background img

புதிய வரவு

Showing posts with label Cricket deam. Show all posts

தமிழ், கன்னடம், இந்தி திரைப்பட நடிகர்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி பெங்களூரில் வருகிற ஜுன் மாதம் 4ந் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நடிகர் சரத்குமார், முக்கிய நட்சத்திர வீரர் சூர்யா உள்பட போட்டியில் பங்கேற்கும் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இவர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் அணியின் பெயர் சென்னை ரைனோஸ்.

இந்த போட்டியில் நடிகர்கள் சரத்குமார், சூர்யா, மாதவன், ஆர்யா, விஷால், பரத், அபாஸ், விஷ்ணு, சாந்தணு, விக்ராந்த், ரமணா, மிர்ச்சி சிவா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர். அப்போது இந்த கிரிக்கெட் போட்டிக்கான டீசர்ட் மற்றும் லோகோ வெளியிடப்பட்டது.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் சூர்யா, நிச்சயமாக சென்னை ரைனோஸ் அணி வெற்றி பெறும். அதற்கான பயிற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என்று உரக்க சத்தம் போட்டு உற்சாகமாக சொன்னார்.

அடுத்து பேசிய சரத்குமார், ஏற்கனவே இந்தி நடிகர்களுக்கும், தென்னிந்திய நடிகர்களுக்கும் நடந்த போட்டியில் தென்னிந்திய நடிகர்கள் வெற்றி பெற்றனர். அதேபோல் தென்னிந்திய நடிகர்களுக்குள் நடக்கும் போட்டியில் எங்கள் அணி வெற்றி பெறும். 4ஆம் தேதி பெங்களூரிலும், 5ஆம் தேதி சென்னையில், 11ஆம் தேதி ஹைத்ராபாத்தில் போட்டி நடைபெறுகிறது. இறுதிப்போட்டி ஹைத்ராபாத்தில் 12ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த இறுதிப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவோம் என்பது உறுதி என்றார்.

மேலும் பேசிய சரத்குமார், திருட்டு விசிடியால் தமிழ் திரையுலகம் மிகவும் பாதிக்கப்படுகிறது. திருட்டு விசிடி ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை இப்போட்டியின் மூலம் வலியுறுத்துவோம் என்றார்.

நட்சத்திர கிரிக்கெட் போட்டி: சென்னை அணியின் முக்கிய வீரராக நடிகர் சூர்யா

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான, ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியின் தேர்வு, வரும் மே 13ல் சென்னையில் நடக்கிறது.
நான்காவது ஐ.பி.எல்., தொடர் முடிந்தவுடன் (வரும் மே 28), இந்திய அணியினர் வரும் ஜூன் 1ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் புறப்படுகின்றனர். அங்கு ஒரு "டுவென்டி-20' மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. "டுவென்டி-20' போட்டி வரும் ஜூன் 4ல், போர்ட் ஆப் ஸ்பெயினில் நடக்கிறது. அதன் பின் ஒருநாள் போட்டித் தொடர் வரும் ஜூன் 6, 8, 11, 13 மற்றும் 16ம் தேதிகளில் நடக்கிறது.
இந்த போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியினரை, ஸ்ரீகாந்த தலைமையிலான தேர்வுக்குழுவினர், வரும் 13ம் தேதி சென்னையில் தேர்வுசெய்ய உள்ளனர். தவிர, டில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான (மே 12) ஐ.பி.எல்., லீக் போட்டியில், பங்கேற்கும் கேப்டன் தோனியும், அணித் தேர்வில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஜூன் 20 முதல் ஜூலை 10 வரை) பங்கேற்கும் அணி, பின்னர் அறிவிக்கப்படும்.

மே 13ல் இந்திய அணி தேர்வு

கொச்சி: ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியடைந்தது. மெக்கலம் அதிரடியில் அசத்த, கொச்சி அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
இந்தியாவில் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. இதில் நேற்று கொச்சியில் நடந்த லீக் போட்டியில் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஜெயவர்தனாவை கேப்டனாக கொண்ட கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியுடன் மோதியது. சென்னை அணியில் ரந்திவ் நீக்கப்பட்டு, போலிஞ்சர் சேர்க்கப்பட்டார். கொச்சி அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
"டாஸ்' வென்ற கொச்சி கேப்டன் ஜெயவர்தனா, பீல்டிங் தேர்வு செய்தார்.
ஹசி ஏமாற்றம்:
சென்னை கிங்சிற்கு மைக்கேல் ஹசி, முரளி விஜய் இணைந்து துவக்கம் கொடுத்தனர். கடந்த போட்டியில் அரைசதம் விளாசிய ஹசி, இம்முறை ஆர்.பி.சிங், ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்து அதிரடியை துவக்கினார். ஆனால் 8 ரன்னுக்கு அவுட்டாகி ஏமாற்றம் தந்தார்.
விஜய் அதிரடி:
முரளி விஜய் தன்பங்கிற்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆர்.பி.சிங், பெரேரா ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் விளாசி அசத்தினார். 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்த நிலையில் முரளி விஜய், பெரேராவிடம் வீழ்ந்தார். பின் ரெய்னா பத்ரிநாத் இணைந்தனர்.
மழை குறுக்கீடு:
சென்னை அணி 9 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 65 ரன்கள் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டது. சுமார் ஒன்றரை மணி நேர தாமதத்துக்குப் பின், 17 ஓவர்களாக குறைக்கப்பட்டு, போட்டி மீண்டும் துவங்கியது.
ரெய்னா அரைசதம்:
ரெய்னா அவ்வப்போது பவுண்டரிகள் அடிக்க, மறுமுனையில் பத்ரிநாத் (19) வீழ்ந்தார். கோமெஜ் பந்தில் இப்போட்டியின் முதல் சிக்சரை அடித்த ரெய்னா (50), அரைசதம் கடந்து அவுட்டானார். ஜடேஜாவின் கடைசி ஓவரில் இரண்டு சிக்சர்கள் அடிக்கப்பட, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்தது.
தோனி (14), மார்கல் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.
அபார துவக்கம்:
"டக்வொர்த் லீவிஸ்' முறைப்படி, 17 ஓவரில் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு பிரண்டன் மெக்கலம், ஜெயவர்தனா ஜோடி துவக்கம் கொடுத்தது. மார்கல் வீசிய முதல் ஓவரில் சிக்சர் அடித்து தனது அதிரடியை துவக்கினார் மெக்கலம். அஷ்வின் ஓவரில் அடுத்தடுத்து சிக்சர், பவுண்டரி விளாசிய ஜெயவர்தனா (16), அவரிடமே சிக்கினார்.
மெக்கலம் அசத்தல்:
ஜகாதியில் பந்தில் "சூப்பர்' சிக்சர் அடித்த மெக்கலம், சவுத்தியின் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகள் அடித்தார். 33 பந்துகளில் 47 ரன்கள் எடுத்த மெக்கலம், அரைசத வாய்ப்பை இழந்தார்.
பார்த்திவ் கலக்கல்:
மெக்கலம் அவுட்டானபின் பொறுப்பை கையில் எடுத்துக்கொண்டார் பார்த்திவ் படேல். அவ்வப்போது பவுண்டரிகள் அடித்த பார்த்திவ் படேல், ஜகாதியின் பந்தில் "சிக்சர்' விளாசினார். இவர் 34 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
பின் வந்த ஹாட்ஜ், ரவிந்திர ஜடேஜா இணைந்து கொச்சி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். கொச்சி அணி 15 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து, "டக்வொர்த் லீவிஸ்' முறைப்படி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹாட்ஜ் (19), ரவிந்திர ஜடேஜா (16) அவுட்டாகாமல் இருந்தனர். சென்னை சார்பில் அஷ்வின் 2 விக்கெட் வீழ்த்தினார்

ஸ்கோர்போர்டு
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஹசி(கே)பார்த்திவ்(ப)ஆர்.பி.சிங் 8(10)
விஜய்-எல்.பி.டபிள்யு.,(ப)பெரேரா 28(18)
ரெய்னா--ரன் அவுட் (பெரேரா) 50(40)
பத்ரிநாத்-எல்.பி.டபிள்யு.,(ப)கோமெஜ் 19(17)
தோனி-அவுட் இல்லை- 14(13)
மார்கல்-அவுட் இல்லை- 9(4)
உதிரிகள் 3
மொத்தம் (17 ஓவரில், 4 விக்.,) 131
விக்கெட் வீழ்ச்சி: 1-11(மைக்கேல் ஹசி), 2-48(முரளி விஜய்), 3-96(பத்ரிநாத்), 4-109(ரெய்னா).
பந்து வீச்சு: ஆர்.பி.சிங் 4-0-24-1, வினய் குமார் 3-0-16-0, பெரேரா 4-0-32-1, ரமேஷ் பவார் 3-0-24-0, கோமெஜ் 2-0-20-1, ரவிந்திர ஜடேஜா 1-0-14-0.
கொச்சி டஸ்கர்ஸ் கேரளா
மெக்கலம்(கே)மார்கல்(ப)அஷ்வின் 47(33)
ஜெயவர்தனா(கே)அனிருதா(ப)அஷ்வின் 16(11)
பார்த்திவ்(கே)அனிருதா(ப)போலிஞ்சர் 34(26)
ஹாட்ஜ்--அவுட் இல்லை- 19(14)
ஜடேஜா-அவுட் இல்லை- 16(6)
உதிரிகள் 3
மொத்தம் (15 ஓவரில் 3 விக்.,) 135
விக்கெட் வீழ்ச்சி: 1-39(ஜெயவர்தனா), 2-90(மெக்கலம்), 3-110(பார்த்திவ் படேல்).
பந்துவீச்சு: மார்கல் 2-0-17-0, போலிஞ்சர் 3-0-18-1, அஷ்வின் 4-0-31-2, சவுத்தி 3-0-38-0, ஜகாதி 3-0-30-0.

சென்னை கிங்ஸ் பரிதாப தோல்வி *கொச்சி அணி அபாரம்

மும்பை: ஐ.பி.எல்., தொடரில் சேவக் தலைமையிலான டில்லி டேர்டெவில்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. நேற்று நடந்த லீக் போட்டியில் புனே வாரியர்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பேட்டிங், பவுலிங்கில் அசத்திய புனே கேப்டன் யுவராஜ் சிங்கின் ஆட்டம் வீணானது.
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. நேற்று, மும்பையில் உள்ள டி.ஒய். படேல் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் புனே வாரியர்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் சேவக், "பீல்டிங்' தேர்வு செய்தார்.
ஹோப்ஸ் வருகை:
டில்லி அணியில் மூன்று மாற்றம் செய்யப்பட்டது. வான் டர் மெர்வி, மார்னே மார்கல், உன்முக்த் சந்த் நீக்கப்பட்டு ஜேம்ஸ் ஹோப்ஸ், மாத்யூ வாடே, உமேஷ் யாதவ் வாய்ப்பு பெற்றனர். புனே அணியில் முரளி கார்த்திக் நீக்கப்பட்டு அபிஷேக் ஜுன்ஜுன்வாலா தேர்வு செய்யப்பட்டார்.
ரைடர் அதிரடி:
முதலில் பேட்டிங் செய்த புனே வாரியர்ஸ் அணிக்கு, ஜெசி ரைடர் அதிரடி துவக்கம் கொடுத்தார். வேணுகோபால் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் இரண்டு சிக்சர் அடித்த ரைடர், இர்பான் பதான், <உமேஷ் யாதவ் பந்தையும் விட்டுவைக்கவில்லை. மறுமுனையில் நிதானமாக ஆடிய ஸ்மித் (12), அசோக் டின்டா வேகத்தில் வெளியேறினார். அடுத்து வந்த மிதுன் மன்ஹாஸ் (20) பெரிய அளவில் சோபிக்கவில்லை. தொடர்ந்து அபாரமாக ஆடிய ரைடர், நதீம் வீசிய ஆட்டத்தின் 10வது ஓவரில், ஒரு இமாலய "சிக்சர்' அடித்து அரைசதத்தை பதிவு செய்தார். பின் அதே ஓவரின் கடைசி பந்தில் பின்ச்சிடம் "கேட்ச்' கொடுத்து அவுட்டானார். இவர் 27 பந்தில் 5 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 60 ரன்கள் எடுத்தார்.
யுவராஜ் அபாரம்:
அடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா (4), மோனிஷ் மிஸ்ரா (7) சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றினர். மறுமுனையில் அதிரடி காட்டிய யுவராஜ் சிங், "சிக்சர்' மழை பொழிந்தார். டின்டா வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் மூன்று "சிக்சர்' விளாசிய யுவராஜ், அணியின் ஸ்கோரை வலுவாக்கினார். புனே அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 187 ரன்கள் குவித்தது. யுவராஜ் (66 ரன்கள், 32 பந்து, 5 சிக்சர்), பார்னல் (10) அவுட்டாகாமல் இருந்தனர். டில்லி அணி சார்பில் டின்டா, நதீம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
சூப்பர் ஜோடி:
சற்று கடின இலக்கை விரட்டிய டில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு, டேவிட் வார்னர், சேவக் ஜோடி சூப்பர் துவக்கம் அளித்தது. அபாரமாக ஆடிய இந்த ஜோடி, புனே அணி பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. ராகுல் சர்மா வீசிய ஆட்டத்தின் 7வது ஓவரின் கடைசி பந்தில், இரண்டாவது ரன்னுக்கு ஆசைப்பட்ட வார்னர் 28 பந்தில் 2 சிக்சர், 6 பவுண்டரி உட்பட 46 ரன்கள் எடுத்து "ரன்-அவுட்' ஆனார். மறுமுனையில் பொறுப்பாக ஆடிய சேவக், 23 பந்தில் 37 ரன்கள் (4 பவுண்டரி) எடுத்து, ரைடர் பந்தில் போல்டானார்.
"ஹாட்ரிக்' நழுவல்:
அடுத்து வந்த இர்பான் பதான், நமன் ஓஜா ஜோடி நிதானமாக ஆடியது. பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இர்பான் (14), யுவராஜ் வீசிய ஆட்டத்தின் 13வது ஓவரின் 3வது பந்தில் ஸ்ரீகாந்த் வாக்கிடம் "கேட்ச்' கொடுத்து அவுட்டானார். நான்காவது பந்தில் நமன் ஓஜா (11), "ஸ்டெம்பிங்' செய்யப்பட்டார். ஐந்தாவது பந்தை வேணுகோபால் எளிதாக சமாளிக்க, யுவராஜ் சிங்கின் "ஹாட்ரிக்' வாய்ப்பு நழுவியது.
வேணுகோபால் அபாரம்:
அடுத்து வந்த மாத்யூ வாடே (3), ராகுல் சர்மாவின் சுழலில் எல்.பி.டபிள்யு., ஆனார். பின் இணைந்த வேணுகோபால், பின்ச் ஜோடி அதிரடியாக ரன் சேர்த்தது. இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்த போது பின்ச் (25), யுவராஜ் சுழலில் சிக்கினார். அபாரமாக ஆடிய வேணுகோபால் 20 பந்தில் 3 சிக்சர் உட்பட 31 ரன்கள் எடுத்து யுவராஜ் சிங் பந்தில் வெளியேறினார். கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்ட போது ஹோப்ஸ், ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். டில்லி அணி 19.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹோப்ஸ் (13) அவுட்டாகாமல் இருந்தார். புனே சார்பில் யுவராஜ் 4 விக்கெட் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக யுவராஜ் சிங் தேர்வு செய்யப்பட்டார்.
மாறிய ராசி
யுவராஜ் சிங் அரைசதம் அடிக்கும் போது இந்திய அணி பெரும்பாலும் வெற்றி பெறும். ஆனால், ஐ.பி.எல்., போட்டிகளில் இந்த ராசி எடுபடவில்லை. நேற்று அதிரடியாக ஆடிய இவர் 66 ரன்கள் எடுத்த போதும், புனே வாரியர்ஸ் அணி தோல்வி அடைந்தது.
ஸ்கோர் போர்டு
புனே வாரியர்ஸ்
ரைடர் (கே)பின்ச் (ப)நதீம் 60(27)
ஸ்மித் (கே)இர்பான் (ப)டின்டா 12(14)
மன்ஹாஸ் (கே)வார்னர் (ப)ஹோப்ஸ் 20(18)
யுவராஜ் -அவுட் இல்லை- 66(32)
உத்தப்பா (கே)வார்னர் (ப)நதீம் 4(10)
மோனிஷ் (கே)சேவக் (ப)டின்டா 7(11)
பார்னல் -அவுட் இல்லை- 10(9)
உதிரிகள் 8
மொத்தம் (20 ஓவரில் 5 விக்.,) 187
விக்கெட் வீழ்ச்சி: 1-28(ஸ்மித்), 2-82(மன்ஹாஸ்), 3-98(ரைடர்), 4-117(உத்தப்பா), 5-146(மோனிஷ்).
பந்துவீச்சு: வேணுகோபால் 1-0-14-0, டின்டா 4-0-42-2, இர்பான் 3-0-28-0, உமேஷ் 4-0-36-0, ஹோப்ஸ் 4-0-26-1, நதீம் 4-0-39-2.
டில்லி டேர்டெவில்ஸ்
வார்னர் ரன்-அவுட்(வாக்/உத்தப்பா) 46(28)
சேவக் (ப)ரைடர் 37(23)
இர்பான் (கே)வாக் (ப)யுவராஜ் 14(16)
நமன் (ஸ்டெம்)உத்தப்பா (ப)யுவராஜ் 11(9)
வாடே எல்.பி.டபிள்யு.,(ப)சர்மா 3(4)
வேணுகோபால் (கே)ஜுன்ஜுன்வாலா (ப)யுவராஜ் 31(20)
பின்ச் (கே)+(ப)யுவராஜ் 25(12)
ஹோப்ஸ் -அவுட் இல்லை- 13(4)
நதீம் -அவுட் இல்லை- 0(0)
உதிரிகள் 10
மொத்தம் (19.2 ஓவரில், 7 விக்.,) 190
விக்கெட் வீழ்ச்சி: 1-75(வார்னர்), 2-97(சேவக்), 3-116(இர்பான்), 4-116(நமன்), 5-120(வாடே), 6-167(பின்ச்), 7-180(வேணுகோபால்).
பந்துவீச்சு: தாமஸ் 2-0-22-0, வாக் 3-0-38-0, பார்னல் 2-0-26-0, சர்மா 4-0-29-1, ரைடர் 3.2-0-34-1, ஜுன்ஜுன்வாலா 1-0-11-0, யுவராஜ் 4-0-29-4.

சேவக் அணிக்கு முதல் வெற்றி! * புனே கேப்டன் யுவராஜ் ஆட்டம் வீண்

மொகாலி: உலக கோப்பை தொடரின் பைனலுக்கு இந்திய அணி ஜோராக முன்னேறியது. நேற்று நடந்த பரபரப்பான அரையிறுதியில் பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 85 ரன்கள் விளாசிய சச்சின், இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார். வரும் ஏப்., 2ம் தேதி நடக்கும் பைனலில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று மொகாலியில் நடந்த இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.
அஷ்வின் நீக்கம்:
ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால், இந்திய அணியில் அஷ்வின் நீக்கப்பட்டு, நெஹ்ரா இடம் பெற்றார். பாகிஸ்தான் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. அக்தருக்கு இம்முறையும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. "டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி, "பேட்டிங் தேர்வு செய்தார்.
சேவக் "சரவெடி:
இந்திய அணிக்கு வழக்கம் போல் சேவக் அதிரடி துவக்கம் தந்தார். குல் வீசிய முதல் ஓவரில் ஒரு பவுண்டரியு அடித்தார். இவரது அடுத்த ஓவரில் ஐந்து பவுண்டரிகள் விளாசினார். இந்த ஓவரில் மட்டும் 21 ரன்கள் எடுக்கப்பட, குல்லை பார்க்கவே பாவமாக இருந்தது. அப்துர் ரசாக் ஓவரில் சச்சின், சேவக் தலா ஒரு பவுண்டரி அடிக்க, ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். தொடர்ந்து குல் ஓவரில் 2 பவுண்டரி அடித்த சேவக்கின் சரவெடி ஆட்டம் நீண்ட நேரம் தொடர வேண்டும் என ரசிகர்கள் ஏங்கினர். ஆனால், வகாப் ரியாஸ் சிக்கலை ஏற்படுத்தினார். இவரது வேகத்தில் "ரிவியு முறையில் சேவக் 38 ரன்களுக்கு(9 பவுண்டரி) அவுட்டானார்.
வகாப் மிரட்டல்:
அடுத்து வந்த காம்பிர் "கம்பெனி கொடுக்க, சச்சின் தனது பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். இவர்கள் இரண்டாவது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தனர். முகமது ஹபீஸ் பந்தை இறங்கி வந்து அடிக்க முற்பட்ட காம்பிர்(27), கம்ரான் அக்மலின் துல்லிய "ஸ்டம்பிங்கில் வீழ்ந்தார். போட்டியின் 26வது ஓவரை வீசிய வகாப் ரியாஸ் இரட்டை "அடி கொடுக்க, இந்திய ரசிகர்கள் அதிர்ந்து போயினர். 2வது பந்தில் விராத் கோஹ்லியை(9) வெளியேற்றினார். 3வது பந்தில் யுவராஜ் சிங்கை(0) போல்டாக்க, மொகாலி அரங்கமே அமைதியானது. அப்போது இந்திய அணி நான்கு விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்து திணறியது. அடுத்து வந்த தோனி தடுத்து ஆட, ரியாசின் "ஹாட்ரிக் வாய்ப்பு பறிபோனது.
சச்சின் அபாரம்:
இதற்கு பின் சச்சின், தோனி இணைந்து நிதானமாக ஆடினர். இவர்கள் ஒன்று, இரண்டு ரன்களாக சேர்த்தால், ஸ்கோர் விரைவாக உயரவில்லை. ஒரு நாள் போட்டிகளில் தனது 95வது அரைசதம் அடித்த சச்சின், சர்வதேச கிரிக்கெட்டில் 100வது சதம் அடிக்க தவறினார். இவர் 85 ரன்களுக்கு(11 பவுண்டரி) சயீத் அஜ்மல் சுழலில் வீழ்ந்தார். வகாப் ரியாஸ் "வேகத்தில் தோனியும்(25) நடையை கட்டினார்.
ரெய்னா அசத்தல்:
கடைசி கட்டத்தில் "பேட்டிங் பவர்பிளேயை பயன்படுத்தி சுரேஷ் ரெய்னா அசத்தலாக ஆடினார். <உமர் குல் ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசினார். ஹர்பஜன் 12 ரன்கள் எடுத்தார். ஜாகிர் கானை(9) வெளியேற்றிய வகாப் ரியாஸ், தனது 5வது விக்கெட்டை பெற்றார். நெஹ்ரா(1) ரன் அவுட்டாக, இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்தது.
திணறல் ஆட்டம்:
சவாலான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி, துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. ஜாகிர் கான் பந்தில் கம்ரான் அக்மல்(19) காலியானார். ஓரளவுக்கு தாக்குப்படித்த ஹபீஸ் 43 ரன்களுக்கு முனாப் வேகத்தில் அவுட்டானார். மீண்டும் ஒரு முறை சுழலில் மிரட்டிய யுவராஜ் சிங், அசாத் ஷபிக்(30), அனுபவ யூனிஸ் கானை(13) வெளியேற்றி திருப்புமுனை ஏற்படுத்தினார். இதையடுத்து பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
பின் யுவராஜ் சிங் பந்துவீச்சில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து அசத்தினார் உமர் அக்மல். இவர், ஹர்பஜன் வலையில் 29 ரன்களுக்கு அவுட்டானார். முனாப் பந்தில் அப்துல் ரசாக்(3) வெளியேற, இந்திய ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.
அப்ரிதி ஏமாற்றம்:
கடைசி கட்டத்தில் கேப்டன் அப்ரிதி, மிஸ்பா -உல்-ஹக் இணைந்து போராடினர். இதில், மிஸ்பா "ஆமை வேகத்தில் ஆட, "ரன் ரேட் எகிறியது. இந்த பதட்டத்தில் ஹர்பஜன் பந்தை சிக்சருக்கு தூக்க முயன்ற அப்ரிதி(19), பரிதாபமாக அவுட்டாக, பைனல் கனவு முடிவை நெருங்கியது.
தாமதம் ஏன்?:
"பேட்டிங் பவர்பிளேயை மிகவும் தாமதமாக 46வது ஓவரில் பாகிஸ்தான் எடுத்தது வியப்பை தந்தது. அப்ரிதி போன்ற அதிரடி வீரர்கள் களத்தில் இருக்கும் போன் ஏன் "பவர்பிளேயை பயன்படுத்தவில்லை என்ற கேள்வியை எழுப்பச் செய்தது. நெஹ்ரா வேகத்தில் ரியாஸ்(8), குல்(2) பெவிலியன் திரும்பினர். போராடிய மிஸ்பா அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார். இவர் 56 ரன்களுக்கு வெளியேற, பாகிஸ்தான் அணி 49.5 ஓவரில் 231 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. இதன் மூலம் தொடரில் இருந்து வெளியேறியது. ஆட்ட நாயகனாக சச்சின் தேர்வு செய்யப்பட்டார்.
அபார வெற்றி பெற்ற இந்திய அணி பைனலுக்கு முன்னேறியது. வரும் ஏப்., 2ம் தேதி மும்பையில் நடக்கும் பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.
ஸ்கோர் போர்டு
இந்தியா
சேவக்-எல்.பி.டபிள்யு.,(ப)ரியாஸ் 38(25)
சச்சின்(கே)அப்ரிதி(ப)அஜ்மல் 85(115)
காம்பிர்(ஸ்டம்)கம்ரான்(ப)ஹபீஸ் 27(32)
கோஹ்லி(கே)உமர்(ப)ரியாஸ் 9(21)
யுவராஜ்(ப)ரியாஸ் 0(1)
தோனி-எல்.பி.டபிள்யு.,(ப)ரியாஸ் 25(42)
ரெய்னா--அவுட்இல்லை- 36(39)
ஹர்பஜன்(ஸ்டம்)கம்ரான்(ப)அஜ்மல் 12(15)
ஜாகிர்(கே)கம்ரான்(ப)ரியாஸ் 9(10)
நெஹ்ரா--ரன்அவுட்-(ரியாஸ்/கம்ரான்) 1(2)
முனாப்-அவுட்இல்லை- 0(0)
உதிரிகள் 18
மொத்தம் (50 ஓவரில், 9 விக்.,) 260
விக்கெட் வீழ்ச்சி: 1-48(சேவக்), 2-116(காம்பிர்), 3-141(கோஹ்லி), 4-141(யுவராஜ்), 5-187(சச்சின்), 6-205(தோனி), 7-236(ஹர்பஜன்), 8-256(ஜாகிர்), 9-258(நெஹ்ரா).
பந்துவீச்சு: உமர்குல் 8-0-69-0, ரசாக் 2-0-14-0, ரியாஸ் 10-0-46-5, அஜ்மல் 10-0-44-2, அப்ரிதி 10-0-45-0, ஹபீஸ் 10-0-34-1.
பாகிஸ்தான்
கம்ரான்(கே)யுவராஜ்(ப)ஜாகிர் 19(21)
ஹபீஸ்(கே)தோனி(ப)முனாப் 43(59)
ஷபிக்(ப)யுவராஜ் 30(39)
யூனிஸ்(கே)ரெய்னா(ப)யுவராஜ் 13(32)
மிஸ்பா(கே)கோஹ்லி(ப)ஜாகிர் 56(76)
உமர்(ப)ஹர்பஜன் 29(24) -
ரசாக்(ப)முனாப் 3(9)
அப்ரிதி(கே)சேவக்(ப)ஹர்பஜன் 19(17)
ரியாஸ்(கே)சச்சின்(ப)நெஹ்ரா 8(14)
உமர்குல்-எல்.பி.டபிள்யு.,(ப)நெஹ்ரா 2(3)
அஜ்மல்-அவுட்இல்லை- 1(5)
உதிரிகள் 8
மொத்தம் (49.5 ஓவரில், "ஆல்-அவுட்) 231
விக்கெட் வீழ்ச்சி: 1-44(கம்ரான்), 2-70(ஹபீஸ்), 3-103(ஷபிக்), 4-106(யூனிஸ்), 5-142(உமர்), 6-150(ரசாக்), 7-184(அப்ரிதி), 8-199(ரியாஸ்), 9-208(உமர்குல்), 10-231(மிஸ்பா).
பந்துவீச்சு: ஜாகிர் 9.5-0-58-2, நெஹ்ரா 10-0-33-2, முனாப் 10-1-40-2, ஹர்பஜன் 10-0-43-2, யுவராஜ் 10-1-57-2.
"லக்கி சச்சின்
இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் பக்கம் நேற்று அதிர்ஷ்டக் காற்று அதிகமாக வீசியது. 6 முறை கண்டம் தப்பிய இவர், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதன் விபரம்...
* 11வது ஓவரில் சயீத் அஜ்மல் வீசிய 4வது பந்தில் சச்சினுக்கு(23 ரன்), அம்பயர் இயான் கோல்டு எல்.பி.டபிள்யு., கொடுத்தார். இதனை எதிர்த்து அம்பயர் தீர்ப்பு மறுபரீசிலனை(யு.டி.ஆர்.எஸ்.,) முறையில் சச்சின் "அப்பீல் செய்தார். "டிவி ரீப்ளேவில் பந்து "லெக் திசையில் செல்வது உறுதி செய்யப்பட, "அவுட் வாய்ப்பில் இருந்து தப்பினார். டி.ஆர்.எஸ்., வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து வந்த சச்சின், தற்போது அதே முறையில் பலன் அடைந்துள்ளார்.
* 11வது ஓவரின் 5வது பந்தில் கம்ரான் அக்மல் "ஸ்டம்பிங் செய்தார். "ரீப்ளேவில் சச்சின்(23 ரன்) கால் "கிரீசில் இருந்தது உறுதியாக, ஆட்டத்தை தொடர்ந்தார்.
* 14வது ஓவரில் அப்ரிதி பந்தில் சச்சின்(27 ரன்) கொடுத்த எளிய "கேட்ச் வாய்ப்பை மிஸ்பா கோட்டை விட்டார்.
* 20வது ஓவரில் மீண்டும் அப்ரிதி பந்தில் சச்சின்(45 ரன்) அடித்த பந்தை யூனிஸ் கான் தவற விட்டார்.
* 30வது ஓவரில் அப்ரிதி பந்தில் சச்சின்(70 ரன்கள்) கொடுத்த கடின "கேட்ச்சை கம்ரான் அக்மல் பிடிக்க தவறினார்.
* 35வது ஓவரில் ஹபீஸ் பந்தில் சச்சின்(81 ரன்கள்) அடித்த பந்தை உமர் அக்மல் கோட்டை விட்டார்.
அப்ரிதி பந்துவீச்சில் மட்டும் மூன்று முறை சச்சின் தந்த "கேட்ச் வாய்ப்பை பாகிஸ்தான் வீரர்கள் நழுவ விட்டனர். ஆனால், சயீத் அஜ்மல் பந்தில் சச்சின் தந்த "கேட்ச்சை அப்ரிதி "சூப்பராக பிடித்து சச்சினின்(85 ரன்கள்) அதிர்ஷ்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பிரதமர்கள்-வீரர்கள் அறிமுகம்
நேற்று இரு நாடுகளின் தேசிய கீதம் இசைத்து முடித்தபின், இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் கிலானி இருவரும், மைதானத்தில் இருந்த வீரர்களை சந்தித்து வாழ்த்தினர். பாகிஸ்தான் வீரர்களை அப்ரிதியும், இந்திய வீரர்களை கேப்டன் தோனியும், இரண்டு பிரதமர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.
---
அரசு விடுமுறை
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டியை, வீட்டில் இருந்து கண்டுகளிக்க வசதியாக, நேற்று பல்வேறு தனியார் நிறுவனங்கள், அரைநாள் விடுப்பு வழங்கியது. இதைப் பின்பற்றிய மத்தியபிரதேசம், டில்லி அரசும் தங்கள் ஊழியர்களுக்கு அரை நாள் விடுப்பு கொடுத்தன. இதுகுறித்து டில்லி அரசு வெளியிட்ட அறிக்கையில்,"" பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியை காண, மதியம் முதல் விடுமுறை கொடுக்கப்படுகிறது, என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதேபோல, பாகிஸ்தானில் நேற்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது.
---
சேவக், தோனி "1000
நேற்றைய அரையிறுதி போட்டியில் சேவக் (1,036), இந்திய அணி கேப்டன் தோனி (1,001) ஆகியோர், பாகிஸ்தானுக்கு எதிராக ஆயிரம் ரன்களை கடந்து அசத்தினர். இதற்கு முன் சச்சின் (2,489), அசார் (1,657), டிராவிட் (1,652), கங்குலி (1,652), யுவராஜ் சிங் (1,251) ஆகியோர் ஆயிரம் ரன்களுக்கும் மேல் எடுத்துள்ளனர்.
--
"டாஸ் ஏலம்
பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை அரையிறுதி போட்டியில், "டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார். இதற்கு பயன்படுத்திய நாணயத்தை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) ஏலம் விட முன்வந்துள்ளது.
--
"கரண்ட் கட் இல்லை
பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியை காண வசதியாக, தமிழகத்தில் நேற்று மின்வெட்டு இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக அதிகமுறை "மின்வெட்டு மூலம் "ஷாக் தந்தனர். அதேநேரம் மகாராஷ்டிரா அரசு, வெளிமாநிலங்களில் இருந்து கூடுதலாக 1000 "மெகா வாட் மின்சாரத்தை பெற்று, மதியம் 2 முதல் இரவு 11 மணி வரை, மின்வெட்டு இல்லாமல், தடங்கலின்றி போட்டியை காண வசதி செய்தனர்.
---
பிரபலங்களின் படையெடுப்பு
மொகாலி போட்டியைக் காண இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களுடன், அகில இந்திய காங்., தலைவர் சோனியா காந்தி, ராபர்ட் வதேரா ஆகியோர் வந்திருந்தனர். தவிர, பஞ்சாப், அரியானா மாநில முதல்வர்கள் பிரகாஷ் சிங் பாதல், புபிந்தர் சிங் ஹோடா, கவர்னர் சிவராஜ் படேல், பாலிவுட் நட்சத்திரங்கள் அமிர் கான், ஷக்தி கபூர் உள்ளிட்ட பலரும் போட்டியை ரசித்தனர். 3 வாரத்துக்கு முன் காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட, காங்., பொதுச்செயலர் ராகுல் காந்தி, வி.ஐ.பி., பகுதியில் அமர்ந்து போட்டியை பார்த்தார். திடீரென பாதுகாப்பை மீறி ரசிகர்கள் இருந்த பகுதிக்கு சென்று, அவர்களுடன் அமர்ந்து பார்க்கத்துவங்கினார்.
--
ஐ.சி.சி., மன்னிப்பு
தேசிய கொடியை விற்கும் உரிமையை, ஐ.சி.சி.,யிடம் பெற்றிருந்த வியாபாரி ஒருவர், மூவர்ணத்தில் ஆன பலூனை காலில் போட்டு மிதித்துள்ளார். இதை நேரில் பார்த்தவர்கள், அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து ஐ.சி.சி., கூறுகையில்,"" நடந்த சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்காக, ஒவ்வொரு இந்தியரிடமும் ஐ.சி.சி., மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது, என தெரிவித்துள்ளது.
--
பாக்., பிரதமருக்கு விருந்து
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய, உலக கோப்பை அரையிறுதி போட்டியை, இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் கிலானி ஆகியோர் மொகாலி மைதானத்தில் நேரில் பார்த்தனர். இவர்களுக்கு பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில், நேற்று இரவு விருந்து கொடுக்கப்பட்டது. இதில் இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் உட்பட மொத்தம் 30 பேர் கலந்து கொண்டனர். இந்த நேரத்தில் பாகிஸ்தானின் ஆசாத் சபிக், யூனிஸ் கானை, யுவராஜ் சிங் வெளியேற்றினார்.

கிரிக்கெட் "போர்: இந்தியா "சூப்பர் வெற்றி! * பாகிஸ்தானை தோற்கடித்து பைனலில் நுழைந்தது

முக நூல்

Popular Posts