background img

புதிய வரவு

Showing posts with label Dmk. Show all posts

சென்னையில் நான்கு வழித் தடங்களில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கைகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை பெருநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், குறைந்த பயண நேரத்தில் விபத்தில்லாத பாதுகாப்பான போக்குவரத்து வசதி அளிக்கவும் `மோனோ ரயில்' அதிவிரைவு போக்குவரத்து திட்டத்தினை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின்படி 4 வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

1. வண்டலூரில் இருந்து வேளச்சேரி வரை பெருங்களத்தூர், இரும்புலியூர் (கிழக்கு), தாம்பரம் (கிழக்கு), கேம்ப் ரோடு, காமராஜர் நகர், செம்பாக்கம், கவுரிவாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, நாராயணபுரம், காமாட்சி மருத்துவமனை, மடிப்பாக்கம் கூட்டுரோடு ஆகிய இடங்கள் வழியாக 23 கிலோ மீட்டர் தொலைவிற்கும்,

2. பூந்தமல்லியில் இருந்து கத்திப்பாரா சந்திப்பு வரை குமணன்சாவடி, கரையான்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், ராமச்சந்திரா மருத்துவமனை, போரூர், முகலிவாக்கம் சந்திப்பு, ராமாவரம், நந்தம்பாக்கம் பட்ரோடு ஆகிய இடங்கள் வழியாக 16 கிலோ மீட்டர் தூரத்திற்கும்,

3. பூந்தமல்லியில் இருந்து வடபழனி சந்திப்பு வரை குமணன்சாவடி, கரையான்சாவடி, சவீதா பல்மருத்துவக் கல்லூரி, வேலப்பன் சாவடி, மதுரவாயல், ஆலப்பாக்கம், வளசரவாக்கம், விருகம்பாக்கம் ஆகிய இடங்கள் வழியாக 18 கிலோ மீட்டர் தூரத்திற்கும்,

4. வண்டலூரில் இருந்து புழல் வரை பெருங்களத்தூர், இரும்புலியூர், தாம்பரம், சென்னை ஏற்றுமதி வர்த்தக மண்டலம் (மெப்ஸ்), குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், ஆண்டாள்குப்பம், குன்றத்தூர், கொல்லசேரி, மாங்காடு, குமணன்சாவடி, கரையான்சாவடி, மேல்பாக்கம், பருத்திப்பட்டு, கோவர்த்தனகிரி, ஆவடி மார்க்கெட், ஆவடி, திருமுல்லைவாயில், அம்பத்தூர் (ஓ.டி) புதூர், கள்ளிக்குப்பம், சூரப்பேட்டை, புழல், கதிர்வேடு ஆகிய இடங்கள் வழியாக 54 கிலோ மீட்டர் தொலைவிற்கும் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

இதில் முதல்கட்டமாக 3 வழித்தடப் பணிகளும், இரண்டாவது கட்டமாக 4-வது வழித்தட பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.

மோனோ ரயில் பாதை மேம்பால தூண்கள் ஒரு சதுர மீட்டருக்கு குறைவான சுற்றளவு கொண்டவையாக இருக்கும் என்பதால், சாலையின் நடுவே மிகக் குறைந்த நீளமே தேவைப்படும். தூண்கள் சாலையின் நடுவே மிக எளிதாகவும், விரைவாகவும் அமைத்து கட்டுமானப் பணிகள் செய்யப்படுவதால் மக்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி மோனோ ரயில் திட்டம் மிகவும் பாதுகாப்பானது மட்டுமின்றி பார்வைக்கு அழகாகவும், சுற்றுப்புறச் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் மக்களுக்கு போக்குவரத்து வசதி அளிக்கும்.

மேலும் இந்தத் திட்டத்தால் தமிழக அரசுக்கு எந்தவித நிதிச் சுமையும் ஏற்படாத வகையில், வடிவமைத்தல், நிறைவேற்றுதல், நிதித் திரட்டுதல், இயக்குதல், பராமரித்து ஒப்படைத்தல் என்ற முறையில் (Design, Build, Fund, Operate and Transfer-DBFOT) தனியார் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்ததாரரை தேர்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

சென்னைக்கு மோனோ ரயில் சரிவராது:

ஆனால், சென்னை போன்ற போக்குவரத்து மிக மிக அதிகம் உள்ள பெருநகருக்கு மோனோ ரயில் திட்டம் ஒத்து வராது என்று டெல்லி மற்றும் பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்திய பிரபல போக்குவரத்துக் கட்டுமானப் பொறியாளர் ஸ்ரீதரன் பலமுறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு இப்போது அமல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை விட்டுவிட்டு, மோனோ ரயில் திட்டத்தை ஜெயலலிதா அரசு வேகவேகமாக செயல்படுத்துவது சரியல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

இது மெட்ரோ ரயில் திட்டத்தை விட 50 சதவீதம் அதிக செலவு பிடிப்பதாகும், மேலும் மெட்ரோ ரயிலோடு ஒப்பிடுகையில், மோனோ ரயிலில் 4ல் ஒரு பங்கு பயணிகள் தான் பயணிக்க முடியும் என்றும் ஸ்ரீதரன் கூறியுள்ளார்.

மேனோ ரயிலால் யாருக்கு லாபமோ தெரியவில்லை, ஆனால் மக்களுக்கு லாபமில்லை என்கிறார்கள் பெருநகரத் திட்ட வல்லுனர்கள்.

சென்னையில் நான்கு வழித் தடங்களில் மோனோ ரயில் திட்டம்: சட்டப்பேரவையில் தாக்கல்

தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் குறித்து வரும் புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையில் தனிப் பிரிவை ஏற்படுத்தியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதையடுத்து அடுத்தடுத்து நில மோசடி வழக்கில் திமுக புள்ளிகள் கைதாவது திமுக தலைவருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. "ஜெயலலிதா ஆட்சியில் காலையில் ஒரு வழக்கு மாலையில் ஒரு வழக்கு போடுவதால் தி.மு.க.வினர் மீது போடப்படும் வழக்குகளில் வழக்கறிஞர் அணி சார்பில் அவர்களுக்கு உதவ வேண்டும்” என்று கருணாநிதி கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நகர்ப்புறங்களில், பட்டிதொட்டிகளில் ஆங்காங்கு பரவிக் கிடக்கின்ற கழக அமைப்புகளில் விரிசல் உண்டாக்க வேண்டுமென்பதற்காகவும், அந்த அமைப்புகளை நடத்துகின்ற கழகத் தோழர்களிடத்தில் பீதியை உண்டாக்க வேண்டுமென்பதற்காகவும், இப்போது நடைபெறுகின்ற அ.தி.மு.க. ஆட்சியில் நாள்தோறும் காலையிலே ஒன்று, பிற்பகலிலே ஒன்று, மாலையில் ஒன்று என்று வழக்குகள் போடப்பட்டு வருகின்றன.

தி.மு.க. ஆட்சியில் இதுபோன்ற தவிர்க்க முடியாத வழக்குகளைப் போடுவதாக இருந்தாலும் அன்றைக்கு இருந்த காவல் துறையினர், உடனடியாக அந்தப்பணிகளுக்கு பாய்ந்து செல்லாமல், கூடுமானவரையில் அவர்களுக்கு நேரம் கொடுத்து ஒரு முறைக்கு இரு முறை எச்சரித்து அதற்குப் பிறகே நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்...'' என்றும் கூறியுள்ளார்.

இதன் மூலம் கருணாநிதி தனது ஆட்சியில் தவறு செய்பவர்களை உடடியாக கைது செய்யாமல் அவர்களை எச்சரித்து திருந்துவதற்கு வாய்பளித்தாக காட்ட முனைகிறார். கருணாநிதி ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒருவன் சிகரெட் பிடிக்கிறான் என்றால் அவனை சிலமுறை எச்சரித்து திருத்த முயற்சிக்கலாம். ஒருவன் தண்ணி அடிக்கிறான் என்றால் அவனுக்கும் எச்சரிக்கை செய்து திருந்த வாய்ப்பளிக்கலாம்.

ஆனால் ஒருவன் அடுத்தவனை மிரட்டியோ, அல்லது தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தோ ஒருவனுடைய இடத்தை ஆக்கிரமித்தால், அல்லது அடிமாட்டு விலைக்கு வாங்கினால் பாதிக்கப்படவன் கண்ணீரும் கம்பலையுமாக வந்து நின்றால், அவனுக்கு உரிய நியாயம் கிடைக்க சம்மந்தப்பட்ட அபகரிப்பாளரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமா? அல்லது அவனை அழைத்து, ''இந்த ஆளு நிலத்த அபகரிச்சதோட நிறுத்திக்க; இனிமே யாரு நிலத்திலயாச்சும் கை வச்ச... ''ன்னு எச்சரித்து விட வேண்டுமா? என்ன சொல்ல வர்றீங்க கலைஞரே! "நம்முடைய கழகத்தோழர்களுக்கு பாதுகாப்பாக கழகத்தின் சட்டத்துறையினுடைய துணை உண்டு என்பதை எடுத்துக்காட்டுவதற்காக நம்முடைய கழகத்தில் வழக்கறிஞர்கள் அணி என்று ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. அந்த அணி இப்போது பணியாற்றுகிறதா இல்லையா என்பது நான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

அந்த அணி தலைமைக் கழகத்திலே செயல்படுவதாகக் கூறப்படுகிறது. நம்முடைய கழக வழக்கறிஞர்கள், கழகத்தினர் மீது போடப்படுகின்ற வழக்குகளையெல்லாம் சந்தித்து, கழக வழக்கறிஞர் அணியின் சார்பாக அவர்களுக்கு உதவி புரிய வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். அவர்களும் அந்த முயற்சியிலே ஈடுபடுவார்கள் என்று நம்புகிறேன். ஆம்; நம்பியிருக்கிறேன்!” என்று கலைஞர் விரக்தியோடு கூறுவதை பார்க்கும் போது, ஒன்றை விளங்கிக் கொள்ள முடிகிறது.

அதாவது தேர்தல் தோல்விக்குப் பின் கழகம் கலைஞரின் கட்டுப்பாட்டில் இல்லை. அல்லது கழகத்தின் பணி மந்தமாக உள்ளது என்பதைத்தான் கலைஞரின் வழக்கறிஞர்கள் அணி குறித்த கண்ணோட்டம் சொல்லாமல் சொல்கிறது. எது எப்படியோ, மத்திய அரசால் குடும்ப உறுப்பினர்கள் உள்ளே போக, மாநில அரசின் நடவடிக்கையால் கழக உறுப்பினர்கள் உள்ளே போக, கலைஞர் வார்த்தையில் சொன்னால் திமுகவுக்கு இது மீண்டும் ஒரு 'எமெர்ஜென்சி' தான். இதிலிருந்து கழகம் மீளுமா? கரையுமா என்பதுதான் இப்போது மக்களின் கூரிய பார்வையின் தேடலாக உள்ளது.

Thanks கீற்று

எமெர்ஜென்சியில் கழகம் கலக்கத்தில் கருணாநிதி..?

சென்னை : தி.மு.க., தலைவர் கருணாநிதி நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: என் தலைமையில், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், சட்டசபை தி.மு.க., தலைவராக ஸ்டாலின், துணைத் தலைவராக துரைமுருகன், கொறடாவாக சக்கரபாணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர், என்றார். "எம்.எல்.ஏ.,வாக எப்போது பதவியேற்க உள்ளீர்கள்?' என, கருணாநிதியிடம் கேட்டபோது, "சபாநாயகரிடம் அனுமதி பெற்று, அவர் ஒதுக்கும் தேதியில், பதவியேற்றுக் கொள்வேன்' என்றார்.

சட்டசபை தி.மு.க.,தலைவர் ஸ்டாலின்

 சென்னை: சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தப்பட்டிருப்பதால் தமிழகத்தின் எதிர்கால மாணவர் சமுதாயம் பாதிப்புக்குள்ளாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்துக்குப் பின் அவர் அளித்த பேட்டி:

கேள்வி: சமச்சீர் கல்வியை அரசு நிறுத்தி வைத்திருக்கிறதே?

பதில்: சமச்சீர் கல்விக்கு தடை விதித்துள்ளது அதிமுக அரசு. சமச்சீர் கல்வித் திட்டம் மாணவர்கள், பெற்றோர்கள் என எல்லா தரப்பினரிடமும் ஆராய்ந்து, பல்வேறு குழுவினரிடம் கருத்து கேட்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை ரத்து செய்வதால் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும்.

கேள்வி: டெல்லி சென்ற நீங்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கவில்லையே?

பதில்: டெல்லியில் என்னை மத்திய மந்திரிகள் குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம் ஆகியோர் சந்தித்தனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் நான் அவரை சந்திக்க மாட்டேன். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது முறையாக இருக்காது என்பதால் சந்திக்கவில்லை.

கேள்வி: சட்ட மேலவை வராது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறாரே?

பதில்: தலைமை செயலகத்தை புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றியதும், மேலவை வராது என்பதும் எதிர்பார்த்ததுதான்.

கேள்வி: திமுக ஆட்சியின் போது சொத்துக்கள் அபகரிக்கப்பட்டதாகவும், அவை பறிமுதல் செய்யப்படும் என்றும் ஜெயலலிதா கூறி இருக்கிறாரே?

பதில்: அதில் ஆட்சேபனை எதுவும் இல்லை. அப்படி சொத்து அபகரிக்கப்பட்டிருந்தால், அதை உரியவர்களிடம் ஒப்படைப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை.

கேள்வி: திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படுமா?

பதில்: இப்போது என்ன அவசரம்.

கேள்வி: திமுக தொண்டர்கள் விரக்தியில் இருக்கிறார்களா?

பதில்: தொண்டர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே முரசொலியில் நானும் அன்பழகனும் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.

கேள்வி: பள்ளிக் கட்டண விவகாரத்தில் அரசு நேரடியாக தலையிடாது என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?

பதில்: பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தலையிடுங்கள்.

கேள்வி: திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக ஆட்சி ரத்து செய்துள்ளதே?

பதில்: தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தவர்கள் இதற்காக வருத்தப்பட வேண்டும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டரீதியாக நீதி நிலைநாட்டப்படும் என்ற உறுதியுடனும், துணிவுடனும் இருக்கிறார்.

சபாநாயகர் என்று தேதியை முடிவு செய்கிறாரோ அன்று நான் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொள்வேன்.

அரசின் நல்ல திட்டங்களுக்கு திமுகநிச்சயம் ஒத்துழைப்பு நல்கும். புதிதாக பதவியேற்ற அமைச்சர் மரியம் பிச்‌சை விபத்தில் இறந்தததற்கு திமுக தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என்றார்.

அதிமுகவை வெற்றி பெறச் செய்தவர்கள் வருத்தப்பட வேண்டும்: கருணாநிதி

டெல்லி: சுதந்திரப் பறவையாக டெல்லிக்கும், சென்னைக்குமாக வந்து போய்க் கொண்டிருந்த கனிமொழி இன்று புழுக்கத்தில், தவிப்பில் திஹார் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்.

சென்னையில் உள்ள தனது வீட்டில் எவ்வளவு வசதியாக இருந்தாரோ அதற்கு அப்படியே தலை கீழாக மாறிப் போயுள்ளது கனிமொழியின் வாழ்க்கை. திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் குட்டியூண்டு அறைக்குள் சுருண்டு போய்க் கிடக்கிறார்.

இரவில் சரிவர தூக்கம் வராமல் தவிக்கிறார். ஒருபக்கம் கொசுக்கடி, மறுபக்கம் புழுக்கம், இன்னொரு பக்கமோ டாய்லெட்டுக்குப் பக்கத்திலேயே படுக்க வேண்டிய நிலை என்று தவித்து வருகிறார் கனிமொழி.

வெள்ளிக்கிழமை இரவு தனது முதல் நாளை திஹார் சிறையில் மிகவும் நெருக்கடியுடன் சமாளித்த கனிமொழிக்கு நேற்றும் நரகமாகவே அது கழிந்துள்ளது.

நேற்று காலை ஐந்தரை மணியளவில் தன்னை எழுப்ப வந்த சிறை வார்டனிடம், தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாதீர்கள். ராத்திரி சரியாக தூங்க முடியாமல் தவித்து இப்போதுதான் தூங்கினேன் என்று கூறினாராம் கனிமொழி. இருப்பினும் சிறை விதிப்படி நீண்ட நேரம் தூங்க முடியாது என்று வார்டன் சற்று கண்டிப்புடன் கனிமொழியிடம் கூறினாராம். இதையடுத்து எழுந்துள்ளார் கனிமொழி.

தனது சிறை அறைக்குள்ளேயே பெரும்பாலான நேரத்தைக் கழிக்கிறார் கனிமொழி. அறைக்குள் மிகவும் புழுக்கமாக இருக்கிறதாம். கொசுத் தொல்லை தாங்க முடியவில்லையாம். கொசுக்களிடமிருந்து தப்பிக்க கொசுவர்த்தி கொடுத்தால் தேவலாம் என்று சிறைக் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை வைத்துள்ளாராம் கனிமொழி. ஆனால் அது கிடைத்ததா என்பது தெரியவில்லை.

காலையில் எழுந்ததும் அவர் இரண்டு துண்டு பிரெட், சப்ஜி, காபி குடித்தார். நேற்று காலையில் எழுந்து காலை உணவைச் சாப்பிட்டு முடித்ததும் தான் அடைக்கப்பட்டுள்ள சிறைப் பகுதியை சுற்றிப் பார்த்தாராம் கனிமொழி. அங்கு அடைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண் கைதிகளிடமும் அவர் பேசினாராம்.

கனிமொழி அடைக்கப்பட்டுள்ள சிறை அறையில் டாய்லெட்வசதி சரியாக இல்லையாம். இதை சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிபதியிடமே கூறினார் கனிமொழி.

நேற்று மாலை கோர்ட்டிலிருந்து சிறைக்குத் திரும்பியதும் அங்கிருந்த தமிழகத்தைச் சேர்ந்த சிறப்புகா காவல் படை போலீஸாரிடம் சிறிது நேரம் பேசினார். பின்னர் தனது அறையில் அமர்ந்து சில புத்தகங்களைப் படித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை கோர்ட் விடுமுறை என்பதால் சிறைக்குள்ளேயே இன்றைய பொழுதைக் கழித்து வருகிறார் கனிமொழி. டிவி பார்ப்பதிலும், புத்தகம் படிப்பதிலும் தனது பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறார்.

கொசுக்கடி, புழுக்கம், டாய்லெட் பிரச்சினை-திஹார் சிறையில் தவிக்கும் கனிமொழி

"ஸ்பெக்ட்ரம் வழக்கின் முக்கியத்துவம் மற்றும் தீவிரத்தன்மை, குற்றச்சதியில் உள்ள பங்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கனிமொழிக்கு ஜாமின் வழங்க இயலாது' என்று, சி.பி.ஐ., கோர்ட் நேற்று பரபரப்பு தீர்ப் பளித்துள்ளது. உடனடியாக, டில்லி திகார் சிறையில் கனிமொழி அடைக்கப்பட்டார். ஒரு வாரத்திற்கு முன், மக்கள் அளித்த தீர்ப்பில், எதிர்க்கட்சி அந்தஸ்து கூட தி.மு.க., பெறாமல் பெருத்த அடி பெற்ற நிலையில், மீண்டும் இத்தீர்ப்பு அடுத்த அடியாக வெளிவந்துள்ளது. இதனால், தந்தை என்ற முறையில், கருணாநிதி பெரும் வேதனை அடைந்துள்ளார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், "கூட்டுச்சதி செய்தவர்' என்ற குற்றத்தை, ராஜ்யசபா எம்.பி.,யும், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி மீது, சி.பி.ஐ., சுமத்தி, அவர் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது. இதையடுத்து, அவர் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்ற சூழ்நிலை எழுந்தது. கனிமொழி சார்பில், சி.பி.ஐ., கோர்ட்டில் நீதிபதி சைனி முன், பிரபல கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானி ஆஜராகி ஜாமின் கோரினார். "ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு மொத்த காரணமும் ராஜாதானே தவிர, கனிமொழி அல்ல' என்று ராம்ஜெத்மலானி வாதிட்டார். இறுதியாக, தினந்தோறும் கோர்ட்டில் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையுடன் கடந்த, 14ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 20ம் தேதிக்கு தன் உத்தரவை நீதிபதி தள்ளிவைத்தார். இந்நிலையில், நேற்று காலை பாட்டியாலா கோர்ட்டிற்கு மஞ்சள் நிற சல்வார் கமீசில் கனிமொழி, அவரது கணவர் அரவிந்தனுடன் வந்து அமர்ந்தார். கோர்ட் அறைக்கு வந்த நீதிபதி, ஓ.பி.சைனி, கனிமொழி மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோருக்கு ஜாமின் வழங்குவது குறித்த தன் தீர்ப்பை மதியம் 1 மணிக்கு வழங்குவதாக அறிவித்தார். மீண்டும், 2.30 மணியளவில் தீர்ப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
நீதிபதியின் உத்தரவு, 2.35க்கு வெளியிடப்பட்டது. கனிமொழி, சரத்குமார் ரெட்டி ஆகியோர், தங்களுக்கு ஜாமின் வழங்க வேண்டுமென்று கேட்டிருந்த கோரிக்கையை நிராகரிப்பதாக நீதிபதி சைனி தெரிவித்தார்.

அவர் தன் தீர்ப்பில், ""ஸ்பெக்ட்ரம் வழக்கின் ஆழம், இந்த வழக்கின் முக்கியத்துவம் மற்றும் தீவிரத் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, குற்றச்சதியில் உள்ள பங்கையும் கவனத்தில் கொண்டு, ஜாமினில் வெளியில் விட்டால், இந்த வழக்கு தொடர்பான சாட்சிகளை கலைக்கவும், அழிக்கவுமான முயற்சிகளில் ஈடுபட அதிக வாய்ப்புகள் உள்ளன. தவிர, குற்றச்சதியில் தீவிர பங்கு இருப்பதாகவும் தெரிவதால், ஜாமின் மனு மீதான கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது,'' என்று கூறினார்.

ஜாமின் மனு மீதான கோரிக்கை நிராகரிக்கப்படவும், அங்கிருந்த கனிமொழி, சரத்குமார் ரெட்டி உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும், நிலைமையை உணர்ந்து சமாளித்தபடி இருந்தனர். ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டதும், கனிமொழியின் கண்கள் கலங்கின. இந்தத் தீர்ப்பை கேட்டவுடன் கண்ணீர் மல்க, தன் கணவர் மற்றும் ராஜாவின் மனைவியை கனிமொழி கட்டிப்பிடிக்க, உடனிருந்த சில, தி.மு.க.,வினரும் கண்கலங்கினர். கணவர் அரவிந்தன் மற்றும் ராஜாவின் மனைவி ஆகியோர் கனிமொழிக்கு ஆறுதல் கூறினர். டி.ஆர்.பாலு, விஜயன், கே.பி.ராமலிங்கம், ஜெயதுரை, தாமரை செல்வன், டி.கே.எஸ்.இளங்கோவன், செல்வகணபதி, ஆதிசங்கர், பூங்கோதை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கோர்ட்டுக்குள் இருந்தனர். தீர்ப்பை கேட்டதும் இவர்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்தனர். தீர்ப்பை உடனடியாக சென்னையில் உள்ள கருணாநிதி மற்றும் ஸ்டாலினுக்கு, டி.ஆர்.பாலுவும், செல்வகணபதியும் தெரிவித்தனர்.

சிறையில் அடைப்பு: சில நிமிடங்கள் கழித்து, கனிமொழியிடம் தீர்ப்பு குறித்து கேட்டபோது, ""இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை; ஆனா லும், இந்த முடிவு எனக்கு ஆச்சரியமானதல்ல. நான் இதை முன்பே எதிர்பார்க்கவே செய்தேன்,'' என்று மட்டும் கூறினார். பின்னர் கோர்ட் பணியாளரிடம் கனிமொழி, தான் வைத்திருந்த வெள்ளை நிற கைப்பையை சிறைக்கு எடுத்துச் செல்லலாமா என்று கேட்டார். கைப்பையை எடுத்துச் செல்லாம் என, அனுமதி வழங்கவே, கனிமொழி தான் வைத்திருந்த கைப்பையுடன், அருகில் இருந்த சி.பி.ஐ., லாக்அப் அறைக்கு கொண்டு செல்லப்பட்டார். லாக்அப் அறைக்கு கொண்டு செல்வதற்கு முன், கனிமொழி, சரத்குமார் ரெட்டியிடம் கையொப்பம் வாங்கப்பட்டது. பாட்டியாலா கோர்ட்டில், சைனி கோர்ட் அறைக்கு பக்கத்திலேயே இந்த அறை உள்ளது. அங்கு, கனிமொழியும், சரத்குமார் ரெட்டியும் அமர வைக்கப்பட்டனர். அங்கு ஏற்கனவே ராஜா, பல்வா ஆகியோர் அமர்ந்திருக்க, அவர்களுடன் கனிமொழியும், சரத்குமார் ரெட்டியும் அமர்ந்தனர். 4.30 மணியளவில், பாட்டியாலா கோர்ட்டில் இருந்து நேரடியாக திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள 6ம் எண் பெண்கள் சிறையில் கனிமொழி அடைக்கப்பட்டார்.

வாக்குவாதம்: கோர்ட் அறைக்குள் நேற்று நிற்பதற்குக் கூட இடம் இல்லாமல், கடும் நெருக்கடி இருந்தது. மீடியாக்களுக்கும், வக்கீல்களுக்கும் இடையில் வாக்குவாதம் நடைபெற்றது; இதனால், கோர்ட் அறையில் பரபரப்பு காணப்பட்டது. வழக்கமான விசாரணைகளுக்காக நேற்று வழக்கம்போல ராஜா, பல்வா உள்ளிட்ட பலரும் வந்திருந்தனர். அவர்களும் கனிமொழிக்கு ஜாமின் நிராகரிக்கப்பட்டது குறித்து, வருத்தம் அடைந்தனர். மீடியாக்கள் மீது, சில தி.மு.க.,வினர் கோபப்பட் டதையும் காண முடிந்தது.

காங்கிரஸ் கைவிரிப்பு: கனிமொழியின் கைது சம்பவம் நடந்த சில நிமிடங்களில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, டில்லியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது, கனிமொழி கைது குறித்து அவர் கூறுகையில், ""தனிப்பட்ட நபர்களது வழக்கு குறித்து காங்கிரஸ் எதுவும் கூற இயலாது. குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கும், சி.பி.ஐ.,க்கும் இடையிலான சமாச்சாரம் அது. நாங்கள் கருத்து தெரிவிப்பதற்கு ஒன்றும் இல்லை. சிறந்த வக்கீல்கள் உள்ளனர். மேல் கோர்ட்டுகளில் முறையீடு செய்யவும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கும், கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,'' என்றார்.

சாட்சிகளை கலைக்கும் அபாயம் உள்ளது: 144 பக்கங்களில் சைனி அதிரடி உத்தரவு

"ஸ்பெக்ட்ரம் குற்றச்சதியில் கனிமொழிக்கு பங்கு அதிகம் இருப்பதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. தவிர, முக்கிய குற்றவாளியான ராஜாவுக்கும், கனிமொழிக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளதென்பதும் உறுதியாக தெரிகிறது. இந்த வழக்கில் சாட்சிகள் எல்லாருமே, கலைஞர் "டிவி'யில் பணியாற்று பவர்கள். எனவே, அவர்களுக்கு தலைமை தாங்கும் நிலையில் உள்ள இவர்களை ஜாமின் அளித்து வெளியில் விட்டால், சாட்சிகளை கலைக்கும் அபாயம் உள்ளது' என்று, நீதிபதி சைனி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

கனிமொழி, சரத்குமார் ரெட்டி ஆகியோரின் ஜாமின் மனுக்களையும் நிராகரிப்பதாகக் கூறி, நீதிபதி ஓ.பி.சைனி நேற்று, டில்லி பாட்டியாலா கோர்ட்டில் அறிவித்தபோது, தி.மு.க., வட்டாரமே கடும் அதிர்ச்சிக்குள்ளானது. 144 பக்கங்களைக் கொண்ட அந்த உத்தரவில், நீதிபதி சைனி, கனிமொழிக்கும், சரத்குமார் ரெட்டிக்கும் ஜாமின் மறுத்தது குறித்து விளக்கியுள்ளார். ஆரம்பத்தில், கலைஞர் "டிவி'யில் இயக்குனர் பொறுப்பில் கனிமொழி இருந்துள்ளார். கலைஞர் "டிவி' ஆரம்பிப்பதில் தேவையற்ற காலதாமதம் ஆகக் கூடாது என்பதற்காக, உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டியே அவர், தற்காலிகமாக தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். கலைஞர் "டிவி'யை துவங்குவதற்கு வேண்டிய ஆரம்ப கட்ட செய்தி ஒலிபரப்புத்துறை சார்ந்த பணிகள் உட்பட அந்த, "டிவி'யை டாடா ஸ்கை டி.டி.எச்., பேக்கேஜ்க்குள் கொண்டு வருவதற்கும், ராஜா மிகுந்த முயற்சிகளையும், அது சார்ந்த அத்தனை பணிகளையும் செய்து முடித்துள்ளார்.

கலைஞர் "டிவி'யில் 20 சதவீதம் வைத்திருக்கும் முக்கிய பங்குதாரர் கனிமொழி. அந்த, "டிவி' இயக்கத்தின் பின்னணியில் உள்ள மிக முக்கிய மூளையாகவும் கனிமொழி செயல்பட்டுள்ளார் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல, முதல் குற்றவாளியான ராஜாவுடன், கனிமொழிக்கு உள்ள நெருங்கிய தொடர்பு உண்மைதான் என்பதை, ராஜாவிடம் உதவியாளராக இருந்த ஆசீர்வாதம் ஆச்சாரியின் வாக்குமூலத்தை மேற்கோள்காட்டி, அதை நம்புவதாகவும் சைனி கூறியுள்ளார். அதன்படி, அமைச்சராக இருந்த ராஜாவின் வீட்டிற்கும், அவரது அலுவலகத்திற்கும் கனிமொழி அடிக்கடி வந்துபோய் உள்ளார். இடைவிடாத இந்த சந்திப்புகளின் போதெல்லாம், கலைஞர் "டிவி' உருவாக்கம் குறித்த பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல, டில்லி சவுத் அவின்யூவில் உள்ள கனிமொழியின் இல்லத்திற்கும் ராஜா அடிக்கடி சென்று வந்துள்ளார். இருவரும், கட்சியில் முக்கியமாகச் செயல்பட்டு, "டிவி' குறித்த முடிவுகளில் ஓரணியில் செயல்பட்டுள்ளனர் என்றும், சைனி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

தவிர, பிப்., 13, 2009ல், நடைபெற்ற கலைஞர் "டிவி' போர்டு மீட்டிங்கில் தான், "சினியுக்' நிறுவனத்திடம் இருந்து 200 கோடி ரூபாய் பெறுவதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில், கனிமொழியும், சரத்குமார் ரெட்டியும் பங்கேற்றுள்ளனர் என்பது உறுதியாகத் தெரிகிறது. இதை, கலைஞர் "டிவி'யைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் அமிர்தம் ஆகியோர் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் நம்புவதாகவும் சைனி குறிப்பிட்டுள்ளார். கனிமொழி மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோரது பங்கு இந்த ஊழலில் மிகப்பெரிய அளவில் இருப்பதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. குற்றத்தின் தீவிரமும், ஆழமும் மிக பிரமாண்டமாக உள்ளன. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் சீரியசானவை. இதை நிரூபிக்கும் வகையிலான ஆதாரங்களும் வலுவாக உள்ளன. எனவே, மனுதாரர் தனக்கு ஜாமின் வழங்கும்படி கேட்கும் கோரிக்கையில் நியாயம் இல்லை. இந்த குற்றச் சதியின் பின்னணியை ஆராயும் போது, சாட்சிகளாக இருப்பவர்கள் அனைவருமே ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகியிருக்கும் கலைஞர் "டிவி'யில் பணி புரிபவர்களாக உள்ளனர். எனவே, இப்போது ஜாமின் கேட்கும் இருவரையும் வெளியில் விட்டால், சாட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்துவர். சாட்சிகளை கலைக்கவும், ஆதாரங்களை அழிக்கவும் முயற்சிகள் செய்ய அதிக வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது.

செய்திருக்கும் குற்றத்தின் ஆழம், அதன் முக்கியத்துவம், சுமத்தப்பட்டுள்ள மிகப்பெரிய தீவிர குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்திற்குமே ஏராளமான வலுவான ஆதாரங்களும் உள்ளன. இந்த அடிப்படையில் பார்க்கையில், கனிமொழியும், சரத்குமார் ரெட்டியும் தங்களுக்கு ஜாமின் வழங்க வேண்டுமென்று கேட்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. இவர்களது கோரிக்கை நியாயமற்றது. ஆகவே, இவர்களது ஜாமின் கோரிக்கையை நிராகரிக்கிறேன். இவ்வாறு நீதிபதி சைனி குறிப்பிட்டுள்ளார். இனி, கனிமொழியும், சரத்குமார் ரெட்டியும் ஜாமின் பெற, டில்லி ஐகோர்ட்டை நாட வேண்டும்.

கட்சி மூத்த நிர்வாகிகளுடன் கருணாநிதி ஆலோசனை: கனிமொழி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடனும், கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனும் தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று ஆலோசனை நடத்தினர்.

கருணாநிதியின் சி.ஐ.டி., காலனி வீட்டிற்கு, கட்சியின் மூத்த தலைவர்கள் அன்பழகன், ஸ்டாலின், தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீசெல்வம், பொன்முடி உள்ளிட்டோர் வந்தனர். கனிமொழி ஜாமின் மனு பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டதும், இவர்கள் வெளியே சென்றுவிட்டு, பகல் 2 மணிக்கு மீண்டும் வந்தனர். டில்லி கோர்ட்டில் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, கனிமொழி கைது செய்யப்பட்ட தகவல் வந்ததும், இவர்களுடன் கருணாநிதி ஆலோசனை நடத்தினார். தி.க., தலைவர் வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோரும் இதில் பங்கேற்றனர். கனிமொழியின் தாய் ராஜாத்தி, நேற்று மாலை டில்லிக்கு சென்றார். கருணாநிதியின் மருத்துவர் கோபால், நேற்று மாலை சி.ஐ.டி., காலனி வீட்டுக்கு வந்தார். சிறிது நேரத்தில், உடல்நிலை பாதிக்கப்பட்டு காரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி கைது வரை

2011 பிப்., 2: "2ஜி' வழக்கு தொடர்பாக ராஜா, அவரது முன்னாள் தனி செயலர் சந்தோலியா மற்றும் முன்னாள் தகவல் தொடர்பு துறை செயலர் சித்தார்த்த பெகுரா ஆகியோர் சி.பி.ஐ.,யால் கைது. அனைவரும் சி.பி.ஐ., காவலில் அடைப்பு.
2011 பிப்., 8: ராஜாவுக்கு மேலும் 2 நாள் சி.பி.ஐ., காவல் நீட்டிப்பு. பெகுரா, சந்தோலியா, கோர்ட் காவலில் சிறையில் அடைப்பு.
பிப்., 8: ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர் சாகித் உஸ்மான் பல்வா, சி.பி.ஐ.,யால் கைது.
பிப்., 10: ராஜாவின் சி.பி.ஐ., காவல் மேலும் 4 நாட்களுக்கு நீட்டிப்பு.
பிப்., 14: ராஜா சி.பி.ஐ., காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு, உஸ்மான் பல்வாவுக்கு சி.பி.ஐ., காவல் 4 நாட்கள் நீட்டிப்பு.
பிப்., 17: ராஜா, திகார் சிறையில் அடைப்பு.
பிப்., 18: பல்வா, சிறையில் அடைப்பு.
பிப்., 24: பல்வா, "கலைஞர் டிவி'க்கு சலுகை காட்டினார் என, டில்லி கோர்ட்டில் சி.பி.ஐ., தகவல்.
பிப்., 28: வீடியோ கான்பரன்சிங் விசாரணைக்கு அனுமதிக்குமாறு ராஜா கோரிக்கை.
மார்ச் 1: 63 பேர் விசாரணை வளையத்தில் உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., தகவல். ராஜா வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு ஆஜராவதற்கு சி.பி.ஐ., கோர்ட் அனுமதி.
மார்ச் 14: டில்லி ஐகோர்ட், "2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிப்பதற்கு ஸ்பெஷல் கோர்ட் ஒன்றை அமைத்தது. பல்வாவும் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராவதற்கு டில்லி கோர்ட் அனுமதி.
மார்ச் 29: முதல் குற்றப்பத்திரிகையை மார்ச் 31க்கு பதிலாக, ஏப்., 2ல் தாக்கல் செய்கிறோம் என்ற சி.பி.ஐ.,யின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் ஏற்றது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆசிப் பல்வா மற்றும் ராஜிவ் அகர்வால் ஆகிய மேலும் இருவர் கைது.
ஏப்., 2: சி.பி.ஐ., சார்பில் ஸ்பெக்ட்ரம் வழக்கு சம்பந்தமாக முதல் குற்றப்பத்திரிகை தாக்கல்.
ஏப்., 25: இரண்டாவது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ., தாக்கல் செய்தது. தி.மு.க.,வைச் சேர்ந்த கனிமொழி "கூட்டுச்சதியாளர்' என சேர்ப்பு.
மே 6: கனிமொழி, கோர்ட்டில் ஆஜர்.
மே 20: கனிமொழி ஜாமின் மனுவை கோர்ட் நிராகரித்தது. அவர் கைது செய்யப்பட்டார்.

பணம் வந்த பாதை: கடந்த 2008ல் மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சராக ராஜா இருந்தபோது, ஷாகித் உஸ்மான் பல்வா பங்குதாரராக இருக்கும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு 1,537 கோடி ரூபாய்க்கு "2ஜி' லைசென்ஸ் வழங்கினார். ஒரு மாதத்துக்குள் 40 சதவீத பங்கை பல்வா, 4,500 கோடி ரூபாய்க்கு துபாய் நிறுவனத்துக்கு விற்று லாபம் அடைந்துள்ளார். "டிபி ரியாலிட்டி' என்ற நிறுவனத்தின் நிர்வாக மேலாளராகவும் பல்வா இருக்கிறார். இந்நிறுவனத்திலிருந்து கலைஞர் "டிவி'க்கு 200 கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடந்துள்ளது என சி.பி.ஐ., தெரிவித்தது. லைசென்ஸ் வழங்குவதில் ராஜா சலுகை காட்டியதற்காக பல்வா, இந்த தொகையை கலைஞர் "டிவி'க்கு அளித்தாக கூறப்படுகிறது. 214 கோடி ரூபாய் கடனாக தான் பெறப்பட்டது. அதையும் வட்டியுடன் திருப்பி செலுத்திவிட்டோம் என்று கலைஞர் "டிவி' தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கனிமொழியின் புதிய முகவரி : நம்பர்-6 திகார் சிறை
2ஜி வழக்கில் சி.பி.ஐ., தாக்கல் செய்த 2வது குற்றப்பத்திரிகையில் கூட்டு சதியாளர் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த தி.மு.க., எம்.பி.,யும், கருணாநிதியின் மகளுமான கனிமொழி ‌நேற்று ( 21ம் தேதி) டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். டில்லி திகார் சிறை எண் 6ல் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் கிடைத்தது என்ன ? சிறை எண் 6ல் 8வது வார்டில் கனிமொழி நேற்று மாலை 4.30 மணிக்கு அடைக்கப்பட்டார். முதல் முறையாக குற்றப் பின்னணியுடன் வருபவர்கள் இந்த சிறையில் அடைக்கப்படுவது வழக்கம். கனிமொழி தனி செல்லில் இருக்கிறார். அவருக்கு தென் இந்திய உணவு வகை வழங்கப்படுகிறது. 10 அடி அகலமும் 15 அடி நீளமும் கொண்ட அறை தான் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கனிமொழி சிறைக்குள் செல்லும் போது, மருந்துப் பொருட்கள், புத்தகங்கள், மூக்கு கண்ணாடி ஆகியனவற்றை எடுத்துச் சென்றார். அறையில் மின்விசிறி, தொலைக்காட்சி பெட்டி, மற்றும் போர்வை ஆகியன தரப்பட்டுள்ளதாக திகார் சிறை துணை ஆய்வாளர் ஆர்.என்.சர்மா தெரிவித்துள்ளார். நாளிதழ்களும் வழங்கப்படும் என தெரிகிறது.
மூக்குத்திக்கு தடை : கனிமொழி சிறைக்கு செல்லும் போது அவரது மூக்குத்தியை அகற்றி விடுமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர். இதனையடுத்து அவர் மூக்குத்தியை அகற்றினார். சிறை விதிமுறைகளின் படி அவர் ஒரு வாரத்துக்கு இரண்டு முறை அவரது உறவினர்களை சந்திக்க முடியும்.
பக்கத்து சிறையில் உளவாளி ! கனிமொழியின் பக்கத்து சிறையில் பாகிஸ்தான் நாட்டுக்கு உளவு பார்த்து மாஜி ஐ.எப்.எஸ்., அதிகாரி மாதுரி குப்தாவும், விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட பு‌ரோக்கர் சோனு பஞ்சாபன் ஆகியோரும் இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

தி.மு.க.,வுக்கு மீண்டும் அடி: சிறையில் கனிமொழி: பெரும் துயரில் கருணாநிதி

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் தி.மு.க., கூட்டணி ஒரு தொகுதியில் வெற்றி பெறாத நிலையில், தி.மு.க.,வினர் தோல்வியிலும் மகிழ்ச்சி அடைந்தனர். தர்மபுரி மாவட்டத்தில் தி.மு.க., முல்லைவேந்தன் மற்றும் இன்பசேகரன் ஆகியோர் இரு கோஷ்டியாகச் செயல்படுகின்றனர். இருவரும் தெற்கு, வடக்கு மாவட்ட பொறுப்பாளராக உள்ளனர். பென்னாகரம் தொகுதியில் இன்பசேகரனும், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் முல்லைவேந்தனும் தேர்தலில் போட்டியிட்டனர்.
இருவரும் வெற்றி பெற்று விடுவோம் என தலைமையில் உறுதி அளித்த பின், சீட் பெற்று வந்தனர். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியை பா.ம.க., கேட்டு வந்த நிலையில், அதை விடாப்பிடியாக முல்லைவேந்தன் பெற்று வந்தார். இரு தொகுதியிலும் வெற்றி இலக்கோடு தேர்தல் பணிகளை துவங்கினாலும், எதிர் அணியின் தீவிர பிரசாரம், தி.மு.க.,வில் நிலவிய கோஷ்டி பூசல், தி.மு.க.,வுக்கு மிகப்பெரிய பின்னடைவை தந்தது.
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் முல்லைவேந்தனுக்கு எதிராக வீரபாண்டி ஆறுமுகத்தின் தீவிர ஆதரவாளர், தி.மு.க., இலக்கிய அணி முன்னாள் தலைவர், ஆசிரியர் வேலு சுயேச்சையாக களம் இறங்கி, 18 ஆயிரத்து 710 ஓட்டுகளை பிரித்தார். இந்த ஓட்டுகள், தி.மு.க.,வின் வெற்றியைப் பறித்தது.
பென்னாகரம் தொகுதியில் தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன், சுவர் விளம்பரம் அளிப்பது தொடர்பாக பருவதனஅள்ளியில் நடந்த மோதலில் தி.மு.க.,வினர் தாக்கியதில், தே.மு.தி.க.,வை சேர்ந்த கிளை செயலர் கொலை செய்யப்பட்டார். இதனால், இந்த தொகுதியின் தேர்தல் வெற்றியும் கடைசி நேரத்தில் இ.கம்யூனிஸ்ட் கட்சிக்கு சாதகமாக மாறியது.
தி.மு.க., இரு தொகுதியில் தோல்வி அடைந்த நிலையில், இன்பசேகரன் ஆதரவாளர்கள், முல்லைவேந்தன் தோல்வி அடைந்ததையும், முல்லைவேந்தன் ஆதரவாளர்கள், இன்பசேகரன் தோல்வி அடைந்திருப்பதையும் கண்டு, சோகத்திலும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருவரில் ஒருவர் வெற்றி பெற்று இருந்தால், தி.மு.க., தலைமையில் நம்பிக்கை பெற்று ஒருங்கிணைந்த மாவட்ட பொறுப்பாளராக மாறும் வாய்ப்பு இருந்ததால், ஒருவர் தோல்வியை கண்டு மற்றவர் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

தோல்வியிலும் மகிழ்ச்சி அடைந்த தி.மு.க.,வினர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோவிந்த ராஜபுரத்தை சேர்ந்தவர் தனபால் (வயது 49). நெசவுதொழிலாளியான இவர் தி.மு.க. வின் தீவிர தொண்டர். இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி தோல்வி அடைந்ததை அறிந்த அவர் மனமுடைந்தார். இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய தனபால் அங்குள்ள பெட்ரோல் பங்க்கில் ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கி கொண்டு வீடு திரும்பினார். பின்னர் இரவு 8 மணிக்கு திடீரென நடுரோட்டுக்கு வந்து கையில் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

அடுத்த நொடி தீ உடலில் வேகமாக பரவி அலறியபடி அங்கும் இங்கும் ஓடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்ல முடிவு செய்தனர்.

அப்போது, தனபால் டாக்டர்களிடம் தி.மு.க.வே தோற்று விட்டது. நான் இறப்பதற்கு தான் தீக்குளித்தேன் என்று கூறிவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு சத்தியமங்கலம் ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை அளித்தனர். ஆனால் சில மணிநேரங்களில் தனபால் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார். அவர் தீக்குளித்த நிலையிலேயே 80 சதவீதம் உடல் வெந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

தி.மு.க. தொண்டர் தற்கொலை பற்றி தகவல் அறிந்த சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் எஸ்.ஆர்.வேலுச்சாமி, நகர தி.மு.க. துணை செயலாளர் மூர்த்தி மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இறந்த தனபாலுக்கு வசந்தா (40) என்ற மனைவியும், கீர்த்தனா(17) என்ற மகளும், தம்பிதுரை(15) என்ற மகனும் உள்ளனர்.

இதுபற்றி சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சத்தியமங்கலத்தில் பரபரப்பு: தேர்தல் தோல்வியால் தி.மு.க. தொண்டர் தற்கொலை; நடுரோட்டில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்

தமிழகத்தில் தென் மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில், 11 தொகுதிகளில் மட்டுமே தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட முத்துப்பட்டி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஓட்டளித்த பின், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறுகையில், "எங்கள் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்டுள்ளோம். 200 இடங்களில் வெற்றி பெறுவோம்' என்றார். அதற்கு மாறாக, தி.மு.க., கூட்டணி, 31 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதே போல, "தென் மாவட்டங்களில் 58 தொகுதியையும் வெல்வோம்' என, மு.க.அழகிரி கூறினார். இதுவும், இப்போது மாறி விட்டது.
மதுரை மேற்கு உட்பட, மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி தோல்வி அடைந்தது.

மாவட்டம் / மொத்த இடங்கள் / அ.தி.மு.க., கூட்டணி/ தி.மு.க., கூட்டணி
--------------------------------------------------
மதுரை / 10/ 10/ 0
திண்டுக்கல் / 7 / 5/ 2
தேனி / 4 / 3/ 1
ராமநாதபுரம் / 4 / 3/ 1
சிவகங்கை / 4/ 4/ 0
விருதுநகர் / 7/ 6/ 1
திருநெல்வேலி / 10/ 9 /1
தூத்துக்குடி / 6/5/1
கன்னியாகுமரி / 6/2/4

அழகிரி பொறுப்பேற்றதில் தி.மு.க., பெற்றது 11 தொகுதிகள்

சென்னை: திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வென்ற தொகுதிகள் விவரம்:

தி.மு.க

1. திருவாரூர்
2. குன்னூர்
3. பத்மநாபபுரம்
4. திருச்சுழி
5. கம்பம்
6. சேப்பாக்கம்
7. திருச்செந்தூர்
8. பாளையங்கோட்டை
9. காட்பாடி
10. திருவிடைமருதூர்
11. லால்குடி
12. கும்பகோணம்
13. அரவக்குறிச்சி
14. மன்னார்குடி
15. திருவாடானை
16. ஆத்தூர்
17. குன்னம்
18. வேப்பனப்பள்ளி
19. கொளத்தூர்
20. ஒட்டன்சத்திரம்
21. கூடலூர்

காங்கிரஸ்

1. விளவங்கோடு
2. கிள்ளியூர்
3. குளச்சல்
4. பட்டுக்கோட்டை
5. ஓசூர்

பா.ம.க

1. ஜெயங்கொண்டம்
2. செஞ்சி
3. அணைக்கட்டு

திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வென்ற தொகுதிகள் பட்டியல்

சென்னை: திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வென்ற தொகுதிகள் விவரம்:

தி.மு.க

1. திருவாரூர்
2. குன்னூர்
3. பத்மநாபபுரம்
4. திருச்சுழி
5. கம்பம்
6. சேப்பாக்கம்
7. திருச்செந்தூர்
8. பாளையங்கோட்டை
9. காட்பாடி
10. திருவிடைமருதூர்
11. லால்குடி
12. கும்பகோணம்
13. அரவக்குறிச்சி
14. மன்னார்குடி
15. திருவாடானை
16. ஆத்தூர்
17. குன்னம்
18. வேப்பனப்பள்ளி
19. கொளத்தூர்
20. ஒட்டன்சத்திரம்
21. கூடலூர்

காங்கிரஸ்

1. விளவங்கோடு
2. கிள்ளியூர்
3. குளச்சல்
4. பட்டுக்கோட்டை
5. ஓசூர்

பா.ம.க

1. ஜெயங்கொண்டம்
2. செஞ்சி
3. அணைக்கட்டு

சென்னை : சட்டசபை தேர்தலில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தி.மு.க., தலைவர் கருணாநிதி. தற்போது, 12வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில், 1957ம் ஆண்டு முதன் முதலாக குளித்தலையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் கருணாநிதி. தொடர்ந்து தஞ்சாவூர், சைதாப்பேட்டை, அண்ணாநகர், துறைமுகம், சேப்பாக்கம் என போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஐந்து முறை தமிழக முதல்வராக பதவி வகித்தார். 12வது முறையாக, தன் சொந்த ஊர் அடங்கியுள்ள திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

தமிழக முதல்வராக பதவி வகித்த காமராஜர், அண்ணாதுரை, ஜெயலலிதா, ஜானகி எம்.ஜி.ஆர்., ஆகியோர் கூட தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தது உண்டு. விருதுநகர் தொகுதியில் காமராஜர், காஞ்சிபுரம் தொகுதியில் அண்ணாதுரை, பர்கூர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு தோல்வியடைந்தனர். ஆனால், இதுவரை போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்று, தமிழக அரசியல் கட்சித் தலைவர்களில் தொடர்ந்து 12வது முறையாக வெற்றி பெற்றிருப்பவர் தி.மு.க., தலைவர் கருணாநிதி மட்டும் தான்.

கருணாநிதி 12வது முறையாக வெற்றி

டெல்லி: 2ஜி ஊழல் வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று நடந்து.

முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையொட்டி திமுகவைச் சேர்ந்த எம்பிக்கள் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.

விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது, இதய நோயாளியான திமுக எம்பி ஆதிசங்கர் திடீரென நீதிமன்றத்தில் மயங்கி விழுந்தார். இதனால் அந்த இடத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

2ஜி விசாரணை: நீதிமன்றத்தில் திமுக எம்பி மயங்கி விழுந்தார்

டெல்லி: 2ஜி ஊழல் வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று நடந்து.

முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையொட்டி திமுகவைச் சேர்ந்த எம்பிக்கள் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.

விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது, இதய நோயாளியான திமுக எம்பி ஆதிசங்கர் திடீரென நீதிமன்றத்தில் மயங்கி விழுந்தார். இதனால் அந்த இடத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை: கனிமொழியின் பெயரை 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ சேர்த்துள்ளதால் கடும் அதிருப்தி அடைந்துள்ள திமுக தலைமை இன்று தனது உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது.

இதில் இலங்கை விவகாரத்தை கையில் எடுத்து காங்கிரசுக்கு நெருக்கடி தருவது குறித்து திமுக முடிவெடுக்கும் என்று தெரிகிறது.

ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக 2வது குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அதில் கனிமொழியின் பெயர் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல கலைஞர் டிவியின் நிர்வாகி சரத்குமார் ரெட்டியின் பெயரையும் சேர்த்துள்ளனர். இதனால் திமுக அதிர்ச்சியும், கடும் அதிருப்தியும் அடைந்துள்ளது.

ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் அவர் கைது செய்யப்படக் கூடும் என்றும் பரவலாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந் நிலையில் முக்கிய முடிவு எடுப்பதற்காக கட்சியின் உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தை கூட்டியுள்ளது திமுக.

இக் கூட்டத்தில் முதல்வரும் கட்சித் தலைவருமான கருணாநிதி, நிதியமைச்சரும் பொதுச் செயலாளருமான க.அன்பழகன், துணை முதல்வரும் பொருளாளருமான மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சரும் திமுக தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கனிமொழி, அமைச்சர்கள் உள்ளிட்ட 27 பேர் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக இக் கூட்டம் குறித்து தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், 2 ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் நீதிமன்றம் அறிவிப்பின் கீழ் சி.பி.ஐ. கனிமொழி பெயரை குற்றப்பத்திரிகையில் சேர்த்துள்ளது. சி.பி.ஐ. ஒரு தனி அமைப்பு. அவர்களின் நடவடிக்கை குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை.

குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்பட்டதால் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியில் பாதிப்பு இல்லை. எங்கள் கட்சியின் நிலை குறித்தும், மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் இன்று முடிவு செய்வோம் என்றார்.

இன்று என்ன முடிவு எடுக்கப்படும் என்பது குறித்துத் தெரியவில்லை. இருப்பினும் மத்திய அமைச்சர்கள் ராஜினாமா உள்ளிட்ட சில வழக்கமான முடிவுகளை திமுக அறிவிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை பிரச்சனையை திமுக கையில் எடுக்கும்?:

இந் நிலையில் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் போர்க் குற்றமே என்று ஐ.நா. தனது அறிக்கையில் கூறியுள்ளது.

இது குறித்தும் திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும், இந்த விவகாரத்தை வைத்து காங்கிரசுக்கு நெருக்கடி தரும் வேலைகளை திமுக தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அத்வானியை காட்டி சமாதானப்படுத்தும் காங்கிரஸ்:

இந் நிலையில் பெயர் குறிப்பிட விரும்பாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், இந்தப் பிரச்சனையை அரசியல்ரீதியாகவும், சட்டரீதியாகவும் சந்திக்க வேண்டும் என்பதை திமுக புரிந்து கொள்ளும் என்று நம்புகிறோம். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாலேயே குற்றவாளி என்று அர்த்தமில்லை.

அத்வானி மீது கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் அரசியலில் நீடித்துக் கொண்டுதானே இருக்கிறார் என்றார்.

கனிமொழி விவகாரம்: திமுக உயர் நிலைக் கூட்டம் தொடங்கியது-முக்கிய முடிவு?

சென்னை: சட்டம் தனது கடமையை ஒழுங்காக செய்வதற்கும், மத்திய புலனாய்வுத் துறை தங்கு தடையின்றி ஸ்பக்ட்ரம் ஊழலில் விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும், உச்சநீதிமன்றமே நேரடியாக தலையிட்டு இந்த விசாரணையை கண்காணித்து வருவதால் அத்தகைய விசாரணைக்கு குந்தகம் ஏற்படாமல் இருக்கவும், குற்றச்சாட்டு எழுந்தவுடன் பதவி விலக வேண்டும் என்கின்ற அரசியல் நாகரீகத்தை கருதியும், தமிழ்நாட்டின் இன்றைய முதல்வராக உள்ள கருணாநிதி, முதல்வர் பதவியில் இருந்து வெளியேற வேண்டும் அல்லது அவரை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் நடைபெற்ற ஊழல் சம்பந்தமாக அதன் தலைவராக இருந்த காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் கல்மாடி மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்கம்போல் காங்கிரஸ் கட்சியும் அவரை அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இடைநீக்கம் செய்துள்ளது.

ஒவ்வொரு முறையும் முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதும், அவ்வப்போது அரசியல் கட்சிகள் இடைநீக்கம் செய்வதும், அதற்குப் பிறகு அந்த வழக்குகள் என்ன ஆயின என்பதும் இதுவரையில் புரியாத புதிராகவே உள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் வயதாகி இறந்துள்ளார்களே தவிர, தண்டிக்கப்பட்டு சிறைக்கு சென்றதாக வரலாறு இல்லை. அந்த அளவுக்கு ஊழல் வழக்குகளில் காலதாமதம் நீடிப்பதுதான் வரலாறு.

ஊழல் குற்றம் சாட்டப்பட்டவுடன், ஊழல் செய்து அவர்கள் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களையும், சேமிப்பு மற்றும் முதலீடு செய்துள்ள கோடிக்கணக்கான ரூபாய்களையும் உடனடியாக இந்திய அரசு முடக்கி வைக்க வேண்டும்.

தொலைபேசி கட்டணம் செலுத்தவில்லை என்றால் தொலைபேசி துண்டிக்கப்படுகிறது. மின்சாரக் கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. வருமான வரி சோதனை என்றால் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுகின்றன.

பொதுமக்களுக்கு இத்தகைய உடனடி தண்டனையை வழங்குகிற மத்திய, மாநில அரசுகள் ஊழல் புரிந்து கோடிக்கணக்கான ரூபாய்களை வங்கிகளிலும், நிலங்களிலும், கட்டிடங்களிலும், கம்பெனி பங்குகளிலும், வெளிநாட்டு வங்கிகளிலும் போட்டு வைத்திருப்பதை உடனடியாக ஏன் முடக்கக் கூடாது என்பதே எனது கேள்வி.

அவற்றை அப்படியே விட்டு வைப்பதால் அந்த ஊழல் பணத்தைக் கொண்டு பெரிய பெரிய வக்கீல்களை நியமித்து வழக்குகளில் காலதாமதம் செய்கின்றனர் அல்லது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வழக்குகளை முடக்கிப் போடுகின்றனர்.

அந்த ஊழல் பணத்தை வைத்து தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் கொடுத்து அதிகாரத்தையும் கைப்பற்றுகின்றனர். ஜனநாயகமே ஊழல்நாயகமாக ஆகிவிடுவதை இந்திய அரசு ஏன் தடுக்கவில்லை.

ஒன்றே முக்கால் லட்சம் கோடிக்கு மேல் இந்திய அரசுக்கு வருவாய் இழப்பை தந்த 2ஜி அலைக்கற்றை ஊழலில் மத்திய அமைச்சராக இருந்த ராசா மீது மத்திய புலனாய்வுத் துறை குற்றம் சாட்டியது. வேறு வழியின்றி அமைச்சர் பதவியில் இருந்து ராசா விலக நேர்ந்தது. இன்று முக்கிய குற்றவாளியாக தில்லி திகார் சிறையில் இருக்கிறார்.

இந்த ஊழல் பணத்தில் 214 கோடி ரூபாய் கலைஞர் டிவி ஆரம்பிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது மத்திய புலனாய்வுத் துறை நேற்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த துணை குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. கருணாநிதியின் மகள் கனிமொழி இதில் கூட்டுச் சதியாளர் என்று கூறப்பட்டுள்ளார்.

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையார் கலைஞர் டிவியில் 60 சதவிகிதப் பங்கு வகித்தும் கூட அவரை மத்திய புலனாய்வுத் துறை குற்றச்சாட்டில் சேர்க்கவில்லை. அவரை இயங்காத பங்குதாரர் என்று கூறி மத்திய புலனாய்வுத் துறை சேர்க்கவில்லை.

20 சதவிகிதப் பங்கினை பெற்றுள்ள கனிமொழி எம்.பி., சரத்குமார் ரெட்டி ஆகியோர் குற்றச்சாட்டில் சேர்க்கப்பட்டுள்ளபோது, அதைப் போல மும்மடங்கான 60 சதவிகித பெரும்பான்மை பங்கு வகிக்கும் தயாளு அம்மையாரையும் முறைப்படி சேர்க்கப்பட்டிருக்க வேண்டாமா?

எவ்வாறு மத்திய அமைச்சர் பதவியில் ராசா நீடித்தால் இந்த இமாலய ஊழலில் விசாரணைக்கு குந்தகம் ஏற்படுமோ, அதே போன்று கலைஞர் டிவி மீது இந்த 214 கோடி ரூபாய் தரப்பட்டுள்ள வழக்கு பாய்வதால் கருணாநிதி தமிழ்நாட்டின் முதல்வராக நீடிப்பதன் மூலம் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும், ஊழல் விசாரணை தொடர்வதற்கும், ஊழல் பேர்வழிகளை கண்டறிந்து உடனடியாக தண்டனை தருவதற்கும் ஒரு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சட்டம் தனது கடமையை ஒழுங்காக செய்வதற்கும், மத்திய புலனாய்வுத் துறை தங்கு தடையின்றி இந்த இமாலய ஊழலில் விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும், உச்சநீதிமன்றமே நேரடியாக தலையிட்டு இந்த விசாரணையை கண்காணித்து வருவதால் அத்தகைய விசாரணைக்கு குந்தகம் ஏற்படாமல் இருக்கவும், குற்றச்சாட்டு எழுந்தவுடன் பதவி விலக வேண்டும் என்கின்ற அரசியல் நாகரீகத்தை கருதியும், தமிழ்நாட்டின் இன்றைய முதல்வராக உள்ள கருணாநிதி, முதல்வர் பதவியில் இருந்து வெளியேற வேண்டும் அல்லது இந்திய அரசு மக்கள் நலனையும், சட்டத்தின் ஆட்சியையும் கருத்தில் கொண்டு நீதியை நிலைநாட்ட கருணாநிதி அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ஸ்பெக்ட்ரம் விசாரணை முறையாக நடக்க கருணாநிதி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்-விஜயகாந்த்

ஸ்பெக்ட்ரம் ஊழலில், முதல்வர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.,யுமான கனிமொழிக்கும், கலைஞர் "டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கும் தொடர்பு இருப்பதாக, சி.பி.ஐ., தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இருவரும் கூட்டுச்சதி செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு பெயர் இடம் பெறவில்லை.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரித்து வரும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவான சி.பி.ஐ., தனது முதல் குற்றப்பத்திரிகையை கடந்த 2ம் தேதி தாக்கல் செய்திருந்தது.அந்த குற்றப்பத்திரிகையில், முன்னாள் அமைச்சர் ராஜா உட்பட ஒன்பது பேர்களின் மீது, ஐந்து விதமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அதில் முதலாவதாக, இந்திய தண்டனைச் சட்டம் ஐபிசி 120 பி (கிரிமினல் சதித் திட்டம் தீட்டுதல்) பிரிவின் கீழும், ஐபிசி 420 (ஏமாற்றுதல்) பிரிவின் கீழும், ஐபிசி 468 (போலி ஆவணங்களைத் தயாரித்தல்) பிரிவின் கீழும், ஐபிசி 471 (போலி ஆவணங்களை பயன்படுத்துதல்) பிரிவின் கீழும் மற்றும் இந்திய ஊழல் தடுப்புச் சட்டம் 1988 (அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தங்களுக்கு வேண்டப்பட்ட சிலருக்கு ஆதரவாகச் செயல்படுதல்) பிரிவின் கீழும் அதிக அளவில் குற்றங்களை இந்த ஒன்பது பேரும் செய்துள்ளதாக சி.பி.ஐ., குற்றம் சாட்டியிருந்தது.இந்நிலையில், சி.பி.ஐ., தனது இரண்டாவது குற்றப்பத்திரிகையை நேற்று பிற்பகல் 3 மணியளவில் தாக்கல் செய்தது. டில்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில், இந்த குற்றப்பத்திரிகையை நீதிபதி ஓ.பி.சைனி முன் தாக்கல் செய்யப்பட்டது.

