background img

புதிய வரவு

அமிதாப் பச்சனின் புத்தா

தெலுங்குப் பட இயக்குனர் பு‌ரி ஜெகன்நாத் இயக்கும் இந்திப் படத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார். படத்தின் பெயர் புத்தா (Buddha). புத்தா என்றால் வயதான மனிதன் என்று அர்த்தமாம்.

இந்தப் படத்தில் 60 வயது முதியவராக நடிக்கிறார் அமிதா ப்பச்சன். அதாவது ‌ரியல் கேரக்டர். ஆனால் கதைப்படி அமிதாப் தனது வயதை ஒத்துக் கொள்ளாதவர். இன்றும் தனக்கு 25 வயதுதான் என்று நம்பக் கூடியவர். 25 வயது வாலிபர்களைப் போலவே அவரது உடையும் ஸ்டைலும் இருக்கும்.

இந்த வித்தியாசமான கேரக்டருக்காக தனது தாடியையும், தலைமுடியையும் கல‌ரிங் செய்யப் போகிறாராம் அமிதாப். அத்துடன் படம் நெடுக சின்னப் பையன்களின் கலர்ஃபுல் காஸ்ட்யூமில் வலம் வரப் போகிறாராம். பிக் பி-யின் யூத் கெட்டப்பைப் பார்க்க இப்போதே காத்திருக்கிறது பாலிவுட்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts