background img

புதிய வரவு

ஒருநாள் டீச்சரானார் ஸ்ரேயா

ஒருநாள் முதல்வர் போல் சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு ஒருநாள் டீச்சராக மாறி பாடம் நடத்தி அசத்தியுள்ளார் நடிகை ஸ்ரேயா.


மழை, கந்தசாமி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா. தன்னுடைய ஸ்லிம்மான உடலாலும், கவர்ச்சியாலும் ரசிகர்களை கிறங்கடித்துள்ள ஸ்ரேயா தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய திரையுலகை ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். இருந்தாலும் அவரால் முன்னணி நடிகையாக எந்த மொழியிலும் வரமுடியவில்லை.


இந்நிலையில் ஸ்ரேயா சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு ஒரு நாள் டீச்சராக வந்து, சினிமா துறைபற்றியும், திரைப்படங்கள் பற்றியும் அவர்களுக்கு விளக்கியுள்ளார். அப்போது மாணவர்களிடம் பேசிய ஸ்ரேயா, இன்றைய இளம் தலைமுறையினர் ஒரு விஷயத்தை தங்கள் வாழ்வில் கடைபிடிக்க வேண்டும். அதுஎன்ன‌வென்றால், முறையான அனுமதியின்றி ஒருவரது உரிமையை திருடக்கூடாது. அவ்வாறு திருடுவதால் அதனை சிலர் தவறான காரியங்களில் ஈடுபடுகின்றனர். ஆகவே மாணவர்கள் உரிமைதிருட்டை(காபிரைட் பைரசி) ஒழிக்க பாடுபட வேண்டும் என்று ‌அறிவுறுத்தினார். மேலும் இந்த சென்னை ஐ.ஐ.டி.யையும், இங்குள்ள சுற்றுச்சூழலையும் தன் வாழ்வில் மறக்க முடியாது என்றார். இடைஇடையே மாணவர்களின் கேள்விகளுக்கும் உடனடி பதிலளித்தார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts