2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டதையடுத்து பெரம்பலூரில் உள்ள தினமலர் அலுவலகம் தாக்கப்பட்ட தொடர்பாக தி.மு.க.வினர் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்ட பத்திரிகையாளர் சங்கத் தலைவர் சூரிய பிரகாஷ் தலைமையில் நேற்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திர குமார் ரத்தோரை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்தனர்.
அதில், தினமலர் அலுவலகம், ஊழியர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தி.மு.க.வினரால் கைப்பற்றப்பட்டுள்ள கேமிராவை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
வரும் 8ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் 9ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்போது, தினமலர் அலுவலகம், ஊழியர்களை தாக்கியவர்கள் மீது முதல் கட்ட தகவல் அறிக்கை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திர குமார் ரத்தோர் கூறினார்.

0 comments :
Post a Comment