இந்த நிலையில் சூடானில் 2 பெண்களை இவர் கற்பழித்ததாக புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து போலீசாரால் கைது செய்யப்பட்ட இவர் மீது கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஜுலியன் அசாங்கே குறித்து அவரது இணைய தளத்தில் பணிபுரிந்த முன்னாள் செய்தி தொடர்பாளர் டேனியல் டொம்ஸ்சிட்-பெர்க் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில் அசாங்கேவுக்கு உலகம் முழுவதும் காதலிகள் உள்ளனர். அவர்கள் மூலம் அவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே கற்பழிப்பு வழக்கில் சிக்கியுள்ள அசாங்கேவை தங்கள் நாட்டுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த சுவீடன் விரும்புகிறது. அதற்கான வழக்கு லண்டன் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை லண்டனில் உள்ள பெல் மார்ஷ் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கடந்த 3 நாட்களாக நடந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை வருகிற 24-ந் தேதி அறிவிப்பதாக மாஜிஸ்திரேட்டு தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment