
அதிபர் பதவியில் இருந்து விலகத் தான் விரும்புவதாகவும், ஆனால் அப்படி விலகினால் அது நாட்டை குழப்பத்தில் தள்ளிவிடும் என்பதற்காகவே விலகாதிருப்பதாகவும் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் ஏபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ள முபாரக், “நேற்று நடந்த வன்முறை எனக்கு வருத்தத்தைத் தருகிறது, எகிப்தியர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு சாவதை நான் விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.
முபாரக் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியிருப்பது குறித்து கருத்து கேட்டதற்கு, “எகிப்து பண்பாடு பற்றி உங்களுக்கு (ஒபாமா) ஒன்றும் புரியாது. நான் பதவியில் இருந்து இறங்கினால் என்ன நடக்கம் தெரியுமா?” என்று கேட்டுள்ளார்.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் தொடர்ந்து வன்முறைச் சூழலே நிலவி வருகிறது.
0 comments :
Post a Comment