background img

புதிய வரவு

Showing posts with label Election Commision. Show all posts

சென்னை: தேர்தல் ஆணையத்தின் தடையை மீறி கருத்துக் கணிப்பு வெளியிட்ட டிவி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த டிவிக்கு நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது.

மே 10ம் தேதி மாலை வரை தேர்தல் கருத்துக் கணிப்புகளை எந்த ரூபத்திலும் வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இருப்பினும் கடந்த 28ம் தேதியன்று தனியார் தொலைக்காட்சி ஒன்று கருத்துக் கணிப்பு ஒன்றை வெளிட்டது. அதில் தமிழகத்தில் லேசான மெஜாரிட்டியுடன் திமுக ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அஸ்ஸாம் மாநிலத்திற்கும் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டிருந்தது.

இதையடுத்து நடத்தை விதிமுறையை மீறி கருத்துக் கணிப்பு வெளியிட்ட அந்த டிவியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியுள்ளார்.

மதுரையில் பிரவீண்குமார்:

இதற்கிடையே, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணுவது குறித்து தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் தேர்தல் அலுவலர்களுக்கு ஐந்து மண்டலத்தில் நேரடியாக சென்று பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த பயிற்சி வகுப்பு நடத்துவதற்காக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அமுதா ஆகியோர் இன்று காலை மதுரை வந்தனர்.

அவர்கள் மதுரை மாவட்டத்தின் 7 சட்டசபை தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள மதுரை மருத்துவ கல்லூரிக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

பின்பு மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வாக்கு எண்ணிக்கை குறித்து பயிற்சி அளித்தார்.

அப்போது, மதுரை மத்திய தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் டப்ளை செய்தது தொர்பாக குறித்த புகாரின் பேரில் மீண்டும் தேர்தல் நடத்துவது குறித்து மாவட்ட கலெக்டர் சகாயத்துடன் தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

தடையை மீறி கருத்துக் கணிப்பு வெளியிட்ட டிவி மீது நடவடிக்கை-தேர்தல் ஆணையம்

சென்னை ஏப். 15: வாக்குப் பதிவு நாளுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் ஒரு மாத கால இடைவெளி இருப்பதால் அரசு நிர்வாகம் எந்தப் பணியையும் செய்ய முடியாமல் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு என்று முதல்வர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தேர்தல் நடந்த நாள் ஏப்ரல் 13. வாக்குகளை எண்ணப்படவுள்ள நாள் மே 13. வாக்குகள் எண்ணப்பட்டு வாக்கு எண்ணிக்கை முடிய ஒரு நாள் ஆகும். முடிவுகள் மே 14-ம் தேதிதான் தெரியும். ஆனால் இப்போதுள்ள சட்டப்பேரவைக் காலம் மே 16-ம் தேதி முடிவுற்று அடுத்த சட்டப்பேரவை மே 17-ம் தேதி தொடங்கப்பட வேண்டும். எனவே மே 17-ம் தேதிக்குள் தமிழகத்தில் ஒரு புதிய அமைச்சரவை உருவாகியாக வேண்டும். இடையில் இருக்கின்ற நாள்கள் மே 15, மே 16 ஆகிய இரண்டு நாள்கள் மட்டுமே. அதற்குள் இத்தனை பணிகளையும் முடிக்க முடியுமா? ஆனால் முடித்தாக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் இதையெல்லாம் எண்ணிப் பார்க்காமல் இருந்திருக்குமா என்றால் நிச்சயம் எண்ணிப் பார்த்திருக்கும். எண்ணிப் பார்த்துவிட்டுதான் இந்தத் தேர்தல் தேதிகளை அறிவித்திருக்கின்றது.
மே 17-ம் தேதி புதிய சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும் என்றால் எதற்காக அவசர அவசரமாக ஏப்ரல் 13-ம் தேதியே தேர்தலை நடத்த வேண்டும். மேலும் சில நாள்கள் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் கால அவகாசம் கொடுத்து ஏப்ரல் மாதக் கடைசியிலோ அல்லது மே மாதத்தின் முதல் வாரத்திலோ அனைவரும் எதிர்பார்த்ததைப் போல தேர்தல் தேதியை அறிவித்திருக்கலாம் அல்லவா? இந்த கேள்விகளை நான் ஏற்கெனவே எழுப்பி உள்ளேன்.
இது ஒருபுறம் இருக்க, தமிழக மக்கள் அளித்த தீர்ப்புகள் மே 13-ம் தேதி வரை அறைகளிலே பத்திரமாகப் பூட்டி வைக்கப்பட்டு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதுவரை அரசின் சார்பில் எந்தவிதமான முக்கிய முடிவுகளும் எடுக்கப்படமாட்டாது, எடுக்கப்பட கூடாது. திடீரென ஏதாவது ஒரு முக்கிய முடிவு, கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுவிட்டால் அப்போது என்ன செய்வது? தேர்தல் ஆணையத்துக்கே வெளிச்சம்! அதிகாரிகளின் நிலை என்ன? திரிசங்கு சொர்க்கம் என்பார்களே அந்த நிலைதான்! இப்போதே பத்திரிகைகள் எல்லாம் தலைமைச் செயலகம் வெறிச்சோடி கிடப்பதாகவும் அதிகாரிகள் எல்லாம் குடும்பத்துடன் விடுமுறையில் செல்லவிருப்பதாகவும் செய்திகளை வெளியிட்டுள்ளன.
அது மாத்திரமல்ல, அரசு சார்பில் நாட்டில் நடைபெற்றாக வேண்டிய முக்கியமான பணிகள் எல்லாம் நிறைவேற்றப்பட வேண்டிய நேரம் இது. அந்தப் பணிகள் எல்லாம் முறையாக நடைபெற்றால் தான் ஜூன் மாதத்தில் தொடங்கவிருக்கும் தென்மேற்குப் பருவக்காற்று காலத்தின்போது வேளாண்மைப் பணிகளை ஒழுங்காகச் செய்திட முடியும். அதிகாரிகள் பராமரிப்புப் பணிகளை ஆய்வு கூட செய்யக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுரை கூறியுள்ளதாம். அதனால் அடிப்படைப் பணிகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலைமை உள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசும் அதன் அமைச்சர்களும் ஐந்தாண்டு காலத்துக்கு அதாவது மீண்டும் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் வரை அவர்களது பொறுப்புகளை நிறைவேற்ற தகுதி படைத்தவர்கள். ஆனால் அவர்களின் பணிகளை நிறைவேற்ற முடியாமல் தடுப்பது எந்த வகையில் நியாயமோ? சட்டம் படித்தவர்களும் தேர்தல் ஆணையமும்தான் இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையம் மீது கருணாநிதி மீண்டும் புகார்

சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், தேர்தல் ஆணைய அனுமதியின்றி 'டாஸ்மாக்' கடைகளில் புதிய மது வகைகளை அறிமுகம் செய்யக்கூடாது என்பதால் மதுபான தயாரிப்பாளர்களும் குடிமகன்களும் கடுப்படைந்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் கோல்டன் வார்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அதில், புதிய ரக மதுபானத்தை வாங்குவதை நிறுத்தி வைக்கும் வகையில் 'டாஸ்மாக்' நிறுவனம் பிறப்பித்த உத்தரவை தடை செய்ய வேண்டும் என்றும், குறிப்பிட்ட காலத்துக்குள் புதிய ரக மதுவை வாங்குவதற்கு உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். அப்போது 'டாஸ்மாக்' தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது புதிய ரக மதுக்களை வாங்குவதற்கு அனுமதி கேட்டு அரசுக்கு 'டாஸ்மாக்' அதிகாரி எழுதிய கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த கடிதத்தில், 'மாதந்தோறும் புதிய ரக மதுக்களை அறிமுகம் செய்யும் நடவடிக்கையை தொடரலாமா? தமிழகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான 'டாஸ்மாக்' கடைகளில் 'பீர்' தட்டுப்பாடு நிலவுகிறது. தினமும் கடைகளில் அவை காலியாகிவிடுவதால் அதிக தேவை ஏற்படுகிறது. ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், அனைத்து நடவடிக்கைகளுக்கும் தேர்தல் ஆணைய அனுமதி பெறப்பட வேண்டியுள்ளது," என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுபற்றி கேட்டபோது, தேர்தல் நடவடிக்கைகள் முடியும்வரை புதிய ரக மது அறிமுகம் செய்வதை நிறுத்தி வைக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியதாகவும், எனவே தேர்தல் நடவடிக்கைகள் முடியும்வரை புதிய ரக மது வாங்குவதற்கு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளதாகவும் 'டாஸ்மாக்' தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை மற்றொரு தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

தேர்தல் ஆணைய உத்தரவின்றி 'டாஸ்மாக்' கடைகளில் புது சரக்கு போடக்கூடாதாம்!!

சென்னை : "அ.தி.மு.க.,வினர் மீது நடத்திய கொலைவெறி தாக்குதலுக்கு காரணமான அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்ட தி.மு.க.,வினரை கைது செய்ய, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என,அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:தேர்தலில் தோல்வி உறுதி என்பதை அறிந்த கருணாநிதி பணம், படை, அதிகார பலம் ஆகியவற்றின் மூலம், ஜனநாயகத்தை சீர்குலைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கோவை மாவட்டம், மடத்துக்குளம் தொகுதிக்குட்பட்ட உடுக்கம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, அமைச்சர் சாமிநாதன் ஏற்பாடு செய்திருப்பதாக தகவல் கிடைத்து, அ.தி.மு.க.,வினர் அந்த வீட்டை முற்றுகையிட்டதுடன், தேர்தல் அதிகாரிக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.அ.தி.மு.க., வேட்பாளர் சண்முகவேலு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். இந்த தருணத்தில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் வீட்டிலிருந்து தி.மு.க.,வினர் கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் சண்முகவேலு மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டு உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற தொண்டர்கள் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக அந்த பகுதி முழுவதும் பதற்றம் நிலவுகிறது.சண்முகவேலு மற்றும் அ.தி.மு.க.,வினர் மீது தி.மு.க.,வினர் நடத்தியுள்ள கொலைவெறி தாக்குதலுக்கு என் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தாக்குதலுக்கு காரணமான அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்ட தி.மு.க.,வினரை கைது செய்ய, தேர்தல் கமிஷன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பென்னாகரம் தொகுதியில் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக தி.மு.க.,வினர் ஈடுபட்டதை சுட்டிக்காட்டிய தே.மு.தி.க., செயலர் அசோகனை, தி.மு.க.,வினர் உருட்டுக் கட்டையால் அடித்து கொலையே செய்துள்ளனர். தி.மு.க.,வினரின் இந்த கொலை வெறியாட்டத்திற்கும் என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் சம்பந்தப்பட்ட தி.மு.க.,வினரை உடனடியாக கைது செய்ய, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வன்முறை வெறியாட்டத்தில் மரணமடைந்த அசோகன் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது, தி.மு.க.,வினரால் நிகழ்த்தப்பட்டு வரும் வன்முறைகளை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் போதுமான மத்திய ரிசர்வ் படைகளை அனுப்பி, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாக்காளர்கள் அனைவரும் அச்சமின்றி, சுதந்திரமாக ஓட்டளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்திய தேர்தல் கமிஷனையும், தமிழக தேர்தல் அதிகாரியையும், போலீசாரையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

தி.மு.க.,வினர் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெ.,

சென்னை : தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு பலத்த பாதுகாப்புடன் துவங்கியது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டளித்து வருகின்றனர். தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பு பலம‌டங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெறும் : ஜெ.,
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா சென்னையில் இன்று காலை 9 மணியளவில் ஓட்டுப் போட்டார். ஓட்டு அளித்து விட்டு நிருபர்களுக்கு பேட்டியளித்த ஜெயலலிதா : சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி அதிக பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெரும் என்றார்.

