எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா நுனிப்புல் மேயக் கூடாது, பட்ஜெட் அறிக்கையை முழுமையாகப் படிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாளில், ராகு காலத்தை மனதில் கொண்டு, கேள்வி நேரத்தை புகுத்தி, பிறகு பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது என்றும், இது அலுவல் ஆய்வுக் குழுக் கூட்ட முடிவுக்கு மாறானது என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் கேள்வி நேரம் பற்றிய பேச்சே எழவில்லை. அ.தி.மு.க. சார்பில் செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்ட அவரது கூட்டணிக் கட்சியினரும் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்துக்கு வந்திருந்தனர். இவ்வாறு பொய்யாக அறிக்கை கொடுப்பதும், ஆதாரத்தோடு நாம் பதில் அளித்தால் வாயை மூடிக் கொள்வதும் ஜெயலலிதாவின் வழக்கமாக உள்ளது.
அதேபோல், 2010-2011-ம் ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை ரூ.16 ஆயிரத்து 222 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டதாகவும், இப்போது சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் நிதிப் பற்றாக்குறை ரூ.17 ஆயிரத்து 607 கோடி அளவுக்கு உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஒரு எதிர்க்கட்சித் தலைவர் நுனிப்புல் மேயக் கூடாது. பட்ஜெட் அறிக்கையின் 54-ம் பக்கத்தில், ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதாலும், அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத் திட்டங்களுக்கான செலவு அதிகரித்திருப்பதாலும், 2010-2011-ம் ஆண்டில் ரூ.17 ஆயிரத்து 607 கோடி நிதிப் பற்றாக்குறை ஏற்படும். பொருளாதார நிலை படிப்படியாக சீரடைந்து வருவதால், வரும் நிதியாண்டில் ரூ.438.78 கோடி வருவாய் உபரி ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், வரும் நிதியாண்டுக்கான மூலதனச் செலவு குறைவாக உள்ளது. இதனால், நிதிப் பற்றாக்குறை ரூ.13 ஆயிரத்து 506 கோடி என்ற அளவில், அதாவது மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2.32 சதவீதமாக இருக்கும். இது, 13-வது நிதிக் குழு வரையறுத்துள்ள அளவுகளுக்குள் அமைந்துள்ளது என்றும் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
அரசின் கடன்: 31.3.2011-ல் தமிழ்நாடு அரசின் மொத்தக் கடன் ரூ.1 லட்சத்து ஆயிரத்து 541 கோடி அளவுக்கு அதிகரிக்கும் என்று இடைக்கால பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதுதான் தி.மு.க. அரசின் ஐந்தாண்டு கால சாதனையா என்று ஜெயலலிதா கேட்டிருக்கிறார்.
இந்தக் கடன் தொகை முழுவதும் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வாங்கப்பட்டதல்ல. ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலத்தில் வாங்கிய கடன்களையும் சேர்த்ததுதான் இந்தத் தொகை. எனவே, இது ஜெயலலிதாவின் சாதனையையும் சேர்த்து குறிப்பிடப்பட்ட தொகை.
மேலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளும் மாநிலங்களைவிட, தமிழக அரசு பெற்ற கடன் தொகை மிகக் குறைவுதான்.
2005-2006-ம் ஆண்டின் இறுதியில் (ஜெயலலிதா ஆட்சியில்) மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 22.29 சதவீதமாக இருந்த கடன் பொறுப்புகளின் அளவு, 2010-2011-ம் ஆண்டின் இறுதியில் 19.58 சதவீதமாகக் குறையும் என்றும் இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் விலைவாசி உயர்வுக்கான காரணங்கள், அதைக் கட்டுப்படுத்துவதற்கு தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றியும் பட்ஜெட் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு பிரச்னை: முல்லைப் பெரியாறில் இந்த ஆண்டே புதிய அணை கட்டும் பணி தொடங்கப்படும் என்ற கேரள அரசின் அறிவிப்பு குறித்து எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கைப் பற்றி பட்ஜெட் அறிக்கையில் கூறப்படவில்லை என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக இம்மாதம் 4-ம் தேதி கேரள ஆளுநர் பேசியதை, 5-ம் தேதி காலையில் நான் பத்திரிகைகளில் படித்தேன். உடனே, அதைக் கண்டித்தும், உரிய நேரத்தில் உச்ச நீதிமன்றத்தின் முன்பாக எடுத்துரைக்கப்படும் என்றும் ஒரு பத்தி எழுதி, அதை நிதியமைச்சர் பட்ஜெட் அறிக்கையை படிக்கும்போதே அவரிடம் கொடுத்து, அவரும் அதை அவையில் படித்தார்.
இது பற்றிய செய்தி, பத்திரிகைகளிலும் வந்தது. ஆனால், இதையெல்லாம் படிக்காமல் ஜெயலலிதா அறிக்கை விடுகிறார்.
மார்க்சிஸ்ட் கட்சிக்கு பதில்: பல்வேறு துறைகளிலும் தி.மு.க. அரசு படுதோல்வி அடைந்துள்ளதை இடைக்கால பட்ஜெட் அறிக்கை காட்டுவதாக மார்க்சிஸ்ட் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
தோழமைக் கட்சி உடன்பாட்டை மீறாதவர்கள் மார்க்சிஸ்டுகள். அ.தி.மு.க.வின் நெருங்கிய கூட்டணிக் கட்சியான அவர்களிடம் இருந்து, தி.மு.க. அரசுக்கு மாபெரும் வெற்றி என்ற விமர்சனத்தையா எதிர்பார்க்க முடியும்?
தொழிலாளர்களின் போராட்டங்களின்போது, நிர்வாகத்தின் பக்கமே தி.மு.க. அரசு நிற்பதாகவும், தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்குவது தொடர்வதாகவும் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார்.
தி.மு.க.வின் தொழிற்சங்க கொள்கைகள் பற்றி ராமகிருஷ்ணனுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அந்தக் கட்சியைச் சேர்ந்த ரமணி, வி.பி.சிந்தன் போன்றவர்கள் நன்கு அறிவார்கள். போக்குவரத்து தொழிற்சங்கத் தேர்தலில் சி.ஐ.டி.யு.வை விட தி.மு.க. தொழிற்சங்கம் அதிக வாக்குகளைப் பெற்றதே, தி.மு.க.வுக்கும் தொழிலாளர்களுக்கும் உள்ள உறவை நிரூபிக்கிறது.
சமச்சீர் கல்வியை அமல்படுத்த உருப்படியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். சமச்சீர் கல்வி 2010-2011-ல் 1, 6-ம் வகுப்புகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வரும் ஆண்டு முதல் மற்ற வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இடைக்கால பட்ஜெட் அறிக்கை படிப்பதற்கு முன்பு கேள்வி நேரம் எடுத்துக் கொண்டது இதற்கு முன்பு நடைபெற்றதில்லை என்று மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டப் பேரவைக் குழுத் தலைவர் பாலபாரதி கூறியுள்ளார். 2001-2002-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் அறிக்கை 29.1.2001 அன்று படிக்கப்பட்டது. அதற்கு முன்பு கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டதை அவையின் நிகழ்ச்சி நிரலைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment