background img

புதிய வரவு

Showing posts with label Australia. Show all posts

உலககோப்பை கிரிக்கெட் கால் இறுதி போட்டியில் இன்று ஆமதாபாத்தில் நடைபெறும் 2-வது ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன் படி தொடக்க வீரர்களாக வாட்சன்,ஹாடின் களம் இறங்கினர் இருவரும் முதலிலே அதிரடியாக விளையாடி வந்தனர். அஸ்வின் வீசிய 10-வது ஓவரில் வாட்சன் 25 ரன் அடித்திருந்தபோது போல்டு ஆனார். அப்போது ஸ்கோர் 40 ரன்னாக இருந்தது.

அதன் பின் வந்த கேப்டன் பாண்டிங் பொறுப்புடன் விளையாடி வந்தார் 18 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 1 விக்கெட்டை இழந்து 86 ரன்கள் எடுத்திருந்தது. பாண்டிங் 20 ரன்னுடனும் ஹாடின் 38 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

உலக கோப்பை கால்இறுதிப்போட்டி: ஆஸ்திரேலியா பேட்டிங்

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பிசினெஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப கல்லூரியில் இந்தியாவைச் சேர்ந்த தோஷா தாக்கர் என்ற மாணவி படித்து வந்தார். கடந்த 11-ந் தேதி காலை மெல்போர்ன் மெடவ்பேங் கால்வாய் அருகே ஒரு சூட்கேஸ் ஒதுங்கி கிடந்ததை கட்டிட ஊழியர் ஒருவர் பார்த்தார்.

அந்த சூட்கேசுக்குள் பெண் பிணம் இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்துப் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பார்த்தனர். சூட்கேசுக்குள் பிணமாக கிடந்தது கல்லூரி மாணவி தோஷா தாக்கர் என்பது தெரிய வந்தது.

அவள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரை யாரோ கற்பழித்து கொன்று பிணத்தை சூட்கேசுக்குள் வைத்து கால்வாயில் வீசியது விசாரணையில் தெரிய வந்தது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவர் எப்படி கொல்லப் பட்டார் என்பது தெரிய வரும்.

கடந்த 9-ந்தேதி தாக்கரை அவரது நண்பர்கள் பார்த்தது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் அதன் பிறகுதான் அவள் கொல்லப்பட்டு இருக்கலாம். இதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை.

இதனிடையே இந்திய மாணவி கற்பழித்து கொல்லப்பட்டது தொடர்பாக 19 வயதான டேனியல் ஸ்டானி ரெசினால்டு என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றார்கள். அவருக்கு ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுத்துவிட்டது.

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவி கற்பழித்துக் கொலை; பிணத்தை சூட்கேசுக்குள் அடைத்து கால்வாயில் வீசிய கொடூரம்

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவை மீண்டும் சூறாவளி புயல் தாக்கியுள்ளது. கடற்கரையோர பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன; ஏராளமான பயிர்கள் நாசமாகியுள்ளன. ஆஸ்திரேலியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் பெய்த பலத்த மழையால், குயின்ஸ்லாந்து உள்ளிட்ட மாகாணங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதன் பாதிப்பு இன்னும் நீங்காத நிலையில் மீண்டும் யாசி என்ற புயல், குயின்ஸ்லாந்து மாகாணத்தை தாக்கி சின்னாபின்னப்படுத்தியுள்ளது.
பலத்த சத்தத்துடன் சுழன்று வீசிய புயலால், டுலி, மிஷன் பீச், கார்டுவெல், கெய்ர்ன்ஸ், டவுன்ஸ்வில்லி ஆகிய பகுதிகளில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. இப்பகுதிகளில் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. மின் மற்றும் தொலைபேசி ஒயர்கள் அறுந்து விழுந்து கிடக்கின்றன. இதனால், இப்பகுதியில் இரண்டு லட்சம் வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. புயல் குறித்த எச்சரிக்கை தொடர்ந்து விடப்பட்டதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. புயலில், சாலையில் உள்ள சிக்னல் கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மழை பாதிப்புக்கு பின் சூறாவளி : ஆஸ்திரேலியா தவிப்பு

முக நூல்

Popular Posts