* அதில், தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.,யுமான கனிமொழி மற்றும் கலைஞர் "டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமார் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இது தவிர, சுவான் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜிவ் அகர்வால், கரீம் மொரானி, அசீப் பல்வா ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே சிறையில் இருக்கும் ஷாகித் பல்வாவின் சகோதரர் தான் இந்த அசீப் பல்வா.
* ஸ்பெக்ட்ரம் உரிமத்தை சுவான் நிறுவனத்திற்கு வழங்கியதற்காக பிரதி பலனாக அளித்த லஞ்சப்பணம் 214 கோடி ரூபாய் பற்றியும்; அந்த பணம் எந்தெந்த வழிகளில் கலைஞர் "டிவி'க்கு வழங்கப்பட்டது என்பது பற்றியும்; இந்த பண பரிவர்த்தனைகளில் பங்கு பெற்ற நபர்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.
* அதன்படி, ராஜாவின் பெயரும் சேர்க்கப்பட்டு, லஞ்சம் வாங்கிய குற்றம் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. அதேபோல கனிமொழி, கலைஞர் "டிவி'யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகிய இருவர் மீதும் கூட்டுச் சதியில் பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
* கலைஞர் "டிவி'க்கு பணம் வழங்கியதாக, டிபி ரியாலிட்டி குரூப்பைச் சேர்ந்த குசேகான் மற்றும் சினியுக் நிறுவனங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றின் அதிகாரிகளான கரீம் மொரானி, ராஜிவ் அகர்வால் ஆகியோரது பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.
* இந்த ஐந்து பேர் மீதும், இந்திய குற்றவியல் சட்டம் 120 பி (ஐபிசி) பிரிவு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன்படி ராஜாவின் மீது லஞ்சம் பெற்றதாகவும், கனிமொழி, சரத்குமார் ஆகியோர் மீது கிரிமினல் சதியில் ஈடுபட்டதாகவும், மொரானி, ராஜிவ் அகர்வால், அசீப் பல்வா ஆகியோர் மீது லஞ்சம் அளித்தனர் என குற்றச் செயல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

தயாளு இல்லை: குற்றப்பத்திரிகையில், முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு இடம் பெறுவார் என்ற பரபரப்பு இருந்தது. கலைஞர் "டிவி'யில் அதிகபட்சமாக 60 சதவீத பங்குகளை தயாளு வைத்திருந்தார். எனவே, அவர் பெயர் இடம்பெறுமென செய்திகள் வெளியாயின. ஆனால், அவர் பெயர் இடம் பெறாமல் தவிர்க்கப்பட்டிருந்தது. இது குறித்து தெளிவான விவரங்கள் எதுவும் கூறப்படவில்லை. இதில் அரசு பாரபட்சம் காட்டுவதாக, எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

48 பக்கம்: இரண்டாவது குற்றப்பத்திரிகை 48 பக்கங்களைக் கொண்டதாக இருந்தது. அதில் கனிமொழி பற்றி குறிப்பிடும் போது, ஸ்பெக்ட்ரம் ஊழலின் பிரதான குற்றவாளியான ராஜாவுடன் அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்தார் என்றும், கலைஞர் "டிவி' துவக்கப்படுவதற்கு தீவிர பங்காற்றினார் என்றும், தொலைத்தொடர்புத் துறையை ராஜாவுக்கு திரும்பவும் கிடைக்கச் செய்ததில் மிக முக்கிய பங்கு வகித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல பல்வா, கோயங்கா உள்ளிட்ட பலரும் எவ்வாறு கலைஞர் "டிவி'க்கு தங்களது நிறுவனங்கள் மூலமாக லஞ்சப் பணத்தை அளிப்பதற்காக பல்வேறு முறைகேடான செயல்களில் ஈடுபட்டனர் என்றும் விளக்கப்பட்டுள்ளது. இரண்டாவது குற்றப்பத்திரிகையின் முகப்பில், சப்ளிமென்டரி-1 என்று கூறப்பட்டிருப்பதால், அடுத்தடுத்து துணை குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.

கனிமொழி மே 6ல் ஆஜர் : குற்றப்பத்திரிகையை ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து மாலையில் கூறுவதாக, 3.30 மணியளவில் நீதிபதி ஓ.பி.சைனி ஒத்தி வைத்துவிட்டு சென்றார். இதையடுத்து, மீண்டும் மாலை 5.45 மணியளவில், தனது தீர்ப்பை வழங்கிய நீதிபதி சைனி, கனிமொழிக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டார்.மேலும் அவரை, மே 6ம் தேதி, சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜராகும்படியும் தனது தீர்ப்பில் தெரிவித்தார். இதேபோல சரத்குமார், கரீம் மொரானி ஆகியோருக்கும் சம்மன் அனுப்பும்படி கூறினார். ராஜிவ் அகர்வாலையும், அசீப் பல்வாவையும் நாளை (இன்று)ஆஜர்படுத்தும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் கனிமொழிக்கு தொடர்பு: குற்றப்பத்திரிகையில் தகவல்: தயாளு பெயர் இல்லை

அரசு மீது தவறான புகார் தரும் அ.தி.மு.க. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. புகார் செய்துள்ளது.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையாளர் டாக்டர் எஸ்.ஒய்.குரேஷி, தேர்தல் ஆணையாளர்கள் வி.எஸ்.சம்பத், எச்.எஸ்.பிரமா மற்றும் தமிழக தேர்தல் ஆணையாளர் பிரவீண்குமார் ஆகியோருக்கு தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் முதல் எங்களுக்கு எதிராக தவறான அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதை அ.தி.மு.க. ஒரு வழக்கமாகவே கொண்டிருக்கிறது. இன்று (25.4.2011) காலை, அ.தி.மு.க. சார்பில் தேர்தல் கமிஷனிடம் புகார் ஒன்றினை அளித்திருப்பதாக செய்தித்தாள்கள் மூலம் எங்களுக்கு தெரியவந்துள்ளது. எங்கள் அரசைப் பற்றி பொதுமக்கள் அவதூறாக எண்ண வேண்டும் என்பதற்காக அவ்வாறு செயல்பட்டுள்ளனர் என்பது நன்றாகத் தெரிகிறது.

அதில் எங்கள் அரசு காபந்து அரசு' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது, தலைமைச் செயலகத்தை புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து, புதிய தலைமைச் செயலகத்திற்கு மாற்றிவிட்டதாக அந்தப் புகாரில் குறிப்பிடப் பட்டுள்ளது.

அத்துடன், அவ்வாறு தலைமைச் செயலகம் இடமாற்றம் செய்யப்படும் போது, முக்கிய கோப்புகள் பலவும் அழிக்கப்படுவதாகவும், எனவே பழைய தலைமைச் செயலகத்தை பாதுகாக்க மத்திய போலீஸ் படையின் துணையை நாடியிருப்பதாகவும் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான அவர்களின் புகார்கள் மிகவும் அபத்தமானது, தவறானதாகும். அத்துடன் ஒரு தீய நோக்கத்துடன் அந்தப் புகார்கள் அமைந் துள்ளன. அ.தி.மு.க.வினர் ஒரு சில முறை ஆட்சியில் இருந்துள்ள போதும், தற்போதைய அரசாங்கத்தை காபந்து சர்க்கார் என்று குறிப்பிட்டிருப்பது அவர்களுக்கு அரசியல் சட்டம் மற்றும் நிர்வாக சட்டங்களில் அவ்வளவாக அனுபவம் இல்லை என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

காபந்து சர்க்கார் என்றால், ஆளுநரின் வேண்டுகோளுக்கு இணங்க ஆட்சிக் காலம் முடிந்த பின்னரும் நீடிப்பது அல்லது பெருவாரியான ஆதரவை நிரூபிக்க தவறும் பட்சத்தில் அல்லது அதிக ஆதரவை நிருபிக்க காத்திருக்கும் நிலையில் தற்காலிகமாக தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க ஆளுநர் கேட்டுக்கொள்ளும் நிலையில் செயல்படுவதுதான். எங்களது அரசானது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று என்பதுடன் இந்த அரசின் ஆட்சிக் காலம் 2011 மே 14 ம் தேதி தான் முடிவடைகிறது.

புதிய தலைமைச் செயலக வளாகத்தை கடந்த ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சியில் திறந்து வைக்கப்பட்டதாகும்.

அப்போதிருந்தே, பல்வேறு கட்டங்களாக, அரசின் பல்வேறு துறைகள் புதிய தலைமைச் செயலகத்திற்கு இடம் மாறி வருகின்றன. அந்த நிலை தொடர்ந்து நீடிக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்னரே கூட, பொதுத்துறை, உள்துறை, பொதுப்பணித்துறை, தொழிற்துறை, சட்டமன்றப் பேரவை அலுவலகம், ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகள் புதிய தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வந்து கொண்டிருக்கின்றன.

அதுமட்டுமின்றி, புதிய தலைமைச் செயலகத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதும், பேரவையில் கவர்னர் உரை நிகழ்த்தியதும் நடைபெற்றுள்ளது. அமைச்சரவைக் கூட்டமும் ஏழு முறை நடைபெற்றுள்ளது. எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகளை எந்த வகையிலும் மீறாமல் மேற்கொள்ளப்படும் தொடர் நடவடிக்கைகள் தான் இவைகள்.

அத்துடன், முக்கிய கோப்புகளை இடம் மாற்றம் செய்யும் போது, அவைகள் அழிக்கப்படுவதாக தெரிவித்திருப்பது, மிகவும் அவதூறான ஒன்றாகும் என்பதோடு, அவைகள் தவறானதும், விஷமத்தனமானதுமாகும். இது ஆளும் கட்சியை மட்டுமின்றி ஒட்டுமொத்த அரசாங்கத்தையே குற்றம்சாட்டுவதாகும்.

இதுபோன்ற ஆதாரமற்ற நிலையில் தவறான புகார் அறிக்கை தருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும். மாநில தலைமைச் செயலகத்தை பாதுகாக்க மத்திய ரிசர்வ் காவல்படை அல்லது மத்திய பாதுகாப்புப் படையை கோருவது என்பது சரியானதாக இருக்காது. எனவே, நாங்கள் இத்தகைய புகார்களை கடுமையாக கண்டிக்கின்றோம். அந்தப் புகார் கடிதத்தில் கையெழுத்திட்ட நால்வர் மீதும், அவர்கள் சார்ந்த கட்சி மீதும் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. புகார்

தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு எதிராக செயல்பட்ட தி.மு.க.வினரை கட்சியில் இருந்து நீக்கி தலைமைக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளருக்கு எதிராக மாவட்ட துணை செயலாளர் ஆர்.சாந்தாமணி மற்றும் அவரது கணவர் எம்.ராமலிங்கம் ஆகியோர் கழகத் தோழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிற வகையிலும், கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால், தி.மு.க. உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

அதேபோல, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு எதிராக ஆவுடையார்கோயில் ஒன்றிய செயலாளர் உதயம் சண்முகம் எம்.எல்.ஏ., சிறுமருதூர் கிளை செயலாளர் மு.நரேந்திரஜோதி, ஆவுடையார்கோயில் ஒன்றிய பெருந்தலைவர் ராஜேஸ்வரி, சித்தக்கூர் கிளைச் செயலாளர் சிவமணி ஆகியோர் கழகத் தோழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிற வகையிலும், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், தி.மு.க. உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேர்தலில் எதிராக செயல்பட்ட திமுகவினர் கட்சியில் இருந்து நீக்கம்: தி.மு.க. தலைமைக் கழகம்

12 ஆண்டுகள் காத்திருந்த தி.மு.க., : தமிழகத்தின் மிகப் பெரிய கட்சியாகவும், ஆளும் கட்சியாகவும் பரிணமிக்கும் தி.மு.க., ஒரு காலத்தில், தேர்தல் கமிஷன் அங்கீகாரத்திற்காக காத்துக் கிடக்க வேண்டிய நிலையில் தான் இருந்தது. தி.மு.க., துவங்கி, 12 ஆண்டுகளில் 2 சட்டசபை தேர்தல்களில் பங்கேற்று, கணிசமான எம்.எல்.ஏ.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பே, அதற்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் வழங்கியது.
திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில், கடந்த 1949ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி கட்சி துவக்கப்பட்டது. கட்சியின் பொதுச் செயலராக அண்ணாதுரை ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சி தொடங்கிய குறைந்த காலத்திலேயே 50 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். கட்சியை வளர்க்க போராட்டங்கள் அவசியம் என்று உணரப்பட்டது.
இந்த நேரத்தில் ஆறாம் வகுப்பு வரை இந்தியை கட்டாய பாடமாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தி.மு.க., போராட்டம் நடத்தியது. போராட்டத்திற்கு பணிந்த காங்கிரஸ் அரசு, இந்தி கட்டாய பாடம் அல்ல என்று அறிவித்தது. தி.மு.க.,வின் முதல் போராட்டமே வெற்றி பெற்றது.
கட்சி சிறப்பாக வளர்ச்சி அடைந்து வந்தாலும், 1952ல் நடந்த தேர்தலில் தி.மு.க., போட்டியிடவில்லை. 1957ல் நடந்த சட்டசபை தேர்தலில் 124 இடங்களிலும் லோக்சபாவிற்கு 11 இடங்களிலும் தி.மு.க., போட்டியிட்டது. இதில் 15 சட்டசபை தொகுதிகளிலும், 2 லோக்சபா தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
இருந்த போதிலும், தி.மு.க.,வை தேர்தல் கமிஷன் அங்கீகரிக்கவில்லை. 1962ல் நடந்த தேர்தலில் தி.மு.க., 50 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் பின்னரே, தி.மு.க., கட்சியை தேர்தல் கமிஷன் அங்கீகரித்தது. கட்சி தொடங்கி 12 ஆண்டுகளுக்கு பின், தி.மு.க.,வை தேர்தல் கமிஷன் அங்கீகரித்தது.
காங்கிரசுக்கு மாற்றாக உருவாகி, ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., என புகழ்பெற்ற தலைவர்களை கொண்டிருந்தும், தேர்தல் அங்கீகாரத்திற்காக தி.மு.க., காத்திருந்ததை, மற்ற கட்சிகள் தங்களுக்கு உதாரணமாக எடுத்துக் கொண்டு, அரசியல் களத்தில் தொடர்ந்து எதிர்நீச்சல் போடலாம் என்பதை உணர்த்தியிருக்கிறது.

மறக்க முடியுமா

சென்னை ஏப். 15: வாக்குப் பதிவு நாளுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் ஒரு மாத கால இடைவெளி இருப்பதால் அரசு நிர்வாகம் எந்தப் பணியையும் செய்ய முடியாமல் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு என்று முதல்வர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தேர்தல் நடந்த நாள் ஏப்ரல் 13. வாக்குகளை எண்ணப்படவுள்ள நாள் மே 13. வாக்குகள் எண்ணப்பட்டு வாக்கு எண்ணிக்கை முடிய ஒரு நாள் ஆகும். முடிவுகள் மே 14-ம் தேதிதான் தெரியும். ஆனால் இப்போதுள்ள சட்டப்பேரவைக் காலம் மே 16-ம் தேதி முடிவுற்று அடுத்த சட்டப்பேரவை மே 17-ம் தேதி தொடங்கப்பட வேண்டும். எனவே மே 17-ம் தேதிக்குள் தமிழகத்தில் ஒரு புதிய அமைச்சரவை உருவாகியாக வேண்டும். இடையில் இருக்கின்ற நாள்கள் மே 15, மே 16 ஆகிய இரண்டு நாள்கள் மட்டுமே. அதற்குள் இத்தனை பணிகளையும் முடிக்க முடியுமா? ஆனால் முடித்தாக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் இதையெல்லாம் எண்ணிப் பார்க்காமல் இருந்திருக்குமா என்றால் நிச்சயம் எண்ணிப் பார்த்திருக்கும். எண்ணிப் பார்த்துவிட்டுதான் இந்தத் தேர்தல் தேதிகளை அறிவித்திருக்கின்றது.
மே 17-ம் தேதி புதிய சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும் என்றால் எதற்காக அவசர அவசரமாக ஏப்ரல் 13-ம் தேதியே தேர்தலை நடத்த வேண்டும். மேலும் சில நாள்கள் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் கால அவகாசம் கொடுத்து ஏப்ரல் மாதக் கடைசியிலோ அல்லது மே மாதத்தின் முதல் வாரத்திலோ அனைவரும் எதிர்பார்த்ததைப் போல தேர்தல் தேதியை அறிவித்திருக்கலாம் அல்லவா? இந்த கேள்விகளை நான் ஏற்கெனவே எழுப்பி உள்ளேன்.
இது ஒருபுறம் இருக்க, தமிழக மக்கள் அளித்த தீர்ப்புகள் மே 13-ம் தேதி வரை அறைகளிலே பத்திரமாகப் பூட்டி வைக்கப்பட்டு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதுவரை அரசின் சார்பில் எந்தவிதமான முக்கிய முடிவுகளும் எடுக்கப்படமாட்டாது, எடுக்கப்பட கூடாது. திடீரென ஏதாவது ஒரு முக்கிய முடிவு, கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுவிட்டால் அப்போது என்ன செய்வது? தேர்தல் ஆணையத்துக்கே வெளிச்சம்! அதிகாரிகளின் நிலை என்ன? திரிசங்கு சொர்க்கம் என்பார்களே அந்த நிலைதான்! இப்போதே பத்திரிகைகள் எல்லாம் தலைமைச் செயலகம் வெறிச்சோடி கிடப்பதாகவும் அதிகாரிகள் எல்லாம் குடும்பத்துடன் விடுமுறையில் செல்லவிருப்பதாகவும் செய்திகளை வெளியிட்டுள்ளன.
அது மாத்திரமல்ல, அரசு சார்பில் நாட்டில் நடைபெற்றாக வேண்டிய முக்கியமான பணிகள் எல்லாம் நிறைவேற்றப்பட வேண்டிய நேரம் இது. அந்தப் பணிகள் எல்லாம் முறையாக நடைபெற்றால் தான் ஜூன் மாதத்தில் தொடங்கவிருக்கும் தென்மேற்குப் பருவக்காற்று காலத்தின்போது வேளாண்மைப் பணிகளை ஒழுங்காகச் செய்திட முடியும். அதிகாரிகள் பராமரிப்புப் பணிகளை ஆய்வு கூட செய்யக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுரை கூறியுள்ளதாம். அதனால் அடிப்படைப் பணிகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலைமை உள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசும் அதன் அமைச்சர்களும் ஐந்தாண்டு காலத்துக்கு அதாவது மீண்டும் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் வரை அவர்களது பொறுப்புகளை நிறைவேற்ற தகுதி படைத்தவர்கள். ஆனால் அவர்களின் பணிகளை நிறைவேற்ற முடியாமல் தடுப்பது எந்த வகையில் நியாயமோ? சட்டம் படித்தவர்களும் தேர்தல் ஆணையமும்தான் இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையம் மீது கருணாநிதி மீண்டும் புகார்

திண்டுக்கல்: பெரியாரும் அண்ணாவும் எம்ஜிஆரும் பேசிய திமுக மேடைகளில் வடிவேலுவும் குஷ்புவும் பேசிக் கேட்க வேண்டிய கொடுமை வந்துவிட்டதே, என்றார் மதிமுக கொள்கைப் பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத்.

திண்டுக்கல்லில் நடந்த மதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு நாஞ்சில் சம்பத் பேசியது:

வரும் காலம் வைகோவின் காலம்!

தி.மு.க.,வால் அவமானப்படுத்தப்பட்ட எம்.ஜி.ஆர்.,திண்டுக்கல்லில்தான் முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலில் போட்டியிட விடாமல் அவமானப்படுத்தப்பட்ட ம.தி.மு.க.வின் முதல் கூட்டமும் இப்போது அதே திண்டுக்கல்லில் நடக்கிறது.

இதனால் வரும் காலம் வைகோவின் காலமாக மாறப்போகிறது. ம.தி.மு.க. உறுதி குலையாத இயக்கம். அ.தி.மு.க., தொண்டர்கள் மீது எங்களுக்கு கோபம் இல்லை. துரோகத்தை செய்த ஜெ., மீதுதான் எங்கள் கோபமெல்லாம்.

அ.தி.மு.கவிற்கு நாங்கள் உழைத்த உழைப்புக்கும், சிந்திய வியர்வைக்கும் எங்களுக்கு கிடைத்த பரிசு இதுதானா. நாங்கள் தனித்து நின்றால், பணம் வாங்கி விட்டு தனித்து நிற்பதாக எங்கள் மீது பழி வரும். ஊடகங்கள் குறை கூறும்.

கூட்டணியில் இல்லாத விஜயகாந்துக்கு 41 சீட், கூட்டணியில் இருந்து 7 ஆண்டுகள் உழைத்தவர்களுக்கு 12 சீட்டா?

பெரியார் ஈவெரா, அண்ணா, சிட்டிபாபு, பட்டுக்கோட்டை அழகிரி, எம்ஜிஆர், வைகோ பேசிய திராவிட மேடைகளில், இன்றைக்கு வடிவேலு, குஷ்பூ, ராதிகா, செந்தில், சிங்கமுத்து என்று பேசும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது.

தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் கொள்கையைச் சொல்லி ஓட்டுக்கேட்கவில்லை. இலவசங்களை சொல்லி ஓட்டுக்கேட்கிறார்கள்.

ஜாதிகளை ஒழிப்போம் என்று கூறி விட்டு, ஜாதிக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளனர். ம.தி.மு.க., இல்லாததால், அ.தி.மு.க.,வுக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காது. துரோகம் செய்தவர்கள் அதற்கான துரோகத்தை அனுபவித்தே தீருவார்கள்.

நாங்கள் தேர்தலில் நிற்காததால் அ.தி.மு.க., தொண்டர்களிடம் அனுதாபம், தி.மு.க.,தொண்டர்களிடம் கவுரவம், பொதுமக்களிடம் பரிவு கிடைத்துள்ளது. பார்த்துக் கொண்டே இருங்கள், மே13-ம் தேதிக்குப் பின் பல அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மதிமுகவுக்கு வருவார்கள்’’ என்றார்.

பெரியார், அண்ணா பேசிய மேடைகளில் வடிவேலு, குஷ்புவா!! - நாஞ்சில் சம்பத்

முக நூல்

Popular Posts