உலக பொருளாதார அமைப்பின் சார்பில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு கிறிஸ்டல் விருது வழங்கப்பட்டது. இந்த அமைப்பின் 5 நாள் கூட்டம் சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் தொடங்கியது. இந்த கூட்டத்தில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உலக பொருளாதார அமைப்பின் சார்பில் கிறிஸ்டல் விருது வழங்கப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசைத் துறையில் படைத்த சாதனைகளுக்காக மட்டுமின்றி அவரது சமூக சேவையைப் பாராட்டியும் இந்த விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரஷிய ஜனாதிபதி மெட்வதேவ் மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள், மதத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த விருது குறித்து ரஹ்மான் கூறுகையில், "உலகின் மிக உயர்ந்த பெருமை இது. மகிழ்ச்சியாக உள்ளது. மனித நேயம்தான் உலகில் இன்றைக்கு மிக அவசிய தேவை. மனித நேயத்தை வளர்க்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன்," என்றார்.
undefined
undefined
0 comments :
Post a Comment