background img

புதிய வரவு

Showing posts with label Today match. Show all posts

சென்னை: ஐபிஎல் 2வது குவாலிபயர் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் இன்று சென்னையில் மோதவுள்ளன.

இன்றைய போட்டியில் வெல்லும் அணியே இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸுடன் மோதும் வாய்ப்பைப் பெறும்.

முதல் பிளே ஆப் போட்டியில் சென்னை அணி, பெங்களூரை அபாரமாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்து விட்டது. 2வது பிளே ஆப் போட்டியில் மும்பை அணி, கொல்கத்தாவை வீழ்த்தியது.

இதையடுத்து இன்று இறுதிப் போட்டிக்குள் நுழையும் 2வது அணியைத் தேர்வு செய்யும் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இதில் முதல் பிளே ஆப் போட்டியில் தோற்ற பெங்களூரும், 2வது பிளே ஆப் போட்டியில் வென்ற மும்பையும் மோதவுள்ளன.

இன்றைய போட்டியில் மும்பை வென்றால்தான் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியும். அதேசமயம், இறுதிப் போட்டிக்கான இன்னொரு வாய்ப்பைப் பெற்றுள்ள பெங்களூர் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் ஆர்வமாக உள்ளது.

மும்பை அணியைப் பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, அம்பட்டி ராயுடு, கிரன் போலார்ட் ஆகியோர் வலுவான பேட்டிங் ஆர்டரைக் கொடுக்கும் வகையில் உள்ளனர்.

மேலும் ஜேம்ஸ் பிராங்க்ளினும் சிறப்பான பேட்டிங்கை, குறிப்பாக நெருக்கடியான நேரத்தில் வெளிப்படுத்தி வருகிறார்.

பந்து வீச்சைப் பொறுத்தவரையில், ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவராக வலம் வரும் லசித் மலிங்கா கை கொடுப்பார். கூடவே முனாப் படேலும், ஹர்பஜன் சிங்கும் நல்ல பார்மில் உள்ளதால் மும்பைக்கு பலம்தான்.

பெங்களூரைப் பொறுத்தவரை கிறிஸ் கெய்லின் சூறாவளியில் அந்த அணி ஆரம்பத்திலிருந்தே உயரப் பறந்து வந்தது. ஆனால் சென்னைக்கு எதிரான பிளே ஆப் போட்டியில் கெய்லை சென்னை வீரர்கள் அடக்கி ஒடுக்கி விட்டதால் அந்த அணியால் எழ முடியாமல் போய் விட்டது.

10 போட்டிகளில் ஆடி 519 ரன்களைக் குவித்து அசைக்க முடியாத பேட்ஸ்மேனாக திகழ்கிறார் கெய்ல்.

அதேபோல விராத் கோலி, ஏப் டிவில்லியர்ஸ், மயங்க் அகர்வால் ஆகியோரும் உள்ளனர். ஆஸ்திரேலிய வீரர் லியூக் போமர்ஸ்பாக் ஆட்டமும் கவனிப்புக்குரியதே.

பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஜாகிர்கான், கேப்டன் டேணியல் வெட்டோரி ஆகியோரே பலம் வாய்ந்தவர்களாக உள்ளனர். ஸ்ரீநாத் அரவிந்த் கை கொடுக்கலாம்.

இரு அணிகளிலும் சில பலவீனங்கள், நிறைய பலங்கள் உள்ளன. அவற்றை சரி செய்து சரியான முறையில் விளையாடும் அணிக்கே வெற்றி வாய்ப்பு என்பதால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இன்று சென்னையில் மோதல்-பெங்களூரை வென்று பைனலுக்குள் நுழையுமா மும்பை?

ஜெய்ப்பூர்: ஐ.பி.எல்., தொடரில், இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி எழுச்சி பெற தோனி அணி காத்திருக்கிறது.
இந்திய மண்ணில், நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில் ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தோனி வழிநடத்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சந்திக்கிறது.
ஏழாவது வெற்றி:
சென்னை அணி, இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 6ல் வெற்றி கண்டது. கடைசியாக கோல்கட்டா அணிக்கு எதிரான போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட, "டக்வொர்த்த-லீவிஸ்' முறைப்படி 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி கண்டது. எனவே இன்று சென்னை அணியினர், ராஜஸ்தானுக்கு எதிராக முழுத்திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில், ஏழாவது வெற்றியை பதிவு செய்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
பத்ரிநாத் நம்பிக்கை:
கோல்கட்டாவுக்கு எதிராக சென்னை அணியின் பேட்டிங் படுமந்தமாக இருந்தது. ஒன்பது ஓவர்கள் வரை ஒரு "பவுண்டரி' கூட அடிக்க முடியாமல் திணறியது. துவக்க வீரராக சொதப்பி வரும் முரளி விஜய், எழுச்சி கண்டால் நல்லது. எட்டு போட்டிகளில் 342 ரன்கள் எடுத்துள்ள மைக்கேல் ஹசி, இன்று கைகொடுக்கும் பட்சத்தில் நல்ல துவக்கம் அளிக்கலாம். "மிடில்-ஆர்டரில்' களமிறங்கும் சுரேஷ் ரெய்னா, ஆல்பி மார்கல், தோனி, பத்ரிநாத் உள்ளிட்டோர் அதிரடியாக ரன் சேர்க்கும் பட்சத்தில், இமாலய இலக்கை பதிவு செய்யலாம்.
அஷ்வின் அபாரம்:
சென்னை அணியின் மிகப்பெரிய பலம் சுழற்பந்துவீச்சு. இளம் வீரர் அஷ்வின் சுழலில் நம்பிக்கை அளித்து வருகிறார். இவருடன் ஜகாதி, ரந்திவ், சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோரும் சுழலில் சிறப்பாக செயல்பட்டு வருவது கூடுதல் பலம் சேர்க்கிறது. வேகத்தில் ஆல்பி மார்கல், மிரட்டுகிறார். இவருக்கு போலிஞ்சர் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில், விக்கெட் வேட்டை நடத்தலாம்.
பதிலடி வாய்ப்பு:
ராஜஸ்தான் அணி, இதுவரை விளையாடிய பத்து போட்டிகளில் 5ல் வெற்றி கண்டது. பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட, ஒரு புள்ளி பெற்றது. எனவே ராஜஸ்தான் அணி, அடுத்த சுற்றுக்கு முன்னேற இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடைசியாக சென்னை அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இதற்கு பதிலடி கொடுக்க ராஜஸ்தான் அணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
டிராவிட் எதிர்பார்ப்பு:
ராஜஸ்தான் அணியில் திறமையான பேட்ஸ்மேன்கள் இருந்த போதிலும் பெரிய அளவில் சாதிக்கவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷேன் வாட்சன், இதுவரை சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை. இன்று இவர் எழுச்சி பெறும் பட்சத்தில் சூப்பர் துவக்கம் அளிக்கலாம். அனுபவ டிராவிட், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது பேட்டிங்கில் பலம் சேர்க்கிறது. இன்றும் இவர் கைகொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அசோக் மேனரியா, ஜோகன் போத்தா, ராஸ் டெய்லர், அஜின்கியா ரகானே உள்ளிட்டோர் "மிடில்-ஆர்டரில்' சாதிக்கும் பட்சத்தில் நல்ல ஸ்கோரை பெறலாம்.
சாதிப்பாரா வார்ன்:
ராஜஸ்தான் அணியில் அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்ன் இருப்பது பலம். இவர் இத்தொடருக்கு பின், ஓய்வு பெற இருப்பதால், இனிவரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விடைபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு போத்தா, மேனரியா உள்ளிட்டோர் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில் விக்கெட் வேட்டை நடத்தலாம். வேகத்தில் ஷேன் வாட்சன், திரிவேதி, பின்னி உள்ளிட்டோர் மிரட்டும் பட்சத்தில் சுலப வெற்றி பெறலாம்.
---
ஒன்பதாவது முறை
ஐ.பி.எல்., அரங்கில், ராஜஸ்தான் ராயல்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ஒன்பதாவது முறையாக மோதவுள்ளன. முன்னதாக மோதிய எட்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா 4ல் வெற்றி கண்டன.

எழுச்சி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்! * இன்று ராஜஸ்தான் அணியுடன் மோதல்

கொழும்பு: உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் இன்று இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில், "சுழலில் அசத்தி இலங்கை அணி பைனலுக்கு முன்னேறுமா அல்லது நியூசிலாந்து அதிர்ச்சி அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
உலக கோப்பை கிரிக்கெட் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று கொழும்புவில் நடக்கும் முதலாவது அரையிறுதி போட்டியில், இலங்கை அணி, நியூசிலாந்து அணியை எதிர் கொள்கிறது.
பலமான துவக்கம்:
இலங்கை அணிக்கு துவக்க வீரர்கள் தில்ஷன், தரங்கா பெரும் பலமாக உள்ளனர். இதில் தில்ஷன் 2 சதம் உட்பட 394 ரன்களும், தரங்கா 2 சதம் உட்பட 363 ரன்களும் குவித்து மிரட்டுகின்றனர். கேப்டன் சங்ககரா தன்பங்கிற்கு 363 ரன்கள் (ஒரு சதம்) எடுத்துள்ளார். தவிர, ஜெயவர்தனா (200) கைகொடுக்கிறார். "டாப்-ஆர்டர் பலமாக உள்ள அதேநேரத்தில் அணியின் "மிடில்-ஆர்டர் பலவீனமாக உள்ளது. மாத்யூஸ் (80), சமரவீரா (60), சமர சில்வா (64) ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.
சபாஷ் முரளி:
இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு வழக்கம் போல மலிங்கா உதவியால், பலத்துடன் உள்ளது. இத்தொடரில் ஹாட்ரிக் சாதனை படைத்த மலிங்கா (8 விக்.,), மீண்டும் சாதிக்கலாம். இவருடன் குலசேகரா, பெரேரா, மாத்யூஸ் உள்ளிட்ட வேகங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில், 13 விக்கெட் வீழ்த்திய அனுபவ முரளிதரன், தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு சிக்கல் தருவார். தவிர, அஜந்தா மெண்டிஸ், ஹெராத், தில்ஷனும் விக்கெட் வீழ்த்துவது அணிக்கு சிறப்பு.
டெய்லர் அசத்தல்:
நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் கப்டில் (223 ரன்கள்), பிரண்டன் மெக்கலம் (243) ஆகியோர் சிறப்பான துவக்கம் தருவதில் தொடர்ந்து திணறுகின்றனர். பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியாக சதம் கடந்த ராஸ் டெய்லர் (288) மட்டும், அணிக்கு அவ்வப்போது கைகொடுத்து வருகிறார். இவர்களுடன் ஜெசி ரைடர் (165) ஓரளவுக்கு ஆறுதல் தருகிறார். தவிர, "மிடில்-ஆர்டரில் நாதன் மெக்கலம், வில்லியம்சன், பிராங்க்ளின், ஸ்டைரிஸ் உள்ளிட்டோர் கைகொடுக்க வேண்டும்.
சவுத்தி நம்பிக்கை:
நியூசிலாந்து அணிக்கு வேகப்பந்து வீச்சில் நம்பிக்கைக்குரிய வீரராக டிம் சவுத்தி உள்ளார். இதுவரை 15 விக்கெட் வீழ்த்தியுள்ள இவர், இன்று இலங்கையின் துவக்க வீரர்களுக்கு தொல்லை தருவது உறுதி. தவிர, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான காலிறுதியில் கலக்கிய "ஆல் ரவுண்டர் ஜேக்கப் ஓரம் இன்றும் சாதிக்க முயற்சிக்கலாம். சுழலில் கேப்டன் வெட்டோரி, நாதன் மெக்கலம், உட்காக் அணிக்கு உதவத் தயாராக உள்ளனர்.
சரியான திட்டமிடல்:
இலங்கை, நியூசிலாந்து இரண்டு அணிகளுமே, காலிறுதியில் 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கித் தான் வெற்றி பெற்றன. இன்றைய அரையிறுதியிலும் இதே கணக்கில் தான் அணி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் யார் கை ஓங்குகிறதோ அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பது உறுதி.
சொந்த மண்ணில் களமிறங்குவது இலங்கை அணிக்கு சாதகமான விஷயம். அதேநேரம், லீக் போட்டியில் சந்தித்த தோல்விக்கு பழிதீர்க்க, நியூசிலாந்து அணி காத்திருப்பதால், பரபரப்பான போட்டியை எதிர்பார்க்கலாம்.
---
முரளிதரன் சந்தேகம்
தொடையின் பின்பகுதி மற்றும் முழங்கால் காயம் காரணமாக, இலங்கை அணியின் "சுழல் மன்னன் முத்தையா முரளிதரன், இன்றைய அரையிறுதியில் விளையாடுவது சந்தேகமாக உள்ளது.
இதுகுறித்து இலங்கை கேப்டன் சங்ககரா கூறியதாவது: நியூசிலாந்துக்கு எதிராக இன்று நடக்கும் அரையிறுதியில் முரளிதரன் விளையாடுவது சந்தேகமாக உள்ளது. இவர், 50 சதவீதம் குணமடைந்தால் கூட இன்றைய போட்டியில் நிச்சயம் பங்கேற்பார். இன்றைய போட்டி மிகவும் முக்கியமானது என்பதால், முரளிதரனுக்கு ஓய்வு வழங்குவதில் எவ்வித பலனும் இல்லை. இவரது உடற்தகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். ஒருவேளை இவர் விளையாடாத பட்சத்தில், குலசேகராவுக்கு வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு சங்ககரா கூறினார்.
ஒன்பதாவது முறை
உலக கோப்பை அரங்கில், இலங்கை-நியூசிலாந்து அணிகள் ஒன்பதாவது முறையாக மோத உள்ளன. முன்னதாக மோதிய எட்டு போட்டிகளில் இலங்கை 5, நியூசிலாந்து 3 வெற்றியை பதிவு செய்தன. கடைசியாக கடந்த 18ம் தேதி நடந்த லீக் போட்டியில் இலங்கை அணி, நியூசிலாந்தை வீழ்த்தியது.
* கடந்த 2007ல், 5 விக்கெட்டுக்கு 289 ரன்கள் எடுத்த இலங்கை அணி, உலக கோப்பை அரங்கில் நியூசிலாந்துக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பெற்றது. கடந்த 2003ல், 225 ரன்கள் எடுத்த நியூசிலாந்து அணி, இலங்கைக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
* கடந்த 1979ல், 189 ரன்களுக்கு சுருண்ட இலங்கை அணி, <உலக கோப்பை அரங்கில் நியூசிலாந்துக்கு எதிராக குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது. கடந்த 18ம் தேதி மும்பையில் நடந்த லீக் போட்டியில், 153 ரன்களுக்கு சுருண்ட நியூசிலாந்து அணி, இலங்கைக்கு எதிராக குறைந்த ஸ்கோரை பெற்றது.
* உலக கோப்பை அரங்கில், நியூசிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இலங்கை வீரர்கள் வரிசையில் சங்ககரா (4 போட்டி, 211 ரன்கள்) முன்னிலை வகிக்கிறார். நியூசிலாந்து சார்பில் இலங்கைக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஸ்டைரிஸ் (4 போட்டி, 295 ரன்கள்) முன்னிலையில் உள்ளார்.
* உலக கோப்பை வரலாற்றில், நியூசிலாந்துக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய இலங்கை பவுலர்கள் வரிசையில் முரளிதரன் (4 போட்டி, 13 விக்கெட்) முன்னிலை வகிக்கிறார். நியூசிலாந்து சார்பில் இலங்கைக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஹாட்லீ (3 போட்டி, 7 விக்கெட்) முன்னிலையில் உள்ளார்.
* சர்வதேச ஒருநாள் அரங்கில், இலங்கை-நியூசிலாந்து அணிகள் 73 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் நியூசிலாந்து 35, இலங்கை 33 போட்டிகளில் வெற்றி கண்டன. நான்கு போட்டிகளுக்கு முடிவு இல்லை. ஒரு போட்டி "டை ஆனது.
---
பதிலடி வாய்ப்பு
உலக கோப்பை அரங்கில், இலங்கை-நியூசிலாந்து அணிகள் இரண்டாவது முறையாக (2007, 2011) அரையிறுதியில் மோதுகின்றன. கடந்த 2007ல் நடந்த அரையிறுதியில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 5 விக்கெட்டுக்கு 289 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 208 ரன்களுக்கு சுருண்டது. இத்தோல்விக்கு பதிலடி கொடுக்க நியூசிலாந்து அணிக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
---
அரையிறுதிக்கு வந்த பாதை
இலங்கை
லீக் சுற்று:
1. 210 ரன்கள் வித்தியாசத்தில் கனடாவுடன் வெற்றி
2. பாகிஸ்தானிடம் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
3. கென்யாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி கைவிடப்பட்டது
5. 139 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது
6. 112 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்தது
காலிறுதி:
7. இங்கிலாந்துக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
நியூசிலாந்து
லீக் சுற்று:
1. கென்யாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
2. 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவுடன் தோல்வி.
3. 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயுடன் வெற்றி.
4. பாகிஸ்தானை 110 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
5. 97 ரன்கள் வித்தியாசத்தில் கனடாவுடன் வெற்றி.
6. இலங்கையிடம் 112 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.
காலிறுதி:
7. தென் ஆப்ரிக்காவை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

