background img

புதிய வரவு

Showing posts with label Vijay. Show all posts

ஜெயலலிதா ஆட்சி அமைய அணிலாக இருந்த காரணத்தை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் என்று நடிகர் விஜய் பேசினார்.

சென்னையில் உள்ள சங்கீதா கல்யாண மண்டபத்தில் 29.05.2011 அன்று மாலை நடிகர் விஜய், தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை திடீரென சந்தித்தார். நிகழ்ச்சிக்கு மக்கள் இயக்க நிறுவனர் ஏஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய்,

நமது இயக்கம் அதி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டேன். நீங்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தாலும், அந்த உணர்வுகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, என் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஜெயலலிதாவின் வெற்றிக்கு முழு மூச்சோடு உழைத்த உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய, நாமும் ஓர் அணிலாக இருந்த காரணத்தை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.

மேலும் வெற்றி பெற்ற பல வேட்பாளர்கள் என்னை தொடர்பு கொண்டு, உங்களது கடுமையான உழைப்பை பாராட்டிய போது எனக்கு பெருமையாக இருந்தது. மாற்றம் என்பது மானிடத் தத்துவம் என்று கவியரசு கண்ணதாசன் சொன்னது போல, நமது நற்பணி மன்றங்கள் காலப்போக்கில் நற்பணி இயக்கமாக மாறியது. இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தது முதல், ஏழை

மாணவ, மாணவிகளுக்கு கம்ப்ழூட்டர் மையங்கள் ஏற்படுத்தியது வரை, பல சமூக நலப்பணிகள் செய்து நமது இயக்கம் மக்கள் இயக்கமாக மாறியது.

இனி மேலும் சமூக நலப்பணியை தொடர்ந்து செய்து, முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்தி, ஜெயலலிதாவின் ஆசியோடு உங்களின் எதிர்காலத்தையும் ஒளிமயமாக்கிக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். விவேகானந்தர் சொன்னது போல வேகத்தோடும், விவேகத்தோடும் பணியாற்றுங்கள். நாளைய உலகம் உங்கள் கையில். இவ்வாறு நடிகர் விஜய் பேசினார்.

ஜெயலலிதா ஆட்சி அமைய அணிலாக இருந்த காரணத்தை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்: நடிகர் விஜய்

தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்கும் விஜயகாந்துக்கு நடிகர் விஜய் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் நேரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

தமிழகத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் நின்று பெரும் வெற்றி பெற்றுள்ளது விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் பொறுப்பேற்கிறார்.

அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்க நேரில் சந்தித்த விஜய், மலர்க்கொத்துக் கொடுத்து வாழ்த்தினார். இச் சந்திப்பின் போது, இயக்குனர்கள் அமீர், சேரன் ஆகியோரும் உடன் சென்று விஜய்காந்துக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

வந்த அனைவரையும் வரவேற்ற விஜயகாந்த், அனைவருடனும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

அதிமுக ஆதரவாளரான நடிகர் விஜயகுமாரும், விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து முழுநேர அரசியல்வாதியான பிறகு, அவரை இந்த இயக்குநர்களும் நடிகர்களும் தேடிப்பபோய் சந்திப்பது இதுவே முதல்முறை.

விஜயகாந்துக்கு விஜய் நேரில் வாழ்த்து!

நான் அரசியலுக்கு வருவது உறுதி, விரைவில் முழுநேர அரசியல்வாதியாக களமிறங்குவேன். ஆனால் அதற்கான காலமும் நேரமும் இப்போது இல்லை என்று கூறியிருக்கிறார் நடிகர் விஜய்.

சட்டசபை தேர்தலில் அதிமுக., கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் அதிமுக.,வுக்கு ஆதரவாக விஜய்யின் மக்கள் இயக்கமும் செயல்பட்டது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஜெயலலிதாவை விஜய்யும், அவரது அப்பாவும், இயக்குநருமான எஸ்.‌ஏ.சந்திரசேகர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜய், இந்த தேர்தலில் அதிமுக., வெற்றி பெறும் என்பது எனக்கு முன்பே ‌தெரியும், ஆனால் இந்தளவுக்கு வெற்றி பெறும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. தேர்தலில் அதிமுக.,வுக்கு ஆதரவாக எனது ரசிகர்கள் செயல்பட்டது மிகழ்ச்சியளிக்கிறது. இந்த நேரத்தில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார். முழுநேர அரசியலில் களமிறங்குவீர்களா என்ற கேட்டதற்கு, விரைவில் நான் அரசியலில் அடியெடுத்து வைப்பேன். நான் அரசியலுக்கு வருவது உறுதி. ஆனால் அதற்கான நேரமும், காலமும் இதுவல்ல என்று கூறினார்.

விரைவில் அரசியல் பிரவேசம்: விஜய்!

காவலன் படத்திற்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட நெருக்கடிகளைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்த நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். அராஜக திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; தமிழ் திரையுலகையே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்றெல்லாம் விஜய் ரசிகர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் எதிர்பார்த்தது போலவே அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக முன்னணியில் இருப்பதையறிந்து மகிழ்ச்சியடைந்த நடிகர் விஜய் உடனடியாக தனது தந்தை எஸ்.ஏ.சி.,யுடன் போயஸ் கார்டனுக்கு புறப்பட்டுச் சென்றார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த விஜய், பின்னர் அளித்த பேட்டியில், `ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்று நான் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் விரும்பினார்கள். மக்களின் விருப்பம் இந்த தேர்தல் மூலம் நிறைவேறி இருக்கிறது. இத்தனை பெரிய மகத்தான வெற்றி பெற்ற ஜெயலலிதா அம்மாவுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சமயத்தில் என் மன்றங்களை சேர்ந்த ஒவ்வொரு மாவட்ட தலைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். நான் சொன்ன ஒரே ஒரு வார்த்தைக்காக மக்கள் இயக்கத்தை சேர்ந்த சகோதரர்கள் அனைவரும் அ.தி.மு.க. வெற்றிக்காக உழைத்து இருக்கிறார்கள். அவர்கள் உழைப்புக்கு, முக்கியமாக என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.

மக்கள் விருப்பம் நிறைவேறி இருக்கிறது : விஜய் கருத்து

விஜய் நடித்த காவலன் திரைப்படம், சீனாவின் ஷாங்காய் உலகப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சித்திக் இயக்கத்தில் விஜய் - அசின் நடித்த காவலன் படம் பொங்கலுக்கு ரிலீஸானது. இந்தப் படம் விஜய்யின் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்போது சீனவின் முக்கிய நகரமான ஷாங்காயில் நடக்கும் 14வது உலகப் பட விழாவில் பனோரமா பிரிவில் தேர்வு பெற்றுள்ளது.

இந்த விழாவில் உலகம் முழுவதும் 80 நாடுகளில் இருந்து 2500 படங்கள் இதில் கலந்து கொள்கின்றன. இதில் முதன்முறையாக தென்னிந்தியாவிலிருந்து காவலன் படம் மட்டுமே தேர்வு பெற்றுளளது என விஜய்யின் பிஆர்ஓ பிடி செல்வகுமார் கூறினார்.

ஆஸ்கர் விருது பெற்ற 'ரெய்ன் மேன்' பட இயக்குநர் பேரி லெவின்சன் தலைமையில் அமைக்கப்பட்ட இயக்குநர்கள் குழுதான் இந்த விழாவுக்குரிய படங்களைத் தேர்வு செய்தது.

வரும் ஜுன் 11 முதல் 19 வரை விழா நடக்கிறது. விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்க விஜய்யை அழைக்கப்பட்டுள்ளார், என இந்த விழாவிற்கு படங்களை தேர்வு செய்து அனுப்பும் ஒருங்கிணைப்பாளர் ரேக்ஸ் தெரிவித்தார் .

ஷாங்காய் திரைப்பட விழாவில் திரையிட காவலன் தேர்வு

அஜீத்தின் மங்காத்தா படம் போன்றே, விஜய்யின் வேலாயுதம் படமும் அவரது பிறந்தநாளில் ரிலீசாகாது எனத் தெரிகிறது.

ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில், விஜய் நடிக்கும் 52வது படம் "வேலாயுதம்". இப்படத்தில் விஜய்யுடன் ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா, சரண்யா மோகன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். விஜய் ஆண்டனி இசையமைத்து வருகிறார். இப்படத்தை விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வந்தது.

படத்தின் பெரும்பாலான காட்சிகளை படமாக்கிவிட்டார் ராஜா. கிட்டத்தட்ட 80சதவீதத்திற்கு மேல் சூட்டிங்கை முடித்துவிட்ட ராஜா இன்னும் இரண்டு பாடல் மற்றும் சிலகாட்சிகளை மட்டும் படமாக்க இருக்கிறார். படத்தில் மொத்த 5பாடல்களாம். ஏற்கனவே மூன்று பாடல்களை முடித்துவிட்டார் ராஜா. அதில் ஒரு பாடலை மட்டும் சுமார் ரூ.2கோடி செலவில் பிரமாண்டமாக எடுத்து இருக்கிறார். இன்னும் 2பாடல்களை ஐரோப்பாவில் எடுக்க திட்டமிட்டு இருக்கின்றனர். மேலும் படத்தின் சில காட்சிகள் இன்னும் படமாக்க இருப்பதால், படத்தின் சூட்டிங் மே அல்லது ஜூனில் ‌தான் முடியும் எனத் தெரிகிறது. இதனால் திட்டமிட்டபடி விஜய் பிறந்தநாளில் வேலாயுதம் படம் ரிலீசாகாது என்றும், ஆகஸ்ட்டில் ரிலீசாகும் என்றும் கூறுகின்றனர். இதனால் விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

முன்னதாக அஜீத்தின் 50வது படமான மங்காத்தா படம் அவரது பிறந்தநாளான மே1ல் ரிலீசாகும் என்று கூறினார். ஆனால் படத்தின் சூட்டிங் முடியாததால் இப்படம் தள்ளிபோனது. அதேபோல் இப்போது விஜய்யின் வேலாயுதம் படமும் சூட்டிங் முடியாததால் தள்ளிபோகிறது.

தள்ளிபோகிறது வேலாயுதம்: வருத்தத்தில் விஜய் ரசிகர்கள்!

நடிகர் விஜய்க்குச் சொந்தமான, இப்போது இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி வசிக்கும் சாலிகிராமம் வீட்டின் மீது சிலர் தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் விஜய்க்கு சொந்தமான வீடு ஒன்று சாலிகிராமத்தில் உள்ளது. ஷோபா என பெயர் பொறிக்கப்பட்டுள்ள இந்த வீட்டில்தான் விஜய், அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகரன் ஆகியோர் குடும்பத்துடன் ஒன்றாக வசித்து வந்தனர்.

திருமணமான சில ஆண்டுகளில் விஜய் குடும்பத்துடன் நீலாங்கரை பகுதிக்குப் போய்விட்டார்.

அந்த வீட்டை இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார் விஜய். இந்நிலையில் இந்த வீடு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதிமுக அனுதாபியாக விஜய் மாறியுள்ள நிலையில், அவருக்குச் சொந்தமான இந்த வீடு மீது தாக்குதல் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விருகம்பாக்கம் காவல்நிலைய போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'விஜய்' வீடு மீது தாக்குதல்!!

கன்னியாகுமரி: இந்தத் தேர்தலில் விஜய் பிரச்சாரத்துக்கு வரமாட்டார். அதேபோல, அவர் இப்போதைக்கு அரசியலுக்கும் வரமாட்டார் என இயக்குநர் எஸ் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

விஜய் மக்கள் இயக்க நிறுவனரான சந்திரசேகரன் குமரி மாவட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

இதற்காக கன்னியாகுமரி வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

விஜய் மக்கள் இயக்கம் அ.தி.மு.க. அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. எங்கள் இயக்க தொண்டர்கள் அசுர வேகத்தில் அ.தி.மு.க. அணிக்கு வேலை செய்கிறார்கள்.

ஆனால், தற்போதைக்கு விஜய் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும் வாய்ப்பு இல்லை. அதேபோல விஜய் அரசியலுக்கு வர மாட்டார். விஜய் அரசியலுக்கு வருவதற்காக அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. ஒரு மாற்றம் வரவேண்டும் என்பதற்காக தான் விஜய் மக்கள் இயக்கம் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்தத் தேர்தலில் விஜய் நேரடிப் பிரச்சாரம் செய்யவும் வாய்ப்பில்லை. ஆளுங்கட்சி மீது மக்களுக்கு வெறுப்பு அதிகமாக இருக்கிறது. நான் தி.மு.க. ஆதரவாளராக இருந்தேன். எனக்கே வெறுப்பு வந்து விட்டது.

கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் கொலை, கொள்ளை, ஊழல், விலைவாசி உயர்வு, மின் தடை ஆகியவை மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.

வாரிசுகள் அந்தந்த தொழிலுக்கு வருவது தவறல்ல. ஆனால் அந்த தொழிலையே கபளீகரம் செய்வது தான் தவறு.

விஜய் ரசிகர் மன்ற மாநில தலைவர் ஜெயசீலனை விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இது அரசியல் சூழ்ச்சி. ஜெயசீலன் இயக்கத்துக்கு எதிராக செயல்பட்டதால் அவரை எங்கள் இயக்கத்தில் இருந்து நீக்கி விட்டோம்...", என்றார்.

அதிமுகவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு ஏன்? - எஸ்ஏ சந்திரசேகரன் விளக்கம்

சேலம்: நடிகர் விஜய் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதை எதிர்த்து சேலத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைத்து, உறுப்பினர் கார்டுகளை தீவைத்து எரித்தனர் ரசிகர்கள்.

நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு நடிகர் விஜய்யின் ரசிகர் மன்ற அமைப்பான விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனை திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தப் பின்னர், எஸ்.ஏ.சந்திரசேகரன் அறிவித்தார்.

நடிகர் விஜய்யின் இந்த முடிவுக்கு, தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக சேலத்தில் அவருடைய ரசிகர்கள் இடையே எதிர்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஏற்கெனவே இங்கு விஜய் ரசிகர்கள் திமுக - அதிமுக என இரு பிரிவாக நின்று சண்டை போட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை விஜய் எடுத்துள்ளதால், இயக்கத்தையே கலைத்துவிட்டனர் ரசிகர்கள்.

சேலம் அழகாபுரம் பகுதியில் இருந்த, இளைய தளபதி விஜய் போக்கிரி மக்கள் இயக்கத்தை கலைத்ததோடு, உறுப்பினர் அட்டைகளையும் தீயில் போட்டுக் கொளுத்தினர் ரசிகர்கள்.

மன்ற தலைவர் ஆசைதம்பி, செயலாளர் மணிகண்டன், பொருளாளர் சசி உள்ளிட்டோர், மன்றத்தின் பிளக்ஸ் பெயர் பலகையையும் கிழித்து எறிந்தனர். ஆவேசமாக விஜய் எதிர்ப்பு கோஷங்களை முழங்கினர். அதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து மன்ற ரசிகர்கள் கூறும்போது, "விஜய் ரசிகர்மன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிலையில் விஜய் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

ரசிகர்களை கலந்து ஆலோசிக்காமல் இப்படி ஒரு முடிவு எடுத்தது வருத்தம் அளிக்கிறது. எங்களை பொருத்தவரை நாங்கள் தி.மு.க.வின் ஆதரவாளர்கள். ஆனால் விஜய் அ.தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால் நாங்கள் மன்றத்தை கலைத்துவிட்டோம்," என்றனர்.

மதுரை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளிலும் விஜய் முடிவுக்கு, ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதிமுகவுக்கு ஆதரவுக்கு எதிர்ப்பு: சேலத்தில் விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு!!

சட்டசபைத் தேர்தல் பிரசாரத்திற்காக, திருச்சி சங்கம் ஹோட்டலில் தங்கியுள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவை, நடிகர் விஜய்யின் தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தித்து பேசினார். 20 நிமிடம் நடந்த சந்திப்புக்கு பின் இயக்குனர் சந்திரசேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

வரும் சட்டசபைத் தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்க நிலைப்பாடு என்ன? என்று மக்கள் மத்தியிலும், இயக்கத்தினர் மத்தியிலும் கேள்வி நிலவி வருகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே ஒரு முடிவு எடுத்துள்ளோம். வரும் சட்டசபைத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம், அ.தி.மு.க.,வை ஆதரிக்கிறது. அந்த கட்சி ஆட்சிக்கு வர முனைப்பாக இறங்கி மக்கள் இயக்கத்தினர் வேலை செய்வர். அடிக்கடி அரசியல் மாற்றங்கள் ஏற்படுவது தான் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது. அதுவும் சமீபகால அரசியலுக்கு மாற்றம் அவசியம் தேவை. அ.தி.மு.க., ஆட்சிக்கு வர வேண்டும். ஜெ., முதல்வராக வேண்டும். அதற்கு மக்கள் இயக்கத்தின் உழைப்பு முனைப்புடன் இருக்கும்.

நடிகர் விஜய் நேரடியாக பிரசாரம் செய்வது பற்றி, இப்போது கூற முடியாது. ஆனால், அவரின் ஆதரவு அ.தி.மு.க.,வுக்கு உண்டு. சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க., ஆதரிப்பது அரசியலுக்கு வருவதற்காக இல்லை. அரசியலுக்கு வர நாங்கள் அவசரப்படவும் இல்லை. தனிப்பட்ட முறையில் ஏற்படும் பாதிப்புகளை நானும், நடிகர் விஜய்யும் சந்தித்துக் கொள்வோம். அதற்காக இயக்கம் ஆதரவு கொடுக்கவில்லை.

மக்கள் இயக்கத்தின் சார்பில், நான் பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளது. நான் அரசியல்வாதியும் அல்ல. மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமும் அல்ல. மக்களுக்காக குரல் கொடுக்கும் சமூக இயக்கம். ஈழத் தமிழருக்காக உண்ணாவிரதம் இருந்துள்ளோம். தமிழக மீனவர்கள் சுட்டுக் கொள்ளப்பட்டதை கண்டித்து, நாகையில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தினோம்.

இதுவரை எந்த கட்சியிலும் நான் உறுப்பினர் இல்லை. நான் ஒரு தமிழன். எனக்கு திரைப்படம் மூலம் கலைஞரைத் தெரியும். தி.மு.க.,வைத் தெரியாது. நாட்டில் உள்ள பிரச்னைகளை மையப்படுத்தி பிரசாரம் மேற்கொள்வோம். இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.

முன்னதாக தேர்தல் பிரசாரத்துக்காக, திருச்சி சங்கம் ஓட்டலில் தங்கியிருந்த ஜெயலலிதாவை பார்ப்பதற்காக, காலை 11.10 மணிக்கு வந்த இயக்குனர் சந்திரசேகர் ஓட்டலின் அறையில் உட்கார வைக்கப்பட்டார். பின்னர் மதியம் ஒரு மணிக்கே அவரை ஜெயலலிதா சந்தித்து பேசினார். 20 நிமிடம் சந்திப்பு நடந்தது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் காத்திருப்புக்கு பின்னே ஜெ.,வை சந்திக்க ஆதரவு கொடுக்க வந்த இயக்குனர் சந்திரசேகர் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் மக்கள் இயக்கம் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு

நடிகர் விஜய் நடிகராகவே இருக்கட்டும்; அவருக்கு அரசியல் எல்லாம் வேண்டாம் என்று விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரனிடம், கமலா தியேட்டர் அதிபர் சிதம்பரம் செட்டியார் கேட்டுக் கொண்டார். ஆளும்கட்சியின் அக்கிரமங்களை சொல்லியிருக்கிறேன் என்ற பப்ளிசிட்டியுடன் உருவாகியிருக்கும் சட்டப்படி குற்றம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. ஜெயலலிதா வருகிறார்... விஜயகாந்த் பேசுகிறார்... விஜய் பெறுகிறார்... என்றெல்லாம் வெளியான ஓவர் பில்ட்அப்-ஐ புஸ்ஸ்ஸ் ஆக்கிவிட்டு விழா நடந்தாலும் காரசாரமான பேச்சுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.

மேடையேறிய பலரும் விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும் என்று பேசினார்கள். குறிப்பாக டைரக்டர் சீமான் பேசும்போது, விஜய் மாதிரி நல்லவங்களை ஏன் அரசியலுக்கு வரக் கூடாதுன்னு தடுக்கிறீங்க? அவர் வரலைன்னா மொள்ள மாரிகளும், முடிச்சவிக்களும்தான் அரசியலுக்கு வருவாங்க. நல்லவங்க ஒதுங்கி போறதுதான் கெட்டவங்களுக்கு வசதியா போவுது, என்று ஆவேசம் பொங்க குறிப்பிட்டார். கே.டி.குஞ்சுமோன், செல்வமணி உள்ளிட்டோரும் தன் பங்குக்கு விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி.யை உசுப்பி விட்டார்.

ஆளாளுக்கு விஜய் அரசியலுக்கு வரணும் என்று பேசிக் கொண்டிருக்கும்போதே வித்தியாசமான ஒரு குரல் ஒலித்தது. விஜய்யின் அரசியல் பிரவேச திட்டத்திற்கு எதிராக ஒலித்த அந்த குரல், கமலா தியேட்டர் அதிபர் சிதம்பரம் செட்டியாருடையது. தனது 18 ஆண்டுகால நண்பர் எஸ்.ஏ.சி.,க்கு அ‌ட்வைஸ் செய்யும் வகையில் அவர் பேசினார். ஒரு விஷயத்தை சொன்னா சார் கோவிச்சுக்கக் கூடாது. நீங்க கட்சி ஆரம்பிங்க. எலக்ஷன்ல நில்லுங்க. அது உங்க விருப்பம். ஆனால் விஜய்க்கு இதெல்லாம் வேணாம். ஏன்னா, இப்படிதான் சிவாஜி சார் கட்சி ஆரம்பிக்கணும்னு சொன்னப்போ நான் வேணாம்னு தடுத்தேன். அவரு கேட்கல. கடைசி காலத்துல எங்க வீட்டுக்கு எந்த அரசியல்வாதியும் வரக் கூடாதுங்கற அளவுக்கு வெறுத்து போயிருந்தார். அதனால்தான் சொல்றேன். விஜய் நல்ல நடிகர். ஹாலிவுட்ல நடிக்கிற அளவுக்கு அவர் வளரணும், என்று எதிர்ப்பை பதிவு செய்தார் சிதம்பரம். அவரது இந்த பேச்சு மேடையில் இருந்த சிலரையும், எதிரே இருந்த பலரையும் யோசிக்க வைத்தது என்னவோ உண்மைதான். ஆனால் மகனை அரசியல் களமிறக்கி ஆதாயம் தேட நினைக்கும் எஸ்.ஏ.சி. முகத்தில் ஈயாடவில்லை.

நிகழ்ச்சியில் எஸ்.ஏ.சி. பேசுகையில், சட்டப்படி எதெல்லாம் குற்றம் என்று பிரித்து மேய்ந்தார். ஐம்பது லட்ச ரூபாய் செலவு செய்து தேர்தலில் ஜெயித்துவிட்டு ஐநூறு கோடி ரூபாய் கொள்ளை அடிப்பது சட்டப்படி குற்றமா, இல்லையா? ஊரில் உள்ள காதலர்களையெல்லாம் போலீஸ் ஸ்டேஷனில் சேர்த்து வைக்கிற போலீஸ் அதிகாரி தன் மகள் லவ் பண்ணினால் அவர்களை பிரிக்க நினைப்பது சட்டப்படி குற்றமா, இல்லையா? என்று அடுக்கடுக்காக கேட்டவர், இந்த படத்தை பார்க்காமல் இருந்தால்தான் சட்டப்படி குற்றம் என்று முடித்தார்.

விஜய்க்கு அரசியல் வேணாம்! எஸ்.ஏ.சி.க்கு ஒரு அட்வைஸ்!!

அ.தி.மு.க. கூட்டணியில் நடிகர் விஜய்க்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது. நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் தேர்தலில் குதிக்கிறது. விஜய் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை இருமுறை சந்தித்து பேசினார். அ.தி.மு.க. கூட்டணியில் மக்கள் இயக்கம் சேர்ந்து போட்டியிடுவது குறித்து அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

ரசிகர் மன்ற பொறுப்பாளர்களை தேர்தலில் இறக்கி விடும் முடிவில் விஜய் இருக்கிறார். இதற்காக ஜெயலலிதாவிடம் 15 தொகுதிகள் அடங்கிய பட்டியலை வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் இருந்து 3 தொகுதிகள் விஜய் இயக்கத்துக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் விஜய்யின் மக்கள் இயக்கம் சேர்ந்து போட்டியிடுவதை அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரும் உறுதிப்படுத்தினார்.

இது சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். ஜெயலலிதா “சீட்” ஒதுக்க ஏற்கனவே ஒப்புக்கொண்டதாக விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விஜய் போட்டியிட விரும்பவில்லை. ஆனால் எஸ்.ஏ. சந்திரசேகர் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட விரும்புகிறாராம். விஜய்யை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தவும் முயற்சிகள் நடக்கின்றன. சமீபத்தில் நாகப்பட்டினத்தில் தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படை தாக்குவதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.

இது போன்று முக்கிய நகரங்களில் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து தேர்தல் பிரசாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுப் பயணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் ரசிகர்கள் இப்போது அ.தி.மு.க.க்கு ஆதரவாக தேர்தல் வேலைகள் செய்ய ஆரம்பித்துள்ளனர். ஜெயலலிதா, விஜய் படங்களுடன் போஸ்டர் அச்சிட்டு ஒட்டி வருகின்றனர்.

அ.தி.மு.க. கூட்டணியில் நடிகர் விஜய்க்கு 3 தொகுதிகள்? டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகர் புதுக்கோட்டையில் போட்டி

நாகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நாளை (22ம்தேதி) இலங்கை அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு வேதனையுடன் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். தரையில் பிறந்தாலும் தண்ணீரில் பிழைக்க வேண்டிய நிலையில் மீனவ சமுதாயம் இருக்கிறது. பிழைப்புக்காக அவர்கள் உயிரைப் பணயம் வைத்து கடலுக்குள் போனால் சிங்கள ராணுவம் அவர்களைச் சுட்டுக் கொல்வதும், சிறைப் பிடித்துச் சென்று சித்திரவதை செய்வதும், அவர்களின் உபகரணங்களைப் பறிப்பதும் அன்றாட நிகழ்ச்சிகளாகிவிட்டன. இலங்கை ராணுவத்தால் தொடர்ந்து இன்னலுக்குள்ளாகும் அவர்களுக்காக பரிந்து பேசி அரசாங்கம் ஒரு இறுதி முடிவு மேற்கொள்வது அவசியம். கண்ணீரில் தத்தளிக்கும் மீனவர்களைக் கரைசேர்க்க, அவர்கள் வேதனையை நம் வேதனையாக உணர்ந்து அவர்களுக்காக குரல் கொடுக்க எண்ணினேன். அதனால் மக்கள் இயக்கத்தின் மூலம் தமிழர்களை ஒன்று திரட்டி, நம் குரல் உலக அளவில் ஓங்கி ஒலிக்க இந்த மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தை நடத்துகிறோம். என் ரசிகர்கள், மக்கள் இயக்கத்தினர் மட்டுமின்றி, பொது மக்களும் ஒன்று திரண்டு வந்து தமிழர்களின் ஒற்றுமையை உலகுக்கு உணர்த்த வேண்டும். உலகின் எந்தக் கோடியில் தமிழனுக்கு தலைகுனிவு வந்தாலும், எட்டுகோடி தமிழர்களும் வெகுண்டு எழுவார்கள் என்ற எண்ணத்தை உலகுக்கு ஏற்படுத்த வேண்டும். இந்த கண்டனப் பொதுக் கூட்டம், வரும் 22-2-2011 அன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு நாகப்பட்டினம் காடம்பாடி சாலையில் உள்ள விடிபி கல்லூரி மைதானத்தில் நடக்க உள்ளது. உலகின் கவனத்தை மீனவ சமுதாயத்தின் மீது திருப்ப நீங்கள் ஒவ்வொருவரும் இதில் பங்குபெற வேண்டும். உங்களில் ஒருவனான நான் உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியிருக்கிறார்.

