background img

புதிய வரவு

Showing posts with label Vishal. Show all posts

பாலிவுட்டில் இருந்து கோலிவுட்டில் முகாமிட்டிருக்கும் நடிகை சமீரா ரெட்டிக்கு, இளம் நடிகர் விஷால் உடற்பயிற்சி கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நடிகர் கம் இயக்குனர் பிரபுதேவா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் விஷால்தான் ஹீரோ. அவருக்கு ஜோடியாக நடிப்பவர் சமீரா ரெட்டி. படத்தின் கதைப்படி விஷால் ஜிம் மாஸ்டராக நடிக்கிறார். அங்கு வரும் சமீரா ரெட்டிக்கு கட்டுடல் பயிற்சி அளிக்கும் காட்சி சமீபத்தில் சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள உடற்பயிற்சி நிலையம் ஒன்றில் படமாக்கப்பட்டது. ஒரு நாள் முழுக்க சமீரா ரெட்டி சைக்கிளிங் செய்வது போன்றும், விஷால் சமீராவுக்கு எப்படி சைக்கிள் மிதிப்பது, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது எப்படி? என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருந்திருக்கிறார். இன்னமும் பெயரிடப்படாத இந்த படமும் காதல் கதையை உள்ளடக்கியதுதான் என்கிறது அப்பட யூனிட்!.

சமீராவுக்கு உடற்பயிற்சி கற்றுக் கொடுக்கும் விஷால்!

ஹீரோக்கள் நடிக்கும் படங்களின் வரவு மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது தமிழில். அதற்கு சிகரம் வைப்பது போல ஒரு படம் உருவாகிறது மணிரத்னம் இயக்கத்தில்.

ராவணாவுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் இந்தப் புதிய படத்தில் விஜய் - விக்ரம் - விஷால் (வி3!) இணைந்து நடிக்கிறார்கள்.

இந்தப் படம் பொன்னியின் செல்வன் சரித்திரக் கதையின் தழுவலாக இருக்கும் என்று ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம். எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை வசனம் எழுதுவதாகக் கூறப்பட்டது.

பொதுவாக தனது படங்களின் தலைப்பு முதல் டெக்னீஷியன்கள் விவரம் வரை எதையும் வெளியில் சொல்லாமல் ரகசியம் காப்பது மணிரத்னம் பாணி. இந்தப் படத்திலும் அது தொடர்கிறது!

இந்தப் படத்துக்கு சன் பிக்சர்ஸ் நிதியுதவி வழங்குவதாகக் கூறப்படுகிறது. ரூ 200 கோடிக்கும் அதிகமாக பட்ஜெட் போடப்பட்டுள்ளதாம்.

தமிழில் இப்போது உருவாகிவரும் பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்துமே இரண்டு அல்லது மூன்று நாயகர்கள் நடிப்பதுதான். பாலாவின் அவன் இவன், அஜீத்தின் மங்காத்தா, விஜய் - ஜீவா - ஸ்ரீகாந்த் நடிக்கும் நண்பன் என பெரிய லிஸ்டே உள்ளது!

விஜய் - விக்ரம் - விஷால் இணைந்து நடிப்பது இதுதான் முதல்முறை.

மணிரத்னம் இயக்கத்தில் இணையும் விஜய்-விக்ரம்-விஷால்!

முக நூல்

Popular Posts