் குறித்து வெளியான செய்திகளால் வேதனையடைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அந்த ரசிகர் ரஜினியின் தீவிர ரசிகராவார். ரஜினி குறித்த செய்திகளால் வேதனை அடைந்த அவர் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க ஓடியுள்ளார். இதைப் பார்த்த ஊர் மக்கள் அவரை விரட்டிச் சென்று பிடித்து அருகில் இருந்த ஆற்றில் முக்கி அவரை நனைத்து பின்னர் கூட்டி வந்து அறிவுரை கூறியுள்ளனர்.

ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் உடல் நலம் குறித்து கவலைப்பட வேண்டாம் என்று ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் இரண்டு தினங்கள் அவர் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ராணா படத்தின் துவக்க விழாவின் போது ரஜினிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஜீரணக் கோளாறு, நீர்ச்சத்து குறைவு காரணமாக அவர் இஸபெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்று மாலை வரை அவருக்கு சிகிச்சை அளித்து அனுப்பினர். வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

இந்த நிலையில்,நேற்று இரவு மீண்டும் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இரவே இசபெல்லா மருத்துவனையின் அவசர சிகிச்சி பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ரஜினிகாந்த். மருத்துவமனை முன்பு ரசிகர்களும், பத்திரிக்கையாளர்களும் குவிந்துவிட்டனர்.

இதையடுத்து ரஜினியின் மகள் ஐஸ்வர்யா செய்தியாளர்களிடம், "அப்பாவின் உடல்நிலை பற்றி ரசிகர்கள் கவலை கொள்ள வேண்டாம். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அப்பாவுக்கு ஏற்பட்டிருப்பது சாதாரண வைரஸ் காய்ச்சல்தான்’’ என்றார்.

ரஜினிக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்களில் ஒருவரான கிஷோர் கூறுகையில், "ரஜினியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரை மேலும் இரண்டு தினங்கள் இங்கேயே தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தியுள்ளோம்..", என்றார்.

ரஜினி உடல்நலம் குறித்துக் கவலை வேண்டாம்-ரஜினி மகள் ஐஸ்வர்யா

சென்னை: ஜீரண கோளாறு, நீர்ச்சத்து குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நடிகர் ரஜினிகாந்த் நான்கரை மணி நேரத்துக்குப் பிறகு வீடு திரும்பினார்.

ரஜினிகாந்த் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக அவர் களைப்பாக காணப்பட்டார். இந்த நிலையில், அவர் நடிக்கும் 'ராணா' படத்தின் படப்பிடிப்பு , சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் நேற்று காலை தொடங்கியது.

ரஜினிகாந்த் 'மேக்கப்'புடன் படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார். ஏவி.எம். ஸ்டூடியோவில் உள்ள விநாயகர் கோவிலில் அவர் சாமி கும்பிடுவது போன்ற காட்சியை டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் முதலில் படமாக்கினார். அதன்பிறகு ரஜினிகாந்த் அங்கிருந்து காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

பின்னர், கதாநாயகி தீபிகா படுகோனே மற்றும் மும்பை நடன அழகிகள் சம்பந்தப்பட்ட பாடல் காட்சி, ஏவி.எம். ஸ்டூடியோவில் உள்ள ஒரு அரங்கில் படமாக்கப்பட்டது.

வாந்தி

காரில் ஏறி சென்ற ரஜினிகாந்த் வழியில், பட அதிபர் ஏவி.எம்.சரவணன் அலுவலகத்துக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். 12-30 மணி வரை அவருடன் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார்.

அப்போது அவர் ஜீரண கோளாறு காரணமாக வாந்தி எடுத்தார்.

மருத்துவமனையில் அனுமதி

உடனடியாக பிற்பகல் 1-45 மணி அளவில் அவரை சென்னை மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவசர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளித்தார்கள்.

சில நிமிடங்களில், அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் மருத்துவமனைக்கு வந்தார். ரஜினிகாந்த் உடல்நிலை பற்றி அவர் கூறுகையில், "அவர் நன்றாக இருக்கிறார். காலையில், 'ராணா' படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது அவர் சாப்பிட்ட உணவில் ஏதோ நச்சுத்தன்மை இருந்திருக்கிறது. அஜீரணம் காரணமாக இங்கு சிகிச்சை பெறுவதற்காக வந்திருக்கிறார்," என்றார்.

ரஜினிகாந்துக்கு டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, கிஷோர் ஆகிய இருவரும் சிகிச்சை அளித்தனர். அவருடைய உடல்நிலை பற்றி டாக்டர் கிஷோர் கூறுகையில், "ரஜினிகாந்துக்கு ஜீரண கோளாறு ஏற்பட்டு இருக்கிறது. அதன் காரணமாக அவர் வாந்தி எடுத்திருக்கிறார். இதனால் நீர்ச்சத்து குறைந்துவிட்டது. அவருக்கு டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சைக்குப் பின் ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார். அவருடைய நாடி துடிப்பு சீராக உள்ளது. ரத்த அழுத்தமும், சுவாசமும் சீராக உள்ளன. பயப்படும்படி ஒன்றும் இல்லை", என்றார்.

டிஸ்சார்ஜ் ஆனார்

மாலை 6-15 மணி அளவில் ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் வெளியே வந்தபோது, பத்திரிகை நிருபர்கள் மற்றும் புகைப்படக்காரர்களைப் பார்த்து சிரித்தபடி கையசைத்தார். பின்னர் காரில் ஏறி, போயஸ் கார்டனில் உள்ள வீட்டுக்கு சென்றார்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ரஜினி!

உதயநிதி ஸ்டாலின் நடத்தும் 4 படங்களின் வெற்றி விழாவில் பங்கேற்க ஆரம்பத்தில் மறுத்த ரஜினி, பின்னர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

உதயநிதி வெளியிட்ட 4 படங்களின் வெற்றி விழா, சென்னையில் மே 7-ந் தேதி, ரஜினிகாந்த் தலைமையில் நடக்கிறது.

கமல்ஹாசன் நடித்த மன்மதன் அம்பு, விஜய் நடித்த குருவி, உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் உதயநிதி ஸ்டாலின். இப்போது 7-ம் அறிவு என்ற படத்தை தயாரிப்பதுடன், ராஜேஷ் எம். இயக்கத்தில், `ஒரு கல் ஒரு கண்ணாடி' என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கிறார்.

இவர் தனது ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் சார்பில் வெளியிட்ட விண்ணைத்தாண்டி வருவாயா, மதராச பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், மைனா ஆகிய படங்கள் வெற்றி பெற்றg 100 நாட்கள் ஓடின.

இந்த 4 படங்களின் வெற்றி விழாக்கள், ஏப்ரல் 22ம் தேதி நடப்பதாக முதலில் கூறப்பட்டது. இந்த விழாவுக்கு ரஜினி வருவார் என்றும் அறிவித்திருந்தனர்.

ஆனால் தேர்தல் நாளன்று ரஜினி வாக்களித்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியதால், பொதுநிகழ்ச்சிகளைத் தவிர்த்து வந்தார் ரஜினி. சிரஞ்சீவி மகன் நிகழ்ச்சியும் இதனால் தள்ளிப் போடப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்திருந்த வெற்றிவிழாவும் இதனால் தள்ளிப் போனது. இப்போது இரு வாரங்கள் கழித்து, மே 7ம் தேதி விழாவை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த விழாவுக்கு தலைமை தாங்கி, கலைஞர்களுக்கு கேடயம் வழங்கவும் ரஜினி சம்மதித்துள்ளார்.

மே மாதம் 7-ந் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது இந்த விழா. தமிழ் திரையுலகின் முக்கிய கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

வெற்றி விழா: ரஜினியை சம்மதிக்க வைத்த உதயநிதி!

நடிகர் ரஜினிகாந்த் ஓட்டு போட்ட விவகாரம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் செய்தியாளர்களிடம்,

’’சென்னையில் ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் யாருக்கு ஓட்டுப் போட்டார் என்பது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதாக புகார் கூறப்பட்டது.

அது தொடர்பாக அந்த வாக்குச்சாவடியில் நாங்கள் பதிவு செய்த வீடியோ காட்சிகளையும், தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பையும் நாங்கள் பார்த்தோம். அவர் யாருக்கு ஓட்டுப் போட்டார் என்பது தெரியவில்லை.

அதுதொடர்பாக தேர்தல் பார்வையாளரும் புகார் கூறவில்லை. இருந்தாலும், அந்த வீடியோ பதிவை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியுள்ளோம்.

அங்கு மறுவாக்குப்பதிவு நடத்துவதா? வேண்டாமா? என்பது பற்றி தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்யும்’’ என்று கூறினார்.

ரஜினி ஓட்டுப்போட்ட விவகாரம் : தேர்தல் அதிகாரி பதில்

நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட போயஸ் தோட்டத்தில் வசித்து வருகிறார்.

இவர் தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி சாவடியில் வாக்களித்தார். முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் இந்த சாவடியில் வாக்களித்தார்.

பின்னர் அவரை செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டனர். அப்போது அவர், ’’விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் மக்கள் ஒரு நல்ல ஆட்சியை எதிர்ப்பார்க்கின்றனர்’’ என்று கூறினார்.

ரஜினிகாந்த் எப்போதும் வாக்களித்துவிட்டு கைகைளை மட்டும் உயர்த்தி காட்டிவிட்டு போய்விடுவார். இந்த முறை அவர் விலைவாசி உயர்வை பற்றி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் ஒரு நல்ல ஆட்சியை எதிர்ப்பார்க்கிறார்கள் : ரஜினி பேட்டி

நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட போயஸ் தோட்டத்தில் வசித்து வருகிறார்.

இவர் தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி சாவடியில் வாக்களித்தார். முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் இந்த சாவடியில் வாக்களித்தார்.

பின்னர் அவரை செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டனர். அப்போது அவர், ’’விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் மக்கள் ஒரு நல்ல ஆட்சியை எதிர்ப்பார்க்கின்றனர்’’ என்று கூறினார்.

ரஜினிகாந்த் எப்போதும் வாக்களித்துவிட்டு கைகைளை மட்டும் உயர்த்தி காட்டிவிட்டு போய்விடுவார். இந்த முறை அவர் விலைவாசி உயர்வை பற்றி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி அரசியலுக்கு வருவாரா... தனிக்கட்சி துவங்குவாரா? இப்படி ரசிகர்கள் மனதில் எழும் கேள்விகள் நிறைய்ய...

இப்போது அந்தக் கேள்விகளுக்கான விடை கிட்டத்தட்ட கிடைத்திருப்பதாகவே அரசியல் வட்டாரத்தில் நம்புகிறார்கள். அடுத்த இரு ஆண்டுகளில் தனது அரசியல் பிரவேசத்தை அறிவிக்கப் போவதாகவும், தேசியக் கட்சியில் சேரும் திட்டம் இல்லை, தனிக்கட்சிதான் என்றும் தன்னிடம் ரஜினி கூறியதாக பாஜக தலைவர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

சென்னைக்கு வருகிறேன் என டெல்லியிலிருந்து ரஜினிக்கு தொலைபேசியில் தகவல் சொல்லிவிட்டே கிளம்பிய கட்காரியை (முன்பே செய்தி வெளியிட்டுள்ளோம்), வரவேற்று அழைத்துப் போன ரஜினி, அவருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தாராம்.

அவரது அரசியல் பிரவேசம் குறித்து கேட்ட கட்காரியிடம், "இந்தத் தேர்தலில் மக்கள் முன் உள்ள வாய்ப்புகள் (அணிகள்) எதுவும் தனக்கு திருப்தி ஏற்படுத்தும் அளவுக்கு இல்லை, மூன்றாவதாக ஒரு சக்தி வரவேண்டும் என மக்கள் விரும்புவது தனக்கும் புரிந்துள்ளதாக," என்று கூறினாராம் ரஜினி. மக்களின் இந்த விருப்பம், எதிர்ப்பார்ப்பை தான் ஒருபோதும் தட்டிக்கழிக்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக அரசியல் பற்றிக் கேட்டாலே மேலே கையை உயர்த்திக் காட்டுவது ரஜினி வழக்கம். ஆனால் கட்காரியிடம், "எனது கடைசி படத்துக்குப் பிறகு அரசியலில் ஈடுபடுவது குறித்து யோசிப்பேன். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இது நடக்கும்" என்று கூறியுள்ளார்.

மேலும், நாட்டில் ஊழலுக்கெதிரான மனநிலை உருவாகியுள்ளது திருப்தியளிப்பதாகவும், ஊழலுக்கெதிராக அன்னா ஹஸாரே மேற்கொண்ட உண்ணாவிரதம் தன்னை வெகுவாக பாதித்ததாகவும் கூறியுள்ளார் ரஜினி.

நாட்டில் நிலவும் வறுமை, ஊழல், குடிநீர் பிரச்சினை மற்றும் சுற்றுச் சூழல் சீர்கேடு போன்றவை குறித்து தான் மிகவும் கவலைப்படுவதாகவும், இப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உடனடியாக ஏதேனும் செய்தாக வேண்டும் என விரும்புவதாகவும் கட்காரியிடம் கூறியுள்ளார் ரஜினி.

சரி... ஏதேனனும் தேசியக் கட்சியில் சேருவாரா?

ம்ஹூம்... தமிழகத்தில் இப்போதும் தேசிய கட்சிகளை மக்கள் விரும்பவில்லை. எனவே தனிக்கட்சி துவங்குவது என்பதில் ரஜினி உறுதியாக உள்ளாராம்.

இன்னும் இரு ஆண்டுகளில் தனிக்கட்சி தொடங்குவார் ரஜினி! - சொல்கிறார் நிதின் கட்காரி

தமிழ் சினிமாவின் சிறந்த படங்கள்: 1931 முதல் 2010 வரை' புத்தகத்தை எழுதிய தனஞ்செயனை நேரில் வழரவழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார் ரஜினி.

80 ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான ஆயிரம் படங்களைத் தொகுத்துத் தந்திருக்கிறது தனஞ்செயன் தலைமையிலான ஒரு குழு.

தனஞ்செயன் முன்பு மோசர் பேர் நிறுவனத்தின் தமிழ்ப் படத் தயாரிப்புப் பிரிவில் தலைமை அதிகாரியாக இருந்தவர். பூ உள்ளிட்ட நான்கைந்து படங்களை அந்த நிறுவனம் தயாரித்த பிறகு, படத் தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இப்போது மோசர் பேரிலிருந்து விலகி யுடிவி நிறுவனத்தின் தென் இந்தியப் பிரிவின் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.

இந்தப் புத்தகத்தை அண்மையில் கமல்ஹாஸன் வெளியிட்டது நினைவிருக்கலாம். இப்போது தனஞ்செயனை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார் ரஜினி.

ரஜினியை சந்தித்த பின் தனஞ்செயன் இப்படிக் கூறியுள்ளார்:

"இன்று என் வாழ்க்கையில் மறக்க முடியாத, மிகப் பெரிய நாள் இதுவே. ரஜினி சார் என்னைப் பாராட்டியதையும், அவரது சிலையைப் பரிசளித்ததையும் மறக்க முடியாது. அவர் உண்மையிலேயே மிகச் சிறந்த மனிதர். மனிதாபிமானி. அவரைப் போல எளிமையான ஒருவரை என் வாழ்க்கையில் சந்தித்ததே இல்லை. என் மனதை வென்றுவிட்டார் ரஜினி..." என்றார்.

இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ள இந்த ஆங்கிலப் புத்தகத்தின் விலை ரூ 3000. தமிழ்ப் பதிப்பு விரைவில் வரவிருக்கிறது. எம்ஜிஆர், ரஜினியின் படங்கள் பல இந்தப் புத்தகத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், ரஜினி பாராட்டுத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

'தமிழ் சினிமா வரலாறு'... ரஜினி பாராட்டு!

சென்னை: பூகம்பம்-சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பான் நாட்டுக்கு வருகைத் தரும்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, அந்த நாட்டின் பிரதமர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

சுனாமி பாதித்த ஜப்பான் மக்களுக்காக சென்னையில் நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் இந்த தகவலை ரஜினி வெளியிட்டார்.

ஜப்பானில் பூகம்பத்தாலும், சுனாமியாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் 'இந்தோ-ஜப்பான் சேம்பர் ஆப் காமர்ஸ்' சார்பில் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அந்த அமைப்பின் தலைவர் வீரமணி தலைமை தாங்கினார்.

அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டு ரஜினி பேசியதாவது:

ஜப்பானிய மக்கள் எவ்வளவு பெரிய துன்பங்கள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு, உடனே திரும்ப எழுந்துவிடுவார்கள். கடினமாக உழைக்கிற மக்கள் அவர்கள்.

அந்த மக்களுக்கு இயற்கை தொடர்ந்து இன்னல்களைக் கொடுத்து வருகிறது. எவ்வளவு இன்னல்கள் வந்தாலும், தியானம்-பிரார்த்தனை மூலம் அவர்கள் மீண்டும் சகஜ நிலையை அடைந்துவிடுவார்கள். அவர்களுக்காக இறைவனிடம் நான் பிரார்த்தனை செய்கிறேன்.

ஜப்பானிய மக்கள் மிகவும் கட்டுக்கோப்பானவர்கள். கடமை தவறாதவர்கள். அங்கு சுனாமி வந்தபோது, ஒரு ரெயிலில் டிக்கெட் பரிசோதகர் சோதனை செய்துகொண்டிருந்தார். அப்போது அவர், பயணிகளிடம் 'நம் நாட்டை சுனாமி தாக்கியிருக்கிறது. என்றாலும் நான் கடமையில் இருந்து தவறமாட்டேன்' என்று கூறி, தொடர்ந்து தனது கடமையை செய்திருக்கிறார்.

இன்னொரு இடத்தில் மக்கள் வரிசையாக நின்று பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள். சுனாமி தாக்கியதும் அவர்கள் சிதறிப் போனார்கள். சுனாமி அடங்கியபின் மீண்டும் அவர்கள் அதே வரிசையில் நின்று பொருட்களை வாங்கியிருக்கிறார்கள். இதுபோன்ற கட்டுக்கோப்பும், கடமை உணர்வும்தான் ஜப்பானியர்களின் மிகச் சிறந்த குணம்.

ஜப்பானுக்கு வரும்படி என்னை, அந்த நாட்டின் பிரதமரும், சில முக்கியஸ்தர்களும் அழைத்திருக்கிறார்கள். ஜப்பானிய மக்கள் மீண்டும் சகஜ நிலையை அடைவதற்காக நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்," என்றார் ரஜினி.

இந்த கூட்டத்தில், கவிஞர் வைரமுத்து, நடிகர் சிவக்குமார், பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம், முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், இரா.செழியன், படஅதிபர்கள் எல்.சுரேஷ், ராம்குமார், எஸ்.தாணு, எடிட்டர் மோகன், புஷ்பாகந்தசாமி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

ரஜினிக்கு ஜப்பான் பிரதமர் அழைப்பு!

இந்தத் தேர்தலில் எந்த அரசியல் கட்சியையோ, தலைவர்களையோ ஆதரித்து வாய்ஸ் கொடுக்கும் திட்டமில்லை. அதே நேரம் இவர்கள் யாருடைய ஆட்சி குறித்தும் திருப்தியான அபிப்பிராயமும் இல்லை என்று ரஜினி தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சில தினங்களுக்கு முன் திடீரென்று ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார் அரசியல் விமர்சகரும் ஜெயலலிதாவின் இப்போதைய ஆலோசகர் என்று வர்ணிக்கப்படுபவருமான சோ.

1 மணி நேரத்துக்கும் மேல் இருவரும் இன்றைய அரசியல் நிலவரங்களை அலசினர். பின்னர் இருவரும் வேறு ஒரு ரகசிய இடத்தில் சில மணி நேரங்கள் அரசியல் பேசியதாகத் தெரிகிறது. இந்த இருவருடனும், மூன்றாவது நபர் ஒருவர் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவரைப் பற்றிய விவரங்களைக் கூற சோவும் மறுத்துவிட்டது நினைவிருக்கலாம்.

ரஜினி - சோ சந்திப்புக்கு காரணமே, திமுக கூட்டணியை ஆதரித்து ரஜினி பேசுவார் என செய்தி கசிந்ததுதானாம். இதனை தனது சந்திப்பின்போது குறிப்பிட்ட சோ, 'எக்காரணம் கொண்டும் திமுகவை மட்டும் ஆதரிக்காதீர்கள். அதைவிட நீங்கள் மவுனமாக இருப்பதே சிறந்தது' என்று கூறினாராம்.

ஆனால் ரஜினியோ, இப்போதைய சூழலில் எந்த கூட்டணியையும் ஆதரிக்கும் யோசனையே இல்லை. இரு கூட்டணியின் ஆட்சிகள் குறித்தும் எனக்கு திருப்தியான அபிப்பிராயமும் இல்லை, என சோவிடம் தீர்மானமாகக் கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், "திமுகவை ஆதரிக்கிறேனா இல்லையா என்பது இருக்கட்டும். அதிமுகவை எதற்காக ஆதரிக்க வேண்டும்? என்ற கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா", என்று ரஜினி கேட்டதாகவும், அதற்கு சோ நீண்ட விளக்கம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

எப்படியோ, ரஜினியின் வாய்ஸ் இல்லை என்பது மட்டும் உறுதியாகிவிட்டது என்ற நிம்மதியில் உள்ளதாம் அதிமுக தரப்பு!

யாருக்கும் 'வாய்ஸ்' இல்லை! - ரஜினியின் முடிவு

முக நூல்

Popular Posts