background img

புதிய வரவு

Showing posts with label Science. Show all posts

கூகுளுக்கு அடுத்து டிரைவர் இல்லாமல் இயங்கும் புதிய தானியங்கி கார் தொழில்நுட்பத்தை வால்வோ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ஆனால், இது கூகுள் கார் போன்று இல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது.

டிரைவர் இல்லாமல் இயங்கும் தானியங்கி கார்களை தயாரிப்பில் ஏராளமான நிறுவனங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இணைய தள உலக ஜாம்பவானான கூகுள் உருவாக்கிய தானியங்கி காருக்கான தொழில்நுட்பம் சோதனைகளில் வெற்றியடைந்துள்ளது.

டொயோட்டோ பிரையஸ் காரில் இந்த புதிய தொழில்நுட்பத்தை வைத்து கூகுள் சோதனை நடத்தி வருகிறது. மேலும், சாலையில் நேரடியாக தனது தானியங்கி காரை இயக்கி சோதனைகள் நடத்த அமெரிக்காவிலுள்ள நெவடா மாகாண போக்குவரத்து துறையிடம் கூகுள் சமீபத்தில் அனுமதியும் பெற்றுவிட்டது.

இந்த நிலையில், வாகன தயாரிப்பில் புகழ்பெற்ற சுவீடனை சேர்ந்த வால்வோ நிறுவனம் தானியங்கி கார்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி பெரும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், கூகுள் தானியங்கி கார் தொழில்நுட்பமும், வால்வோ தொழில்நுட்பமும் முற்றிலும் வெவ்வேறானது.

சாட்ரி என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் ஒரே நேரத்தில் பல கார்களை ரயில் போல இணைத்து சாலையில் செல்ல முடியும். முன்னாள் செல்லும் காரை மட்டும் டிரைவர் ஓட்டினால் போதுமானது.

பின்னால் வரும் கார்களுக்கு டிரைவர் தேவையில்லை. வயர்லெஸ் கட்டுப்பாடு மூலம் வேகம் மற்றும் 16 முதல் 50 மீட்டர் இடைவெளியில் பின்னால் வரும் கார்கள் டிரைவர் இல்லாமல் அழகாக ரயில் பெட்டிகள் போன்று பின்தொடரும்.

பின்னால் வரும் கார்களின் பிரேக், ஆக்சிலேட்டர் என அனைத்தையும் முன்னால் டிரைவர் ஓட்டி செல்லும் காரை அடிப்படையாக வைத்து இந்த புதிய தொழில்நுட்பம் அழகாக கட்டுப்படுத்தும்.

இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் 3 கார்களை இணைத்து சமீபத்தில் ஸ்பெயின் நெடுஞ்சாலையில் 200 கிமீ வரை சோதனை நடத்தியுள்ளது வால்வோ. இந்த சோதனை பெரும் வெற்றி பெற்றதாக வால்வோ தெரிவித்துள்ளது.

அருகில் செல்லும் வாகனங்கள் மற்றும் எதிரில் வரும் வாகனங்கள் குறித்து முன்னால் செல்லும் கார் மூலம் குறியீட்டு தகவல்களை பெற்று பின்னால் வரும் கார்களும் லாவகமாக கடந்து சென்றதாக வால்வோ தெரிவித்துள்ளது. இதனால், இந்த சோதனை பெரும் வெற்றியடைந்துள்ளதாக வால்வோ தெரிவித்துள்ளது.

டிரைவர் இல்லாமல் இயங்கும் 'ரயில்'கார்கள்: வால்வோ சோதனை வெற்றி

 Indian Boy Solves 350 Year Old Math Problem By Newton
லண்டன்: கடந்த 350 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்வு காணப்படாமல் இருந்து வந்த ஒரு கணிதப் புதிருக்கு விடை கண்டு அனைவரையும் வியக்க வைத்துள்ளார் 16 வயதேயான இந்திய மாணவன். இந்தக் கணிதப் புதிரைப் போடட்வர் மறைந்த சர் ஐசக் நியூட்டன் ஆவர்.

கடந்த 350 ஆண்டுகளாக உலக கணிதவியலாளர்களை குழப்பி வந்த புதிராகும் இது. கணித மேதைகள் பலரும் கூடஇந்தப் புதிருக்கு விடை காண முடியாமல் திணறி வந்தனர். ஆனால் 'ஜஸ்ட் லைக் தட்' இதற்கு விடை கண்டுள்ளார் செளரியா ராய் என்ற இந்திய வம்சாவளி மாணவன்.

ஜெர்மனியின் டிரட்சென் பகுதியில் வசித்து வருகிறார் ராய். இவர் விடை கண்டுள்ள கணிதப் புதிர், டைனமிக்ஸ் தியரியில் வருகிறது. டிரட்சென் பல்கலைக்கழகத்திற்கு ராய் பள்ளிச் சுற்றுலாவாக சென்றபோதுதான் இந்தக் கணிதப் புதிர் குறித்து ராய்க்குத் தெரிய வந்தது. அப்போது அங்குள்ள பேராசிரியர்கள் இதுகுறித்து கூறியபோது, இதற்கு விடை காணவே முடியாது என்று கூறினர்.

ஆனால் அதை சவாலாக எடுத்துக் கொண்டார் ராய். பின்னர் அதற்கு விடை காணும் முயற்சியில்இறங்கினார், வெற்றியும் பெற்றார்.

இது மட்டுமல்லாமல் மிகக் கடினமான கணிதப் புதிர்களைக் கூட எளிதாக அவிழ்க்கும் வித்தை இவரிடம் உள்ளது. 6ம் வயதிலிருந்தே இதே வேலையாகத்தான் திரிகிறாராம் இவர்.

அதேசமயம், தன்னை மேதை என்று யாரும் அழைக்க வேண்டாம் என்றும், அந்த அளவுக்கு தான் இன்னும் வளரவில்லை என்றும் அடக்கத்துடன் கூறுகிறார்.

4வயதாகஇருந்தபோது கொல்கத்தாவிலிருந்து ஜெர்மனிக்கு வந்து செட்டிலானவர் ராய். தற்போது தனது தாய் மொழியான பெங்காலியை விட ஜெர்மனியை மிக லாவகமாக பேசுகிறார் ராய்.

நியூட்டன் போட்ட கணக்குக்கு தீர்வு கண்டு சாதனை படைத்த இந்திய மாணவன்

கூகுள் வடிவமைத்துள்ள தானியங்கி காரை சாலையில் இயக்கி சோதனை நடத்த அமெரிக்காவிலுள்ள நெவடா மாகாண போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது.

டிரைவர் கட்டுப்பாடு இல்லாமல் செல்லும் தொழில்நுட்பம் கொண்ட தானியங்கி காரை கூகுள் நிறுவனம் வடிவமைத்துள்ளது. சென்சார், கேமரா மற்றும் செயற்கைகோள் உதவியுடன் தானியங்கி முறையில் செல்லும் கையில் ஒருங்கிணைந்த தொழில்நுட்பத்துடன் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, சோதனை ஓட்ட மையத்தில் இந்த தானியங்கி காரை இயக்கி சோதனைகள் நடத்தப்பட்டன. கர்சன் மற்றும் லாஸ் வேகாஸ் பகுதிகளில் மட்டும் குறிப்பிட்ட சாலைகளில் இயக்கி சோதனைகள் நடத்தப்பட்டன.

அடுத்த கட்டமாக சாலைகளில் இயக்கி சோதனைகள் மேற்கொள்ள கூகுள் திட்டமிட்டுள்ளது. இதற்காக, அமெரிக்காவிலுள்ள நெவடா மாகாண போக்குவரத்து துறையிடம் அனுமதி கோரியிருந்தது. இந்த காருக்கு சாலையில் இயக்கி சோதனைகள் நடத்துவதற்கு லைசென்ஸ் வழங்குவது குறித்து நெவடா மாகாண போக்குவரத்து துறை தீவிரமாக பரிசீலித்து வந்தது.

புதிய விதிமுறைகளுடன் தானியங்கி காரை சாலைகளில் இயக்கி சோதனைகள் நடத்த தற்போது நெவடா போக்குவரத்து துறை அந்த காருக்கு லைசென்ஸ் வழங்கியுள்ளது. கார் எந்தெந்த சாலைகளில் செல்லும் என்பது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்க கூகுள் நிறுவனம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சோதனை செய்யப்படும் காருக்கு ரூ.50 லட்சம் காப்பீடு செய்ய வேண்டும் என்றும் நெவடா போக்குவரத்து துறை கூறியுள்ளது. டொயோட்டோ பிரையஸ் கார்தான் தற்போது கூகுளின் தானியங்கி தொழில்நுட்பம் கொண்டதாக மாற்றப்பட்டு சாலைகளில் இயக்கப்பட உள்ளது. 

டிரைவர் இல்லாமல் இயங்கும் கூகுள் காரை சாலையில் இயக்க அனுமதி

மலேரியா நோய்க் கிருமிகள் மருந்துக்கு அழியாமல் போகும் எதிர்ப்பு சக்தியைப் பெற்று வருகிறது என்றும், இதனால் அந்த நோய் குணப்படுத்த முடியாத ஒரு நோயாக உருவெடுத்துவிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் அஞ்சுகின்றனர்.
மலேரியா கொசுக்கடி மூலம் பரவுகிறதுஇந்த வகையான நோய்க்கிருமிகள் முதலில் தென்பட்டிருந்த இடத்துக்கு 800 கிலோமீட்டர்கள் அப்பால் பர்மா தாய்லாந்து எல்லைப் பகுதியில் தற்போது காணப்படுவதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவ சஞ்சிகையான தி லான்செட்டில் இவர்களது ஆராய்ச்சி பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.மலேரியா நோயை முற்றுமாக ஒழித்துவிட வேண்டும் என்ற நோக்கில் நடந்துவருகின்ற முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய ஒரு விஷயம் இது என இந்த புதிய வலுவுடன் பரவ ஆரம்பித்துள்ள மலேரியா நோய்க் கிருமிகளை ஆராய்ந்துவருபவர்கள் தெரிவிக்கின்றனர்.
2010 என்ற ஒரு வருடத்தில் மட்டுமே உலகெங்கும் பார்க்கையில் 6,55,000 பேர் உயிரிழக்க நேர்ந்திருந்தது. இதில் பெரும்பான்மையானோர் குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும் ஆவர்.
மலேரியா நோய்க் கிருமியானது கொசுக்கடி மூலம் பரவுகிறது.
இந்த கிருமிக்கு எதிராக பலகாலமாகப் பயன்படுத்தப்பட்டுவரும் மருந்துக்கு கட்டுப்படாமல் போகிற ஒரு தன்மையை இக்கிருமிகளிடையில் மூன்று ஆண்டுகளுக்கு முன் முதல் தடவையாக கம்போடியாவில் விஞ்ஞானிகள் அவதானித்திருந்தனர்.

அவ்வகையான நோய்க்கிருமி மற்ற மற்ற இடங்களுக்கும் பரவாமல் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனாலும் முதலில் காணப்பட்ட இடத்திலிருந்து 800 கிலோமீட்டருக்கு அப்பால் பர்மீய எல்லைப் பகுதியில் தற்போது இவ்வகை கிருமி காணப்படுகிறது.
ஏற்கனவே இந்தப் பகுதி அதிகம் பேருக்கு மலேரியா பரவுகின்ற ஒரு இடம் ஆகும்.
அர்டெமிஸினின் என்ற இரசாயனக் கலவையை அடிப்படையாகக் கொண்ட மருந்துகள் மலேரியா நோய்க் கிருமிகளை அழிக்க பயன்பட்டுவந்தன.
ஆனால் மலேரியா கிருமிகளில் தற்போது ஏற்பட்டுள்ள மரபணு மாற்றங்கள், அந்தக் மருந்துக்கும் அழியாமல் போகின்ற ஒரு வல்லமையை அக்கிருமிகளுக்குத் தந்துள்ளது.
இது பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒருவரான பேராசிரியர் பிரான்சுவா நோஸ்டன், மலேரியாவை ஒழிக்கும் நோக்கில் உலக அளவில் நடந்துவரும் முயற்சிகளுக்கு இது ஒரு பின்னடைவைத் தரலாம் என கூறினார்.
கொசுக்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு பரவுவதனால் மருந்துக்குக்கு கட்டுப்படாத நோய்க்கிருமி பரவுகிறதா அல்லது ஆங்காங்கே இருக்கும் நோய்க்கிருமிகளிலேயே மருந்துக்கு கட்டுப்படாத இந்த தன்மை உருவாகிறதா என்று இன்னும் தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அது எப்படியிருந்தாலும் இது நிச்சயம் கவலையளிக்ககூடிய ஒரு விஷயம்தான்.
இந்த மாதிரியான மலேரியா கிருமி இந்தியாவிலோ ஆப்பிரிக்காவிலோ தென்பட ஆரிம்பித்தால், அரசாங்கங்கள், உதவியமைப்புகள் போன்றவை என்னதான் முயன்றாலும் மலேரியாவை முற்றுமாக ஒழிப்பதென்பது இயலாத காரியமாகிவிடும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

மருந்துக்கு கட்டுப்படாத மலேரியா: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

சூரியனுக்கு மிக அருகில் சென்று கொண்டு இருந்த மர்மப் பொருள் ஒன்றை கடந்த 24 ஆம் திகதி நாஸா கண்டு பிடித்து உள்ளது. இம்மர்மப் பொருள் வேற்றுக் கிரகவாசிகளின் விண்கலமாக இருக்க வேண்டும் என்று ஒரு தொகை விஞ்ஞானிகளால் நம்பப்படுகின்றது.
சூரியனுக்கு அருகில் செல்கின்ற எந்தப் பொருளும் பொதுவாக எரிந்து சாம்பலாகி விடும். ஆனால் இம்மர்மப் பொருள் வேற்றுக் கிரகவாசிகளின் விண்கலமாக இருக்கின்ற பட்சத்தில் சூரியனுடைய மிக பயங்கரமான வெப்பத்தை தடுக்கின்ற தொழினுட்பத்தை கொண்டு இருக்க கூடும். இம்மர்மப் பொருள் மிகப் பிரமாண்டமானதாகவும் செயற்கையாக நிர்மாணிக்கப்பட்டிருப்பதாகவும் படத்தில் தெரிகின்றது.
இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணைய உலகத்தை பெரிதும் கலக்கிக் கொண்டு இருக்கின்றன. வேற்றுக் கிரகவாசிகள் குறித்து நம்புபவர்கள் இம்மர்மப் பொருள் வேற்றுக் கிரகவாசிகளின் விண்கலம்தான் என்று அடித்துக் கூறுகின்றனர். இம்மர்மப் பொருளுடன் கை மாதிரியான ஒன்று பொருத்தப்பட்டு இருப்பதாகவும் தென்படுகின்றது.

சூரியனுக்கு அருகில் வேற்றுக் கிரகவாசிகளின் விண்கலம்?

Flying Machine Gun, the Weapon of the Future
டேப்லட் மூலம் கட்டுப்படுத்தும் புதிய பறக்கும் எந்திர துப்பாக்கி ஒன்றை தயாரித்து, அதன் செயல் விளக்க வீடியோ யூடியூப்பில் அப்லோட் செய்யப்பட்டிருக்கிறது.
ஹெலிக்காப்டர் போன்று பறக்கும் ஒரு குவேட்ரேட்டர் எந்திரத்தை உருவாக்கி, அதில் இந்த எந்திர துப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கியின் விசேஷம் மணிக்கு அதிகபட்சமாக 50 கிமீ வேகத்தில் இந்த குவேட்ரேட்டர் பாய்ந்து செல்லும்.
அதோடு இந்த பறக்கும் எந்திர துப்பாக்கியில் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளதால் இலக்கை சரியாக குறிவைத்து ஏவ முடியும். இதனால் மனிதர்களையும், பறவைகளையும் கூட வித்தயாசப்படுத்தி அறிந்து கொள்ளும் வகையில் இதன் கேமரா உதவும்.
இந்த எந்திர துப்பாக்கியின் முக்கிய அம்சமே, இதை டேப்லட் மூலம் இயக்க முடியும் என்பது தான். இதனால் இருக்கும் இடத்தில் இருந்தே இந்த பறக்கும் எந்திர துப்பாக்கியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்.  அற்புதமான இந்த பறக்கும் எந்திர துப்பாக்கியின் இயக்கத்தை இங்கே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவின் மூலம் பார்க்கலாம்.

சிவாஜி பட ஸ்டைலில் பறந்து சென்று இலக்கை தாக்கும் புதிய எந்திர துப்பாக்கி!

சென்னை: ஆராய்ச்சியை மேம்படுத்தும் வகையில் சென்னையில் பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி. உள்ளிட்ட 69 கல்வி நிறுவனங்களை அடக்கிய மெகா அறிவியல் நகரம் உருவாக்கப்படவிருக்கிறது. இதற்காக முன்னாள் துணைவேந்தர் வி.சி.குழந்தைசாமி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் கருணாநிதி தமிழ்நாட்டை அறிவியல் ஆராய்ச்சியில் சிறந்த விளங்கும் மாநிலமாக்கத் திட்டமிட்டு சென்னையில் மெகா அறிவியல் நகரம் அமைக்க முடிவு செய்தார். இது குறித்து ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது.

முதல் கட்டமாக தற்போது அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மெகா அறிவியல் நகரம் அமைக்க அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கல்வியாளருமான பேராசிரியர் வி.சி.குழந்தைசாமி தலைமையில் குழு ஒன்று கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.திருவாசகம், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி.மன்னர் ஜவகர், அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.தங்கராஜ், உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் க.கணேசன், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி ஆணையர் குமார் ஜெயந்த், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி மன்ற துணைத்தலைவர் எம்.எஸ்.பழனிச்சாமி உள்ளிட்ட பலர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று சென்னை மெகா அறிவியல் நகரம் உருவாக்குவது பற்றிய இரண்டாவது கூட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி., தரமணியில் உள்ள மத்திய மற்றும் மாநில அரசின் கல்வி நிறுவனங்கள், சென்னை பல்கலைக்கழக கிண்டி வளாகம், தரமணி வளாகம், கோட்டூர்புரத்தில் உள்ள அறிவியல் நகரம், பிர்லா கோள் அரங்கம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி ஆணையம் உள்ளிட்ட 69 கல்வி நிறுவனங்கள் இதில் அடங்கும்.

அத்தனை நிறுவனங்களில் உள்ள வசதி வாய்ப்புகளை ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் பயன்படுத்தி ஆராய்ச்சி பணியை மேம்படுத்த இந்த மெகா அறிவியல் நகரம் பயன்படும். இத்தனை நிறுவனங்களையும் இணைப்பதுதான் சென்னை மெகா அறிவியல் நகரம் ஆகும்.

மெகா அறிவியல் நகரத்திற்காக 25 ஏக்கர் இடம் ஒதுக்கப்படுகிறது. அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதில் பெரிய கூட்டரங்கு பிரமாண்டமாக கட்டப்பட உள்ளது. அது தவிர சில மையங்களும் கட்டப்படவுள்ளன.

ஆராய்ச்சியை மேம்படுத்த சென்னையில் மெகா அறிவியல் நகரம்

லண்டன்:குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை (ஐ.க்யூ.,), "ஜங்க் புட்' குறைத்து விடுவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது."ஜங்க் புட்' எனப்படும், நொறுக்குத் தீனிகளைத் தடை செய்வது குறித்து இந்தாண்டின் இறுதியில் ஐ.நா., ஆலோசனை நடத்த உள்ளது. இந்நிலையில், பிரிஸ்டன் பல்கலையைச் சேர்ந்த டாக்டர்.கேட் நார்த்ஸ்டோன் என்பவர் தலைமையில் ஓர் ஆய்வு நடந்தது. நான்கு வயதுக்குக் குறைந்த நாலாயிரம் குழந்தைகளிடம் அவர்களின் நுண்ணறிவுத் திறன் ஆய்வு செய்யப்பட்டது.அவர்கள் உண்ணும் நொறுக்குத் தீனிகளுக்கு ஏற்ப, நுண்ணறிவுத் திறன் குறைவது கண்டறியப்பட்டது. சராசரியாக, 1.67 சதவீதம் இயல்பு நிலையில் இருந்து குறைவது தெரியவந்தது. இந்த இழப்பை சரி செய்ய முடியாது என்றும் ஆய்வு கூறுகிறது.

இதுகுறித்து நார்த்ஸ்டோன் கூறியதாவது:பிரிட்டனில் குழந்தைகள், மோசமான உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட, சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகளவில் உள்ள உணவுகளை மட்டுமே பெருமளவில் உண்பதால், எட்டரை வயதில் அவர்களின் நுண்ணறிவுத் திறனில் பெரும் குறைபாடு நிகழ்கிறது.ஆனால், ஆரோக்கியமான உணவு முறை, நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கிறது. இந்த வயதில், நல்ல ஊட்டச் சத்துள்ள உணவுகளைக் கொடுத்தால் அவர்களின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.இவ்வாறு நார்த்ஸ்டோன் தெரிவித்தார்.

அறிவை குறைக்கும் நொறுக்குத் தீனி: ஆய்வில் தகவல்

முக நூல்

Popular Posts