background img

புதிய வரவு

Showing posts with label Billa-2. Show all posts

அஜீத் நடித்துள்ள பில்லா 2 படம் வரும் ஜூலை 13-ம் தேதி வெளியாவதாக படத்தின் தயாரிப்பாளர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் மட்டும் 500 க்கும் மேற்பட்ட அரங்குகளில் படம் வெளியாகிறது.
இந்தப் படத்தின் ரிலீஸ் கடந்த மே மாதத்திலிருந்தே இதோ அதோ என இழுத்தடித்துக் கொண்டிருந்தது. சில தினங்களுக்கு முன் படம் சென்சார் செய்யப்பட்டபோது, ஏ சான்று கொடுத்துவிட்டனர். ஏராளமான காட்சிகளை வெட்டியும் விட்டனர்.
இதனால் பட வெளியீடு திட்டமிட்டபடி ஜூன் 21-ம் தேதி நடக்கவில்லை. மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளிப்போய்விட்டது.
இந்த நிலையில், படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
“ஆவலுடன் எதிர்ப்பார்த்த தல ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க வருகிறது பில்லா 2. அனைத்து வேலைகளும் முடிந்து பக்கா ஆக்ஷன் த்ரில்லராக வரும் ஜூலை 13-ம் தேதி பில்லா 2ஐ வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் 500க்கும் அதிகமான அரங்குகளில் பில்லா 2திரையிடப்படும். உலகம் முழுவதும் வெளியாகவுள்ள திரையரங்குகள் விவரம் விரைவில் வெளியிடப்படும்,” என்று கூறியுள்ளார்.

500 தியேட்டர்களில் பில்லா 2 – 10-ம் தேதி முதல் முன்பதிவு ஆரம்பம்!

அஜீத்தின் பில்லா-2வில் டைரக்டர் விஷ்ணுவர்தன் விலகியதையடுத்து, டைரக்டர் பொறுப்பை உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி எடுத்துள்ளார். அ‌தேபோல் பில்லா படத்தில் இசையமைத்த யுவன் சங்கர் ராஜா பில்லா-2விலும் இசையமைக்கிறார்.

கடந்த 2007ம் ஆண்டு அஜீத்-நயன்தாரா-நமீதா நடிப்பில் டைரக்டர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில், யுவனின் இசையில் மாபெரும் வெற்றி பெற்ற படம் பில்லா. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பில்லா-2 எனும் பெயரில் எடுக்க இருக்கின்றனர். டேவிட் எப்படி பில்லாவாக மாறினானர் என்பதே படத்தின் கதை.பில்லாவை இயக்கிய விஷ்ணுவ‌ர்தனே பில்லா-2வை இயக்குவதாக இருந்தது. ஆனால் திடீரென விஷ்ணுவர்தன் இப்படத்திலிருந்து விலகினார். இதனையடுத்து யார் இந்த படத்தை இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், கமல் நடித்து சூப்பர் ஹிட்டான உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி பில்லா-2 படத்தை இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஐ.என்.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் சுரேஷ் பாலாஜி-ஜார்ஜ் பயஸின் வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் நிறுவனம் ஆகிய இருவரும் இணைந்து பில்லா-2வை தயாரிக்கின்றனர். தீனா, பில்லா, ஏகன், மங்கத்தா படத்தை தொடர்ந்து பில்லா-2விற்கும் யுவன் சங்கர் ராஜாவே இசையமைக்கிறார். படத்திற்கான நாயகி மற்றும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. மே மாதம் முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.

அஜீத்தின் பில்லா-2-வை இயக்குகிறார் சக்ரி டோலட்டி

முக நூல்

Popular Posts