background img

புதிய வரவு

திரு‌ச்செ‌ந்தூ‌ரி‌ல் முத்துக்குமார் சிலையை திறக்கிறார் திருமாவளவன்

இலங்கையில் நடைபெற்ற போரை தடுத்துநிறுத்தக் கோரி தீக்குளித்து உயிரிழந்த முத்துக்குமாரின் உருவச் சிலையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வரு‌ம் 29ஆ‌ம் தே‌தி திறந்து வை‌க்‌கிறா‌ர்.

சிங்கள இனவெறிப் போரை தடுத்து நிறுத்தக் கோரி உயிரிழந்த முத்துக்குமாரின் 2ஆம் ஆண்டு நினைவுதினம், வெண்கல உருவச்சிலை திறப்பு நிகழ்ச்சி வரு‌ம் 29ஆம் தேதி அவரது சொந்த ஊரான திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நடைபெறுகிறது.

நிகச்சிக்கு முத்துக்குமார் பாசறையின் முதன்மைச் செயலர் சங்கத்தமிழன் தலைமை வகிக்கிறார். முத்துக்குமாரின் சிலையை கட்சியின் தலைவர் திருமாவளவன் திறந்துவைத்து உரையாற்றுகிறார்.

இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கலந்துகொள்ள உள்ளதாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் வன்னிஅரசு தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts