background img

புதிய வரவு

Showing posts with label Delhi. Show all posts

ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் இருவரும் கடந்த 20-ந்தேதி கைது செய்யப்பட்டனர்.

சி.பி.ஐ. சிறப்புக் கோர்ட்டு அவர்களது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததால், அவர்கள் இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்கள்.

கடந்த 10 நாட்களாக கனிமொழியும், சரத்குமாரும் ஜெயிலில் இருந்து வருகிறார்கள். ஸ்பெக்ட்ரம் வழக்கில் தங்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்கள் இருவரும் கடந்த 23-ந்தேதி டெல்லி ஐகோர்ட்டில் மனு செய்தனர். கனிமொழி தனது மனுவில், என் மீதான குற்றச்சாட்டுக்கள் தவறானவை.

கலைஞர் டி.வி.யில் நான் வெறும் பங்குதாரர்தான் எனக்கு பண பரிவர்த்தனையில் எந்த தொடர்பும் இல்லை. எனக்கு பள்ளி செல்லும் வயதில் மகன் இருக்கிறான். அவனை நான் கவனிக்க வேண்டும். எனவே மனிதாபிமான அடிப்படையில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

கனிமொழி மனுவுக்கு பதில் அளிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட்ட நீதிபதி பரிகோகே, அடுத்த விசாரணை 30-ந்தேதி நடைபெறும் என்று அறிவித்தார். அதன்படி டெல்லி ஐகோர்ட்டில் இன்று கனிமொழி, சரத்குமார் ஆகியோர் ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்தது. இதற்காக கனிமொழி, சரத்குமார் இருவரும் திகார் ஜெயிலில் இருந்து அழைத்து வரப்பட்டு டெல்லி ஐகோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

அப்போது கனிமொழியை ராஜாத்தி அம்மாள் சந்தித்துப் பேசினார். அவர் தன்னுடன் கனிமொழியின் மகன் ஆதித்யாவை அழைத்து வந்திருந்தார். கனிமொழியின் கணவர் அரவிந்தன் மற்றும் நடிகை குஷ்பு ஆகியோரும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். அவர்களுடன் கனிமொழி பேசிக்கொண்டிருந்தார். நீதிபதி பரிகோகே முன்னிலையில் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை மதியம் 2 மணி முதல் நடந்தது.

கனிமொழி சார்பில் ஆஜரான வக்கீல் மனுவில் கூறி இருப்பதை வலியுறுத்தினார். இதையடுத்து சி.பி.ஐ. சார்பில் வக்கீல் ஆஜராகி வாதாடுகிறார். கனிமொழி, சரத்குமார் இருவருக்கும் ஜாமீன் கிடைக்குமா? என்பது இன்று பிற்பகல் தெரியவரும். கரீம் மொரனிக்கு ஜாமீன் கிடைக்குமா என்பதும் இன்று தெரியும். டெல்லி ஐகோர்ட்டு வளா கத்தில் கடந்த புதன்கிழமை ஒரு குண்டு வெடித்தது.

இதனால் ஐகோர்ட்டு வளாகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோர்ட்டுக்கு வந்த அனைவரும் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். வழக்குக்கு தொடர்பு இல்லாத யாரும் கோர்ட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

பாதுகாப்பு அதிகாரி அனுமதித்த ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் மட்டுமே கோர்ட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டன.

டெல்லி ஐகோர்ட்டில் கனிமொழி ஜாமீன் மனு விசாரணை தொடங்கியது; ராசாத்தி அம்மாள் பேரனுடன் வந்தார்

புதுடில்லி : டில்லி ஐகோர்ட் வளாகத்தில் குண்டு வெடித்தது. வாயில் எண் 7 அருகே குண்டு வெடித்துள்ளது. உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. குண்டு வெடிப்புக்கான காரணமும் தெரியவில்லை. சம்பவ இடத்துக்கு 4 தீயணைப்பு வண்டிகள் விரைந்துள்ளன. பார்க்கிங் ஏரியா அருகே குண்டு வெடித்தது. பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போர்டு பிகோ காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பையில் குண்டு இருந்தது.

போலீஸ் ஆய்வு : குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் ஏ.டி.எஸ்., ( பயங்கரவாத தடுப்பு பிரிவு ) போலீஸ் மற்றும் டில்லி போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து போலீசார் இன்று மாலை முதல் தகவல் அளிப்பார்கள் என தெரிகிறது.

பாதுகாப்பு படையினர் சுற்றிவளைப்பு : சிறிய ரக குண்டு வெடித்ததை தொடர்ந்து டில்லி ஐகோர்ட் வளாகத்தில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

டில்லி ஐகோர்ட் வளாகத்தில் குண்டு வெடிப்பு

டெல்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழியும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியும் இன்று ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

மே 20ம் தேதி இவர்கள் இருவரும் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த சிறப்பு சிபிஐ கோர்ட் நீதிபதி ஓ.பி.ஷைனி, மனுக்களை நிராகரித்தார். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு உடனடியாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ளார் கனிமொழி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கனிமொழியும், சரத்குமாரும் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று மனு செய்தனர்.

ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் கனிமொழி, சரத்குமார் மனு

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் தி.மு.க. எம்.பி.யும், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மகளுமான கவிஞர் கனிமொழி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.

கனிமொழி மீதான கைது நடவடிக்கையின் காரணமாக, அரசியலில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கருணாநிதி தனது கோபாலபுரம் வீட்டில் நேற்று இரவு அவசர ஆலோசனை நடத்தினார்.

இதில், மத்திய மந்திரி மு.க.அழகிரி, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாராளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி, மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய மந்திரிகள், முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொறுப்பேற்று 3-வது ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு, பிரதமர் மன்மோகன்சிங் டெல்லியில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பாகவும், பொதுவான அரசியல் நிலவரம் குறித்தும் தி.மு.க. தலைவர் கருணாநிதி நீண்ட நேரம் விவாதித்ததாக தெரிகிறது. பிரதமர் மன்மோகன்சிங் அளிக்கும் விருந்தில் தி.மு.க. சார்பில் யாரும் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க போவதாக முதலில் தகவல்கள் வெளியாகின.

ஆனால், அந்த விருந்தில் தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி.யை மட்டும் கலந்து கொள்ள செய்வது என்று அந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிய வந்தது.

மேலும், கனிமொழி எம்.பி.யை பார்க்கவும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசவும் கருணாநிதி நாளை (திங்கட்கிழமை) டெல்லி செல்வார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கருணாநிதி நாளை டெல்லி பயணம்

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழி கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்துள்ள திமுக முன்னணித் தலைவர்கள் கருணாநிதி வீட்டில் குவிந்து ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில், தனது மகள் கனிமொழியை திஹார் சிறையில் பார்ப்பதற்காக தாயார் ராசாத்தி அம்மாள் டெல்லி விரைந்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியும் நாளை காலை டெல்லி செல்வதாக தகவல்கள் கூறுகின்றன.

முன்னதாக கனிமொழி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திமுக முன்னணித் தலைவர்கள் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள் வீட்டில் குவிந்தனர். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அவர்கள் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தினர்.

கனிமொழி கைது செய்யப்பட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ள திமுக, காங்கிரஸ் கூட்டணியிலிருந்தும், மத்திய அமைச்சரவையிலிருந்தும் விலகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதற்கு மேலும் பொறுமை காப்பதில் அர்த்தம் இல்லை என்ற எண்ணத்தில் திமுகவினர் உள்ளனர். விரைவில் திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுவைக் கூட்ட வேண்டும் என்று திமுக தலைவர்கள், கருணாநிதியிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கனிமொழி கைது குறித்து இதுவரை திமுக சார்பில் எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை. பெரும் அமைதியும், இறுக்கமான சூழ்நிலையும் காணப்படுகிறது.

திமுக எம்.பியான டி.கே.எஸ். இளங்கோவனிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு அவர் கோபமாக சென்று விட்டார். பதிலளிக்க மறுத்து விட்டார்.

இந்த இறுக்கமான சூழலில் தனது மகளைப் பார்ப்பதற்காக கருணாநிதி நாளை டெல்லி செல்கிறார். முன்னதாக இன்று மாலையில் ராசாத்தி அம்மாள் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

Rajathi Ammal went Delhi to meet daughter. DMK chief karunanithi also plan to go Delhi on tomorrow to meet kanimozhi. Kanimazhi arrested in the case of 2G spectrum cast

கனிமொழியைக் காண ராசாத்தி அம்மாள் விரைந்தார்-கருணாநிதியும் செல்கிறார்

கொல்கத்தாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் மனிதவள ஆலோசகராக பணிபுரிந்து வருபவர் சச்சின். இவரது மனைவி சித்ரா ராகவ். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். சித்ராவுக்கு அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் கூறி இருந்தனர். முதல் பிரசவம் என்பதால் சித்ராவை டெல்லியில் உள்ள அவரது தாய் வீட்டில் விட சச்சின் முடிவு செய்தார்.

நேற்று காலை 7.15 மணிக்கு அவர் சித்ராவை ஒரு விமானத்தில் டெல்லிக்கு அழைத்து சென்றார். விமானம் புறப்பட்ட 30 நிமிடத்தில் சித்ராவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அருகில் இருந்த கணவர் சச்சினிடம் இதுபற்றி சித்ரா கூறினார். ஆனால் பிரசவத்துக்கு டாக்டர்கள் குறிப்பிட்ட தேதிக்கு இன்னும் ஒரு மாதம் இருப்பதால், இது சாதாரண வலியாகத்தான் இருக்கும். பயப்பட தேவையில்லை என்று சச்சின், சித்ராவுக்கு ஆறுதல் கூறியபடி இருந்தார்.

8.30 மணியளவில் சித்ராவுக்கு தாங்க முடியாதபடி பிரசவ வலி ஏற்பட்டது. கதறி துடித்தார். அதிர்ஷ்டவசமாக அந்த விமானத்தில் மைதி-அர்பிதா என்ற டாக்டர் தம்பதிகள் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் யோசனைப்படி விமானத்தில் வால் பகுதிக்கு சித்ரா அழைத்து செல்லப்பட்டார். அங்கு தடுப்பு ஏற்படுத்தப்பட்டு சித்ராவுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. டாக்டர் அர்பிதா எந்த கருவிகளும் இல்லாத நிலையில், தன் அனுபவத்தை வைத்து ஒரு பிளேடு மற்றும் ஒரு ரப்பர் பேண்ட் உதவியுடன் பிரசவத்தை நடத்தி முடித்தார்.

அதனால் சித்ரா சிக்கிலின்றி அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். மற்ற பயணிகளும் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். காலை 9.30 மணிக்கு அந்த விமானம் டெல்லி விமான நிலையத்தில் தரை இறங்கியது. நடுவானில் விமானத்தில் குழந்தை பிறந்துள்ள தகவல் ஏற்கனவே டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்கள் ஆம்புலன்ஸ் வண்டியுடன் தயாராக நின்றனர். 9.30 மணிக்கு விமானம் தரை இறங்கியதும் சித்ராவையும், அவரது பெண் குழந்தையையும் டாக்டர்கள் ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

டெல்லியில் நடுவானில் விமானத்தில் குழந்தை பெற்ற பெண்

தி.மு.க., அமைச்சர்கள் ராஜினாமா கடிதங்களை அளிப்பது என முடிவே செய்து முடிக்கப்பட்டு, அதற்காக பிரதமர் அலுவலகத்தில் நேரம் ஒதுக்கப்பட்டு, தி.மு.க., அமைச்சர்கள், பிரதமர் அலுவலகத்திற்கு கிளம்புவதற்காக தயார் நிலையில் இருந்தனர். தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிவிடும் என்ற செய்தியும் உறுதிபடுத்தப்பட்ட நிலையில், கடைசி நேர திருப்பமாக, விரிசல் ஒட்ட வைக்கப்பட்டு கூட்டணி இறுதி செய்யப்பட்டது. 63 தொகுதிகள் காங்கிரசுக்கு என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்போது, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் உடன் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தி.மு.க., அமைச்சர்கள் ஆறு பேரும் டில்லியில் திங்கட்கிழமை காலை 11 மணிக்கே ராஜினாமா கடிதங்களை அளிக்க இருந்தனர். ஆனால், மாலையில் பிரதமர் நேரம் அளித்திருப்பதாக தி.மு.க., கூறியது. தி.மு.க., - காங்கிரஸ் இடையில் பலசுற்று பேச்சுவார்த்தையை தலைவர்கள் தொடங்கினர். மாலையில் முடிவு தெரியும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், மேலும் ஒருநாள் கால அவகாசம் காங்கிரஸ் கேட்டதாகவும், அதை ஏற்பதாகவும் தி.மு.க.,வே சென்னையிலிருந்து அறிவித்தது.

திங்களன்று இரவு சோனியாவின் இல்லத்திற்கு அழகிரியும் மற்றொரு தி.மு.க., அமைச்சரும் விரைந்தனர். ஆனால் அங்கு எதிர்பார்த்த வரவேற்பு இருந்த மாதிரி தெரியவில்லை. பொதுவாக ஒரு பிரச்னைக்காக யாரையாவது சோனியா சந்திக்கிறார் என்றால், இறுதி முடிவு எடுக்கப்படுவதாக மட்டுமே அர்த்தம். ஆனால், அன்றைய தின சந்திப்பின்போது, தங்களை சந்திக்க வந்த தி.மு.க., பிரதிநிதிகள் சந்திப்பின்போதுகூட சோனியாவின் பேச்சில் கடுமையும், காரசாரமும் நீடித்ததாக கூறப்படுகிறது. தவிர, பிரணாப் முகர்ஜியுடன் நடந்த மற்றொரு சந்திப்பின்போது, தன்னிச்சையாக தி.மு.க., தீர்மானம் நிறைவேற்றியது பற்றியும் காங்கிரஸ் தரப்பில் கடும் வருத்தம் தெரிவித்ததாகவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வருத்தம் தெரிவித்தாக வேண்டுமென்றும் காங்கிரஸ் வலியுறுத்தியதாக கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலையில் அழகிரி வீட்டில் தி.மு.க., அமைச்சர்கள் கூடினர். இருதரப்பும் பேச்சுவார்த்தை எதுவும் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்த சமயத்தில், அழகிரியும் இன்னொரு அமைச்சரும், நார்த் பிளாக்கில் உள்ள பிரணாப் முகர்ஜி அலுவலகத்திற்கு விரைந்தனர். 10 நிமிடங்கள் மட்டுமே அந்த சந்திப்பு நீடித்தது. இந்த சந்திப்புக்கு பிறகு இரு தரப்பிலிருந்தும் எந்தவொரு சாதகமான அறிகுறிகளும் வெளியாகவில்லை. காங்கிரஸ் தரப்பில் கடுமையான இறுக்கம் நீடித்தபடி இருந்தது. அழகிரி இல்லத்தில் கூடியிருந்த தி.மு.க., அமைச்சர்கள் ஒவ்வொருவராக கிளம்பி அவரவர் வீட்டிற்கு சென்று விட்டனர்.

அதன்பிறகுதான், கூட்டணியில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், இனி பேசிப்பயனில்லை என்றும், ராஜினாமா கடிதங்களை தி.மு.க., அமைச்சர்கள், பிரதமரிடம் அளிக்க புறப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. இதை தி.மு.க., மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு தரப்பு முக்கிய வட்டாரங்களுமே உறுதி செய்தன. அதற்கு ஏற்ப, பிரதமர் அலுவலகத்தில் விசாரித்தபோது தி.மு.க., அமைச்சர்கள் அனைவரும் பிரதமரை சந்திப்பதற்காக 5.30 மணிக்கு நேரம் கேட்டுள்ளனர். அவர்களுக்கு நேரமும் ஒதுக்கப்பட்டு இருந்தது. பார்லிமென்டில் வைத்து பார்ப்பதா அல்லது வீட்டிலேயே பார்ப்பதா என்பது மட்டுமே உறுதி செய்யவேண்டியிருந்தது. ராஜ்யசபாவில் பிரதமர் முக்கிய அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியிருந்ததே இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டது. பார்லிமென்டில் நிருபர்களை சந்தித்த கனிமொழியும், "முட்டுக்கட்டை நீடிக்கிறது' என்றே கூறினார்.

எந்நேரமும் ராஜினாமா கடிதங்களை எடுத்துக் கொண்டு அழகிரி இல்லத்தில் இருந்து அமைச்சர்கள் புறப்படலாம் என்ற செய்தியால், அழகிரி இல்லம் மற்றும் பிரதமர் இல்லம் முன்பாக மீடியாக்கள் குவிய ஆரம்பித்தன. மாலை 5 மணி வரை இந்த நிலையே நீடித்துக் கொண்டிருந்த சமயத்தில், அழகிரி இல்லத்தில் இருந்து தி.மு.க., அமைச்சர் பார்லிமென்டுக்கு விரைந்தார். அங்கு பிரணாப் முகர்ஜி அலுலகத்திற்கு வந்து சேர்ந்த அவரிடம், அங்கு அகமது படேல்,பிரணாப் முகர்ஜி, இ.அகமது ஆகியோர் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தனர். ஒரு மணி நேரம் அந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் இடையிலேயே பிரணாப் முகர்ஜி வெளியில் கிளம்பிச் சென்றார். பின், இ.அகமதுவும் எதுவும் கூறாமல் சென்றுவிட்டார்.

அறைக்குள் இருந்த தி.மு.க., அமைச்சரும், அகமது படேலும் உள்வாயில் வழியாக வெளியே கிளம்பி மீடியாக்களை தவிர்த்துவிட்டு பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் வெளியேறுவதற்கு என்றே உள்ள வாயில் வழியாக ரகசியமாக கிளம்பிச் சென்றனர். பின், 6.40 மணிக்கு சோனியா இல்லத்திற்குள் காரில் நுழைந்த தி.மு.க., தரப்பு இரண்டொரு நிமிடங்களுக்குள் வெளியே வந்தது. அப்போது அழகிரி உடன் இருக்க குலாம்நபி ஆசாத், "காங்கிரசுக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்' என்றார். இந்த அறிவிப்பை ஆசாத் வெளியிட்டபோது தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஒருவர்கூட உடன் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டில்லியில் நடந்த பரபரப்பு கிளைமாக்ஸ் காட்சிகள்

டெல்லியில் உள்ள தவுலா கான் என்ற இடத்தில் ராம்லால் ஆனந்த் கல்லூரி உள்ளது. இங்கு பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவி கஷ்பிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இன்று காலை கஷ்பிதா கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தார். கல்லூரிக்கு அருகே உள்ள நடைமேம்பாலத்தில் அவர் நடந்து வந்தபோது வாலிபர் ஒருவர் திடீரென அவர் முன்பு வந்து அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

இதில் குண்டு பாய்ந்து கஷ்பிதா ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து ஓடிவிட்டார். அவரை ராம்மனோகர் லோகியா ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார். கஷ்பிதாவை சுட்டக் கொன்றவர் யார்? காதல் விவகாரத்தால் கொல்லப்பட்டாரா? என்று தெரிய வில்லை. அவரை சுட்ட போது நடைபாலத்தில் ஏராளமானோர் நடந்து சென்று கொண்டிருந்தனர். துப்பாக்கி சத்தம் கேட்டதும் அனைவரும் அலறி அடித்து ஓடினார்கள்.

இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் தலைநகரம் டெல்லியில் கல்லூரி மாணவி கொல்லப்பட்டு இருப்பது குறிப்பிடத் தக்கது.

டெல்லியில் கல்லூரி மாணவி சுட்டுக்கொலை மர்ம மனிதன் தாக்குதல்

புதுடில்லி:"இந்தியாவில் உள்ள மற்ற நகரங்களை விட, தலைநகர் டில்லி மிகவும் பாதுகாப்பான நகரம்' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.லோக்சபாவில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கேள்வி நேரத்தின் போது, பதிலளித்து பேசியதாவது:தலைநகர் டில்லியில் நடக்கும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. போலீசாரின் கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக, சட்டம் ஒழுங்கு நிலை கட்டுக்குள் உள்ளது.
உலக அளவில் குற்றச் செயல்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது, 1 லட்சம் மக்களின் அடிப்படையில், டில்லியில், 2001ல், 392.66 ஆக இருந்த குற்றச் செயல்களின் குறியீட்டு எண், 2010ல், 281.34 ஆக குறைந்துள்ளது.எனினும், அரசு அளித்துள்ள புள்ளிவிவரத்தின் அடிப்படையில், 2009ல், 425 ஆக இருந்த பாலியல் வன்முறை வழக்குகள், 2010ல், 458 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் மட்டும், 17 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன.இந்தியாவில் உள்ள மற்ற நகரங்களைக் காட்டிலும், தலைநகர் டில்லி மிகவும் பாதுகாப்பான நகரம்.
இங்கு, பாதுகாப்பை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. அதிக எண்ணிக்கையில் போலீஸ் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. போலீஸ் வாகனங்கள், ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிக இடங்களில் போலீஸ் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன.அரியானா, உத்தர பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடன் இணைந்து, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்.

டில்லி மிகவும் பாதுகாப்பான நகரம்:உள்துறை அமைச்சர் பெருமிதம்

டெல்லியில் உள்ள பகர் கஞ்ச் ரெயில் நிலையத்திற்கு நேற்று காலை 2 பேர் கறுப்பு நிற பை (பேக்) ஒன்றை தூக்கி வந்தனர். பின்னர் அதை 3-ம் நம்பர் பிளாட்பாரத்தில் வைத்து விட்டு சென்று விட்டனர்.

மாலை வரை அந்த “பேக்” அங்கேயே இருந்ததால் ரெயில்வே ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் கூடுதல் இணை கமிஷனர் பைரோன்சிங் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர்.

அவர்கள் பேக்கை திறந்த போது அதில் 22 வயது மதிக்கத்தக்க இளம் பெண் பிணம் இருந்தது. அதன் கழுத்தில் கத்தி குத்து காயம் இருந்தது. இடது கையில் ஒரு வெட்டுக்காயம் இருந்தது. கைகள் கட்டப்பட்டிருந்தது. இரண்டு தலையணைகளும் பிணத்துடன் வைக்கப்பட்டிருந்தது.

இதுபற்றி பைரோன்சிங் கூறும் போது, கொலையாளிகள் காலை வேளையில் பேக்கை இங்கு வைத்து விட்டு சென்றுள்ளனர். அவர்கள் யார் என்பதை கண்காணிப்பு கேமராவை பார்த்தால் தெரிந்து விடும் எப்படியும் ஒரிரு நாளில் கொலையாளிகளை பிடித்து விடுவோம் என்றார்.

டெல்லி ரெயில் நிலையத்தில் பையில் அடைக்கப்பட்ட இளம் பெண் பிணம்; மர்ம கும்பலுக்கு வலைவீச்சு

டெல்லியில் உள்ள பகர் கஞ்ச் ரெயில் நிலையத்திற்கு நேற்று காலை 2 பேர் கறுப்பு நிற பை (பேக்) ஒன்றை தூக்கி வந்தனர். பின்னர் அதை 3-ம் நம்பர் பிளாட்பாரத்தில் வைத்து விட்டு சென்று விட்டனர்.

மாலை வரை அந்த “பேக்” அங்கேயே இருந்ததால் ரெயில்வே ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் கூடுதல் இணை கமிஷனர் பைரோன்சிங் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர்.

அவர்கள் பேக்கை திறந்த போது அதில் 22 வயது மதிக்கத்தக்க இளம் பெண் பிணம் இருந்தது. அதன் கழுத்தில் கத்தி குத்து காயம் இருந்தது. இடது கையில் ஒரு வெட்டுக்காயம் இருந்தது. கைகள் கட்டப்பட்டிருந்தது. இரண்டு தலையணைகளும் பிணத்துடன் வைக்கப்பட்டிருந்தது.

இதுபற்றி பைரோன்சிங் கூறும் போது, கொலையாளிகள் காலை வேளையில் பேக்கை இங்கு வைத்து விட்டு சென்றுள்ளனர். அவர்கள் யார் என்பதை கண்காணிப்பு கேமராவை பார்த்தால் தெரிந்து விடும் எப்படியும் ஒரிரு நாளில் கொலையாளிகளை பிடித்து விடுவோம் என்றார்.

புதுடெல்லி: மீரட்டில் இருந்து டெல்லிக்கு அதிநவீன விரைவு ரயிலை இயக்க உ.பி. மாநில அரசு முடிவு செய்துள்ளது. டெல்லியின் ஆனந்த் விகார் ரயில் நிலையத்தில் இருந்து மீரட்டிலுள்ள பல்லவ்புரம் வழியாக பேகம்புல் ரயில் நிலையம் வரையில் இந்த ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 100 கி.மீ. வேகத்தில் இயக்கப்படவுள்ள இந்த ரயில் மீரட்டிலிருந்து ஒரு மணிநேரத்தில் டெல்லியைச் சென்றடைந்து விடும். இந்த ரயில் திட்டத்தை இறுதி செய்வதற்கான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் மாநில தலைமைச் செயலாளர் அதுல் குமார் குப்தா தலைமையில் இன்று லக்னோவில் நடக்கிறது. திட்டத்தை நிறைவேற்றுவதற்கான வியூகங்களும் கூட்டத்தில் வகுக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெல்லி- மீரட் அதிவேக ரயில்

புதுடில்லி : ஆந்திர அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேற்று சந்தித்து பேசிய பின், தனது கட்சியை, காங்கிரசுடன் இணைக்கப் போவதாக நடிகர் சிரஞ்சீவி அறிவித்தார். இது காங்கிரசுக்கு பெரும் சாதகமாகும்.ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அக்கட்சியின் கிரண்குமார் ரெட்டி, முதல்வராக உள்ளார். முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன், ஜெகன்மோகன் ரெட்டி, காங்கிரஸ் மேலிடத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார். மாநிலத்தில், காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கப் போவதாகவும் அவர் கூறி வருகிறார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் அவருக்கு ஆதரவு அளிக்கின்றனர்.
இவர்கள் காங்கிரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற்றால், ஆட்சி கவிழ்ந்து விடும். விரைவில் தனிக் கட்சி துவங்கப் போவதாகவும் ஜெகன் மோகன் ரெட்டி கூறி வருகிறார். மேலும், தெலுங்கானா விவகாரத்திலும், காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தி அணி உருவாகியுள்ளது. இந்த இரண்டு பிரச்னைகளாலும், ஆந்திராவில் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் மேலிடமும் இதுகுறித்து கவலைப்பட்டது. இந்த எதிர்ப்புகளை முறியடிக்க வேண்டுமானால், நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சியை, தங்களுடன் இணைத்துக் கொள்வது அல்லது கூட்டணியில் சேர்த்துக்கொள்வது என, முடிவு செய்தனர்.
சிரஞ்சீவி கட்சிக்கு 18 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்கள் ஆதரவு அளித்தால், ஜெகன் மோகன் ரெட்டியின் எதிர்ப்பை எளிதாக சமாளித்து விடலாம் என, காங்., மேலிடம் திட்டமிட்டது. இந்நிலையில், கடந்த வாரம் ஐதராபாத்துக்கு வந்த, ராணுவ அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான அந்தோணி, சிரஞ்சீவியுடன் இதுகுறித்து பேச்சு நடத்தினார். அப்போது இது தொடர்பாக விரிவாக பேச்சு நடத்த டில்லிக்கு வரும்படி, சிரஞ்சீவிக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
சோனியாவுடன் சந்திப்பு: இந்த விவகாரத்தில் நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டது. நேற்று டில்லி சென்ற சிரஞ்சீவி, காங்கிரஸ் தலைவர் சோனியாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். கட்சியின் ஆந்திர மாநில பொறுப்பாளர் வீரப்ப மொய்லி, ராணுவ அமைச்சர் அந்தோணி ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது, ஆந்திர மாநில அரசியல் நிலவரம் குறித்து, இரு தரப்பிலும் பேசப்பட்டது. சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் நடிகர் சிரஞ்சீவி கூறுகையில்,"பிரஜா ராஜ்யம் கட்சியை, காங்கிரசுடன் இணைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நாள், வரலாற்றில் மிக முக்கியமான நாளாக அமைந்து விட்டது. ஆந்திர மக்களின் நலன் கருதி, இந்த முடிவை எடுத்துள்ளேன். ஆந்திர அமைச்சரவையில் நான் சேரப்போவதாக வெளியான தகவல் உண்மை அல்ல' என்றார்.
சிரஞ்சீவியின் இந்த அறிவிப்பு குறித்து, ஆந்திர அரசியல் வட்டாரங்கள் கூறுகையில்,"பிரஜா ராஜ்யம் கட்சியை, காங்கிரசுடன் இணைக்கும் விழா, விரைவில் பிரமாண்டமாக நடக்கவுள்ளது. சிரஞ்சீவிக்கு, மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும், தற்போது அவரது கட்சியில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள், சிலர் ஆந்திர அமைச்சர்களாகவும் வாய்ப்பு உள்ளது. இந்த இணைப்பு மூலம், ஜெகன் மோகன் ரெட்டியின் எதிர்ப்பை, காங்கிரஸ் மேலிடம் எளிதாக சமாளித்து விடும்' என்றன.
இரண்டே ஆண்டுகளில் சிரஞ்சீவி கட்சி காணோம் : "ஆந்திராவில், காங்கிரஸ், தெலுங்கு தேசம் போன்ற கட்சிகளுக்கு மாற்றாக, ஒரு கட்சியை உருவாக்கபோகிறேன்' என்ற முழக்கத்துடன், கடந்த 2008ல் பிரஜா ராஜ்யம் கட்சியை துவக்கினார், சிரஞ்சீவி. திருப்பதியில் நடந்த கட்சியின் துவக்க விழாவில், பத்து லட்சம் பேர் திரண்டனர். இதனால், ஆந்திர அரசியலில் சிரஞ்சீவி கட்சிக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கடந்த 2009ல் நடந்த சட்டசபை தேர்தலில் பிரஜா ராஜ்யம் கட்சி, அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது. 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
சிரஞ்சிவி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றார். லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளில் இந்த கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். ஆனால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இதனால், கட்சியின் செல்வாக்கு குறைந்தது. தொடர்ந்து, தனியாக கட்சி நடத்த முடியாமல் திணறி வந்த சிரஞ்சீவி, தற்போது காங்கிரசுடன் கட்சியை இணைக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதனால், துவங்கிய இரண்டு ஆண்டுகளிலேயே, பிரஜா ராஜ்யம் கட்சி காணாமல் போய்விட்டது.

காங்கிரசில் இணைந்தார் சிரஞ்சீவி : டில்லியில் அறிவிப்பு

நாடெங்கும் வெங்காய விலை அதிகரித்துள்ளதால் பொது மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். வெங்காயத்தை சமயலில் பயன்படுத்துவதை தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கிலோ வெங்காயம் ரூ.60லிருந்து 75 வரை விற்கப்பட்டது.
 
டெல்லியில் கூட்டுறவு கடைகளில் மார்க்கெட் விலையைவிட 20 சதவீதம் குறைத்து கிலோ ரூ.35க்கு விற்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. டெல்லியில் பொது மார்க்கெட்டுகளிலும் வெங்காயம் விலை ரூ.40-ல் இருந்து 60 வரை விற்கப்படுகிறது.  
 
கூட்டுறவு கடைகளில் தினந்தோறும் 50 முதல் 100 டன் வெங்காயம் விற்கப்படுகிறது. நடமாடும் வாகனங்களிலும் பொது மக்கள் சிரமமின்றி வெங்காயம் வாங்க ஏற்பாடு செய்துள்ளது. மத்திய மந்திரி சபை செயலாளர் கே.எம்.சந்திர சேகர் தலைமையில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில் மார்க்கெட் விலையை விட 20 சதவீதம் தள்ளுபடியில் விற்க முடிவு எடுக்கப்பட்டது.
 
மராட்டியம், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்து பொது மக்களுக்கு நியாய விலையில் விற்கப்படுகிறது. மேலும் இறக்குமதி செய்வதாலும் ஏற்றுமதிக்கு தடை விதித்திருப்பதாலும் வெங்காய விலை குறுகிய காலத்தில் குறைந்துள்ளது.
 
டெல்லியில் கூட்டுறவு கடைகளில் மார்க்கெட் விலையை விட 20 சதவித தள்ளுபடி விலையில் விற்பது போன்று மற்ற மாநிலங்களில் விற்பதற்கும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.   வெங்காயத்தை தள்ளுபடி விலையில் விற்பதால் டெல்லி கூட்டுறவு நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிக்கட்ட மாதம் ரூ.5 கோடி நிதியை மத்திய அரசு வழங்குகிறது.
 
வருகிற 15-ந் தேதிக்கு பிறகு வெங்காய விலை மேலும் குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்

டெல்லியில் ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை

முக நூல்

Popular Posts