background img

புதிய வரவு

Showing posts with label 2G. Show all posts

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் தி.மு.க. எம்.பி.யும், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மகளுமான கவிஞர் கனிமொழி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.

கனிமொழி மீதான கைது நடவடிக்கையின் காரணமாக, அரசியலில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கருணாநிதி தனது கோபாலபுரம் வீட்டில் நேற்று இரவு அவசர ஆலோசனை நடத்தினார்.

இதில், மத்திய மந்திரி மு.க.அழகிரி, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாராளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி, மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய மந்திரிகள், முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொறுப்பேற்று 3-வது ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு, பிரதமர் மன்மோகன்சிங் டெல்லியில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பாகவும், பொதுவான அரசியல் நிலவரம் குறித்தும் தி.மு.க. தலைவர் கருணாநிதி நீண்ட நேரம் விவாதித்ததாக தெரிகிறது. பிரதமர் மன்மோகன்சிங் அளிக்கும் விருந்தில் தி.மு.க. சார்பில் யாரும் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க போவதாக முதலில் தகவல்கள் வெளியாகின.

ஆனால், அந்த விருந்தில் தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி.யை மட்டும் கலந்து கொள்ள செய்வது என்று அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிய வந்தது.

மேலும், கனிமொழி எம்.பி.யை பார்க்கவும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசவும் கருணாநிதி நாளை (திங்கட்கிழமை) டெல்லி செல்வார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கருணாநிதி நாளை டெல்லி பயணம்

ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக டில்லி சி.பி.ஐ., கோர்ட்டில், தி.மு.க., எம்.பி.,க்கள் புடைசூழ கனிமொழி ஆஜரானார். அவருக்கு ஜாமின் வழங்கக்கோரி ஆஜரான பிரபல கிரிமினல் வக்கீல் ஜெத்மலானி, ""கனிமொழிக்கு இந்த விஷயத்தில் நேரடித் தொடர்பு இல்லை,'' என, வாதாடினார். நீதிபதி சைனி , ""இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை, இதே நிலை நீடிக்கும்,'' என்றார். இன்றும் வழக்கு விசாரணை நீடிப்பதால், கனிமொழிக்கு ஜாமின் கிடைக்குமா என்பது இன்றுதான் தெரியவரும்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் கனிமொழி, டில்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ., கோர்ட்டிற்கு நேற்று வந்திருந்தார். அவருடன், தி.மு.க., பார்லிமென்டரி கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு உட்பட 11 எம்.பி.,க்கள் வந்தனர். நீதிபதி சைனி முன்பாக வாதிட்ட வக்கீல் ராம்ஜெத்மலானி கூறியதாவது: கனிமொழிக்கு சம்மன் அனுப்பியாகி விட்டது. அவர் ரெகுலராக கோர்ட்டிற்கு வந்து வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறரா என்பதைத்தான் பார்க்க வேண்டும். உத்தரவாதம் பெற்று அவரை ஜாமினில் விடுக்க வேண்டும். ஜாமின் கேட்பது என்பது அவரது பிறப்புரிமை. சுப்ரீம் கோர்ட்டும் சரி, அலகாபாத் ஐகோர்ட் உள்ளிட்ட பிற கோர்ட்டுகளும் இதை ஏற்கனவே உறுதி செய்துள்ளன.

கலைஞர் "டிவி'யில், கனிமொழி வெறும் பங்குதாரர் மட்டுமே. அதுவும் பெரிய அளவிலான பங்குதாரரும் இல்லை. வெறும் 20 சதவீத பங்குகளை மட்டுமே வைத்துள்ளார். அதன்படி பார்த்தால், கலைஞர் "டிவி' சம்பந்தப்பட்ட எந்த ஒரு ஆவணங்களிலும் கனிமொழி கையெழுத்திடவில்லை. கலைஞர் "டிவி'யில் ஆரம்ப காலத்தில், கனிமொழி ஒரு இயக்குனராக இருந்தார். அதன்பின் அந்தப் பதவியில் இருந்தும் விலகி விட்டார். அதன்பிறகு "டிவி' தொடர்பான நடவடிக்கைகளில் அவர் பெரிதும் ஈடுபடவில்லை. கனிமொழி அப்பாவி. ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும், கனிமொழிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கலைஞர் "டிவி' தொடர்பான எந்த போர்டு மீட்டிங், ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்றதில்லை.

கலைஞர் "டிவி' உருவாவதற்கு அடித்தளமே கனிமொழி என்ற சி.பி.ஐ., யின் குற்றச்சாட்டு தவறானது. மேலும், ராஜா மூலமாக கலைஞர் "டிவி'க்கு ரூ.200 கோடி வந்தது என்று கருதப்பட்டாலும், அதில் கனிமொழிக்கு சம்பந்தம் என்ன இருக்கிறது. அந்தப் பணவரவு குறித்து எந்த ஆவணத்திலும் கனிமொழி கையெழுத்திடவில்லை. கலைஞர் "டிவி' பற்றி முடிவெடுத்தது சரத்குமார் பொறுப்பாகும். மரணதண்டனை மற்றும் ஆயுள் தண்டனை ஆகிய குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு வேண்டுமானால், இந்த ஜாமின் மறுக்கப்படலாமே தவிர, மற்ற வழக்குகளில் ஜாமின் வழங்குவது சாத்தியமானதே. அதிலும் கூட பெண்கள், நோயாளிகள், முதியவர்கள் போன்ற காரணங்களுக்காகவும் ஜாமின் வழங்க கோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளது. இவ்வாறு ராம்ஜெத்மலானி வாதிட்டார். கோர்ட் அறை முழுவதும் பெரும் கூட்டம் நிரம்பி இருந்தது. இவருக்கு பிறகு, சரத்குமார் ரெட்டியின் வக்கீல் அல்தாப், பல்வா வக்கீல் @பசினர். நேரம் ஆகிவிடவே தன் வாதங்களை நாளை (இன்று) வைப்பதாக சி.பி.ஐ., வக்கீல் லலித் கூறினார். அவரது வாதத்தை கேட்டபின் முடிவு எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில், நாளையும் (இன்று) தொடரும் என்று நீதிபதி சைனி அறிவித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

டில்லி கோர்ட்டில் கனிமொழி ஆஜர்: இன்றும் நீடிக்கிறது விசாரணை

சட்டசபை தேர்தலில், ஸ்பெக்ட்ரம் ஊழல் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை, தேர்தல் முடிவுகளில் இருந்து அறியலாம். ஆனாலும், எதிர்பார்த்த அளவுக்கு இந்த ஊழல் விவகாரம், பெரியளவில் எதிர்க்கட்சியினரின் பிரசாரத்தில் பேசப்படாதது பெரிய குறையாக விளங்குகிறது.

நாடு சுதந்திரமடைந்ததற்கு பின், நடந்த ஊழல்களில் மிகப்பெரிய இழப்பு ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தது ஸ்பெக்ட்ரம் ஊழல். இந்த ஊழல் மூலம் நாட்டிற்கு, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை துறை, பார்லிமென்டில் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டது.மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க.,வுக்கு, இந்த ஊழல் மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்தது. மத்திய அரசுக்கு ஆதரவு என்ற அஸ்திரத்தை கையில் எடுத்து, இப்பிரச்னையை தி.மு.க., அரசியல் ரீதியாக சமாளித்தது.

தமிழக சட்டசபை தேர்தலில் இந்த ஊழல் விவகாரம், எதிர்க்கட்சியினரின் பிரசாரத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,- தே.மு.தி.க., - கம்யூ., கட்சிகள் பிரசாரத்தில் இந்த ஊழலை குறிப்பிட்டாலும், மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துமளவுக்கு எடுத்துச் சொல்லவில்லை என்ற குறையுண்டு.

தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா பேசிய போது, "ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய கருணாநிதிக்கு, மக்கள் என்ன தண்டனை தரப்போகின்றனர் என்பதை நாடு எதிர்பார்க்கிறது' என குறிப்பிட்டார்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிரசாரத்தின் போது, "தி.மு.க.,வின் கொள்கையே டில்லி சிறையில் உள்ளது. அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலரான முன்னாள் மத்தியமைச்சர் ராஜா, ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி, சிறையில் உள்ளார்' என்றார்.
பா.ஜ., தலைவர் அத்வானி, திண்டுக்கலில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசியபோது, "ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளனர். என் அரசியல் வரலாற்றில், நேரு முதல் மன்மோகன் சிங் வரையிலான பிரதமர்களை பார்த்து விட்டேன். இந்த ஊழல் போல எந்த ஊழலையும் கண்டதில்லை' என்றார்.

பா.ஜ., முன்னாள் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் தனது தமிழக பிரசாரத்தின் போது, "ஸ்பெக்ட்ரம் ஊழல் சட்டசபை தேர்தலில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை, தேர்தல் முடிவுகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்' என்றார்.

மார்க்சிஸ்ட் மாநில செயலர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன் போன்றோர் இந்த ஊழல் குறித்து பிரசாரம் செய்தது, மக்களிடம் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.

தேர்தல் பிரசாரத்தில் பெரியளவில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் இழப்பு குறித்து, "அக்கு வேறு ஆணி வேறாக' அலசி யாரும் பேசவில்லை. தேர்தலுக்கு முன்பு இது குறித்து பேசிய வைகோ களத்தில் இல்லை. ஆளுங்கட்சி தரப்பில், இப்படியொரு ஊழல் பிரச்னை இல்லை என்பது போல், தி.மு.க., தலைவர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட யாரும், தங்களது பிரசாரத்தில் எந்த பதிலும் அளிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஸ்பெக்ட்ரம் என்ற வார்த்தையை தி.மு.க., தலைவர் தனது தேர்தல் பிரசாரத்தில் உச்சரிக்கவே இல்லை.

இப்பிரச்னை தேர்தலில் எதிரொலிக்குமா என்ற கேள்விகளுக்கு பதிலளித்து, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பேசியபோது, "ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து எந்த கட்சியுமே தேர்தலில் பேசவில்லை. நாங்கள் தி.மு.க., அரசு சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்கிறோம். எதிர் அணியினர் கருணாநிதியையும், குடும்பத்தினரையும் திட்டி ஓட்டு கேட்கின்றனர்' என்றார்.

அதே நேரத்தில், இந்த தேர்தலில் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது. புதிதாக ஓட்டுப் போட்ட, இளம் வாக்காளர்கள் மத்தியில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது. அதோடு, "ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை' என்று நினைக்கும் மேல்தட்டு வர்க்கத்தினரும், இந்த தேர்தலில் வரிசையில் நின்று ஓட்டளித்துள்ளனர்.ஓட்டுப்பதிவுக்கு முன்பாக, டில்லியில் ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே மேற்கொண்ட உண்ணாவிரதமும், தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த உண்ணாவிரத போராட்டம், ஊழலுக்கு எதிராக போராட வேண்டும் என்ற எண்ணத்தை பரவலாக ஏற்படுத்தியதும், தமிழகத்தில் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்கக் காரணம் என்ற கருத்தும் உள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியதா?

முக நூல்

Popular Posts