background img

புதிய வரவு

Showing posts with label Ramanarayanan. Show all posts

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஐந்து வருடங்கள் உண்மையாகவும், நேர்மையாகவும், தலைவராக நான் பணிபுரிந்தது என்னுடன் இருந்த நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஏனைய தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் தெரியும்.

120 சிறு முதலீட்டு படங்களில் பணியாற்றிய நான் எளிமையே வலிமை என்ற உணர்வோடு வாழ்ந்து வருபவன். எந்த காலத்திலும் திரை உலகில் நான் யாருக்கும் பாக்கி வைத்ததில்லை. நேர்மை தவறியதில்லை. இது திரை உலகில் நான் பணியாற்றிய ஏவிஎம், கே. பாலச்சந்தரின் கவிதாலயா போன்ற பெரிய நிறுவனங்களுக்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் தெரியும்.

ஞாயப்படி நடக்கும் என்னை சங்கத்தின் முன்னாள் தலைவரும் மற்றவர்களும் சங்கத்தில் 15 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என பொய்யான தகவலை கொடுத்து ஒளிபரப்பி வருகின்றனர். சங்கத்தில் வரவு-செலவு கணக்கு ஒவ்வொரு மாதமும் நடைபெறும் செயற்குழு கூட் டத்தில் ஆடிட்டர் மூலம் தணிக்கை செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதை மினிட்ஸ் புத்தகத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

புதிதாக தலைவர் பொறுப்பேற்றுள்ள எஸ்.ஏ. சந்திரசேகரன் தீவிர விசாரித்து உண்மை நிலையை எல்லோருக்கும் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன். அவருக்கு மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் ராமநாராயணன் கூறி உள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்தில் ரூ.15 கோடி ஊழலா? ராம நாராயணன் மறுப்பு

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து திரையுலகின் ஜாம்பவான்களாக, அதிகாரத்தில், தலைவர் பதவியில் இருந்த ராம.நாராயணன், வி.சி.குகநாதன் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருக்கும் ராம.நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் சொந்த வேலை காரணமாகவும், புதிய பட வேலையில் ஈடுபட இருப்பதாலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்து கொள்கிறேன். இதுவரை எனக்கு ஒத்துழைப்பு அளித்த பட அதிபர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், திரைப்பட தொழிலாளர்கள் ஆகிய அனைத்து தரப்பினருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.

பெப்சி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள வி.சி.குகநாதன் அளித்துள்ள பேட்டியில், `திரைப்பட தொழிலாளர்களுக்காக கடந்த 2 வருடங்களாக அரசின் உதவியை பெற்று, என்னென்ன நன்மைகள் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தேன். தொடர்ந்து அதை செய்ய முடியுமா? என்ற கேள்விக்குறி ஏற்பட்டு இருக்கிறது. எனவே தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டேன். என் ராஜினாமா கடிதத்தை செயலாளர் ஜி.சிவா, பொருளாளர் சண்முகம் ஆகியோரிடம் கொடுத்து விட்டேன், என்று கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ் திரையுலகம் சார்பில் ஏராளமான பாராட்டு விழாக்களை எடுத்தவர்கள்தான் இந்த ராம.நாராயணனும், வி.சி.குகநாதனும். அதேபோல கருணாநிதி பங்கேற்கும் திரையுலகம் தொடர்பான அனைத்து விழாக்களிலும் இவர்கள் 2 பேரும் ஆஜராகி கருணாநிதி திரைத்துறைக்கு செய்த சலுகைகளை குறிப்பிட்டு பாராட்டி பேசி கருணாநிதியை சந்தோஷப்படுத்துவார்கள்.

பாசத்தலைவருக்கு பாராட்டு விழா என்ற பெயரில் தமிழ் திரையுலகம் கருணாநிதிக்காக நடத்திய பாராட்டு விழாவில் அரசியல்வாதி கெட்-அப்பில் கலந்து கொண்ட அஜித் பேசும்போது, ஒரு பிரச்னைன்னா திரைத்துறையில, பதவில இருக்கிற ஒரு சிலர் அறிக்கை விட்டுடுறாங்க. நாங்க ஊர்வலம் எடுக்கப் போறோம்னு அறிக்கை விடுறாங்க. பதவில இருக்கிற ஒரு சிலர், நடிகர்கள் எல்லாரும் கலந்துக்கணும்னு சொல்லி மிர‌ட்டி வர வைக்கிறாங்க. அதுக்கு ஒரு முடிவு கட்டுங்க. வராவிட்டா ஒத்துழைப்பு தரமாட்டோம்னு மிரட்டுறாங்கய்யா. முடிங்கய்யா. அதுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணுங்க. அதுக்கு பயந்து வரவேண்டியிருக்கு, என்று நியாயமான கருத்துக்களை தெரிவித்து ஒட்டுமொத்த திரையுலகினரின் பாராட்டுக்களைப் பெற்றார். அதன் பிறகு அஜித் சந்தித்த பிரச்னைகள் ஏராளம்.

இன்று கருணாநிதி ஆட்சி மாறியதும், பதவியை விட்டு விலகும் பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் அஜித் விவகாரத்தில் ரொம்பவே மூக்கை நுழைத்தார். பாடகசாலை என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய அவர், ஊரோடு ஒத்துப் போகணும் என்று ஒரு பழமொழி உண்டு. அதனை உணர்ந்து அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும் எதிர்த்துதான் நிற்போம் என்றால், இவர்களை எப்படி மேலோ கொண்டு வந்தோமோ... அதே போல் இருக்கும் இடம் தெரியாமலும் செய்து விடுவோம், என்று மிரட்டும் தொனியில் பேசினார். பின்னர் அஜித், கருணாநிதியை சந்தித்து மன்னிப்பு கேட்ட பிறகே பிரச்னை முடிவுக்கு வந்தது, என்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்டமெடுத்த திமுக திரையுலக ஜால்ராக்கள்!

சிறந்த படங்களுக்கு மானியம் பெற விண்ணப்பங்களை தயாரிப்பாளர் சங்கத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2005 மற்றும் 2006&ம் ஆண்டுகளுக்கான மானிய தொகை வழங்கி, தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் திரையுலகினரின் துன்பங்களை துடைத்து, இன்பம் சேர்க்கும் விதமாக, கடந்த 2007, 2008, 2009, 2010ம் ஆண்டுகளில் சிறிய முதலீட்டில் தயாரிக்கப்பட்ட சிறந்த படங்களுக்கு தமிழக அரசின் மானிய தொகைக்கான விண்ணப்பம் அளிக்கப்படும் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். அதற்காக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும், சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கான விண்ணப்பத்தை சங்க அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் இராம.நாராயணன் கூறியிருக்கிறார்.

சிறந்த படங்களுக்கு மானியம்: இராம.நாராயணன் அறிக்கை

முக நூல்

Popular Posts