background img

புதிய வரவு

Showing posts with label Chennai. Show all posts

மைசூர் இடையே பெங்களூர் வழியாக புல்லட் ரயில் விடுவதற்கான திட்டம் சூடுபிடித்துள்ளது. இதற்கான ஆய்வுப் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருவதால் விரைவில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்க அதிவேக ரயில்களை இயக்குவதற்கான திட்டங்களை மத்திய ரயில்வே அமைச்சகம் முடுக்கி விட்டுள்ளது. புல்லட் ரயில் தொழில்நுட்பத்தில் உலக அளவில் சிறந்து விளங்கும் ஜப்பானுடன் இணைந்து இந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, ஜப்பான் நாட்டை சேர்ந்த தொழில்நுட்ப குழுவினருடன், மத்திய ரயில்வே அமைச்சகம் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. இதையடுத்து, இந்த திட்டத்திற்கான பூர்வாங்க பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகின்றன.

முதற்கட்டமாக, சென்னை-மைசூரு இடையே பெங்களூர் வழியாக முதல் புல்லட் ரயில் விடுவதற்கான திட்டப் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஜப்பான் நாட்டை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் இத்திட்டத்திற்கான ஆய்வுகளை தற்போது சென்னை-மைசூர் ரயில் வழித்தடத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.

வரும் டிசம்பர் மாதத்திற்குள் இந்த ஆய்வுப் பணிகளை முடித்து ஜப்பான் நிபுணர்கள் தொழில்நுட்ப அறிக்கையை மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் தர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கிய பின் புல்லட் ரயில் வழித்தடம் அமைப்பதற்கான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்கு மத்திய அரசு தவிர்த்து தமிழக, கர்நாடக அரசுகள் மற்றும் ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளன. இத்திட்டதிற்கு முதற்கட்டமாக ரூ.1 லட்சம் கோடியை முதலீடு செய்யப்பட உள்ளது. ஒரு கிலோமீட்டருக்கு புல்லட் ரயில் பாதை அமைக்க ரூ.200 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக, கர்நாடக மக்களின் கனவு திட்டமாக இது கருதப்படுகிறது. இத்திட்டம் நிறைவடைந்தால் மணிக்கு 320 கிமீ வேகம் வரை புல்லட் ரயில்கள் இயக்கப்படும் என்பதால், சென்னையிலிருந்து பெங்களூருக்கு 2 மணிநேரத்தில் சென்றுவிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை-மைசூர் இடையே பெங்களூர் வழியாக புல்லட் ரயில்

சென்னையில் நிலவும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு சாப்ட்வேர் நிறுவனங்களையும் விடவில்லை.
சென்னையில் கடும் மின்சாரத் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், ஜெனரேட்டர்களை வைத்துத் தான் சாப்ட்வேர் நிறுவனப் பணிகள் சமாளிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏசி, லிப்ட்களின் இயக்கமும் அடக்கம்.
ஆனால், கடந்த சில நாட்களாக டீசலுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால் அட்மின் மேனேஜர்களும், பெசிலிடீஸ் மேனேஜர்களும் அல்லோலப்பட்டு வருகின்றனர். டீசல் வாங்க ஆபிஸ் பாஸ்களுடன் ஒவ்வொரு பெட்ரோல் நிலையமாக ஏறி இறங்கி வருகின்றனர்.
ஆனால், பெரும்பாலானவர்களுக்கு டீசல் கிடைக்கவில்லை. இதையடுத்து பல சாப்ட்வேர் நிறுவனங்களில் நேற்றும் இன்றும் லிப்ட்கள் இயங்கவில்லை, ஏசிக்களும் இயங்கவில்லை. மின்சாரம் இருக்கும்போது மட்டுமே அவை இயக்கப்பட்டன. மற்ற நேரத்தில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டன.
தரமணி எஸ்டிபிஐ பார்க்கில் டீசலை முன்பே வாங்கி வைத்ததால் தப்பிவிட்டனர். ஆனால், டைடல் பார்க்கில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு சாப்ட்வேர் நிறுவன ஊழியர்கள் படிக்கட்டுகளில் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தனர்.
இந்த மின் தட்டுப்பாடு, பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு காரணாக ஆபிஸ்களுக்கு லீவு போட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. இதையடுத்து ‘வீட்டிலிருந்தே வொர்க் பண்ணுங்கோ’ ஆயுதத்தை பல நிறுவனங்கள் கையில் எடுத்துள்ளன.
நிலைமை மிக மோசமாகி வருவதால், தமிழக மின்வாரியத்தின் உதவியை நாஸ்காம் மூலம் நாடியுள்ளன சாப்ட்வேர் நிறுவனங்கள். இதையடுத்து ஐடி பார்க்குகளுக்கு மட்டும் முடிந்தவரை கரண்டை கட் பண்ண மாட்டோம் என்று உறுதி தந்திருக்கிறார்களாம் மின்வாரிய அதிகாரிகள்.

”சார் பெட்ரோல் இல்ல, லீவு வேணும்.. வீட்டுல இருந்தே வொர்க் பண்ணுங்க..”- ஐடி நிறுவன ஐடியாக்கள்!

சென்னையில் நான்கு வழித் தடங்களில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கைகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை பெருநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், குறைந்த பயண நேரத்தில் விபத்தில்லாத பாதுகாப்பான போக்குவரத்து வசதி அளிக்கவும் `மோனோ ரயில்' அதிவிரைவு போக்குவரத்து திட்டத்தினை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின்படி 4 வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

1. வண்டலூரில் இருந்து வேளச்சேரி வரை பெருங்களத்தூர், இரும்புலியூர் (கிழக்கு), தாம்பரம் (கிழக்கு), கேம்ப் ரோடு, காமராஜர் நகர், செம்பாக்கம், கவுரிவாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, நாராயணபுரம், காமாட்சி மருத்துவமனை, மடிப்பாக்கம் கூட்டுரோடு ஆகிய இடங்கள் வழியாக 23 கிலோ மீட்டர் தொலைவிற்கும்,

2. பூந்தமல்லியில் இருந்து கத்திப்பாரா சந்திப்பு வரை குமணன்சாவடி, கரையான்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், ராமச்சந்திரா மருத்துவமனை, போரூர், முகலிவாக்கம் சந்திப்பு, ராமாவரம், நந்தம்பாக்கம் பட்ரோடு ஆகிய இடங்கள் வழியாக 16 கிலோ மீட்டர் தூரத்திற்கும்,

3. பூந்தமல்லியில் இருந்து வடபழனி சந்திப்பு வரை குமணன்சாவடி, கரையான்சாவடி, சவீதா பல்மருத்துவக் கல்லூரி, வேலப்பன் சாவடி, மதுரவாயல், ஆலப்பாக்கம், வளசரவாக்கம், விருகம்பாக்கம் ஆகிய இடங்கள் வழியாக 18 கிலோ மீட்டர் தூரத்திற்கும்,

4. வண்டலூரில் இருந்து புழல் வரை பெருங்களத்தூர், இரும்புலியூர், தாம்பரம், சென்னை ஏற்றுமதி வர்த்தக மண்டலம் (மெப்ஸ்), குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், ஆண்டாள்குப்பம், குன்றத்தூர், கொல்லசேரி, மாங்காடு, குமணன்சாவடி, கரையான்சாவடி, மேல்பாக்கம், பருத்திப்பட்டு, கோவர்த்தனகிரி, ஆவடி மார்க்கெட், ஆவடி, திருமுல்லைவாயில், அம்பத்தூர் (ஓ.டி) புதூர், கள்ளிக்குப்பம், சூரப்பேட்டை, புழல், கதிர்வேடு ஆகிய இடங்கள் வழியாக 54 கிலோ மீட்டர் தொலைவிற்கும் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

இதில் முதல்கட்டமாக 3 வழித்தடப் பணிகளும், இரண்டாவது கட்டமாக 4-வது வழித்தட பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.

மோனோ ரயில் பாதை மேம்பால தூண்கள் ஒரு சதுர மீட்டருக்கு குறைவான சுற்றளவு கொண்டவையாக இருக்கும் என்பதால், சாலையின் நடுவே மிகக் குறைந்த நீளமே தேவைப்படும். தூண்கள் சாலையின் நடுவே மிக எளிதாகவும், விரைவாகவும் அமைத்து கட்டுமானப் பணிகள் செய்யப்படுவதால் மக்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி மோனோ ரயில் திட்டம் மிகவும் பாதுகாப்பானது மட்டுமின்றி பார்வைக்கு அழகாகவும், சுற்றுப்புறச் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் மக்களுக்கு போக்குவரத்து வசதி அளிக்கும்.

மேலும் இந்தத் திட்டத்தால் தமிழக அரசுக்கு எந்தவித நிதிச் சுமையும் ஏற்படாத வகையில், வடிவமைத்தல், நிறைவேற்றுதல், நிதித் திரட்டுதல், இயக்குதல், பராமரித்து ஒப்படைத்தல் என்ற முறையில் (Design, Build, Fund, Operate and Transfer-DBFOT) தனியார் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்ததாரரை தேர்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

சென்னைக்கு மோனோ ரயில் சரிவராது:

ஆனால், சென்னை போன்ற போக்குவரத்து மிக மிக அதிகம் உள்ள பெருநகருக்கு மோனோ ரயில் திட்டம் ஒத்து வராது என்று டெல்லி மற்றும் பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்திய பிரபல போக்குவரத்துக் கட்டுமானப் பொறியாளர் ஸ்ரீதரன் பலமுறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு இப்போது அமல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விட்டுவிட்டு, மோனோ ரயில் திட்டத்தை ஜெயலலிதா அரசு வேகவேகமாக செயல்படுத்துவது சரியல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

இது மெட்ரோ ரயில் திட்டத்தை விட 50 சதவீதம் அதிக செலவு பிடிப்பதாகும், மேலும் மெட்ரோ ரயிலோடு ஒப்பிடுகையில், மோனோ ரயிலில் 4ல் ஒரு பங்கு பயணிகள் தான் பயணிக்க முடியும் என்றும் ஸ்ரீதரன் கூறியுள்ளார்.

மேனோ ரயிலால் யாருக்கு லாபமோ தெரியவில்லை, ஆனால் மக்களுக்கு லாபமில்லை என்கிறார்கள் பெருநகரத் திட்ட வல்லுனர்கள்.

சென்னையில் நான்கு வழித் தடங்களில் மோனோ ரயில் திட்டம்: சட்டப்பேரவையில் தாக்கல்

சென்னை: ஐபிஎல் 2வது குவாலிபயர் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் இன்று சென்னையில் மோதவுள்ளன.

இன்றைய போட்டியில் வெல்லும் அணியே இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸுடன் மோதும் வாய்ப்பைப் பெறும்.

முதல் பிளே ஆப் போட்டியில் சென்னை அணி, பெங்களூரை அபாரமாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்து விட்டது. 2வது பிளே ஆப் போட்டியில் மும்பை அணி, கொல்கத்தாவை வீழ்த்தியது.

இதையடுத்து இன்று இறுதிப் போட்டிக்குள் நுழையும் 2வது அணியைத் தேர்வு செய்யும் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இதில் முதல் பிளே ஆப் போட்டியில் தோற்ற பெங்களூரும், 2வது பிளே ஆப் போட்டியில் வென்ற மும்பையும் மோதவுள்ளன.

இன்றைய போட்டியில் மும்பை வென்றால்தான் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியும். அதேசமயம், இறுதிப் போட்டிக்கான இன்னொரு வாய்ப்பைப் பெற்றுள்ள பெங்களூர் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் ஆர்வமாக உள்ளது.

மும்பை அணியைப் பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, அம்பட்டி ராயுடு, கிரன் போலார்ட் ஆகியோர் வலுவான பேட்டிங் ஆர்டரைக் கொடுக்கும் வகையில் உள்ளனர்.

மேலும் ஜேம்ஸ் பிராங்க்ளினும் சிறப்பான பேட்டிங்கை, குறிப்பாக நெருக்கடியான நேரத்தில் வெளிப்படுத்தி வருகிறார்.

பந்து வீச்சைப் பொறுத்தவரையில், ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவராக வலம் வரும் லசித் மலிங்கா கை கொடுப்பார். கூடவே முனாப் படேலும், ஹர்பஜன் சிங்கும் நல்ல பார்மில் உள்ளதால் மும்பைக்கு பலம்தான்.

பெங்களூரைப் பொறுத்தவரை கிறிஸ் கெய்லின் சூறாவளியில் அந்த அணி ஆரம்பத்திலிருந்தே உயரப் பறந்து வந்தது. ஆனால் சென்னைக்கு எதிரான பிளே ஆப் போட்டியில் கெய்லை சென்னை வீரர்கள் அடக்கி ஒடுக்கி விட்டதால் அந்த அணியால் எழ முடியாமல் போய் விட்டது.

10 போட்டிகளில் ஆடி 519 ரன்களைக் குவித்து அசைக்க முடியாத பேட்ஸ்மேனாக திகழ்கிறார் கெய்ல்.

அதேபோல விராத் கோலி, ஏப் டிவில்லியர்ஸ், மயங்க் அகர்வால் ஆகியோரும் உள்ளனர். ஆஸ்திரேலிய வீரர் லியூக் போமர்ஸ்பாக் ஆட்டமும் கவனிப்புக்குரியதே.

பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஜாகிர்கான், கேப்டன் டேணியல் வெட்டோரி ஆகியோரே பலம் வாய்ந்தவர்களாக உள்ளனர். ஸ்ரீநாத் அரவிந்த் கை கொடுக்கலாம்.

இரு அணிகளிலும் சில பலவீனங்கள், நிறைய பலங்கள் உள்ளன. அவற்றை சரி செய்து சரியான முறையில் விளையாடும் அணிக்கே வெற்றி வாய்ப்பு என்பதால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இன்று சென்னையில் மோதல்-பெங்களூரை வென்று பைனலுக்குள் நுழையுமா மும்பை?

சென்னை: ஐ.பி.எல்., தொடரில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற வரலாறு படைக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி காத்திருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறியுள்ள சென்னை அணிக்கு, இம்முறை பைனல் சொந்த மண்ணில் நடப்பது சாதகமான விஷயம்.
நான்காவது ஐ.பி.எல்., தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று முன் தினம் மும்பையில் நடந்த முதலாவது "பிளே-ஆப்' போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை சந்தித்தது. இதில், முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு கடைசி 18 பந்துகளில் 53 ரன்கள் தேவைப்பட்டன. இது சாத்தியமில்லை என்று தான் பலரும் நினைத்தனர். ஆனால், சுரேஷ் ரெய்னா(73) மற்றும் ஆல்பி மார்கலின்(28) அதிரடி கைகொடுக்க, 19.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்து வென்றது. இதன் மூலம் சென்னை அணி, மூன்றாவது முறையாக பைனலுக்கு(2008, 2010, 2011) முன்னேறி அசத்தியது. வரும் 28ம் தேதி நடக்கும் பைனலில் மீண்டும் வெல்லும் பட்சத்தில் ஐ.பி.எல்., கோப்பையை தொடர்ந்து இரண்டு முறை வென்ற முதல் அணி என்ற பெருமையை பெறலாம்.
உள்ளூர் சாதகம்:
சென்னையில் பைனல் நடப்பது நமக்கு சாதகமானது. இம்முறை லீக் சுற்றில், இங்கு நடந்த 7 போட்டிகளிலும் சென்னை தான் வென்றது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு மற்றும் ராசியான சேப்பாக்கம் மைதானம் மீண்டும் அணிக்கு கைகொடுக்கலாம். தவிர, கேப்டன் தோனியின் வியூகம், அஷ்வின் சுழல், ரெய்னா, மார்கல், முரளி விஜய் ஆகியோரது அதிரடி எடுபடும் பட்சத்தில் சென்னை அணி, உள்ளூரில் கோப்பை கைப்பற்றலாம்.
இது குறித்து அணியின் முன்னணி வீரர் மைக்கேல் ஹசி கூறுகையில்,""சேப்பாக்கம் ஆடுகளத்தில் துவக்கத்தில் அதிரடியாக ஆடலாம். போகப் போக பந்து, பேட் நோக்கி வரும் வேகம் குறைந்து விடும். பந்துக்காக காத்திருந்து பேட் செய்ய வேண்டும். இதற்கேற்ப விளையாட கற்றுக் கொண்டதால் தான், உள்ளூரில் சென்னை அணி வலிமையானதாக திகழ்கிறது. ஆடுகளத்தின் இந்த தன்மையை புரிந்து கொண்டு விளையாட மற்ற அணிகள் சிரமப்பட வேண்டியிருக்கும்,''என்றார்.
சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையில்,""அணியின் "மிடில்-ஆர்டர்' பலமாக இருப்பதால் தான் இக்கட்டான நிலையிலும் வெற்றி பெற முடிகிறது. சுழற்கூட்டணிக்கு அஷ்வின் தலைமை ஏற்கிறார். இவருக்கு பக்கபலமாக ஜகாதி உள்ளார். ஆல்பி மார்கல், பிராவோ, போலிஞ்சர் போன்ற வேகங்கள் இருப்பதால், எத்தகைய சவாலையும் சந்திக்க தயாராக உள்ளோம்,''என்றார்.
நம்பிக்கை இருந்தது
பெங்களூரு அணிக்கு எதிரான வெற்றி குறித்து சென்னை கேப்டன் தோனி கூறுகையில்,"" பெங்களூரு அணிக்கு எதிராக 176 ரன்கள் என்பது சற்று சிரமமான ஸ்கோர் தான். இருப்பினும், இதற்கு முன் இதுபோன்ற அனுபவங்களை சந்தித்து உள்ளோம். இதனால் எப்படியும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. கைவசம் விக்கெட்டுகள் இருந்தால், கடைசி நேரத்தில் எந்த ஸ்கோரையும் எட்டிவிடலாம். இதுதான் பெங்களூருவுக்கு எதிராக நடந்தது. ஏழு ரன்களுக்கு 2 விக்கெட் என்ற நிலையில், களத்தில் இருந்த வீரர்களிடம் எவ்வித அறிவுரையும் நான் கொடுக்கவில்லை. வீரர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை, 100 சதவீதம் வெளிப்படுத்த வேண்டும். அதன் பின் வெற்றி தானாக தேடி வரும்,''என்றார்.
பெங்களூரு அணி கேப்டன் வெட்டோரி கூறுகையில்,"" கடைசி ஐந்து ஓவர்கள் சரியாக பந்துவீச வில்லை. ரெய்னா 18 பந்துகளில் 46 ரன்களை எட்டினார். மேலும் இவர், நாங்கள் வீசிய பெரும்பாலான பந்துகளை எல்லை கோட்டை தாண்டி பறக்க செய்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டார். 175 ரன்கள் என்பது நல்ல இலக்கு தான். எளிதாக எட்ட கூடிய இலக்கு அல்ல. எங்களுடைய சரிவை தடுக்க, கடைசி ஐந்து ஓவர்கள் சிறப்பாக பந்துவீசி இருக்கலாம். அடுத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி பைனலுக்கு முன்னேறுவோம்,''என்றார்.

வரலாறு படைக்குமா சென்னை கிங்ஸ்

தமிழ், கன்னடம், இந்தி திரைப்பட நடிகர்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி பெங்களூரில் வருகிற ஜுன் மாதம் 4ந் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நடிகர் சரத்குமார், முக்கிய நட்சத்திர வீரர் சூர்யா உள்பட போட்டியில் பங்கேற்கும் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இவர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் அணியின் பெயர் சென்னை ரைனோஸ்.

இந்த போட்டியில் நடிகர்கள் சரத்குமார், சூர்யா, மாதவன், ஆர்யா, விஷால், பரத், அபாஸ், விஷ்ணு, சாந்தணு, விக்ராந்த், ரமணா, மிர்ச்சி சிவா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர். அப்போது இந்த கிரிக்கெட் போட்டிக்கான டீசர்ட் மற்றும் லோகோ வெளியிடப்பட்டது.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் சூர்யா, நிச்சயமாக சென்னை ரைனோஸ் அணி வெற்றி பெறும். அதற்கான பயிற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என்று உரக்க சத்தம் போட்டு உற்சாகமாக சொன்னார்.

அடுத்து பேசிய சரத்குமார், ஏற்கனவே இந்தி நடிகர்களுக்கும், தென்னிந்திய நடிகர்களுக்கும் நடந்த போட்டியில் தென்னிந்திய நடிகர்கள் வெற்றி பெற்றனர். அதேபோல் தென்னிந்திய நடிகர்களுக்குள் நடக்கும் போட்டியில் எங்கள் அணி வெற்றி பெறும். 4ஆம் தேதி பெங்களூரிலும், 5ஆம் தேதி சென்னையில், 11ஆம் தேதி ஹைத்ராபாத்தில் போட்டி நடைபெறுகிறது. இறுதிப்போட்டி ஹைத்ராபாத்தில் 12ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த இறுதிப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவோம் என்பது உறுதி என்றார்.

மேலும் பேசிய சரத்குமார், திருட்டு விசிடியால் தமிழ் திரையுலகம் மிகவும் பாதிக்கப்படுகிறது. திருட்டு விசிடி ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை இப்போட்டியின் மூலம் வலியுறுத்துவோம் என்றார்.

நட்சத்திர கிரிக்கெட் போட்டி: சென்னை அணியின் முக்கிய வீரராக நடிகர் சூர்யா

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னையில் நடந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் சென்னை அணி 11 ரன் வித்தியாசத்தில் கொச்சி அணியை வீழ்த்தியது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக சஹா 46 ரன்கள் (33 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) குவித்தார். அடுத்து களம் இறங்கிய கொச்சி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து சென்னை அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொச்சி அணியில் அதிகபட்சமாக ஹாட்ஜ் 51 ரன்கள் (42 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

மெக்குல்லம் 33 ரன்கள் (37 பந்து, 3 பவுண்டரி), ஜடேஜா 19 ரன்கள் (13 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். கடைசி 5 ஓவர்களில் 63 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 51 ரன்கள் எடுக்கப்பட்டது.

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி கொச்சியை வீழ்த்தியது

சென்னை: ஐ.பி.எல்., லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தி, "ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. பேட்டிங்கில் சோபிக்கத்தவறிய சங்ககரா அணி, தோல்வி அடைந்து ஏமாற்றியது.
இந்திய மண்ணில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற சென்னை கிங்ஸ் கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.
மார்கல் வருகை:
சென்னை அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டது. டிம் சவுத்தி, குலசேகரா நீக்கப்பட்டு ஆல்பி மார்கல், சுராஜ் ரந்திவ் வாய்ப்பு பெற்றனர். டெக்கான் அணியில் மூன்று மாற்றம் செய்யப்பட்டது. ரவி தேஜா, மன்பிரீத் கோனி, ஸ்டைன் நீக்கப்பட்டு ஹர்மீத் சிங், பிரக்யான் ஓஜா, டுமினி தேர்வு செய்யப்பட்டனர்.
ஹசி நம்பிக்கை:
முதலில் பேட்டிங் செய்த சென்னை கிங்ஸ் அணிக்கு முரளி விஜய் (3) ஏமாற்றினார். பின், சுரேஷ் ரெய்னாவுடன் இணைந்த மைக்கேல் ஹசி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்த போது, மைக்கேல் ஹசி (46) அரைசத வாய்ப்பை இழந்தார்.
ரெய்னா அரைசதம்:
பின், கேப்டன் தோனியுடன் இணைந்த ரெய்னா அதிரடியாக ரன் சேர்த்தார். ஹர்மீத் சிங் பந்தில் இரண்டு "பவுண்டரி' அடித்த ரெய்னா, ஐ.பி.எல்., அரங்கில் தனது 11வது அரைசதம் கடந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்த போது பிரக்யான் ஓஜா சுழலில், ரெய்னா (59 ரன்கள், 2 சிக்சர், 6 பவுண்டரி) சிக்கினார்.
"ஹாட்ரிக்' சிக்சர்:
பின், தோனியுடன் இணைந்த ஆல்பி மார்கல் அதிரடி ஆட்டத்தை கையாண்டார். இஷாந்த் சர்மா வீசிய ஆட்டத்தின் 19வது ஓவரில் "ஹாட்ரிக் சிக்சர்' விளாசிய இவர், பந்தை மைதானத்தை விட்டு வெளியேற்றினார். இவர், 6 பந்தில் 19 ரன்கள் எடுத்திருந்த போது, கேமிரான் ஒயிட்டின் துல்லிய துரோவில் "ரன்-அவுட்' ஆனார். பொறுப்புடன் ஆடிய தோனி (21), பிரக்யான் பந்தில் "ஸ்டெம்பிங்' ஆனார். சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. பத்ரிநாத் (5), அனிருதா (3) அவுட்டாகாமல் இருந்தனர். டெக்கான் அணி சார்பில் பிரக்யான் ஓஜா 3 விக்கெட் கைப்பற்றினார்.
சோகல் அபாரம்:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய டெக்கான் அணிக்கு சன்னி சோகல், ஷிகர் தவான் ஜோடி சூப்பர் துவக்கம் அளித்தது. சென்னை பந்துவீச்சை வெளுத்து வாங்கிய சோகல், ரன் மழை பொழிந்தார். அஷ்வின் வீசிய ஆட்டத்தின் 6வது ஓவரில், ஒரு "சூப்பர் சிக்சர்' விளாசிய சோகல், 25 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். இவர், 30 பந்தில் 56 ரன்கள் (4 சிக்சர், 6 பவுண்டரி) எடுத்தபோது, ஜகாதி சுழலில் "போல்டானார்'. மறுமுனையில் நிதானமாக ரன் சேர்த்த ஷிகர் தவான் (19), ஜகாதி பந்தில் "போல்டானார்'.
சங்ககரா ஏமாற்றம்:
சிறிது நேரம் தாக்குப்பிடித்த பாரத் சிப்லி (17) நிலைக்கவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சங்ககரா (15), போலிஞ்சர் வேகத்தில் "போல்டாகி' ஏமாற்றினார். ஆல்பி மார்கல் பந்தில் "சிக்சர்' அடிக்க முயன்ற ஒயிட் (13), டுமினி (17) பெவிலியன் திரும்பினர். கடைசி ஓவரில் 23 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 3 ரன்கள் மட்டுமே எடுத்த டெக்கான் அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. சென்னை சார்பில் ஆல்பி மார்கல் 3, போலிஞ்சர், ஜகாதி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை ஆல்பி மார்கல் பெற்றார்.
ஸ்கோர் போர்டு
சென்னை சூப்பர் கிங்ஸ்
முரளிவிஜய் (ப)பிரக்யான் 3(14)
மைக் ஹசி (கே)இஷாந்த் (ப)ஹர்மீத் 46(41)
ரெய்னா (கே)தவான் (ப)பிரக்யான் 59(35)
தோனி (ஸ்டெம்)சங்ககரா (ப)பிரக்யான் 21(22)
ஆல்பி -ரன் அவுட்-(ஒயிட்/சங்ககரா) 19(6)
பத்ரிநாத் -அவுட் இல்லை- 5(2)
அனிருதா -அவுட் இல்லை- 3(2)
உதிரிகள் 9
மொத்தம் (20 ஓவரில், 5 விக்.,) 165
விக்கெட் வீழ்ச்சி: 1-18(முரளிவிஜய்), 2-78(மைக் ஹசி), 3-136(ரெய்னா), 4-157(ஆல்பி), 5-162(தோனி).
பந்துவீச்சு: டுமினி 3-0-21-0, கிறிஸ்டியன் 3-0-12-0, இஷாந்த் 4-0-41-0, பிரக்யான் 4-0-26-3, அமித் 3-0-34-0, ஹர்மீத் 3-0-26-1.
டெக்கான் சார்ஜர்ஸ்
சோகல் (ப)ஜகாதி 56(30)
தவான் (ப)ஜகாதி 19(27)
சிப்லி (கே)ஜகாதி (ப)ஆல்பி 17(15)
சங்ககரா (ப)போலிஞ்சர் 15(12)
ஒயிட் (கே)டுபிளசிஸ் (ப)ஆல்பி 13(18)
டுமினி (கே)மைக் ஹசி (ப)ஆல்பி 17(11)
கிறிஸ்டியன் -ரன் அவுட்-(தோனி) 1(1)
அமித் (கே)+(ப)போலிஞ்சர் 2(5)
இஷாந்த் -அவுட் இல்லை- 1(1)
உதிரிகள் 5
மொத்தம் (20 ஓவரில், 8 விக்.,) 146
விக்கெட் வீழ்ச்சி: 1-71(சோகல்), 2-90(தவான்), 3-110(சிப்லி), 4-121(சங்ககரா), 5-137(ஒயிட்), 6-143(டுமினி), 7-143(கிறிஸ்டியன்), 8-146(அமித்).
பந்துவீச்சு: ஆல்பி 4-0-38-3, போலிஞ்சர் 4-0-26-2, அஷ்வின் 4-0-23-0, ரந்திவ் 4-0-34-0, ஜகாதி 4-0-23-2.
ஆல்பி மார்கல் "50'
டெக்கான் அணிக்கு எதிராக வேகத்தில் மிரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்பி மார்கல் 3 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில், 50 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இணைந்தார். இதுவரை இவர், 46 போட்டிகளில் பங்கேற்று 51 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் 6வது இடத்துக்கு முன்னேறினார். முதலிடத்தில் கொச்சி அணியின் ஆர்.பி. சிங் (50 போட்டி, 56 விக்.,) உள்ளார்.

