background img

புதிய வரவு

Showing posts with label Trisha. Show all posts

ஒரு படத்தில் காமெடி நடிகர் வடிவேலு த்ரிஷா... த்ரிஷா... என்று த்ரிஷா புராணம் பாடிக் கொண்டிருப்பார். கடைசியில் அவருக்கு த்ரிஷா கிடைக்க மாட்டார். அதனால் விரக்தியடையாத அவர், த்ரிஷா இல்லன்னா திவ்யா... என்று டயலாக் பேசி மனதை திடப்படுத்திக் கொள்வார். அந்த நிலைமைதான் கோடம்பாக்கத்தில் டைரக்டராக அறிமுகமாக துடிக்கும் பல இளம் இயக்குனர்களின் நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது.

த்ரிஷாவுக்காகவே கதையை உருவாக்கிக் கொண்டு த்ரிஷா வீட்டு வாசலில் கதை சொல்ல காத்து கிடக்கிறது ஒரு கூட்டம். இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவுடன் கோடம்பாக்கத்திற்கு படையெடுப்பவர்களில் பலர் த்ரிஷாவை வைத்து ஒரு படமாவது பண்ண வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காக அவரிடம் கால்ஷீட் கேட்டு கால் கடுக்க காத்திருக்கிறார்கள் அந்த இளம் இயக்குனர்கள். ஆனால் அம்மணியோ, அனுபவம் இல்லாத இளம் இயக்குனர்களை தவிர்த்து வருகிறார்.

இதுபற்றி த்ரிஷா அளித்துள்ள பேட்டியில், நான் எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் அபியும் நானும், விண்ணைத்தாண்டி வருவாயா, மன்மதன் அம்பு போன்ற படங்கள்தான் என் அடையாளமாக இருக்கும் என நினைக்கிறேன். இத்தனைப் படங்களில் நடித்த பின்னர் மூன்று படங்கள்தான் என் அடையாளம் என சொல்லும் அளவுக்கு இருக்கிறது. இனி என்னை அடையாளப்படுத்தும் படங்களில்தான் நடிக்கப் போகிறேன். நிறைய அறிமுக இயக்குநர்கள் கதை சொல்ல காத்திருக்கிறார்கள். நான்தான் தவிர்த்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

த்ரிஷாவை மொய்க்கும் டைரக்டர்கள்!

கோடி கோடியா கொட்டிக் கொடுத்தாலும் மோசமான படங்களில் நடிப்பதாக இல்லை. மேலும் ஒரு படம் உருவாகிக் கொண்டிருக்கும்போதே அதைப் பற்றி ஆஹா ஓஹோ என புகழ்வது வேஸ்ட். நல்ல படமா இருந்தா ஓடும், என்றார் நடிகை த்ரிஷா.

ஹைதராபாதில் த்ரிஷா அளித்த பேட்டி:

ஒரு படத்தில் நடிக்கும் போது நடிகர், நடிகைகள் இஷ்டத்துக்கும் அடித்துவிடுகின்றனர். தாங்கள் நடிக்கும் படத்தை ஆஹா ஓஹோவென புகழ்ந்து பேசுகிறார்கள். ஆனால் படம் ரிலீசான பிறகு ஒரு சில நாட்களிலேயே தியேட்டரை விட்டு போய்விடுகிறது.

எனவே இந்த மாதிரி வெற்று பில்ட் அப் எதற்கு? தாங்கள் நடிக்கும் படங்களை தாங்களே மிகைப்படுத்தி பேசுவது எனக்கு பிடிக்காது. எல்லா படங்களும் வெற்றி பெறுவது இல்லை. படங்கள் ஓடுமா? ஓடாதா? என்பதை தீர்மானிப்பவர்கள் ரசிகர்கள். அவர்கள் முடிவுக்கு விட்டு விட வேண்டும்.