பைனலுக்கு முன்னேறுமா இலங்கை? * இன்று நியூசி.,யுடன் மோதல்

நாக்பூர்: உலக கோப்பை தொடரில் இன்றைய லீக் போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதுகின்றன. சமீபத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அடைந்த தோல்விக்கு, இன்று இந்திய அணி பழிதீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகள் இணைந்து பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துகின்றன. இன்று நாக்பூர், விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கும் "பி' பிரிவு போட்டியில்(பகலிரவு), இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதுகின்றன. இதுவரை அயர்லாந்து, நெதர்லாந்து போன்ற கத்துக்குட்டி அணிகளை சந்தித்த இந்திய அணி இம்முறை வலிமையான தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது.
மிரட்டும் சச்சின்:
உலக கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில், வங்கதேசம், அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளை வென்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டி "டை' ஆனது. இதன் மூலம் 7 புள்ளிகள் பெற்றுள்ள இந்திய அணி, காலிறுதிக்குள் நுழைந்துள்ளது. இதற்கு பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டமே முக்கிய காரணம். அதிரடி துவக்க வீரர் சேவக், இதுவரை அதிகபட்சமாக 254 ரன்கள் குவித்துள்ளார். இதையடுத்து சச்சின் 213, விராத் கோஹ்லி 154 ரன்கள் எடுத்துள்ளனர். கடந்த ஆண்டு குவாலியரில் நடந்த ஒரு நாள் போட்டியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக சச்சின் 200 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தார். இதே போன்றதொரு ஆட்டத்தை மீண்டும் வெளிப்படுத்தினால், இந்தியா சுலப வெற்றி பெறலாம்.
யுவராஜ் அபாரம்:
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட காம்பிர், இதுவரை 128 ரன்கள் தான் எடுத்துள்ளார். இதனால் இவருக்குப் பதில் சுரேஷ் ரெய்னா களமிறங்கலாம் என்றும் தெரிகிறது. கேப்டன் தோனியும் (84) சொல்லிக்கொள்ளும் படி ரன்குவிப்பில் ஈடுபடவில்லை. மற்றபடி யுவராஜ் சிங் (159) இதுவரை 3 அரைசதம் அடித்து தூள் கிளப்புகிறார். இவரது "அரைசத' ராசி இன்றும் தொடரும் பட்சத்தில் இந்திய அணி மற்றொரு வெற்றியை பெறலாம்.
பவுலிங் ஏமாற்றம்:
பவுலர்கள் தான் சொதப்புகின்றனர். வங்கதேச, இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் ஏமாற்றிய இவர்கள், அயர்லாந்து. நெதர்லாந்துக்கு எதிராக சற்று ஆறுதல் அளித்தனர். ஜாகிர் கான் (11 விக்கெட்), ஆஷிஸ் நெஹ்ரா, முனாப் படேல் (7 விக்.,) உள்ளிட்டோர் துவக்கத்தில் விக்கெட் வீழ்த்த திணறுவது ஆச்சரியமாக உள்ளது.
அஷ்வின் வாய்ப்பு:
சுழற்பந்து வீச்சில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்பஜன் சிங், 4 போட்டிகளில் 2 விக்கெட் மட்டுமே கைப்பற்றி உள்ளார். தோனியின் கடைக்கண் பார்வை பெற்று வரும் பியுஸ் சாவ்லாவுக்கு, இன்று வாய்ப்பு கிடைப்பது கடினமே. இதனால், அஷ்வினுக்கு முதல் உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கலாம். அனைவரது எதிர்பார்ப்புக்கு மாற்றாக, "பார்ட் டைம்' பவுலரான யுவராஜ் சிங், சுழலில் அசத்துவது அணிக்கு பெரும் ஆறுதலான விஷயம். இன்று இவருடன் யூசுப் பதானும் இணைந்து ஜொலித்தால் நல்லது.
டிவிலியர்ஸ் அசத்தல்:
தென் ஆப்ரிக்க அணி இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ், நெதர்லாந்தை வென்றது. இங்கிலாந்தையும் அடித்து நொறுக்கி விடும் என்று எதிர்பார்த்த நிலையில், 165 ரன்னுக்கு சுருண்டு ஏமாற்றம் தந்தது. அணியில் டிவிலியர்ஸ் (266 ரன்கள்), ஆம்லா (169 ரன்கள்) தவிர, மற்ற வீரர்கள் தொடர்ந்து தடுமாறுகின்றனர். கேப்டன் ஸ்மித், டுமினி இருவரும் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 3 போட்டிகளில் பங்கேற்று 15 ரன்கள் மட்டும் எடுத்துள்ள "ஆல் ரவுண்டர்' காலிஸ், எழுச்சி பெற காத்திருக்கிறார்.
வருவாரா இம்ரான்:
பவுலிங்கில் வேகப்பந்து வீச்சு "வேதாளங்கள்' ஸ்டைன், மார்கல் இருந்தாலும், சுழலில் இம்ரான் தாகிர் அபார எழுச்சி பெற்றுள்ளார். இதுவரை 11 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இவரது இடது கை கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது பின்னடைவான விஷயம். காயத்தை பொருட்படுத்தாது இன்றைய போட்டியில் பங்கேற்க வாய்ப்பு உண்டு. இவர் இடம் பெறாவிட்டால், ஜோகன் போத்தா வாய்ப்பு பெறுவார். ராபின் பீட்டர்சன், டுமினி ஆகியோரின் அசத்தலான சுழலில் இந்தியா சிக்கி திணறுமா, இல்லை அடித்து நொறுக்குமா என்று அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
பழி தீர்க்குமா?
சமீபத்தில் தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி, 2-3 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்தது. இருப்பினும், போட்டிகளில் கடைசிவரை போராடித்தான் தோற்றது. இதற்கு பழி தீர்க்க இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆடுகளம் எப்படி?
இன்று போட்டி நடக்கும் விதர்பா கிரிக்கெட் மைதான ஆடுகளம் ("பிட்ச்'), ஒருநாள் போட்டிக்கு ஏற்ப சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. பந்து பேட்டினை நோக்கி வரும். ஆடுகளத்தில் அதிகமாக புற்கள் காணப்படுவதாலும், சற்று ஈரப்பதத்துடன் இருப்பதாலும், வேகப்பந்து மற்றும் சுவிங் பவுலர்கள் சிறப்பாக அசத்தலாம். இதனால் பேட்ஸ்மேன்கள் ரன்சேர்ப்பதில் சற்று திணறலாம்.
--
மழை வாய்ப்பு
நாக்பூரில் வானம் இன்று தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31, குறைந்த பட்சம் 19 டிகிரி செல்சியசாக இருக்கும். மழை வருவதற்கான வாய்ப்பு இல்லை.
--
மூன்றாவது முறை
உலக கோப்பை அரங்கில், இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் மூன்றாவது முறையாக மோத உள்ளன. முன்னதாக மோதிய இரண்டு போட்டியிலும் (1992, 99) தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
* சர்வதேச ஒருநாள் போட்டி கிரிக்கெட் அரங்கில், இந்தியா-தென் ஆப்ரிக்கா அணிகள் 65 போட்டியில் மோதி உள்ளன. இதில் தென் ஆப்ரிக்கா 34, இந்தியா 24 போட்டியில் வெற்றி கண்டன. இரண்டு போட்டிகளுக்கு முடிவு இல்லை.
* கடந்த 1999ல், 5 விக்கெட்டுக்கு 253 ரன்கள் எடுத்த இந்திய அணி, உலக கோப்பை அரங்கில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பெற்றது. இப்போட்டியில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்து வெற்றி கண்ட தென் ஆப்ரிக்க அணி, இந்தியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
* கடந்த 1992ல், 6 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்த இந்திய அணி, உலக கோப்பை வரலாற்றில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக குறைந்தபட்ச ஸ்கோரை பெற்றது. இப்போட்டியில் 4 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி கண்ட தென் ஆப்ரிக்க அணி, இந்தியாவுக்கு எதிராக குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.
* உலக கோப்பை அரங்கில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் முகமது அசார் (103 ரன்கள்), கங்குலி (97 ரன்கள்) உள்ளனர். தென் ஆப்ரிக்கா சார்பில் இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் காலிஸ் (96), கிறிஸ்டன் (84) ஆகியோர் உள்ளனர்.
* உலக கோப்பை வரலாற்றில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்கள் வரிசையில் ஸ்ரீநாத் (3 விக்கெட்) முன்னிலை வகிக்கிறார். தென் ஆப்ரிக்கா சார்பில் இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் டொனால்டு (3 விக்கெட்) முன்னிலையில் உள்ளார்.

பழிதீர்க்குமா இந்திய அணி! * இன்று தென் ஆப்ரிக்காவுடன் மோதல்

கொழும்பு: உலக கோப்பை தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில், "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலிய அணி, இலங்கையை சந்திக்கிறது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, கடந்த 2007ல் நடந்த உலக கோப்பை பைனலில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க இலங்கை அணி தயாராக உள்ளது.
இந்தியா, இலங்கை, வங்கதேச மண்ணில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடக்கும் "ஏ' பிரிவு லீக் போட்டியில், நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி, இலங்கை அணியை எதிர்கொள்கிறது.
பதிலடி வாய்ப்பு:
கடந்த 2007ல் கரீபிய மண்ணில் நடந்த உலக கோப்பை பைனலில் ஆஸ்திரேலிய அணி, இலங்கையை வீழ்த்தியது. இலங்கை அணி, இம்முறை சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை சந்திக்க இருப்பதால், கடந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில், இலங்கை அணி காலிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளலாம்.
"டாப்-ஆர்டர்' பலம்:
இலங்கை அணியின் "டாப்-ஆர்டர்' பலமாக காட்சி அளிக்கிறது. துவக்க வீரர்களாக உபுல் தரங்கா, தில்ஷன் சாதிக்கும் பட்சத்தில் இமாலய இலக்கை அடையலாம். கடந்த மூன்று போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கேப்டன் சங்ககரா, தனது "பார்மை' தக்க வைத்துக் கொள்ளும் பட்சத்தில், "மிடில்-ஆர்டரில்' விக்கெட் வீழ்ச்சியை தவிர்க்கலாம். பாகிஸ்தான் அணிக்கு எதிராக சோபிக்கத் தவறியதால் சர்ச்சையில் சிக்கித் தவிக்கும் மகிலா ஜெயவர்தனா, சமரவீரா உள்ளிட்டோர் இன்று எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இவர்களை தவிர "ஆல்-ரவுண்டர்' மாத்யூஸ், சமர சில்வா உள்ளிட்டோரும் அதிரடி காட்டினால் கூடுதல் பலம்.
மலிங்கா நம்பிக்கை:
கென்யாவுக்கு எதிராக "ஹாட்ரிக்' சாதனை படைத்த இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இவர், இன்றும் அசத்தலாக செயல்படும் பட்சத்தில், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சிக்கலாகிவிடும். இவருக்கு குலசேகரா, பெரேரா, மாத்யூஸ் உள்ளிட்ட சக வேகங்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் நல்லது. சுழலில் அனுபவ முரளிதரன் இருப்பது பலம். கடந்த போட்டிகளில் பெரிய அளவில் சோபிக்காத இவர், "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விக்கெட் வேட்டை நடத்த வாய்ப்பு உள்ளது. இவருடன், அஜந்தா மெண்டிஸ், ஹெராத், தில்ஷன் உள்ளிட்ட சக சுழற்பந்துவீச்சாளர்களும் இணைந்து மிரட்டலாம்.
"ஹாட்ரிக்' வாய்ப்பு:
ஜிம்பாப்வே, நியூசிலாந்து அணிகளை வீழ்த்திய ஆஸ்திரேலியா, இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் எதிர் கொள்ள இருப்பது சவாலான விஷயம். இதில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில், "ஹாட்ரிக்' வெற்றி பெற்று, காலிறுதி வாய்ப்பை அதிகப்படுத்திக் கொள்ளலாம். தவிர, பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, உலக கோப்பை அரங்கில் தொடர்ந்து 25வது வெற்றியை பதிவு செய்து புதிய வரலாறு படைக்கலாம்.
வாட்சன் எதிர்பார்ப்பு:
ஜிம்பாப்வே, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக அரைசதம் கடந்து சூப்பர் துவக்கம் கொடுத்த "ஆல்-ரவுண்டர்' ஷேன் வாட்சன், இன்றும் தனது அதிரடி ஆட்டத்தை தொடரலாம். இவருக்கு பிராட் ஹாடின் ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில் இமாலய இலக்கை அடையலாம். பாண்டிங், மைக்கேல் கிளார்க் உள்ளிட்டோர் தங்கள் அனுபவத்தை வெளிப்படுத்தினால் நல்லது. "மிடில்-ஆர்டரில்' காமிரான் ஒயிட், டேவிட் ஹசி சாதிக்கும் பட்சத்தில் இலங்கை மண்ணில் ரன் மழை பொழியலாம்.
ஜான்சன் அபாரம்:
கடந்த இரண்டு போட்டியில் எட்டு விக்கெட் வீழ்த்தி உள்ள ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன், இன்றும் தனது விக்கெட் வேட்டையை தொடர வாய்ப்பு உள்ளது. இவருடன் அனுபவ பிரட் லீ இணைவது வேகப்பந்துவீச்சின் பலத்தை அதிகரித்துள்ளது. டெய்ட், வாட்சன் உள்ளிட்ட வேகங்கள், "மிடில்-ஓவரில்' துல்லியமாக பந்துவீசும் பட்சத்தில், இலங்கை அணியின் ரன் வேட்டையை தடுக்கலாம். சுழலில் கிரெஜ்ஜா நம்பிக்கை அளிக்கிறார். இவருக்கு ஸ்டீவன் ஸ்மித் ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில் இலங்கை அணிக்கு சிக்கலாகிவிடும்.
இரு அணிகளிலும் பேட்டிங், பவுலிங்கில் சிறந்த வீரர்கள் இடம் பெற்றிருப்பதால், அனல் பறக்கும் ஆட்டத்தை இன்று எதிர்பார்க்கலாம்.

பதிலடி கொடுக்குமா இலங்கை? * இன்று ஆஸி.,யுடன் மோதல்

முக நூல்

Popular Posts