சென்னை கிங்ஸ் அசத்தல் வெற்றி: டெக்கான் அணி ஏமாற்றம்

சென்னை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், புனே வாரியர்ஸ் அணிகள் மீண்டும் மோதுகின்றன. கடந்த முறை போல இன்றும் வெற்றியை தொடர தோனியின் சென்னை அணி காத்திருக்கிறது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் இன்று நடக்கும் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், புனே வாரியர்ஸ் அணிகள் மீண்டும் சந்திக்கின்றன.
விஜய் சந்தேகம்:
நான்காவது ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 3ல் வென்றுள்ளது. இருப்பினும் அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை, சொல்லிக்கொள்ளும்படி இல்லை. முதல் போட்டியில் 64 ரன் எடுத்த அனிருதா, அடுத்து சொதப்பி வருகிறார். கொச்சிக்கு எதிராக ரெய்னா 50 ரன்கள் எடுத்தார். இப்படி ஒரு போட்டிக்கு ஒருவர் மட்டுமே ரன்குவிப்பில் ஈடுபடுகின்றனர். மற்றவர்கள் சொதப்புவதால், பெரிய அளவிலான ஸ்கோரை எட்ட முடியவில்லை. இதுவரை பங்கேற்ற போட்டிகளில், 180 ரன்கள் எடுத்துள்ள முரளி விஜய், தொடையின் பின் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இன்று விளையாடுவது சந்தேகம் தான்.
கேப்டன் தோனியும் இந்த வரிசையில் தான் உள்ளார். மைக்கேல் ஹசி மட்டும் ஓரளவுக்கு நிலையான ஆட்டத்தை தருகிறார். பின் வரிசையில் ஆல்பி மார்கலும் "பார்ம்' இல்லாமல் தவிக்கிறார். "மிடில் ஆர்டரில்' பத்ரிநாத் நம்பிக்கை தருகிறார். இன்று அனைத்து பேட்ஸ்மேன்களும் எழுச்சி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பவுலிங் ஆறுதல்:
வேகப்பந்துவீச்சு பிரிவில் போலிஞ்சர் மீண்டும் அசத்த துவங்கியுள்ளது பெரும் பலம். இவருடன் ஆல்பி மார்கல் நம்பிக்கை தருவது சாதகமானது தான். ரந்திவ் நீக்கப்பட்டு சவுத்தி இடம் பெறலாம். மற்றபடி சுழலில் அஷ்வின், ஜகாதி இடம் பெறுவது தொடரலாம்.
அடுத்தடுத்த அதிர்ச்சி:
முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிகரமாக துவக்கியது, அறிமுக அணி புனே வாரியர்ஸ். அடுத்து நடந்த பஞ்சாப், கொச்சி, சென்னை அணிகளுக்கு எதிரான "ஹாட்ரிக்' தோல்விகளால் துவண்டு கிடக்கிறது. பேட்டிங்கை பொறுத்தவரையில் ஸ்மித் காயம் காரணமாக விளையாடாதது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுபவ வீரர்கள் ரைடர், நாதன் மெக்கலம் சிறப்பாக விளையாடினால் நல்லது. இளம் வீரர்கள் மிதுன் மன்ஹாஸ், மோனிஷ் மிஸ்ரா நிலையான ஆட்டத்தை அணிக்கு வழங்க வேண்டும். கேப்டன் யுவராஜ் சிங், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக ரன் சேர்ப்பார் என நம்பலாம். கடந்த தொடரில் அதிரடியில் பல போட்டிகளை வென்று தந்த உத்தப்பா, இம்முறை தொடர்ந்து கைவிடுவது அணிக்கு சிக்கல் தான்.
பவுலிங் அசத்தல்:
புனே அணிக்கு பவுலிங் பெரும் பலமாக உள்ளது. ஜெரோம் டெய்லர், பார்னலுடன், அல்போன்சா தாமஸ், ஸ்ரீகாந்த் வாக் மீண்டும் அசத்த முயற்சிக்கலாம். இவர்களுடன், ஜெசி ரைடர், முரளி கார்த்திக் "பார்ட் டைம்' யுவராஜ் சிங் விக்கெட் வேட்டைக்கு தயாராக உள்ளனர்.

பழிதீர்க்குமா?
நேற்று முன்தினம் சென்னையில் நடந்த லீக் போட்டியில் புனே அணி, சென்னை கிங்சிடம் தோல்வியடைந்து இருந்தது. ஒருநாள் இடைவெளியில், இன்று மீண்டும் அவர்களது சொந்த மண்ணில், சென்னையை எதிர்கொள்கின்றனர். இதில் சென்னையை வீழ்த்தி, புனே வீரர்கள் பழிதீர்ப்பார்களா?

