காங்கிரஸ் தலைவர் பதவி என்பது குடும்ப சொத்தாகிவிட்டது என்று குற்றம்சாட்டி உள்ளார் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி.
இணைய தளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சுதந்திர போராட்ட காலத்தில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ஒருவர் ஒரு முறை மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்னும் சொல்லப்போனால் அந்த நாள்களில் காங்கிரஸ் தலைவராக ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் இருந்துள்ளார். ஆனால் இன்று நிலைமை எப்படி மாறிவிட்டது பாருங்கள். காங்கிரஸ் தலைவர் பதவி என்பது ஒரு குடும்பத்தின் சொத்து போல் பாவிக்கப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் தனது வாழ்நாள் முழுவதும் தலைவராகவே இருக்கும் நிலை உள்ளது. காங்கிரஸ் கட்சியில் மகாத்மா காந்திக்கு எவ்வளவு செல்வாக்கு இருந்தது என்பது நமக்கு எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். கட்சியுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட காந்தி கூட 1924-ம் ஆண்டில் ஒரே ஒரு முறைதான் காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளார். ஆனால் சோனியா காந்தி இப்போது 4-வது முறையாக காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றார் அவர்.
மேலும் காங்கிரஸ் தலைவர் பதவிக்காலம் மூன்று ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளதையும் அத்வானி சுட்டிக்காட்டியுள்ளார்.
1980-ம் ஆண்டில் ஜனதா கட்சி ஆட்சி எப்படி மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு மக்களவைத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்ததோ அதைப் போன்றதொரு மோசமான நிலையை இப்போதுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சந்தித்து வருகிறது என்று அத்வானி கூறியுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டு, கட்டுப்பாட்டில் இல்லாத விலை உயர்வு, போன்ற விஷயங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை நிலைகுலையச் செய்துள்ளன. எனவே அன்று ஜனதா கட்சி எந்த நிலையில் இருந்ததோ அதைப் போன்றதொரு நிலையில் இன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உள்ளது என்று அத்வானி தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment