background img

புதிய வரவு

Showing posts with label Tiger night. Show all posts

நள்ளிரடு நேரத்தில் புலிகள் நடமாடும் நடுக்காட்டில் தோழிகளுடன் கும்மாளம் அடித்து விட்டு வந்திருக்கிறார் நடிகை த்ரிஷா. கொண்டாட்டங்களை வித்தியாசமாக கொண்டாடுவதில் அலாதி பிரியம் த்ரிஷாவுக்கு. முன்பெல்லாம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையை ஆக்கிரமித்து ஆட்டம் போட்ட த்ரிஷாவுக்கு நடுக்காட்டில் தங்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாகவே இருந்ததாம். இதனால் தனது தோழிகள் காஸ்ட்யூம் டிசைனர் சபீனா, ஹேமா ஆகியோருடன் ஜெய்ப்பூர், ரத்னாம்பூரில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு நடுக்காட்டில் அமைந்திருக்கும் நட்சத்திர அந்தஸ்து கொண்ட குடிலில் தங்கிய த்ரிஷா... நள்ளிரவு நேரத்தில் புலிகளின் உறுமல் சத்தம், பறவைகளின் சத்தம் என பலவிதமான விலங்குகளின் சத்தத்தை கேட்டு ரசித்துள்ளார்.

இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், இந்த பயணம் உண்மையாகவே சிறப்பான பயணம். என் வாழ்நாளில் மறக்க முடியாத பயணம். ஏராமான புலிகளை மிக அருகில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ‌போட்டோக்களும் எடுத்துக் கொண்டேன். அந்த இயற்கையான சூழல் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அங்கு தங்கியிருந்த 3 நாட்களும் மகிழ்ச்சியாகவும், த்ரில்லிங்காகவும் இருந்தது, என்று கூறியுள்ளார்.

நடி‌கை த்ரிஷா இப்போது மங்காத்தா படத்தின் இறுதி சூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். அஜித்தையும், மங்காத்தை குழுவையும் ரொம்ப மிஸ் பண்ணுவதாக கூறும் த்ரிஷா, தெலுங்கில் உருவாகும் காவலன் ரீ-மேக்கில் நடிக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!

முக நூல்

Popular Posts