background img

புதிய வரவு

மழை பாதிப்புக்கு பின் சூறாவளி : ஆஸ்திரேலியா தவிப்பு

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவை மீண்டும் சூறாவளி புயல் தாக்கியுள்ளது. கடற்கரையோர பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன; ஏராளமான பயிர்கள் நாசமாகியுள்ளன. ஆஸ்திரேலியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் பெய்த பலத்த மழையால், குயின்ஸ்லாந்து உள்ளிட்ட மாகாணங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதன் பாதிப்பு இன்னும் நீங்காத நிலையில் மீண்டும் யாசி என்ற புயல், குயின்ஸ்லாந்து மாகாணத்தை தாக்கி சின்னாபின்னப்படுத்தியுள்ளது.
பலத்த சத்தத்துடன் சுழன்று வீசிய புயலால், டுலி, மிஷன் பீச், கார்டுவெல், கெய்ர்ன்ஸ், டவுன்ஸ்வில்லி ஆகிய பகுதிகளில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. இப்பகுதிகளில் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. மின் மற்றும் தொலைபேசி ஒயர்கள் அறுந்து விழுந்து கிடக்கின்றன. இதனால், இப்பகுதியில் இரண்டு லட்சம் வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. புயல் குறித்த எச்சரிக்கை தொடர்ந்து விடப்பட்டதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. புயலில், சாலையில் உள்ள சிக்னல் கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts