background img

புதிய வரவு

விஜய் ஓபன் டாக்

காவலன் படத்துக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு யார் காரணம் என்று இதுவரை மீடியாக்களும், ஜனங்களும் மட்டும்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். பிரபல வார இதழுக்கு பேட்டியளித்ததன் மூலம் விஜய்யும் தனது மௌனத்தை கலைத்திருக்கிறார். பேட்டியின் சாராம்சம் இதுதான்.


காவலன் வெளிவராமல் ஆளும் கட்சியினர் தடுத்தனர். திரையரங்கு உ‌ரிமையாளர்களும் மிரட்டப்பட்டனர். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களின் தங்களின் படங்கள் மட்டுமே வெளியாக வேண்டும் என சிலர் விரும்புகின்றனர். நான் மக்களை சந்திப்பதை, உரையாடுவதை சிலர் விரும்பவில்லை. காந்தி, எம்.‌ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் வ‌ரிசையில் நானும் அவமானப்படுத்தப் பட்டிருக்கிறேன் என்றெல்லாம் அந்தப் பேட்டியில் தெ‌ரிவித்துள்ளார்.


மேலும், அரசியலில் ஈடுபடுவேன், அதற்கான அஸ்திவாரத்தை பலமாக போட்டு வருகிறேன் என்றும் தெ‌ரிவித்துள்ளார்.


இந்த‌ப் பேட்டி வரும் தேர்தலில் விஜய் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை பகிரங்கமாக தெ‌ரிவிக்கும் வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts