background img

புதிய வரவு

Showing posts with label laxmanan. Show all posts

கிரிக்கெட் வீரர் லட்சுமண் டெல்லியில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
இந்திய அணி உலககோப் பையை வெல்ல இந்த தடவை மிகவும் வாய்ப்பு உள்ளது. 1983-ம் ஆண்டு சூழ்நிலை இப்போதுதான் இந்திய அணிக்கு அமைந்துள்ளது. அதிலும் சொந்த மண்ணில் விளையாடுவது அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் அனுபவம் உள்ள மைதானம், ரசிகர்களின் ஆதரவு என அனைத்தும் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும்.
 
அதே நேரத்தில் இந்தியாவின் வெற்றி, தொடக்க வீரர்களான ஷேவாக், காம்பீர் கைகளில்தான் இருக்கிறது. அவர்கள் மட்டும் சிறப்பாக ஆடி நல்ல தொடக்கத்தை கொடுத்து விட்டால் பின்னால் வரும் வீரர்கள் அணியை வெற்றிக்கு அழைத்து சென்று விடுவார்கள்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

உலககோப்பை போட்டி: ஷேவாக், காம்பீர் சிறப்பாக ஆடினால் வெற்றி உறுதி; லட்சுமண் கணிப்பு

கிரிக்கெட் வீரர் லட்சுமண் டெல்லியில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
இந்திய அணி உலககோப் பையை வெல்ல இந்த தடவை மிகவும் வாய்ப்பு உள்ளது. 1983-ம் ஆண்டு சூழ்நிலை இப்போதுதான் இந்திய அணிக்கு அமைந்துள்ளது. அதிலும் சொந்த மண்ணில் விளையாடுவது அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் அனுபவம் உள்ள மைதானம், ரசிகர்களின் ஆதரவு என அனைத்தும் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும்.
 
அதே நேரத்தில் இந்தியாவின் வெற்றி, தொடக்க வீரர்களான ஷேவாக், காம்பீர் கைகளில்தான் இருக்கிறது. அவர்கள் மட்டும் சிறப்பாக ஆடி நல்ல தொடக்கத்தை கொடுத்து விட்டால் பின்னால் வரும் வீரர்கள் அணியை வெற்றிக்கு அழைத்து சென்று விடுவார்கள்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

புதுடில்லி: இந்திய கிரிக்கெட் வீரர் லட்சுமண், மல்யுத்த வீரர் சுஷில் குமார், துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங் ஆகியோர் உள்ளிட்ட ஏழு பேர், பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
இந்திய டெஸ்ட் அணியின் அசத்தலான பேட்ஸ்மேன் லட்சுமண் (36). தொடர்ந்து 15 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் நீடித்து வரும் இவர், இக்கட்டான நேரங்களில் தத்தளிக்கும் போதெல்லாம், தனது சிறப்பான ஆட்டத்தால் அணியை காப்பாற்றுவதில் வல்லவர். 2001ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 281 ரன்கள் எடுத்து, இந்தியா வெற்றி பெற உதவினார். கடந்த ஆகஸ்ட் மாதம், இலங்கைக்கு எதிரான டெஸ்டில் சதம் (103*) அடித்து தொடரை சமன் செய்ய உதவினார்.
பின் ஆஸ்திரேலியாவுடனான மொகாலி டெஸ்டில், காயத்துடன் விளையாடி 73 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார். சமீபத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டர்பன் டெஸ்ட்டில் லட்சுமண் எடுத்த 96 ரன் காரணமாகத்தான் தொடரை டிரா செய்ய முடிந்தது.
இதை கவுரவிக்கும் வகையில் இம்முறை லட்சுமணுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. இதற்கு முன் கிரிக்கெட்டில் கவாஸ்கர், கபில் தேவ், சச்சின், கங்குலி, டிராவிட், கும்ளே மற்றும் தோனி ஆகியோர் இவ்விருது பெற்றுள்ளனர்.
விருது பெற்றது குறித்து லட்சுமண் கூறுகையில்,"" பல ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடுவதையே பெருமையாக கருதுகிறேன். இந்நிலையில் மிக உயர்ந்த பத்ம ஸ்ரீ விருது கிடைத்ததை மிகப்பெரும் கவுரமாக உள்ளது. எனது இந்த திறமையை வெளிக்கொணர்ந்த பெற்றோர்கள், ஆதரவளித்த மனைவி மற்றும் உறவினர்களுக்கு நன்றி,'' என்றார்.
சுஷிலுக்கும் விருது:
மல்யுத்த போட்டியில் உலக சாம்பியன் பட்டம் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப், காமன்வெல்த் தொடரில் தங்கம் வென்ற சுஷில் குமாரும், பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார். இவர் கடந்த 2009ல் ராஜிவ் கேல் ரத்னா விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ககன் கவுரவம்:
இதேபோல, காமன்வெல்த் துப்பாக்கி சுடுதலில் 4 தங்கங்களை குவித்த ககன் நரங், பளு தூக்குதல் வீராங்கனை குஞ்சராணி தேவி, காமன்வெல்த் வட்டு எறிதலில் தங்கம் வென்ற வீராங்கனை கிருஷ்ண பூனியா, பாரா உயரம் தாண்டுதல் வீரர் ஷிட்டல் மகாஜன், மலையேற்ற வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட ஏழு பேர் விளையாட்டுத்துறையில் இருந்து பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

பத்ம ஸ்ரீ விருது பெறுகிறார் லட்சுமண் *சுஷில் குமார், ககன் நரங்கும் தேர்வு

முக நூல்

Popular Posts