படம் ரிலீசுக்கு முன்பே அதை புகழ்வது ரசிகர்களை ஏமாற்றுவதுபோல் ஆகி விடும். நல்ல கதையம்சம் உள்ள படங்களையே தேர்வு செய்து நடிக்கிறேன். எனது கேரக்டர் நன்றாக இருந்தாலும் படம் வெற்றி பெற வேண்டும். கதாபாத்திரம் நன்றாக அமைந்தாலும் தோல்வி அடையும் படங்களில் நடிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.

கூடுதல் சம்பளம் தருவதாக ஆசை காட்டி, கோடி கோடியாகக் கொட்டினாலும் தோல்வி அடையும் படங்களில் நடிக்க மாட்டேன்," என்றார் த்ரிஷா.

சும்மா எதுக்கு பில்ட் அப்...நல்லாருந்தா படம் ஓடும் - த்ரிஷா

என்னிடம் மென்மையாகப் பேசுபவர்களிடம் மென்மையாகவும், முரட்டுத்தனமாகப் பேசுபவர்களிடம் முரட்டுத்தனமாகவும் நடந்து கொள்வேன். அது என் சுபாவம் என்றார் நடிகை த்ரிஷா.

சென்னையில் நேற்று முன்தினம் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது நடிகை திரிஷா ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டுச்சாவடியில் வாக்குப்பதிவு செய்ய சென்றார். அப்போது அவருக்கும், வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒரு வாக்காளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

திரிஷா வரிசையில் நிற்காமல் ஓட்டுப்போட சென்றதால், இந்த தகராறு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதுபற்றி நடிகை திரிஷா விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறுகையில், "ஓட்டுப்பதிவின்போது என்னை, வரிசையில் நிற்கும்படி சொன்னது தவறல்ல. ஆனால், அந்த வாக்காளர் சொன்ன விதம் மிகவும் மோசம். நடிகையென்றால் அவ்வளவு கேவலமா... இது சரியல்ல.

என்னை வரிசையில் நின்று ஓட்டுப்போடுங்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தால் அப்படியே செய்திருப்பேன். அவர் என்னிடம் முரட்டுத்தனமாகப் பேசினார். அதனால் நானும் அதேபோல் பேசவேண்டி இருந்தது. என்னிடம் மென்மையாக பேசுபவர்களிடம் நானும் மென்மையாக பேசுவேன். முரட்டுத்தனமாக பேசினால், நானும் அப்படியே பேசுவேன். அந்த வாக்குச்சாவடியில் இதுதான் நடந்தது. பார்த்தவர்களுக்குத் தெரியும்,'' என்றார்.

என்னிடம் மோசமாகப் பேசினார்.. அதனால்தான் தகராறு வந்தது! - த்ரிஷா விளக்கம்

நடிகை திரிஷாவின் வீடு, சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கிறது. அவர் ஓட்டுப்போடுவதற்காக, ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த ஓட்டுச்சாவடிக்கு, பிற்பகல் 1 மணிக்கு வந்தார். அவருடன் தாயார் உமா கிருஷ்ணன், பாட்டி சாரதா ஆகியோரும் வந்தார்கள்.

அப்போது அந்த வாக்குச்சாவடியில் கூட்டம் குறைவாகவே இருந்தது. திரிஷா தனது தாயார், பாட்டி ஆகியோருடன் கியூவில் நிற்காமல், நேராக ஓட்டுப்போடும் அறையை நோக்கி சென்றார்.

உடனே, கியூவில் நின்ற ஒரு வாக்காளர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். கியூவில் நின்று ஓட்டுப்போடும்படி திரிஷாவிடம் கூறினார். அதை பொருட்படுத்தாமல் திரிஷா, ஓட்டுப்போடும் அறைக்குள் செல்ல முயன்றார்.

அப்போது திரிஷாவுக்கும், எதிர்ப்பு தெரிவித்த வாக்காளருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் ஆங்கிலத்தில் திட்டிக்கொண்டார்கள்.

எதிர்ப்பு தெரிவித்த வாக்காளர் அங்கு நின்று கொண்டிருந்த போலீஸ் அதிகாரியிடம் சென்று, திரிஷா மீது புகார் செய்தார். எல்லோரும் கியூவில் நின்று ஓட்டுப்போடும்போது, திரிஷா மட்டும் நேராக சென்று ஓட்டுப்போடலாமா?'' என்று கேட்டார்.

உடனே அந்த போலீஸ் அதிகாரி, புகார் செய்த வாக்காளரிடம் அடையாள அட்டையை காண்பிக்கும்படி கேட்டார். அவர் அடையாள அட்டையை காண்பித்ததும், போலீஸ் அதிகாரி திரிஷாவிடம் சென்று, உங்கள் பாட்டி மூத்த குடிமகள் என்பதால், அவர் கியூவில் நிற்க தேவையில்லை. ஆனால் நீங்களும், உங்கள் தாயாரும் கியூவில் நின்று ஓட்டுப்போட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதன்பிறகு திரிஷாவும், அவருடைய தாயாரும் சுமார் 20 நிமிடங்கள் கியூவில் நின்று ஓட்டுப்போட்டார்கள்.

நடிகை திரிஷாவுக்கும், வாக்காளருக்கும் தகராறு

ஹைதராபாத்: போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள நைஜீரிய கும்பலுடன் என்னைத் தொடர்புபடுத்துவதா என ஆவேசமாகக் கேட்டுள்ளார் நடிகை த்ரிஷா.

தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக உள்ள த்ரிஷா தொடர்ந்து சிக்கல்களில் மாட்டி வருகிறார்.

சமீபத்தில் ஹைதராபாத்தில் சிக்கிய நைஜீரிய போதை மருந்து கும்பலுக்கும் தெலுங்கு சினிமா புள்ளிகளுக்கும் பெரிய அளவில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. பிரபல நடிகர் ரவி தேஜாவின் சகோதரர் மற்றும் நண்பர்களும் இதில் சிக்கினர்.

இந்த நைஜீரிய போதை மருந்து கும்பலின் செல்போனில் நடிகை த்ரிஷா உள்ளிட்ட பிரபல நடிகைகளின் நம்பர்களும் இருந்ததாக போலீசார் தகவல் வெளியிட்டனர். தொடர்ந்து த்ரிஷாவிடமும் போனில் விசாரணை நடத்தினர்.

இதனால் அவருக்கும் போதை மருந்து கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருப்பது உண்மைதான் என செய்திகள் பரவின.

இந்த நிலையில், நேற்று ஹைதராபாதில் பேட்டியளித்த த்ரிஷா இதுபற்றிக் கூறுகையில், "என்னைப் பற்றி ஆதாரமில்லாமல் வரும் புகார்களை கண்டிக்கிறேன். சமீபத்தில் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் என்னை தொடர்பு படுத்தி செய்தி வந்துள்ளது. என்னை பழிவாங்க யாரோ இதனை கிளப்பி விடுகின்றனர். இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று தெரியவில்லை.

தொடர்ந்து அதுபோன்ற கிசுகிசுக்கள் வருகின்றன. அதில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இது போன்ற கிசு கிசுக்களால் நான் மனம் உடைந்து போய் அழுதிருக்கிறேன். அப்போதெல்லாம் எனது தாய்தான் பக்கபலமாக இருந்துள்ளார். அவர்தான் இத்தகைய வேதனைகளில் இருந்து என்னை வெளியே கொண்டு வருவார்.

நாயகிகளை முதன்மைப்படுத்தும் கதைகள் இல்லை...

பழைய கதாநாயகிகள் போல் இப்போதைய நாயகிகள் நடிப்பது இல்லை என விமர்சிக்கின்றனர். பழைய படங்களில் நாயகிகளை முதன்மைபடுத்தி கதைகள் இருந்தன. ஆனால் இப்போது நாயகிகளை கவர்ச்சிப்படுத்திதான் படம் எடுக்கிறார்கள்.

வில்லியாக நடித்தால் முழு திறமைகளையும் வெளிப்படுத்த முடியும். படையப்பா ரம்யா கிருஷ்ணன் மாதிரி வில்லி வேடங்களில் நடிக்கவும் விரும்புகிறேன்.

திருமணத்தின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. ஆனால் அது காதல் திருமணமாக இருக்க வேண்டும். . நான் விரும்பும் ஆண் புத்திசாலியாக இருக்க வேண்டும். பேச்சுத் திறமையும் வேண்டும். பேச்சாற்றல் உள்ள ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்.

கல்யாணம் ஆனால் அழகு போயிவிடும் என்று சில பெண்கள் கூறுகின்றனர். அதில் எனக்கு உடன்பாடு இல்லை.

வெற்றி தோல்வி முக்கியமில்லை...

சினிமாவில் நிலைத்து நிற்பதுதான் முக்கியம். வெற்றி தோல்வி பற்றி கவலைப்படக்கூடாது. எனது ஒவ்வொரு படத்தையும் புதுப் படமாகவே பார்க்கிறேன். நல்ல கதாபாத்திரங்களே இதுவரை அமைந்துள்ளன. குடும்பபாங்கான வேடம், இளைஞர்களுக்கு பிடித்த மாதிரியான வேடங்களை தேர்வு செய்து நடிக்கிறேன்.

இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி தனது கேரக்டர்களையும் மாற்றிக்கொள்கிறேன். உடம்பை அழகாக வைத்துக்கொள்ளவும் அக்கறை காட்டுவேன். அதற்காக தினமும் யோகா உடற்பயிற்சிகள் செய்கிறேன்.

ஒவ்வொரு நடிகைகளும் இந்தி படங்களில் நடிக்க கனவாக உள்ளது. எனக்கும் அந்த கனவு நிறைவேறிவிட்டது. இந்தியில் நடிப்பதன் மூலம் உலக அளவில் ரசிகர்கள் பெற முடியும். இதனால்தான் பலரும் பாலிவுட்டுக்கு போக விரும்புகிறார்கள்.

போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பா? - த்ரிஷா ஆவேசம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தோழிகளுடன் குடித்து விட்டு கும்மாளம் போட்டதில் தொடங்கி, நட்சத்திர ஹோட்டல் குளியலறையில் நிர்வாண குளியல் போட்டது வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய த்ரிஷாவைச் சுற்றி தினம் ஒரு சர்ச்சை வந்து கொண்டே இருக்கிறது. தமிழ் பத்திரிகை‌களைக் காட்டிலும் தெலுங்கு பத்திரிகைகள் ‌த்ரிஷா என்றாலே தனி குஷியுடன் கவர் ஸ்டோரிகளை வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாசுடன், நடிகை த்ரிஷா பங்கேற்ற மிட்நைட் பார்ட்டி தொடர்பான சிறப்பு கட்டுரைக‌ள்தான் கடந்த சில நாட்களாக தெலுங்கு பத்திரிகைகளின் பக்கங்களை நிரப்பி வருகின்றன.

ஐதராபாத் நகரில் நடந்த தீன் மார் படத்தின் இசை வெளீயீட்டு விழாவில் நடிகை த்ரிஷா, நடிகர் பிரபாஸ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டிய நேரத்தில் திடீ‌ரென த்ரிஷா மாயமானார். அடுத்த சில நிமிடங்களில் பிரபாசும் எஸ்கேப். செல்போனில் தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இருவரும் எங்கு போயிருப்பார்கள்? என்ன நடந்திருக்கும் என்பது விழாவுக்கு வந்திருந்த சினிமாக்காரர்களுக்கு தெரியாதா என்ன? அது மிட்நைட் பார்ட்டியாகத்தான் இருக்க வேண்டும் என்று சுலபமாக யூகித்துக் கொண்டு அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இதுபற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகி ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஐதராபாத் போன்ற பெருநகரங்களில் இதுபோன்ற மிட்நைட் பார்ட்டிகளும், டேட்டிங் சமாச்சாரங்களும் சர்வ சாதாரணமாக நடக்கும் ஒன்றுதான் என்பதை இதனை பெரிது படுத்தத் தேவையில்லை, என்று படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

Tags »
Trisha, midnight, party,

த்ரிஷா மிட்நைட் பார்ட்டி! ஐதராபாத்தில் அமர்க்களம்!!

நள்ளிரடு நேரத்தில் புலிகள் நடமாடும் நடுக்காட்டில் தோழிகளுடன் கும்மாளம் அடித்து விட்டு வந்திருக்கிறார் நடிகை த்ரிஷா. கொண்டாட்டங்களை வித்தியாசமாக கொண்டாடுவதில் அலாதி பிரியம் த்ரிஷாவுக்கு. முன்பெல்லாம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையை ஆக்கிரமித்து ஆட்டம் போட்ட த்ரிஷாவுக்கு நடுக்காட்டில் தங்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாகவே இருந்ததாம். இதனால் தனது தோழிகள் காஸ்ட்யூம் டிசைனர் சபீனா, ஹேமா ஆகியோருடன் ஜெய்ப்பூர், ரத்னாம்பூரில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு நடுக்காட்டில் அமைந்திருக்கும் நட்சத்திர அந்தஸ்து கொண்ட குடிலில் தங்கிய த்ரிஷா... நள்ளிரவு நேரத்தில் புலிகளின் உறுமல் சத்தம், பறவைகளின் சத்தம் என பலவிதமான விலங்குகளின் சத்தத்தை கேட்டு ரசித்துள்ளார்.

இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், இந்த பயணம் உண்மையாகவே சிறப்பான பயணம். என் வாழ்நாளில் மறக்க முடியாத பயணம். ஏராமான புலிகளை மிக அருகில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ‌போட்டோக்களும் எடுத்துக் கொண்டேன். அந்த இயற்கையான சூழல் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அங்கு தங்கியிருந்த 3 நாட்களும் மகிழ்ச்சியாகவும், த்ரில்லிங்காகவும் இருந்தது, என்று கூறியுள்ளார்.

நடி‌கை த்ரிஷா இப்போது மங்காத்தா படத்தின் இறுதி சூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். அஜித்தையும், மங்காத்தை குழுவையும் ரொம்ப மிஸ் பண்ணுவதாக கூறும் த்ரிஷா, தெலுங்கில் உருவாகும் காவலன் ரீ-மேக்கில் நடிக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

நள்ளிரவு... நடு காடு... த்ரிஷா கும்மாளம்!

பொதுவாகவே எனக்கு பிடிக்காத எந்தவொரு விஷயத்திலும் நான் ஈடுபாடு காட்ட மாட்டேன். விளம்பரமாக இருந்தால்கூட எனக்கு பிடித்திருந்தால் மட்டும‌ே நடிக்க ஒத்துக்குவேன், என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார். கோடம்பாக்க கன்னிகளிலேயே அதிக அளவில் விளம்பரப் படங்களில் நடித்து, அதிக அளவில் பணம் சம்பாதித்துக் கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷாதான். ஒரு படத்துக்காக 40 நாட்கள் முதல் 6 மாதம், 7 மாதம் என கால்ஷீட் வழங்கி சிலபல லட்சங்களை சம்பளமாக பெறுவதை விட, ஓரிரு நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்து, கோடிகளில் புரள யாருக்குத்தான் ஆசை இருக்காது. அதனால்தான் பிரபல கம்பெனிகள் அணுகினால் மறுக்காமல் ஓ.கே. சொல்லி, ஓரிரு நாட்கள் மட்டும‌ே நடைபெறும் சூட்டிங்கில் பங்கேற்று சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் நம்ம நட்சத்திரங்கள்.

எதிலுமே வித்தியாசமான பாலிசியை கடைபிடிக்கும் த்ரிஷா, இந்த விஷயத்திலும் வேறுபட்டு நிற்கிறார். குளிர்பானம், சோப்பு, ஜவுளிக்கடை என பல்வேறு விளம்பரங்களில் பளீச்சென தோன்றி, சில நொடிகளில் ரசிகர்களை வசீகரித்துக் கொண்டிருக்கும் த்ரிஷா, விளம்பரப் படங்கள் குறித்து அளித்துள்ள பேட்டியில், "விளம்பரங்களில் நடிப்பது எனக்குப் பிடித்தமான விஷயம்தான். ஆனாலும் அதில் நான் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளேன். காரணம், தெரியாத பொருளுக்கு அல்லது தீமை விளைவிக்கும் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த எனக்குள்ள இமேஜைப் பயன்படுத்த மாட்டேன். நான் விளம்பரப் படுத்தும் பொருள் எனக்கு பிடித்திருக்க வேண்டும். எனக்கு நன்கு தெரிந்து அல்லது நான் பயன்படுத்தும் பொருள்களுக்கு மட்டும்தான் விளம்பர மாடலாக இருப்பேன்," என்று கூறியுள்ளார்.

பிடிச்சிருந்தா மட்டும்தான் ஒத்துக்குவேன் : தரிஷா

திரிஷா பற்றி வதந்திகள் பரவுகின்றன. பிரபல நடிகருடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. தற்போது தொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வந்துள்ளன. அஜீத்துடன் “மங்காத்தா” படத்திலும், தெலுங்கில் “தீன்மார்” படத்திலும் திரிஷா நடித்துக் கொண்டிருக்கிறார்.

இரண்டும் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில் திருமண வதந்திகள் பரவி இருப்பது அவரை ரொம்பவும் சங்கடப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பட வாய்ப்புகள் குறையலாம் என அச்சப்படுகிறார். ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த அவரிடம் இதுபற்றி கேட்ட போது, ஆவேசப்பட்டார். அவர் கூறியதாவது:-

எனக்கு ஏற்கனவே ஒரு அரசியல் குடும்பத்து புள்ளியுடன் திருமணம் நடந்து விட்டதாக எழுதினார்கள். இப்போது தொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக புரளி பரப்புகிறார்கள்.பல முறை இதனை மறுத்து விட்டேன். ஆனாலும் வதந்திகள் தொடர்கிறது.

அது மட்டுமல்ல குழந்தை பெற்று விட்டேன் என்று கூட கிசுகிசு பரப்புகின்றனர். எனக்கு யாருடனும் திருமணம் நடக்கவில்லை. ரகசிய திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.

எனக்கு எத்தனை முறைதான் இதுபோல் பொய் திருமணங்கள் செய்து வைப்பார்களோ? தெரியவில்லை. என் திருமணத்தை உலகறிய சொல்லி விட்டுத்தான் நடத்துவேன்.

இவ்வாறு திரிஷா கூறினார்.

தொழில் அதிபரை மணந்து குழந்தை பெற்றதாக வதந்தி பரப்புகிறார்கள்; திரிஷா ஆவேசம்

மாமி காதல் வலையில் சிக்கிக் கொண்டார் என்பதுதான் லேட்டஸ்ட் ஸ்கூப்.

இந்த செய்தியை வழக்கம் போல டேக் இட் ஊர்வசியாக மாமி எடுத்துக் கொண்டாலும் அவரது மம்மி வியர்க்க விறுவிறுக்க, காதலெல்லாம் இல்லை என்று பொ‌ரிந்து கொண்டிருக்கிறார்.

மாப்பிள்ளை பார்க்கும் போது இந்த செய்தியெல்லாம் வில்லனாக வந்து நிற்கக் கூடாதே. மாமி பிசினஸ்மேன் ஒருவ‌ரின் அ‌ன்புப் பிடியில் சிக்கியிருப்பதாகச் சொல்வதில்... நம்பினால் நம்புங்கள், உண்மை துளியும் இல்லையாம்.

பிசினஸ் காதல்

நான் தொடர்ந்து 9 ஆண்டுகள் ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருப்பதால் என் மீது பொறாமைப்படுகிறார்கள் என்று நடிகை த்ரிஷா வேதனை தெரிவித்துள்ளார். அடிக்கடி வதந்திகளிலும், கிசுகிசுக்களிலும் சிக்கி வரும் த்ரிஷா பற்றிய லேட்டஸ்ட் வதந்தி... இந்த ஆண்டுக்குள் திருமணம் செய்யவிருக்கிறார் என்ற செய்திதான். வழக்கம்போலவே இந்த செய்தியையும் த்ரிஷா மறுத்து விட்டார். அவர் அளி்ததுள்ள பேட்டியில், நான் பவன் கல்யாணுடன் `பீம் ஆர் என்ற தெலுங்கு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். அந்த படத்தில் அவருடன் எனக்கு திருமணம் நடப்பது போல் ஒரு காட்சி இடம்பெறுகிறது. இதற்காக, நிஜமான ஒரு திருமண மண்டபத்தை தேர்வு செய்து, தெலுங்கு முறைப்படி திருமணம் நடைபெறுவது போல் மிக தத்ரூபமாக அந்த காட்சியை படமாக்கினார்கள். ஒருவேளை அதை யாராவது பார்த்து, இப்படி ஒரு வதந்தியை பரப்பினார்களோ, என்னவோ? நெருப்பே இல்லாமல் இந்த வதந்தி புகைந்து இருக்கிறது, என்று கூறியுள்ளார். தான் சினிமாவுக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகிறது என்று கூறும் த்ரிஷா, பெரிய பெரிய கதாநாயகிகள் கூட அதிகபட்சமாக 5 ஆண்டுகள்தான் சினிமாவில் இருந்திருக்கிறார். நான் ஒய்வில்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறேன். எனவே என் மீது பொறாமைப்படுகிறார்கள். அவர்கள்தான் இப்படி வதந்திகளை பரப்புகிறார்கள் என்றும் கூறினார்.

திருமணம் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில், எனக்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை. நான் திருமணம் செய்துகொள்பவரை பற்றி எனக்கு தெரிய வேண்டும். அவருடைய குணம், சுபாவம், நடத்தை எல்லாம் தெரிய வேண்டும். எனக்கு பிடித்த மாதிரி, என் பெற்றோர்களுக்கும் அவரை பிடிக்க வேண்டும். நான் காதலித்து ஒருவரை திருமணம் செய்துகொள்வதற்கு, என் குடும்பத்தினர் நிச்சயமாக ஆதரவு தெரிவிப்பார்கள். எனது வருங்கால கணவர், சினிமாவை சேர்ந்தவராகவும் இருக்கலாம். சேராதவராகவும் இருக்கலாம். அதற்காக, நான் திட்டமிடவில்லை. இந்த விஷயத்தில், நான் சாதி-மத வேறுபாடு பார்க்க மாட்டேன். என்னை திருமணம் செய்துகொள்பவர் நிச்சயமாக ஒரு ஆணழகனாக இருக்க வேண்டும். அவரை எனக்கு பிடிக்க வேண்டும். அவருடன் நான் நீண்ட காலம் வாழ முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட வேண்டும். அப்படி ஒருவர் அமைந்தால், அவரை நிச்சயமாக திருமணம் செய்துகொள்வேன். இந்த வருடம் நிச்சயமாக என் திருமணம் நடைபெறாது. தமிழில், `மங்காத்தா படம் இருக்கிறது. இன்னொரு படம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தெலுங்கில், `பீம் ஆர் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். அதுபோக மேலும் 2 தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன். இந்த ஐந்து படங்களிலேயே வருடம் ஓடிவிடும். எல்லோரும் திருமணம் செய்துகொள்கிறார்களே என்பதற்காக அவசரப்பட்டு திருமணம் செய்துகொள்ள முடியாது. நிதானமாக திருமணம் செய்துகொள்ளலாம், என்று த்ரிஷா கூறியுள்ளார்.

9 வருடமாக ஓய்வில்லாமல் உழைக்கிறேன்! - த்ரிஷா

முக நூல்

Popular Posts