எழுச்சி பெறுமா டெக்கான் சார்ஜர்ஸ்
கொச்சி: ஐ.பி.எல்., தொடரின் லீக் போட்டியில் தோல்வியில் துவண்டு கிடக்கும் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியை இன்று சந்திக்கிறது.
கடந்த 2009ல் சாம்பியன் பட்டம் வென்ற டெக்கான் அணி, இம்முறை கேப்டன் மாற்றத்துடன் களமிறங்கியது. புதிய கேப்டனாக வந்துள்ள சங்ககரா தலைமையில் டெக்கான் அணி இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் பெங்களூரு, டில்லி அணிக்கு எதிரான போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றது. மற்ற நான்கு போட்டிகளில் (ராஜஸ்தான், கோல்கட்டா, பஞ்சாப், மும்பை) தோல்வியடைந்தது. இனியும் தோல்வி தொடரும் பட்சத்தில் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும்.
இதற்கு, பேட்டிங்கில் இளம் வீரர்கள் சிகர் தவான், சன்னி சோகல் தொடர்ந்து ஏமாற்றி வருவது முக்கிய காரணம். இதனால் பின் வரும் வீரர்களுக்கு நெருக்கடி அதிகரித்து விடுகிறது. பரத் சிப்லி, ரவி தேஜாவின் ஏமாற்றம் தொடர்கிறது. கேப்டன் சங்ககராவும் தன்பங்கிற்கு அணியை கைவிடுகிறார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய உள்ளூர் அணி வீரராக கிறிஸ்டியனும், இதுவரை சொல்லிக்கொள்ளும் படி சாதிக்கவில்லை. இதனால், இவரை பேட்டிங் ஆர்டரில் முன்வரிசையில் களமிறக்கிப் பார்க்கலாம்.
பவுலிங்கில் டெக்கான் அணி சிறப்பாக செயல்படுகிறது. வேகத்தில் ஸ்டைன், இஷாந்த் சர்மா அசத்துகின்றனர். சுழலில் அமித் மிஸ்ரா, பிரக்யான் ஓஜா விக்கெட் வேட்டையை தொடரலாம்.
வெல்லுமா கொச்சி:
கொச்சி அணியை பொறுத்தவரையில் 6 போட்டிகளில் பங்கேற்று, தலா 3 வெற்றி, தோல்வியுடன் உள்ளது. இந்த அணி "ஹாட்ரிக்' வெற்றி பெற்ற நிலையில், கடந்த போட்டியில் பிரண்டன் மெக்கலம் விளையாடாதது பின்னடைவாக அமைந்தது. இன்று இவர் களமிறங்கலாம் என்று தெரிகிறது. கேப்டன் ஜெயவர்தனா, லட்சுமண் மீண்டும் ஆறுதல் தர காத்திருக்கின்றனர். இளம் வீரர்கள் பார்த்திவ் படேல், ரவிந்திர ஜடேஜா பேட்டிங்கில் அசத்துவது தொடரும்.
பவுலிங்கில் ஆர்.பி.சிங், வினய் குமார் இருவரும் சிறப்பாக செயல்படுகின்றனர். கடந்த சில போட்டிகளில் வாய்ப்பு பெறாத ஸ்ரீசாந்த், இன்று களமிறங்குவார் என்று தெரிகிறது. சுழலில் முரளி தரன், கோமெஜ், ஜடேஜாவுடன் பெரேராவும் கைகொடுக்கலாம்.

மீண்டும் வெல்லுமா சென்னை கிங்ஸ் *பழி தீர்க்குமா புனே வாரியர்ஸ்

சென்னை: வீடுகளுக்கு வரும் ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது. இதுபோன்ற தரமற்ற தண்ணீரை குடித்தால், நிமோனியா தொற்று ஏற்பட்டு நுரையீரல் பாதிக்கும் அபாயம் உள்ளதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். கோடை காலம் தொடங்கி விட்டதால், தண்ணீர் தாகமும் அதிகரிக்கும். தாகம் ஏற்படும்போது கிடைக்கும் தண்ணீரை குடிப்பது, கடைகளில் குளிர்பானம், மோர் என்று இதமாக சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது. சாலை ஓரங்களில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படும் குளிர்பானம், மோர் வாங்கி குடிப்பதால் வெயில் காலங்களில் பலருக்கு தொண்டையில் கரகரப்பு, இருமல், சளி ஏற்பட்டு கஷ்டப்படுகிறார்கள்.

வெயில் காலங்களில் ஏற்படும் இதுபோன்ற தொண்டை பிரச்னைகளை தடுப்பது குறித்து இந்திய பொது சுகாதார சங்கத்தின் தமிழக கிளையின் தலைவரும், முன்னாள் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குனருமான டாக்டர் இளங்கோ கூறியதாவது: தமிழகம் முழுவதும் குறிப்பாக நகர்ப்புறங்களில் குடிநீருக்காக 20 லிட்டர் கொண்ட ‘வாட்டன் கேன்’களை பயன்படுத்துகிறார்கள். கேன்களில் குடிநீர் வாங்கினால் அது சுகாதாரமாகத்தான் இருக்கும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. உதாரணத்துக்கு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்துதான் வாட்டர் கேன் சப்ளையாகிறது. இதில் ஒரு சில கம்பெனிகளில் தவிர பல கம்பெனிகளில் ஐஎஸ்ஐ முத்திரை குத்திய லேபிள் இருக்குமே தவிர, உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள தரத்துடன் தண்ணீர் சப்ளை செய்யப்படுவதில்லை. உண்மையில் 100 சதவீத ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது.

இதுபோன்ற தரமற்ற வாட்டர் கேன் தண்ணீரை தொடர்ந்து குடித்து வருவதால் நமது உடம்பும் குறிப்பிட்ட தண்ணீரை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்துக்கு மாறிவிடும். ஆனால் திடீரென கோடை வெயிலில் சுற்றி விட்டு ஏதாவது ஒரு இடத்தில் அல்லது உறவினர், நண்பர்கள் வீடுகளில் போர் மற்றும் கிணற்று தண்ணீரால் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள், மோர், ஐஸ் கிரீம் சாப்பிடும்போது தொண்டையில் அலர்ஜி ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொண்டை கரகரப்பு, சளி, காய்ச்சல் போன்ற நோயால் பாதிக்கிறார்கள். இது நிமோனியா தொற்றாக மாறி நுரையீரலையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.நுரையீரல் தொற்று காரணமாக ஏற்படும் நிமோனியா எந்த மருந்துக்கும் கட்டுப்படாத கிருமியாக உருவாகி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

மேலும் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இறந்தவர்களில் அதிகமானோர் சுவாச மண்டல தொற்று நோய் காரணமாக இறந்துள்ளது தெரியவந்துள்ளது. நுரையீரலை பாதிக்கும் நிமோனியாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள குளிர் மற்றும் கோடை காலம் என எந்த சீசனிலும் குடிதண்ணீரை காய்ச்சி குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். தொண்டை கரகரப்பு பிரச்னையால் பாதிக்கப்படுபவர்கள் காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இவ்வாறு டாக்டர் இளங்கோ கூறினார்.

தொண்டை அலர்ஜியை தடுக்க வழிமுறைகள்:

குடிதண்ணீர் மூலம் ஏற்படும் தொண்டை அலர்ஜி நோயை எளிதான முறையில் தடுக்கும் வழிமுறைகள்:

* வீட்டில் தினசரி குடிக்கும் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். கேன் வாட்டர்களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றது என தெரியவருவதால் அந்த நீரையும் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.

* வெயிலில் அலைபவராக இருந்தால் வீட்டில் இருந்தே தண்ணீரை தினசரி எடுத்துச் செல்வது நல்லது. அதேபோன்று உறவினர் வீடுகளுக்கு செல்லும்போதும் அங்கேயேயும் காய்ச்சிய குடிநீரையே வாங்கி பருக வேண்டும்.

* கடைகளில் விற்கப்படும் குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், மோர் போன்றவைகள் தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பிறகே வாங்கி குடிக்க வேண்டும்.

* சாலை ஓரங்களில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படும் குளிர்பானங்கள், தர்பூசணி போன்ற பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

* குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெயிலுக்கு இதமான பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும்.

வீடுகளுக்கு சப்ளையாகும் வாட்டர் கேன்கள் : நுரையீரல் பாதிக்கும் அபாயம்!

சென்னை: சென்னையில் நடந்த உலக கோப்பை லீக் போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய அணி, வெஸ்ட் இண்டீசை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. யுவராஜ் சிங்கின் அதிரடி சதம், அணியின் வெற்றிக்கு கைகொடுத்தது.
இந்திய துணைக் கண்டத்தில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று சென்னையில் நடந்த முக்கியத்துவமில்லாத லீக் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் ஏற்கனவே காலிறுதிக்கு முன்னேறி விட்டன.
அஷ்வின் வாய்ப்பு:
இந்திய அணியில் காயம் அடைந்த சேவக், நெஹ்ரா நீக்கப்பட்டு, சுரேஷ் ரெய்னா, அஷ்வின் வாய்ப்பு பெற்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல், கீமர் ரோச்சுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, கிர்க் எட்வர்டஸ், ரவி ராம்பால் இடம் பெற்றனர். "டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி சற்றும் தயங்காமல் "பேட்டிங் தேர்வு செய்தார்.
ராம்பால் அசத்தல்:
இந்திய அணிக்கு எடுத்த எடுப்பிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின்(2), ரவி ராம்பால் வேகத்தில் வீழ்ந்தார். பின் காம்பிர், விராத் கோஹ்லி இணைந்து ஓரளவுக்கு ரன் சேர்த்தனர். பென் சுழலில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்து அசத்தினார் காம்பிர். இரண்டாவது விக்கெட்டுக்கு 43 ரன்கள் சேர்த்த நிலையில், ராம்பால் பந்தில் காம்பிரும்(22)வீழ்ந்தார்.
கோஹ்லி அரைசதம்:
அடுத்து வந்த யுவராஜ் ஆட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டார். இவருக்கு கோஹ்லி அருமையாக "கம்பெனி கொடுக்க, ஸ்கோர் சீராக உயர்ந்தது. சமி பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்த யுவராஜ், மிகவிரைவாக அதிரடிக்கு மாறினார். பிஷூ ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரி விளாசிய இவர், அரைசதம் கடந்தார். தொடர்ந்து பென் ஓவரிலும் 2 பவுண்டரி அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு யுவராஜுடன் சேர்ந்து 122 ரன்கள் சேர்த்த நிலையில், ராம்பால் பந்தில் விராத் கோஹ்லி(59) போல்டானார்.
முதல் சதம்:
பின் போலார்டு வீசிய பந்தை தட்டி விட்டு ஒரு ரன் எடுத்த, யுவராஜ், உலக கோப்பை அரங்கில் தனது முதல் சதம் அடித்தார். இது ஒரு நாள் போட்டிகளில் இவரது 13வது சதம். மறுபக்கம் பிஷூ பந்தை இறங்கி வந்து அடிக்க முற்பட்ட, தோனி(22) வீணாக அவுட்டானார்.
இதற்கு பின் இந்திய விக்கெட்டுகள் வரிசையாக சரிந்தன. சமி வீசிய போட்டியின் 44வது ஓவரின் முதல் பந்தில் யுவராஜ் ஒரு சிக்சர் அடித்தார். 5வது பந்தில் ராம்பாலின் சூப்பர் "கேட்ச்சில் ரெய்னா(4) அவுட்டானார். இதன் மூலம் கிடைத்த அரிய வாய்ப்பை இவர் வீணாக்கினார். சிறிது நேரத்தில் போலார்டு பந்தில் அவரிடேம "கேட்ச் கொடுத்து யுவராஜ் வெளியேறினார். இவர் 113 ரன்கள்(10 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். ராம்பாலிடம் "சரண்டர் ஆன யூசுப் பதான்(11) மீண்டும் சொதப்பினார். ஹர்பஜன்(3) தாக்குப்பிடிக்கவில்லை. ஜாகிர் கானை(5) போல்டாக்கிய ராம்பால், 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். முனாப்(1) வழக்கம் போல் வந்த வேகத்தில் வெளியேற, இந்திய அணி 49.1 ஓவரில் 268 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ராம்பால் 5 விக்கெட் வீழ்த்தினார்.
முதலில் "ஸ்பின்:
சவாலான இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, இந்திய கேப்டன் தோனி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். முதல் ஓவரை வீச தமிழக "ஸ்பின்னர் அஷ்வினை அழைத்தார். இதில், ஒரு ரன் மட்டும் கொடுத்து அசத்தினார். எட்வர்ட்ஸ் 17 ரன்களுக்கு "ரிவியு முறையில் அஷ்வின் சுழலில் சிக்கினார். டேரன் பிராவோ(22) தாக்குப்பிடிக்கவில்லை. அபாரமாக ஆடிய டேவன் ஸ்மித்(81), ஜாகிர் பந்தில் போல்டாக, சிக்கல் ஆரம்பமானது.
விக்கெட் மடமட:
இதற்கு பின் வந்தவர்கள் இந்திய பந்துவீச்சில் திணறினர். "அதிரடி போலார்டு(1), ஹர்பஜன் வலையில் விழுந்தார். யுவராஜ் பந்தில் டேவன் தாமஸ்(2) நடையை கட்டினார். சமி(2) ரன் அவுட்டானார். "டெயிலெண்டர்கள் ஜாகிர் வேகத்தில் பெவிலியன் திரும்ப, வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ஓவரில் 188 ரன்களுக்கு அவுட்டாகி, தோல்வி அடைந்தது.
"ஆல்-ரவுண்டராக அசத்திய யுவராஜ் மீண்டும் ஒரு முறை ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
50 ஓவர் தெரியுமா?
உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில், தோனி தலைமையிலான இந்திய அணி நான்கு போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்தது. இதில் வங்கதேச அணிக்கு எதிராக 50 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்த இந்திய அணி, இங்கிலாந்து (49.5 ஓவர்கள்), தென் ஆப்ரிக்கா (48.4 ஓவர்கள்), வெஸ்ட் இண்டீஸ் (49.1 ஓவர்கள்) அணிகளுக்கு எதிராக விரைவில் "ஆல்-அவுட் ஆனது. ஒருவேளை இந்திய அணியினருக்கு 50 ஓவர் போட்டி என்பது மறந்து போச்சா?
---
கடைசி கட்ட சொதப்பல்
<இம்முறை உலக கோப்பை தொடரில், இந்திய பேட்ஸ்மேன்கள் கடைசி கட்டத்தில் சொதப்பலாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக "பேட்டிங் பவர்பிளே ஓவரில், விக்கெட்டுகளை "மடமட என பறிகொடுக்கின்றனர். வங்கதேச அணிக்கு எதிராக 50 ஓவர்கள் முழுமையாக பேட் செய்த இந்திய பேட்ஸ்மேன்கள், 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்தனர். ஆனால் இங்கிலாந்து (33 ரன்களுக்கு 5 விக்கெட்), தென் ஆப்ரிக்கா (29 ரன்களுக்கு 9 விக்கெட்), வெஸ்ட் இண்டீஸ் (50 ரன்களுக்கு 7 விக்கெட்) அணிகளுக்கு எதிராக கடைசி நேரத்தில் எதிரணி பவுலர்களுக்கு விக்கெட்டுகளை வாரி வழங்கினர்.
---
சங்ககரா முதலிடம்
பத்தாவது உலக கோப்பை தொடரில், லீக் சுற்று முடிந்த நிலையில் இலங்கை கேப்டன் சங்ககரா, அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். இவர் 6 போட்டியில் ஒரு சதம், 2 அரைசதம் உட்பட 363 ரன்கள் எடுத்துள்ளார்.
இவ்வரிசையில் "டாப்-5 பேட்ஸ்மேன்கள்:
வீரர் போட்டி ரன் சதம்/அரைசதம்
சங்ககரா (இலங்கை) 6 363 1/2
டிராட் (இங்கிலாந்து) 6 336 0/4
ஸ்டிராஸ் (இங்கிலாந்து) 6 329 1/1
சேவக் (இந்தியா) 5 327 1/1
சச்சின் (இந்தியா) 6 326 2/0
---
"சுழல் மன்னன் அப்ரிதி
லீக் சுற்று முடிந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி, அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் வரிசையில் முன்னிலை வகிக்கிறார். சுழலில் அசத்திய இவர், 6 போட்டியில் 17 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
இவ்வரிசையில் "டாப்-5 பவுலர்கள்:
வீரர் போட்டி விக்கெட்
அப்ரிதி (பாக்.,) 6 17
ஜாகிர் (இந்தியா) 6 15
ராபின் பீட்டர்சன் (தெ.ஆ.,) 6 14
சவுத்தி (நியூசி.,) 6 14
ரோச் (வெ.இ.,) 5 13
---
இந்தியா "370
லீக் சுற்று முடிந்த நிலையில், ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த அணிகள் வரிசையில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 370 ரன்கள் குவித்தது.
இவ்வரிசையில் "டாப்-5 அணிகள்:
அணி ஸ்கோர் எதிரணி
இந்தியா 370/4 வங்கதேசம்
நியூசி., 358/6 கனடா
தெ.ஆ., 351/5 நெதர்லாந்து
இந்தியா 338 இங்கிலாந்து
இங்கிலாந்து 338/8 இந்தியா

சென்னையில் விண்ணை தொடும் வெற்றி! * யுவராஜ் சதத்தில் இந்தியா அபாரம் * பரிதாபமாக வீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி “பி” பிரிவில் இடம் பெற்றுள்ளது. தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்த பிரிவில் இடம் பெற்றுள்ளன.

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 87 ரன்னில் வங்காளதேசத்தை தோற்கடித்தது. இங்கிலாந்துடன் மோதிய 2-வது ஆட்டம் “டை”யில் முடிந்தது. அயர்லாந்துக்கு எதிரான 3-வது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், நெதர்லாந்துக்கு எதிரான 4-வது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5-வது “லீக்” ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்திய அணி 5 ஆட்டத்தில் 3 வெற்றி, ஒரு டை, ஒரு தோல்வியுடன் 7 புள்ளி பெற்றுள்ளது. இந்திய அணி கடைசி “லீக்” ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணியை வருகிற 20-ந்தேதி எதிர் கொள்கிறது.

இதற்காக இந்திய வீரர்கள் ஏற்கனவே சென்னை வந்து விட்டனர். கடந்த 2 தினங்களாக வீரர்கள் ஐ.ஐ.டி. மைதானத்தில் பயிற்சி பெற்றனர். இந்திய வீரர்கள் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி பெற்றனர். நேற்றைய பயிற்சியின் போது கேப்டன் டோனி, அதிரடி பேட்ஸ்மேன் ஷேவாக் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. ஷேவாக்குக்கு முழங்காலில் காயம் இருப்பதாகவும், இதன் காரணமாகத்தான் அவர் பயிற்சி பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் இன்று பிற்பகலில் பயிற்சி பெறுவார்கள்.

சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய வீரர்கள் பயிற்சி; ஷேவாக்குக்கு காயம்?

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. அதேபோல புதுச்சேரி, கேரளா சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலும் நாளையே தொடங்குகிறது.

இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக சட்டசபை பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் 19ந் தேதி (நாளை) முதல் 26ந் தேதி வரை தொகுதி தேர்தல் அதிகாரி அலுவலகங்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பெற்றுக்கொள்ளப்படும்.

20ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பொதுவிடுமுறை என்பதால் அன்றைய தினம் வேட்பு மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது. வேட்பு மனு பற்றிய அறிவிப்பினை சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் அதிகாரிகள் 19ந் தேதி (நாளை) வெளியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அட்டவணை:

வேட்பு மனு தாக்கல் தொடக்கம் - மார்ச் 19
வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் - மார்ச் 26
வேட்பு மனுக்கள் பரிசீலனை - மார்ச் 28
மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் - மார்ச் 30
வாக்குப் பதிவு - ஏப்ரல் 13
வாக்கு எண்ணிக்கை - மே 13

கட்டுப்பாடுகள்:

வேட்பு மனு தாக்கல் மற்றும் பிரசாரம் தொடர்பாக ஏராளமான கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

அவை பின்வருமாறு:

- வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக வரக்கூடாது.

- மனு தாக்கல் செய்யும் அறையில் வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சுயேட்சை வேட்பாளர் என்றால் பெயரை முன்மொழிய 10 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

- வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளரின் கல்வித்தகுதி, சொத்து விவரம், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

கூட்டணி அமளிகளுக்கு மத்தியில் நாளை வேட்பு மனுத் தாக்கல் தொடக்கம்

ஒரு காலத்தில் தி.மு.க.,வின் கோட்டையாகக் கருதப்பட்ட தலைநகர் சென்னை, தற்போது கலகலத்துவிட்டது. 2006 சட்டசபை தேர்தலில், சென்னை மாவட்டத்தில் 14 தொகுதிகள் இருந்தன. அவற்றில் இரண்டு தொகுதிகளைத் தான் கூட்டணிக்கு கொடுத்தது. 12 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க., ஏழு தொகுதிகளில் தோல்வியடைந்தது.
இந்த தேர்தலில், சென்னையில் கூடுதலாக உருவாகியுள்ள இரண்டு சேர்த்து, மொத்தமுள்ள 16 தொகுதிகளில் ஐந்து தொகுதிகளை, கூட்டணியான காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்துள்ளது. தி.நகர் தொகுதியில் செல்லக்குமார், அண்ணாநகரில் திருநாவுக்கரசர், ராயபுரத்தில் மனோ, மயிலாப்பூரில் எஸ்.வி.சேகர் ஆகியோர் போட்டியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. வேளச்சேரி தொகுதியும் பா.ம.க.,வுக்கு கொடுக்கப்படும் என தெரியவருகிறது.

சென்னையில் களமிறங்கும் காங்.,

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 13-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் தேதியை தள்ளி வைக்ககோரி சென்னை ஐகோர்ட்டில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குரு.அப்பாசாமி, மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த சிவ.இளங்கோ, பாரதிய ஜனதா வக்கீல் ராஜேந்திரன் ஆகியோர் பொது நல வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் கமிஷன் பெஞ்ச் விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் வக்கீல்கள் அபுசலீம், வி.பாபு, ராஜேந்திரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது அவர்கள் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வையொட்டி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பது தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் கல்வியை பாதிக்கும். அரசியல் கட்சிகளின் உச்ச கட்ட பிரசாரத்தால் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் அதில் கவனம் செலுத்த முடியாது.

தேர்வு எழுதும் 17 லட்சம் மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். தேர்வு முடிந்த ஓரிரு நாளில் தேர்தல் பணிக்கு ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவதும் இயலாத ஒன்று. தேர்தல் ஜனநாயகம், தேர்தல் நடவடிக்கை, வாக்குப்பதிவு அனைத்தும் கல்விக்கு கட்டுப்பட்டதுதான். எனவே தேர்தல் தேதியை குறைந்தபட்டம் ஏப்ரல் மாத இறுதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று வாதிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வக்கீல் ராஜகோபாலன் ஆஜராகி வாதிட்டார்.

அப்போது அவர், தேர்தல் அறிவிப்பு வெளியான உடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விடுகிறது. தேர்தல் அறிவிப்பு ஆணை வெளியிட்ட பின்னர் தேர்தல் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது. இந்த வழக்கில் சட்டநிலை எதுவும் இல்லை. தேர்தல் தேதியை மாற்றினால் தேர்தல் ஆணையத்தின் திட்டமிடல் அட்டவணை அனைத்தும் மாறிவிடும். இதனால் பாதிப்பு ஏற்படும். எனவே தேர்தல் தேதியை மாற்ற முடியாது என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

தேர்தல் தேதியை மாற்றக்கோரி வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 4 “லீக்” ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்படுகிறது. நியூசிலாந்து- கென்யா, தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து, இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் ஆகிய ஆட்டங்கள் சென்னைக்கு ஒதுக்கப்பட்டது.

கடந்த 20-ந்தேதி நடந்த ஆட்டத்தில் நியூசி லாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் கென்யாவை வீழ்த்தியது. சேப்பாக்கம் மைதானத் தில் 2-வது ஆட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

காலை 9.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் “பி” பிரிவில் உள்ள தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. தென்ஆப்பிரிக்கா தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை தோற் கடித்தது. 2-வது ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 231 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டத்தில் நெதர்லாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்தியாவுடன் மோதிய 2-வது ஆட்டம் “டை” ஆனது. 3-வது ஆட்டத்தில் அயர்லாந்திடம் அதிர்ச்சிகரமாக தோற்றது. டிவில்லியர்ஸ் தென்ஆப்பிரிக்கா 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியில் டிவில்லியர்ஸ் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார்.

அவர் 2 ஆட்டத்திலும் சதம் அடித்து இருக்கிறார். இதுதவிர ஹசிம் அம்லா, கேப்டன் சுமித், காலிஸ், டுமினி போன்ற உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களும் அந்த அணியில் உள்ளனர். பந்துவீச்சில் புதுமுக வீரர் இம்ரான் தாகீர் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். பாகிஸ்தானில் பிறந்த அவர் 2 ஆட்டத்திலும் முத்திரை பதித்தார். ஸ்டெயின், மார்னே மார்கல், டிசோட்சோபே, போத்தா போன்ற சிறந்த பவுலர்களும் அந்த அணியில் உள்ளனர்.

அதிர்ச்சியில் இருந்து மீளுமா? அயர்லாந்திடம் தோற்ற அதிர்ச்சியில் இருந்து இங்கிலாந்து அணி இன்னும் மீளவில்லை. பலம் வாய்ந்த தென்ஆப்பிரிக்காவை வெல்வதே அந்த அணிக்கு ஆறுதல் கிடைக்கும். கேப்டன் ஸ்டாரஸ், பெல், டிராட், பீட்டர்சன் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், பிராட், பிரெஸ்னென், சுவான் போன்ற சிறந்த பவுலர்களும் அந்த அணியில் உள்ளனர். தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் தென்ஆப்பிரிக்காவை தோற்கடிக்க 5-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து கடுமையாக போராடும்.

ரசிகர்கள் நியூசிலாந்து-கென்யா அணிகள் சென்னையில் மோதிய ஆட்டம் மிகவும் கேவலமாக இருந்தது. கென்யா 69 ரன்னில் சுருண்டதால் ஆட்டம் 2? மணி நேரத்தில் முடிந்தது. போட்டியை காணவந்த ரசிகர்களும் குறைவு. போட்டி மிக குறைந்த நேரத்தில் விறுவிறுப்பு இல்லாததால் அந்த ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் பலம் பொருந்தியவை என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். இதனால் சேப்பாக்கம் மைதானத்துக்கு நாளை அதிகமான ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டம் இ.எஸ்.பி.என். டெலிவிசனில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

சேப்பாக்கத்தில் நாளை தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து மோதல்

மத்திய மந்திரி ஜி.கே.வாசன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

லிபியாவில் போராட்டத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வரும் பணியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முனைப்புடன் செய்து வருகிறது. அவர்கள் வழிகாட்டுதலில் கப்பல்துறை அமைச்சரும் ஏற்கனவே காட்டியா என்ற கப்பலை லிபியாவுக்கு அனுப்பிவைத்தது. அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக துறைமுகங்களுக்கு அழைத்துச் செல்லும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து வெளியுறவுத்துறை மந்திரி கிருஷ்ணா, வெளிநாட்டுவாழ் இந்திய நலத்துறை மந்திரி வயலார் ரவி, ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி மற்றும் நான் இந்தியர்களை மீட்பது குறித்து பேசி, தற்போது இந்திய கப்பல் படையைச் சேர்ந்த 3 கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல்கள் லிபியாவிற்கு சென்று மீட்புப்பணிகளில் ஈடுபடும். கடந்த 7 ஆண்டுகளாக சோனியா வழிகாட்டுதலின் பேரில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக நேற்று வெளியிடப்பட்ட ரெயில்வே பட்ஜெட்டிலும் தமிழ் நாட்டுக்கான திட்டங்கள், ஆய்வு செய்ய வேண்டிய திட்டங்கள் பற்றி அறிவித்துள்ளது. தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக செயல் படுத்தி வருகிறது. காங்கிரஸ் இயக்கம் அகில இந்திய அளவில் வலுவான இயக்கமாக உள்ளது.

இதற்கு எடுத்துக்காட்டாக தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் காங்கிரசில் இணைந்து வருகிறார்கள். இன்று எனது முன்னிலையில் மதுரவாயல் தொகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., கம்யூனிஸ்டு, பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 250 பெண்கள் நகரசபை தலைவர் சேகர் தலைமையில் இணைந்துள்ளனர். இதேபோல கவுண்டம் பாளையத்தில் இருந்தும் 63 பேர் காங்கிரசில் இணைந்துள்ளனர்.

இவ்வாறு மத்திய மந்திரி ஜி.கே.வாசன் கூறினார்.

நிகழ்ச்சியில் டில்லி, தயாளன், மால்மருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

லிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர 4 கப்பல்கள்; சென்னையில் ஜி.கே.வாசன் பேட்டி

சித்தர்களால் உருவாக்கப்பட்ட வடபழநி முருகன் கோயிலுக்கு 1972ல் 72 அடி உயரத்தில் தெற்கு ராஜகோபுரம் கட்டப்பட்டது. முதல் முறையாக அப்போது கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

கோயில் அமைப்பு::

கருவறையில் மூலவரான வடபழநி ஆண்டவர் ஆண்டிக் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். கோயில்வளாகத்தில் வரசித்தி விநாயகர், சொக்கநாதர், வள்ளி தெய்வயானையுடன் சண்முகர் வீற்றிருக்கிறார், இங்கு செவ்வாய் சந்நிதி, மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஆறுமுகர் சந்நிதி, அருணகிரிநாதர், ஆஞ்சநேயர் சந்நிதி மற்றும் சித்தர் பீடம் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

திருவிழா:::

சித்திரையில் தமிழ்வருடப் பிறப்பு, வைகாசியில் விசாகத்திருவிழா, ஆடிக்கிருத்திகை, புரட்டாசியில் விநாயக சதுர்த்தி, நவராத்திரி, ஐப்பசியில் கந்த சஷ்டி, சூரசம்ஹாரம், லட்சார்ச்சனை, மார்கழியில் புதுவருட சிறப்பு அலங்காரம், மாணிக்கவாசகர் உற்சவம், ஆருத்ரா தரிசனம், தை மாதத்தில் தைப்பூசம், மாசியில் மாசிமகம், பங்குனியில் பங்குனி உத்திரம் என உற்சவங்கள் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன.

இத்திருக்கோயிலுக்கு வெளியே கிழக்குப்புறத்தில் திருக்குளம் அமைந்துள்ளது. கிருத்திகை நாட்களில் முருகனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் பலவகை காவடிகளை எடுத்து வந்து பழநியாண்டவருக்கு காணிக்கை செலுத்துகின்றனர்.

இத்திருக்கோயிலில் பக்தர்கள் தங்களுடைய பிரார்த்தனையை நிறைவேற்ற தங்கத்தேர் இழுக்க வசதியும் செய்யப்பட்டுள்ளது. எல்லா நாட்களிலும் மாலை நேரத்தில் தங்கத்தேர் இழுக்கலாம். இதற்கு காணிக்கையாக ஒரு சுற்றுக்கு ஆயிரம் ரூபாய் கோயிலுக்கு செலுத்த வேண்டும்.

பூஜை நடைபெறும் நேரங்கள்:::

அதிகாலை 5.30 மணி பள்ளியறை, காலை 7 மணி காலசாந்தி, பகல் 12 மணிஉச்சிகால பூஜை, மாலை 5 மணிசாயரட்சை, இரவு 9 மணிஅர்த்த ஜாம பூஜை.

போக்குவரத்து வசதி::

இந்த கோவிலுக்கு செல்ல பஸ் வசதி உள்ளது.மேலும் இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து அரை மணி நேரத்திற்கு ஒரு முறை நேரடி பஸ் வசதி உள்ளது. கோயம்பேட்டில் உள்ள வெளியூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் 100 அடி சாலைக்கு அருகே இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

வடபழநி ஆண்டவர் திருக்கோயில்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 63-வது பிறந்தநாள் வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, 63 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 14-ந்தேதி (திங்கட் கிழமை) காலை 10 மணிக்கு இந்த திருமண விழா நடை பெறுகிறது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா விழாவில் கலந்து கொண்டு 63 ஜோடிகளுக்கும் திருமணம் நடத்தி வைக்கிறார்.

புதுமண தம்பதியருக்கு 63 விதமான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படுகின்றன. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்படுகிறார்கள். உறவினர்களும் உடன் வருகிறார்கள். ஜெயலலிதா பேரவை சார்பில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விழாவில், ஜெயலலிதா பேரவை மாநில செயலாளர் நயினார் நாகேந்திரன், திருவள்ளூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ரமணா, தென் சென்னை, வடசென்னை மாவட்ட செயலாளர்கள், ஸ்டிக்கர் ரவி, இளைய செல்வன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் திருமண விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

சென்னையில், 14-ந்தேதி 63 ஜோடிகளுக்கு இலவச திருமணம்; ஜெயலலிதா நடத்தி வைக்கிறார்

சென்னை: உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 4 போட்டிகள் நடக்கிறது. மேலும் உலக கோப்பை போட்டிக்கு முன்பு சேப்பாக்கம் மைதானத்தில் 2 பயிற்சி ஆட்டங்கள் நடக்கின்றன. தென்ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம் வருகிற 12-ந் தேதியும், இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம் 16-ந் தேதியும் நடக்கிறது.

இரு போட்டிகளும் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் தென்ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் பயிற்சி ஆட்டத்துக்கு டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. இந்தியா-நியூசிலாந்து பயிற்சி ஆட்டத்துக்கு டிக்கெட் விற்பனை 14-ந் தேதி நடக்கிறது. இதற்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.50. அதிகபட்ச விலை ரூ.500 ஆகும்.

சென்னையில் உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டங்கள்: டிக்கெட் விற்பனை!

சென்னை: உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 4 போட்டிகள் நடக்கிறது. மேலும் உலக கோப்பை போட்டிக்கு முன்பு சேப்பாக்கம் மைதானத்தில் 2 பயிற்சி ஆட்டங்கள் நடக்கின்றன. தென்ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம் வருகிற 12-ந் தேதியும், இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம் 16-ந் தேதியும் நடக்கிறது.

இரு போட்டிகளும் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் தென்ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் பயிற்சி ஆட்டத்துக்கு டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. இந்தியா-நியூசிலாந்து பயிற்சி ஆட்டத்துக்கு டிக்கெட் விற்பனை 14-ந் தேதி நடக்கிறது. இதற்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.50. அதிகபட்ச விலை ரூ.500 ஆகும்.

முக நூல்

Popular Posts