background img

புதிய வரவு

Showing posts with label a raja. Show all posts

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியைச் சந்திக்க முன்னாள் மத்திய அமைச்சர் ராசா விரும்புகிறாராம். இதற்காக சென்னை வர விரும்பும் அவர், கோர்ட் அனுமதி கோரி விண்ணப்பிக்கவுள்ளார். கிடைத்தவுடன் சென்னை வருவார் என்று தெரிகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கி கைதான முதல் நபர் ராசா. மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்து வந்த ராசா, இந்த வழக்கில் சிக்கி கைதான கனிமொழி உள்ளிட்ட அனைவரும் ஜாமீனில் விடுதலையாகி விட்ட நிலையில் கடைசி ஆளாக ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தார்.

ஏப்ரல் 15ம் தேதி ஜாமீனில் விடுதலையான ராசா, டெல்லியை விட்டு எங்கும் போகக் கூடாது என்று நிபந்தனையுடன் விடுதலையாகியுள்ளார்.எனவே தொடர்ந்து டெல்லியிலேயே தங்கியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது கருணாநிதியைச் சந்திக்க ராசா விரும்புகிறார். கருணாநிதிக்கு ஜூன் 3ம் தேதி பிறந்த நாள் வருகிறது. எனவே அன்று அவரை சந்தித்து வாழ்த்து கூறவும் ஆசி பெறவும் அவர் விரும்புவதாக தெரிகிறது. இதற்காக தான் சென்னைக்குச் செல்ல அனுமதி வேண்டும் என்று கோரி கோர்ட்டை அணுக அவர் திட்டமிட்டுள்ளாராம்.

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்து அவர் விடுதலையான போது சென்னைக்கு வந்த போது மிகப் பிரமாண்டமான வரவேற்பை திமுக அளித்தது. அதேபோல ராசாவும் சென்னைக்கு வரும்போது பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கருணாநிதியைச் சந்திக்க விரும்பும் ராசா... அனுமதி கோரி கோர்ட்டில் விண்ணப்பிக்கிறார்!

புதுடில்லி: கடந்த 3 மாத காலமாக ஜெயிலில் இருக்கும் மாஜி மத்திய அமைச்சர் ராஜா முதலில் சக கைதிகள் யாருடனும் சரியாக பேசாமல் இருந்து வந்தார். ஆனால் போக, போக சகஜமாக பழகிவிட்டார், காலை எழுந்தவுடன் வாக்கிங், மாலையில் பேட்மின்டன் என தமது ஜெயில் வாழக்கையை கடந்து வருகிறார். மற்ற கைதிகளை விட அது வேணும், இது வேணும் என அடம் பிடிக்கவில்லை என்றாலும் தனக்கு தமிழ் நாளிதழ் மட்டும் கண்டிப்பாக வாங்கித்தர வேண்டும் என கேட்டுக்கொண்டாராம். இதனை ஏற்று இவருக்கு ஜெயில் அதிகாரிகள் வாங்கி கொடுத்துள்ளனர். இவரது நடவடிக்கை முழு திருப்தி அளிப்பதாகவும் பெயர் சொல்ல விரும்பாத ஒரு ஜெயில் அதிகாரி கூறியுள்ளார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக தி.மு.க.,வின் மத்திய அமைச்சராக இருந்த ராஜா கடந்த பிப்ரவரி மாதம் 13 ம் தேதி திகார் ஜெயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவருடன் 12 பேர் தற்போது ஜெயிலில் உள்ளனர். இதில் ராஜா 9 வார்டு சிறையில் 1 ம் நம்பர் அறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது அன்றாட ஜெயில் வாழ்க்கை விவரத்தை ஒரு அதிகாரி கூறியுள்ளார். ராஜா நாள்தோறும் எவ்வாறு கழிக்கிறார் என்ற முழு விவரம் வருமாறு:

ராஜாவுடன் மாஜி போலீஸ் அதிகாரிகள் : இவருக்கு 15 க்கு 10 அளவு கொண்ட தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் 6 மணி வரை ஜெயில் வளாகத்தின் அனுமதிக்கப்பட்ட பகுதியில் வாக்கிங் செல்கிறார். பின்னர் நேராக ஜெயிலுக்கு வந்து நாளிதழ்கள் படிக்கிறார். மாலையில் சக நண்பர்களுடன் ஒரு மணி நேரம் பாட்மின்டன் ஆடுகிறார். இரவில் சரியான நேரத்தில் தூங்கி விடுவார்.

இவரது வார்டுக்கு உட்பட்ட சிறையில் பத்திரிகையாளர் சிவானி பத்கர் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக தண்டனை பெற்ற ஆர். கே., சர்மா, மற்றும் கன்னாட் துப்பாக்கிச்சூடு தொடர்பான குற்றத்தில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட உதவி கமிஷனர் எஸ். எஸ்., ரதி முக்கியஸ்தர்கள். ஏனைய 12 பேர் ஆயுள் உள்பட உயர்ந்த பட்ச தண்டனை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சக கைதிகளுக்கும் உணவு வழங்கும் ராஜா :முதலில் ராஜா ஜெயில் கைதிகளுடன் சகஜமாக பழகாமல் உம்மெனவே இருந்தார். ஆனால் போக, போக தனது விறைப்புத்தன்மையை குறைத்து சிரித்து பேசலானார். ராஜாவுக்கு வீட்டு பதார்த்தம் வழங்க கோர்ட் அனுமதி தந்திருப்பதால் வீட்டில் சுடச்சுட தயாரான பதார்த்தங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இட்லி, சாம்பார், வடை, பொங்கல், மதியம் சாம்பார், ரசம், தயிர் என வரும். முதலில் சிரிய டிபன்பாக்சில் வந்தது தொடர்ந்து அதன் அளவு உயர்த்தப்பட்டது. இவைகளை தங்களுடைய சக கைதிகளுக்கும் கொடுத்து சாப்பிட சொல்கிறார். ஜெயில் சாப்பாட்டை சில நாட்களாக சாப்பிட்டும் கொள்கிறார். மேலும் இங்குள் கேண்டீனில் ஸ்னாக்ஸ் அயிட்டங்கள் வாங்கி கொள்ள அனுமதி உண்டு. ஜெயிலில் இருக்கும் ராஜா எவ்வித தொந்தரவும் தருவதில்லை, மற்ற கைதிகளுடன் ஒப்பிடுகையில் அவர் மிக சிறந்தவராக உள்ளார். தமிழ் பத்திரிகை எனக்கு அவசியம் வாங்கித்தர வேண்டும் என கேட்டார். அதற்கு மட்டும் கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் ஒரு ஜெயில் அதிகாரி.

கனிமொழிக்கு இன்று ஜாமின் கிடைக்குமா ? : தி.மு.க., தலைவரும், முன்னாள் முதல்வருமான கனிமொழியின் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று டில்லி ஐகோர்ட்டில் வருகிறது. மொரானியின் மனுவும் விசாரணைக்கு வருகிறது.

வாக்கிங்- பேட்மின்டன் - சுவையான இட்லி சாம்பார்;ராஜாவின் ஜெயில் வாழ்க்கை குறிப்பு இது.,

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் தி.மு.க. எம்.பி.யும், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மகளுமான கவிஞர் கனிமொழி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.

கனிமொழி மீதான கைது நடவடிக்கையின் காரணமாக, அரசியலில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கருணாநிதி தனது கோபாலபுரம் வீட்டில் நேற்று இரவு அவசர ஆலோசனை நடத்தினார்.

இதில், மத்திய மந்திரி மு.க.அழகிரி, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாராளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி, மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய மந்திரிகள், முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொறுப்பேற்று 3-வது ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு, பிரதமர் மன்மோகன்சிங் டெல்லியில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பாகவும், பொதுவான அரசியல் நிலவரம் குறித்தும் தி.மு.க. தலைவர் கருணாநிதி நீண்ட நேரம் விவாதித்ததாக தெரிகிறது. பிரதமர் மன்மோகன்சிங் அளிக்கும் விருந்தில் தி.மு.க. சார்பில் யாரும் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க போவதாக முதலில் தகவல்கள் வெளியாகின.

ஆனால், அந்த விருந்தில் தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி.யை மட்டும் கலந்து கொள்ள செய்வது என்று அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிய வந்தது.

மேலும், கனிமொழி எம்.பி.யை பார்க்கவும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசவும் கருணாநிதி நாளை (திங்கட்கிழமை) டெல்லி செல்வார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கருணாநிதி நாளை டெல்லி பயணம்

ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கும் ஆ. ராசாவும், கனிமொழியும் விசாரணைக்காக இன்று காலை 10 மணிக்கு டெல்லியில் உள்ள பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள்.

Today Morning Kanimozhi and Raja in the court in Delhi at 10 am. In the Case of 2G Kanimozhi and Raja Pattiyala CBI sessions court.

ஆ.ராசா, கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜர்

ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கும் ஆ. ராசாவும், கனிமொழியும் விசாரணைக்காக இன்று காலை 10 மணிக்கு டெல்லியில் உள்ள பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள்.

Today Morning Kanimozhi and Raja in the court in Delhi at 10 am. In the Case of 2G Kanimozhi and Raja Pattiyala CBI sessions court.

டெல்லி: 2ஜி ஊழல் விவகாரத்தி்ல் கைதாகி சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா ஜாமீன் கேட்டு இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரது உதவியாளர் சந்தோலியா, டி.பி. ரியாலிட்டி நிறுவன இயக்குனர் பல்வா, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரியாரா ஆகியோரும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் 80,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சிபிஐ கடந்த 2ம் தேதி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மேலும் ஒரு குற்றப்பத்திரிக்கையை இந்த மாத இறுதியில் தாக்கல் செய்யவிருக்கிறது. இதற்கிடையே சிறையில் இருக்கும் ஆ.ராசா ஜாமீனில் விடுவிக்கக்கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இதேபோன்று பல்வா, சித்தார்த் பெகுரா, சந்தோலியா ஆகியோரும் ஜாமீன் கேட்டு தனித்தனியாக மனு கொடுத்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை விரைவில் நடைபெறவிருக்கிறது.

2ஜி வழக்கில் ஜாமீன் கேட்டு கார்பரேட் பிரமுகர்கள் மனு

2ஜி வழக்கி்ல் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் கார்பரேட் நிறுவன பிரமுகர்கள் ஜாமீன் கேட்டு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் மனு குறி்த்து பதில் அளிக்குமாறு சிபிஐயை நீதிமன்றம் கேட்டு்க் கொண்டுள்ளது.

ஸ்வான் டெலிகாம் நிறுவன இயக்குநர் வினோத் கோயங்கா, யூனிடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா மற்றும் ரிலையன்ஸ் ஏடிஏ குழுமத்தின் உயர் அதிகாரிகளான கௌதம் டோஷி, சுரேந்திர பிபாரா, ஹரி நாயர் ஆகியோர் இன்று முதன்முறையாக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

இந்நிலையில் சிபிஐ சிறப்பு வழக்கறிஞராக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள யு.யு.லலித் அவர்களுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.

ஜாமீன் மனுக்களுக்கு பதில் அளிக்க லலித் கால அவகாசம் கேட்டார். இதையடுத்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி் சைனி இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். மேலும், அன்று சிபிஐ பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

2ஜி ஊழல்: ஜாமீன் கேட்டு ராசா மனு-விரைவில் விசாரணை

வீடியோ கான்பரன் சிங்கில் கோளாறு ஏற்பட்டதால் ஆ.ராசா உள்பட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களது காவல் 31-ந்தேதிவரை நீடிக்கப்பட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, அவரது தனிச் செயலாளர் ஆர்.கே. சந்தோலியா, தொலை தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி கைது செய்யப்பட்டனர்.

ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாகித் பல்வா பிப்ரவரி மாதம் 2-ந் தேதி கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப்பின் 4 பேரும் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 4 பேருக்கும் வீடியோ கான்பரன்சிங் மூலம் சிறையில் இருந்தவாரே காவல் நீடிப்பு வழங்கப்பட்டு வந்தது.

நேற்று இவர்களின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி முன் ஆஜர்படுத்த செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் வீடியோகான் பரன்சிங் முறையில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ஆ.ராசா உள்பட 4 பேரும் டெல்லி பாட்டியாலா அவுஸ் நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் செல்வாக்குமிக்கவர்கள், அவர்களை விடுவித்தால் சாட்சியங்களை கலைத்து விடுவார்கள். எனவே அவர்களின் காவலை நீடிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து 4 பேரின் நீதிமன்றக் காவலையும் வருகிற 31-ந்தேதி வரை நீடித்து நீதிபதி உத்தர விட்டார்.

வீடியோ கான்பரன்சிங்கில் கோளாறு: ஆ.ராசா கோர்ட்டில் ஆஜர் 31-ந்தேதிவரை காவல் நீடிப்பு

சென்னை தேனாம் பேட்டை எல்லையம்மன் காலனியில் உள்ள 5-வது குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் சாதிக்பாட்சா. இவர் கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்னும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக இருந்தார். ஆ.ராசா குடும்பத்தினர் நடத்தி வந்த இந்த நிறுவனம் பிரமாண்டமான அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டி கொடுத்து வந்தது. 2ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா கைது செய்யப்பட்ட போது அவருக்கு நெருக்கமானவர்களிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அந்த வகையில் ஆ.ராசாவின் நண்பரான சாதிக்பாட்சாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் சாதிக் பாட்சாவின் கிரீன் புரமோட்டர்ஸ் நிறுவனத்தில் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி பங்குதாரராக இருந்ததாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக சாதிக் பாட்சாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். சாதிக்பாட்சாவை சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னையில் வைத்து விசாரணை நடத்தியது மட்டு மல்லாமல் டெல்லியில் தலைமை அலுவலகத்துக்கும் வர வழைத்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.

கடந்த சில வாரங்களில் பல தடவை அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து இருந்தனர். இன்று (புதன்கிழமை) அவரை விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ. அதி காரிகள் நோட்டீசு அனுப்பி இருந்தனர். இத்தகைய தொடர் விசாரணையால் அவர் மிகவும் வேதனை அடைந்து இருந்தார். இந்த நிலையில் இன்று மதியம் 1 மணிக்கு தேனாம் பேட்டையில் உள்ள அவரது வீட்டில் அவர் திடீரென தூக்கில் தொங்கினார்.

இதை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்து பார்த்து விட்டு உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். சாதிக்பாட்சா தற்கொலை சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய ஆ.ராசா நண்பர் சாதிக்பாட்சா `திடீர்' தற்கொலை

“இராசா இந்தத் (தொலைத் தொடர்புத்) துறை அமைச்சராகப் பொறுப்பேற்று செய்த குற்றம் என்ன என்று பார்த்தால், ஏழை. எளிய மக்களுக்கும் சேல்போனை கொண்டு சென்றதுதான” என்று தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான மு.கருணாநிதி, சென்னையில் நேற்று இரவு நடைபெற்ற தி.மு.க.பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விளக்கக் கூட்டத்தில் பேசியுள்ளார்.

இவ்வாறு கூறியதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. “செல்போன் பணக்காரர்களுக்கு மட்டும் சொந்தமானதாக இருந்தது. இப்போது நாற்று நடச் செல்லும் பெண்களும், தையல் வேலைக்குச் செல்லும் பெண்களும் செல்போனை பயன்படுத்துகிறார்கள். மிகக் குறைந்த விலையில், குறைந்த வாடகையில் செல்போன் பயன்படுத்துவதற்கான நிலையை ஏற்படுத்திய பெருமை இன்று டெல்லிச் சிறையில் வாடும் இராசாவிற்கு உண்டு” என்று பொருந்தாத புகழ் சூட்டி, இராசாவை தொடாமலேயே உச்சி மோந்துள்ளார் கருணாநிதி.

‘கேட்பவன் கேணையனாக இருந்தால், எதையுத் திரிப்பார்கள்’ என்ற சமீபகால பழமொழிக்கு இணங்க, எதிரில் கூடியிருக்கும் தன் கட்சித் தொண்டர்களின் சிந்தையறிந்து சிறப்பாக, உருக்கமாக பேசியுள்ளார் கருணாநிதி. அவருக்கு இதெல்லாம் வாய் வந்த கலை. ஓராண்டா, ஈராண்டா... 70ஆண்டுக்கால அரசியல் அனுபவமல்லவா?

தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்து 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு செய்து, அதனால் அத்துறைக்கு இராசா ஏற்படுத்திய இழப்பு 1.76 இலட்சம் என்று மத்திய அரசின் தலைமை கணக்காய்வாளர் மற்றும் தணிக்கையாளர் தனது அறிக்கையில் மிகத் தெளிவாகவே கூறியுள்ளார்.

“இவ்வளவு பெரிய முறைகேட்டை ஒரே ஒருவர் மட்டுமே செய்துவிட முடியுமா?என்று கேட்டு நம்மையெல்லாம் சிந்திக்க வைத்த தமிழ்நாட்டின் முதல்வர், இந்த முறைகேட்டால் எந்த ஏழை, எளிய மக்கள் பயன்பெற்றார்கள் என்று கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு குறித்து புலனாய்வு செய்துவரும் மத்திய புலனாய்வுக் கழகம், கடந்த புதன்கிழமை கைது செய்த முன்னாள் அமைச்சர் இராசாவையும், அவரோடு கைது செய்யப்பட்ட தொலைத்தொடர்பு முன்னாள் செயலர் சித்தார்த் பெஹூரியா, இராசாவின் தனிச் செயலர் ஆர்.கே.சண்டோலியா ஆகியோரையும் டெல்லி ம.பு.க. சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நிறுத்தியது.

அப்போது, இராசா உள்ளிட்ட அந்த மூவர் மீது உள்ள வழக்கு என்ன என்பதை நீதிபதி ஓ.பி.சைனிக்கு எடுத்துரைத்த ம.பு.க. வழக்குரைஞர் அகிலேஷ், “முதலில் வருபவருக்கு முதலில் உரிமம் என்ற கொள்கையை தவறாகப் பயன்படுத்தி, 2 ஜி அலைக்கற்றைகளை 2001ஆம் ஆண்டு விலையில் ஒதுக்கீடு செய்துள்ளனர். இதில் தங்களுக்குத்தான் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அந்த உரிமத்தைப் பெற்ற நிறுவனங்களுக்கு முன்பே தெரியும் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

ஆ.இராசா உதவிய முக்கியமான இரண்டு நிறுவனங்களை ம.பு.க.வழக்குரைஞர் நீதிமன்றத்திற்கு எடுத்துரைத்து, அதில் நடந்த முறைகேட்டினால் ஏற்பட்ட இழப்பைக் கூறியுள்ளார்.

ஏழைகளுக்கு உதவவா உரிமம் அளித்தார் இராசா?

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், சிபிஐ அலுவலகத்திற்கு நேற்று நான்காவது முறையாக வரவழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் ராசா.

விசாரணையின்போது பல கேள்விகளுக்கு பதிலளிக்காமல் இருந்ததால்,அவரை மாலை 3 மணியளவில் கைது செய்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த விவகாரத்தில் அவருடன் பணியாற்றிய தொலைத்தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெஹுரா, ராசாவின் தனிச் செயலர் ஆர்.கே. சந்தோலியா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் இன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அவர்களை 5 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு சிபிஐ வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி, ராசா உள்ளிட்ட மூன்று பேரையும் 5 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார

ராசாவை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் மத்திய புலனாய்வுக் கழகத்தால் கைது செய்யப்பட்டுள்ள மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.இராசா, தி.மு.க. பிரச்சார செயலர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

சென்னையிலுள்ள தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தொடங்கிய அக்கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி, கட்சியின் பிரச்சார செயலர் பொறுப்பில் இருந்து ஆ.இராசா விலகியுள்ளதை தெரிவித்துள்ளார்.

தி.மு.க. பிரச்சார செயலர் பொறுப்பில் இருந்து இராசா விலகல்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் மத்திய புலனாய்வுக் கழகத்தால் கைது செய்யப்பட்டுள்ள மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.இராசா, தி.மு.க. பிரச்சார செயலர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

சென்னையிலுள்ள தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தொடங்கிய அக்கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி, கட்சியின் பிரச்சார செயலர் பொறுப்பில் இருந்து ஆ.இராசா விலகியுள்ளதை தெரிவித்துள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் மத்திய புலனாய்வுக் கழகத்தால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆ.இராசா, பிரச்சார செயலர் பதவியில் இருந்த விலக முன்வந்ததை தி.மு.க. நிராகரித்துவிட்டது.

தி.மு.க.தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றுவரும் அக்கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில், தி.மு.க.வின் பிரச்சார செயலர் பொறுப்பில் இருந்து ஆ.இராசா விலக முன்வந்துள்ளதை அறிவித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவரது விலகலை கட்சியின் பொதுக் குழு ஏற்கவில்லை என்று கூறியுள்ளார்.

“கைது செய்யப்பட்டதாலேயே ஒருவர் குற்றவாளியாகிவிட மாட்டார்” என்பதால் அவருடைய விலகல் ஏற்கப்படவில்லை என்று பொதுக் குழு நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இராசா பதவி விலகல் ஏற்கபடவில்லை: தி.மு.க

தி.மு.க.வை சே‌ர்‌ந்த மு‌ன்னா‌ள் ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் ஆ.ராசா கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டதை தொட‌ர்‌ந்து பெர‌ம்பலூ‌ரி‌ல் அனை‌த்து கடைகளும அடை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.

2‌‌ஜி அலை‌க்க‌ற்றை முறைகேடு தொட‌ர்பாக மு‌ன்னா‌ள் ம‌த்‌திய தொலை‌த் தொட‌ர்பு‌த்துறை அமை‌ச்ச‌ர் ஆ.ராசா‌விட‌‌ம் இ‌ன்று காலை 4 வது முறையாக ‌விசாரணை நட‌த்‌தியது. இதை‌த் தொட‌ர்‌ந்து ராசா கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டதாக ‌சி.‌பி.ஐ அ‌‌றி‌வி‌த்தது.

இ‌ந்‌நிலை‌யி‌ல் ராசா‌ கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டதை தொட‌ர்‌ந்து அவரது சொ‌ந்த ஊரான பெர‌ம்பலூ‌ரி‌ல் அனை‌த்து கடைகளு‌ம் அடை‌க்க‌ப்ப‌ட்டன.

ஆ‌ட்டோக‌ள், பேரு‌ந்துக‌ள் உ‌ள்பட எ‌ந்த வாகனமு‌ம் இய‌க்க‌ப்பட‌வி‌ல்லை. பெர‌ம்பலூ‌ர் மாவ‌ட்‌ட‌ம் பத‌ற்றமாக காண‌ப்படுவதா‌ல் அச‌ம்பா‌வித ‌நிக‌ழ்வுக‌ள் ஏது‌ம் நட‌க்காம‌ல் தடு‌க்க மு‌க்‌கிய இட‌‌ங்க‌ளி‌ல் காவல‌ர்க‌ள் கு‌‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி டெ‌ல்ல‌ி‌யி‌ல் இரு‌ந்து ந‌ே‌ற்‌றிரவு செ‌ன்னை ‌திரு‌ம்ப‌ிய‌‌தை‌த் தொட‌ர்‌‌ந்து ராசா கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

ராசா கைது: பெர‌ம்பலூ‌‌‌ரி‌ல் கடையடை‌ப்பு

சென்னையில் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.இராசா கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து புலனாய்வு செய்துவரும் மத்திய புலனாய்வுக் கழகம், அலைக்கற்றை ஒதுக்கீட்டுடன் கூடிய உரிமம் வழங்கப்பட்டதில் வழி காட்டு நெறிமுறைகளும், நடைமுறை விதிகளும் சில நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வதில் மீறப்பட்டுள்ளதென கூறி, முன்னாள் அமைச்சர் ஆ.இராசா, தொலைத் தொடர்புத் துறை செயலராக இருந்த சித்தார்த் பெஹூரியா, இராசாவின் தனிச் செயலராக பணியாற்றிய ஆர்.கே.சண்டோலியா ஆகியோரை நேற்று கைது செய்தது. இன்று அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகின்றனர்.

இந்த நிலையில், தி.மு.க.வின் நிறுவனரான அமரர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு வந்த பின், தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.கருணாநிதி முன்னிலையில் அக்கட்சியின் பொதுக் குழு கூடுகிறது. எதிர்வரும் சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பாக விரிவாக அலசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு கட்சிக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை நீக்கும் பொருட்டு, ஆ.இராசா சட்டப்படியான நடவடிக்கைளில் இருந்து குற்றமற்றவர் என்று விடுதலையாகி வரும் வரை அவரை கட்சியிலிருந்து நீக்கி வைக்கும் முடிவு எடுக்கப்படும் என்று பரவலாக பேச்சு அடிபடுகிறது.

தி.மு.க. பொதுக் குழுவில் இன்று நிறைவேற்றப்படும் தீர்மானங்களை விளக்கி இன்று மாலை சென்னை சைதாப்பேட்டையில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கருணாநிதி உள்ளிட்ட அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் உரையாற்றுகின்றனர்.

தி.மு.க. பொதுக் குழு: இராசா நீக்கப்படுகிறார்?

ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட தொலைத்தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.இராசா, அத்துறை முன்னாள், இன்னாள் அதிகாரிகள் இருவர் ஆகியோர் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்று மத்திய புலனாய்வுக் கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

செல்பேசி சேவைக்கான 2ஆம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டுடன் கூடிய உரிமம் வழங்கப்பட்டதில் செய்யப்பட்ட முறைகேட்டின் காரணமாக அரசுக்கு ரூ.1.76 இலட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய அரசின் தலைமை கணக்காய்வாளர் மற்றும் தணிக்கையாளர் அறிக்கை அளித்தார்.

இந்த முறைகேடு தொடர்பாக 2009ஆம் ஆண்டு அக்டோபரில் வழக்கு தொடர்ந்த மத்திய புலனாய்வுக் கழகம், இந்த முறைகேட்டில தொடர்புடைய ‘அடையாளம் தெரியாது நபர்கள்’ (unknown persons) மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 120 பி (ஒன்று கூடி குற்றச் சதி செய்தது) கீழும், அதோடு இணைத்து ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 13 (1), 13 (2) ஆகிய பிரிவுகளின் மீதும் வழக்குப் பதிவு செய்தது.

இதனடிப்படையில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்து பதவி விலகிய ஆ.இராசா, தொலைத் தொடர்புத்துறை 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்தபோது அத்துறை செயலராக இருந்த சித்தார்த் பெஹூரா, இராசாவின் தனிச் செயலராக இருந்த ஆர்.கே.சண்டோலியா ஆகியோரை நேற்று கைது செய்தது.

இவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து விளக்கமளித்த ம.பு.க., “ஒன்றிணையந்த சேவைகள் நடத்த உரிமம் அளிப்பதில் நடைமுறையில் இருந்த வழிகாட்டுதல்களையும், முறைகளையும் மீறி, சில நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டுடன் கூடிய உரிமம் வழங்கிய முறைகேடு தொடர்பாக நடத்திய புலனாய்வில் கிடைத்த விவரங்களின் அடிப்படையில்” ஆ.இராசா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரும் இன்று டெல்லியில் பட்டியாலா இல்லத்தில் இயங்கும் ம.பு.க. சிறப்பு நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆ.இராசா இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திவரும் மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ), தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் அமைச்சர் ஆ.இராசா, அவரது சகோதரர் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்துள்ளது.

இன்று காலை 4 ஆவது முறையாக டெல்லியில் உள்ள ம.பு.க.அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஆ.இராசா கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ராசாவுடன் முன்னாள் தொலைத் தொடர்புத் துறைச் செயலர் சித்தார்த் பெகுராவும், ராசாவின் முன்னாள் தனிச்செயலர் ஆர்.கே.சந்தோலியா மற்றும் அவரது சகோதரர் பெருமாள் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக, இராசாவிடம் கடந்த டிசம்பர் 24,25 ஆம் தேதிகளிலும்,ஜனவரி 31 ஆம் தேதியும் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை நான்காவது முறையாக இராசாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில்,அவரும் அவரது உதவியாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 2ஜி ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கபப்ட்ட முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம்,தனது அறிக்கையை கடந்த திங்கட்கிழமையன்று மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் கபில்சிபலிடம் அளித்தது.

அதில் 2ஜி ஒதுக்கீட்டில் விதிமுறை மீறல்கள் இருந்ததாகவும்,இதற்கு காரணமாக சில அதிகாரிகள் மற்றும் ராசாவின் பெயர் இருந்ததாகவும் அப்போது செய்தி வெளியாகி இருந்தது.

இந்நிலையில் 2ஜி ஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றத்தின் நிர்ப்பந்தம் காரணமாகவே இராசாவை சிபிஐ கைது செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2ஜி முறைகேடு: இராசா உள்ளிட்ட 4 பேர் கைது

முக நூல்

Popular Posts