நாகை போராட்டம்! நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை!!

காவலன் பட வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் படம் நண்பன். 3 இடியட்ஸ் என்ற பெயரில் இந்தியில் வெளியாகி சக்கை போடு போட்ட படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த நண்பன்.‌ பெரும் குழப்பத்திற்கு பிறகு டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா ஆகிய 4 நாயகர்கள் நடிக்கிறார்கள் என்று முதலில் வந்த தகவல்கள் தெ‌ரிவித்தன. நாயகிகளாக இலியானா, அனுயா நடிக்கிறார்கள். இப்போது படத்தில் புதிதாக ஒரு ஹீரோவும் சேர்ந்திருக்கிறார். அவர்தான் ராகவா லாரன்ஸ். படத்தில் இடம்பெறும் அஸ்தி கரைக்கும் கேரக்டர் ஒன்றில் லாரன்ஸ் நடிக்கிறாராம். முதலில் இந்த கேரக்டரில் நடிக்க பிரசன்னாவிடம்தான் தேதி கேட்டிருந்தனர். ஆனால் அவரது தேதி கிடைக்காததால் ராகவா லாரன்ஸ் அந்த இடத்தை பிடித்துக் கொண்டார்.

முதல்கட்ட சூட்டிங்கை வெற்றிகரமாக முடித்திருக்கும் டைரக்டர் ஷங்கர், இந்த படத்தின் இறுதி கட்டத்தை எட்டுவதற்குள் இன்னும் எத்தனை ஹீரோக்களை, ஹீரோயின்களை நண்பனில் இணைக்கப் போகிறாரோ? அவருக்கே வெளிச்சம்!

விஜய்யின் நண்பனில் ராகவா லாரன்ஸ்!

ஹீரோக்கள் நடிக்கும் படங்களின் வரவு மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது தமிழில். அதற்கு சிகரம் வைப்பது போல ஒரு படம் உருவாகிறது மணிரத்னம் இயக்கத்தில்.

ராவணாவுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் இந்தப் புதிய படத்தில் விஜய் - விக்ரம் - விஷால் (வி3!) இணைந்து நடிக்கிறார்கள்.

இந்தப் படம் பொன்னியின் செல்வன் சரித்திரக் கதையின் தழுவலாக இருக்கும் என்று ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம். எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை வசனம் எழுதுவதாகக் கூறப்பட்டது.

பொதுவாக தனது படங்களின் தலைப்பு முதல் டெக்னீஷியன்கள் விவரம் வரை எதையும் வெளியில் சொல்லாமல் ரகசியம் காப்பது மணிரத்னம் பாணி. இந்தப் படத்திலும் அது தொடர்கிறது!

இந்தப் படத்துக்கு சன் பிக்சர்ஸ் நிதியுதவி வழங்குவதாகக் கூறப்படுகிறது. ரூ 200 கோடிக்கும் அதிகமாக பட்ஜெட் போடப்பட்டுள்ளதாம்.

தமிழில் இப்போது உருவாகிவரும் பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்துமே இரண்டு அல்லது மூன்று நாயகர்கள் நடிப்பதுதான். பாலாவின் அவன் இவன், அஜீத்தின் மங்காத்தா, விஜய் - ஜீவா - ஸ்ரீகாந்த் நடிக்கும் நண்பன் என பெரிய லிஸ்டே உள்ளது!

விஜய் - விக்ரம் - விஷால் இணைந்து நடிப்பது இதுதான் முதல்முறை.

மணிரத்னம் இயக்கத்தில் இணையும் விஜய்-விக்ரம்-விஷால்!

மாதவனை வைத்து தம்பி ஹிட் படம் கொடுத்தவர் சீமான். தற்போது அரசியல் கட்சி துவங்கியுள்ளார்.இவர் அடுத்து விஜய் நடிக்க புதுப்பட மொன்றை இயக்கப் போவதாக பேச்சு அடிபடுகிறது. இருவரும் இதற்காக சமீபத்தில் சந்தித்து பேசினர்.

விஜய்யுடன் சீமான்

முக நூல்

Popular Posts