background img

புதிய வரவு

Showing posts with label ananth. Show all posts

இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
மாஸ்கோவில் புதனன்று(30.5.12) முடிவடைந்த இந்தப் போட்டியில் டை பிரேக்கர் முறையில் இஸ்ரேலின் போரிஸ் கெல்ஃபாண்டை 2.5-1.5 என்கிற கணக்கில் வென்றார்
உலகப் பட்டத்தை நிர்ணயிக்க நடைபெற்ற 12 போட்டிகள் மாஸ்கோவின் ட்ரெட்யகோவ் அரங்கில் இருவருக்கும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நிலையில், யார் உலகப் பட்டத்தை வெல்வார்கள் என்பது டை பிரேக்கர் முறையில் தீர்மானிக்கப்பட்டது.
மிக விரைவாக குறிப்பிட்ட நேரத்துக்குள் காய்களை நகர்த்தும் நான்கு டை-பிரேக்கர் போட்டிகளின் இரண்டாவது ஆட்டத்தில் ஆனந்த் வெற்றி பெற்றதன் மூலம் உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார்.
இதர மூன்று போட்டிகளும் சமநிலையில் முடிவடைந்தன.

விஸ்வநாதன் ஆனந்த் ஐந்தாவது முறையாக உலக சதுரங்கப் பட்டத்தை வென்றுள்ளார்.
அதிலும் குறிப்பாக நான்கு முறை தொடர்ச்சியாக வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
நான்கு ஆட்டங்களை கொண்ட டை பிரேக்கரின் முதல் ஆட்டத்தில் 33 நகர்வுகள் இடம்பெற்ற பிறகு இருவரும் அந்த ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தனர்.
அடுத்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் மொத்தமாக 77 நகர்வுகள் இடம்பெற்றன. இதில் ஆனந்த் வெற்றி பெற்று முன்னிலை வகித்தார். அதன் பிறகு இடம்பெற்ற மற்ற இரண்டு ஆட்டங்களும் சமநிலையில் முடிவடைந்த காரணத்தால் ஆனந்த் வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்பட்டது.
விஸ்வநாதன் முதல் முறையாக 2000 ஆம் ஆண்டு உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை வென்றார். அதன் பிறகு தொடர்ச்சியாக 2007, 2008 மற்றும் 2010 ஆண்டுகளிலும் இந்தப் பட்டத்தை வென்றிருந்தார்.
அடுத்த உலக சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டி 2014 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.

ஆனந்த் மீண்டும் உலக சதுரங்க சாம்பியன்

தெண்டுல்கர் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டியில் 50-வது சதம் அடித்து வரலாற்று சாதனை ஏற்படுத்தினார். அவர் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சேர்த்து 100 சதத்தை எட்டும் நிலையில் இருக்கிறார்.
 
அவருடைய அபார சாதனைக்கு மேலும் பெருமை அளிக்கும் வகையில் அவருக்கு நாட்டின் உயரிய விருதான “பாரத ரத்னா” விருது வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் வற்புறுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே விளையாட்டு வீரர்கள் பலர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
 
பிரபல பின்னணி பாடகிகள் லதாமங்கேஸ்கர், ஆஷா பான்ஸ்லே ஆகியோரும் தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
 
இப்போது பிரபல “செஸ்” வீரர் ஆனந்தும் இதே கருத்தை கூறியுள்ளார். அவர் இதுபற்றி கூறியதாவது:-
 
தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கான எல்லா தகுதிகளும் உள்ளன. எனவே அவர்ருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். அவர் மிகப் பெரிய சாதனை நிகழ்த்தி இருக்கிறார்.
 
இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன். ஒரு வீரர் மட்டும் சிறப்பாக ஆடினால் போதாது 3 அல்லது 4 வீரர்கள் சிறப்பாக ஆடி விட்டால் உலக கோப்பையை வென்று விடலாம். தெண்டுல்கர் எப்போதுமே சிறப்பாக ஆடிவருகிறார்.
 
இவ்வாறு ஆனந்த் கூறினார்.

தெண்டுல்கருக்கு “பாரத ரத்னா” விருது வழங்க வேண்டும்: “செஸ்” வீரர் ஆனந்த் வற்புறுத்தல்

முக நூல்

Popular Posts