மக்கள் தி.மு.க., பக்கம் : ஸ்டாலின் : துணை முதல்வர் ஸ்டாலின் சென்னை கோபாலபுரத்தில் இருக்கும் ஓட்டுச்சாவ‌டியில் ஓட்டுப் போட்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் தி.மு.க., அரசு மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது. சொன்னது மட்டும் அல்லாமல் சொல்லாத பல நலத்திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது. எனவே தி.மு.க., ஆட்சிக்கு மீண்டும் வர வேண்டும் என்ப‌தே மக்கள் விருப்பம். தி.மு.க., கூட்டணி 220 தொகுதிகளில் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

கருணாநிதி வாக்களிப்பு : சென்னை கோபாலபுரம் சாரதா பள்ளி ஓட்டுச்சாவடியில் முதல்வர் கருணாநிதி ஓட்டு போட்டார்.

வரிசையில் நின்று வைகோ ஓட்டு : ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் தொகுதிக்கு உட்பட்ட கலிங்கப்பட்டி பள்ளியில் ஓட்டுப் போடுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டுப்போட்டார். சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதை ம.தி.மு.க., புறக்கணித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை ஓட்டுப்பதிவு துவங்கியது சில நிமிடங்களில் ஓட்டுச்சாவடிக்கு வந்த வைகோ ஓட்டு போடுவதற்காக ஆர்வத்துடன் காத்திருந்து ஓட்டளித்தார்.

இயந்திரக் கோளாறு : தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ராஜபாளையம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் ஒரு சில ஓட்டுச்சாவ‌டிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் ஓட்டுப்பதிவு தாமதமாக துவங்கியது. ராஜபாளையம் 41 வது வார்டு பூத் எண் 105ல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டதால் ஓட்டுப்பதிவு 40 நிமிடங்கள் தாமதமாக துவங்கியது.தர்மபுரி டவுன் நகராட்சி பள்ளியில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் அரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. ராமநாதபுரத்தில் ஸ்வாஸ் பள்ளியில் ஓட்டுச்சாவடி எண் 105ல் இயந்திரக் கோளாறு காரணாக ஓட்டுபதிவு 5 நிமிடங்கள் ‌தாமதமாக துவங்கியது.

திருச்சியில் ஜரூர் : திருச்சியில் இன்று காலை 7 மணி முதலே வாக்காளர்கள் ஓட்டுப்போட ஓட்டுச்சாவடிகளில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியதில் இருந்து வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திருச்சி மேற்கு தொகுதியில், அவர் பிளாஸம் பள்ளியில் மாவட்ட கலெக்டர் மகேசன் காசிநாதன் ஓட்டளித்தார்.

ஸ்ரீரங்கத்தில் ஆர்வம் : அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்து வருகின்றனர். நீண்ட வரிசையில் நின்று மக்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்து வருகின்றனர்.

விஜயகாந்த், அன்பழகன், சிதம்பரம் ஓட்டு : தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் சென்னை சாலிகிராமத்தில் ஓட்டுப்போட்டனர். அமைச்சர் அன்பழகன் அண்ணாநகரில் ஓட்டுப் போட்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சிட்டலாச்சி நினைவு அரசுப் பள்ளியில் மத்திய அமைச்சர் சிதம்பரம் அவரது குடும்பத்தாருடன் ஓட்டு போட்டார்.

ஆத்தூரில் பரபரப்பு : சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கெங்கவல்லி (தனி) தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சமூக சமத்துவ படை கட்சி தலைவர் சிவகாமி ஐஏஎஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் ஓட்டுப்பதிவு துவங்கியதும், தனது தொகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளை பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில், ‌பெரியபுழல்வாசல் கிராமத்தில், உள்ள ஓட்டுச்சாவடியை பார்வையிட வந்தார். ஓட்டுச்சாவடிக்கு அருகில், தஇமுகவினர் பேட்ச், தொப்பி உள்ளிட்டவைகளை கொடுத்து திமுகவிற்கு ஓட்டளிக்குமாறு தேர்தல் பிரசாரம் செய்வதைக் கண்டார். இதுகுறித்து, அவர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் செய்‌தார். இந்த புகாரின் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், அவர் தனது கட்சியினருடன் சேர்ந்து திடீர் சாலைமறியலில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் பெரும்பரபரபப்பு நிலவி வருகிறது.

முதல் 2 மணி நேரத்தில் 13 சதவீதம் : தமிழகம் முழுவதும் முதல் 2 மணி நேரத்தில் 13 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகின. தமிழக சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்து வருவதால் முதல் 2 மணி நேரத்தில் 11 சதவீதம் ஓட்டு பதிவாகியுள்ளது.

ராமநாதபுரம் 9.2 % : ராமநாதபுரத்தில் 10 மணி நிலவரப்படி 9.2 சதவீதம் ஓட்டுப்பதிவாகியுள்ளது. காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. கல்கிணற்று வலசை, கொட்டியன்வலசை, ஓம் சக்தி நகர் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் ஓட்டுச் சாவடிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டதால், ஓட்டுப்பதிவு ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது.

தர்மபுரியில் 7.04% : தர்மபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் காலை 8 மணி முதல் 9 மணிக்குள் 7.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டளித்து வருகின்றனர்.

நாகப்பட்டினத்தில் 10% : நாகப்பட்டினம், ஸ்ரீவேலூர் பகுதிகளில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், ஓட்டுப்பதிவு துவங்கிய முதல் 1 மணிநேரத்தில் 10 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக அப்பகுதி தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சியில் 9 சதவீதம் : திருச்சியில் இன்று காலை 8 மணிமுதல் 9 மணிவரையிலான காலகட்டத்தில் 9 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டசபை தேர்தல் : வாக்காளர்கள் ஆர்வம் ; ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு

புவனேஸ்வர் : ""மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடப்பதாக அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்துள்ளதை அடுத்து, ஓட்டளித்ததற்கு அடையாளமாக வாக்காளர்களுக்கு ரசீது வழங்கும் முறையை கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது,'' என, தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், கிழக்கு பிராந்தியத்தில் உள்ள மாநிலங்களின் தேர்தல் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இதில், தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி கலந்து கொண்டார். தேர்தலின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறை, வாக்காளர் பட்டியல் வெளியீடு, வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன்பின் தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இம்மாதம் 25ம் தேதி, "தேசிய வாக்காளர் தினம்' ஆக கடைப்பிடிக்கப்படுகிது. இதையொட்டி, தேர்தல் கமிஷன் சார்பில் சில சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, வாக்காளர் பட்டியலில், நாடு முழுவதும் உள்ள இரண்டு கோடி புதிய வாக்காளர்களின் பெயர் சேர்க்கப்படவுள்ளது. இந்த புதிய வாக்காளர்கள் அனைவருக்கும், வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும், வாக்காளர்கள், தாங்கள் எந்த கட்சிக்கு ஓட்டளித்தோம் என்பதை உறுதியாக தெரிந்து கொள்ள முடியாத நிலை இருப்பதால், அதில் குளறுபடி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. இதுகுறித்து தேர்தல் கமிஷன் கவனம் செலுத்தியுள்ளது. வாக்காளர்கள், ஓட்டளித்ததும், அதற்கான அடையாளமாகவும், அது தொடர்பான விவரங்களை உறுதி செய்து கொள்வதற்காகவும், ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் இருந்தே ரசீது வழங்கும் நடைமுறையை (ஏ.டி.எம்.,களில் பணம் எடுத்தவுடன், அதற்கான ரசீது வழங்கப்படுவது போல்) கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நிபுணர் குழு ஆய்வு செய்து வருகிறது. ஒவ்வொரு வாக்காளரும், கட்டாயமாக ஓட்டளித்து, தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். ஓட்டளிப்பது குறித்த அவசியத்தை வாக்காளர்கள் ஒருமுறை உணர்ந்து விட்டால், அதன்பின் தாங்களாகவே தங்களது ஜனநாயக கடைமையை நிறைவேற்றுவர். வரும் காலங்களில் ஓட்டளிப்பதில் இளைஞர்கள் முக்கிய பங்கு வகிக்க உள்ளனர்.

தேர்தலின் போது கறுப்பு பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதை தடுப்பதற்கு, பீகார் சட்டசபை தேர்தலில் சில நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. மற்ற மாநிலங்களிலும் இனிமேல், இதுபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்படும். தேர்தல் பிரசாரங்களின் போது, மீடியாக்களுக்கு பணம் கொடுத்து (பெய்டு நியூஸ்), தங்களுக்கு ஆதரவாக சில வேட்பாளர்கள் செய்தி வெளியிடக் கூறுவதாகவும் புகார் வந்துள்ளது. இதை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். பீகார் தேர்தலின் போது, செய்தி வெளியிடுவதற்காக பணம் கொடுத்ததாக 86 வேட்பாளர்களுக்கு, தேர்தல் கமிஷன் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இவர்களில் சிலர், தங்களின் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக வேறு ஏதாவது சட்ட நடவடிக்கைகள் எடுக்கலாமா என்பது குறித்தும் தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது. இவ்வாறு குரேஷி கூறினார்.

ஓட்டு போட்டதும் ரசீது கிடைக்க வழி: ஆலோசிப்பதாக குரேஷி தகவல்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நாளை 50 ஆயிரம் இடங்களில் வெளியிடப்படுகிறது. புதிதாக 13 லட்சம் பேர் வாக்காளர் பட்டிய லில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும¢ ஜனவரி 1ம் தேதியை தகுதி அடிப்படை நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் 25ம் தேதி வெளியிடப்பட்டது.

அந்த பட்டியலில் பெயர் சேர்ப்பு, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் போன்றவை இருந்தால், அவற்றிற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நவம்பர் 13ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அலுவலகம் அறிவித்தது. இதற்காக தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்ட பள்ளி கள், அரசு அலுவலகங்களில் இந்த முகாம்கள் நடந்தன.
இங்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வழங்கப்பட்டதுடன், புதிய விண்ணப்பங்களும் பெறப்பட்டன. இதில் ஏராளமானோர் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், பெயர் சேர்ப் பிற்கான விண்ணப்பங்களை வழங்கினர்.
தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் வீடு, வீடாக சென்று முழுமையாக பரி சீலனை செய்யப்பட்டன. அதை தொடர்ந்து வாக்காளர்களின் முழு விவரங்களும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த பணிகள் இறுதி கட்டத்தை எட்டி முடிந் துள்ளது. நாளை (10ம் தேதி) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது:

தமிழகம¢ முழுவதும் 234 சட்டசபை தொகுதிகளிலும் நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. கலெக்டர் அலுவலகம், போலீஸ் நிலையங்கள், ஆர்டிஓ அலுவ லகம், தாலுகா அலுவலகங்கள், ஓட்டுப்பதிவு நடைபெறும் இடங்கள் என்று 50 ஆயிரம் இடங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வாக்காளர் பட்டியல் வைக்கப்படும்.

பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என சரி பார்த்து கொள்ளலாம். தமிழகத்தில் ஏற்கனவே 1.49 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இப்போது, புதிதாக 13 லட்சம் பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் மொத்தம், ஆண், பெண் வாக்காளர்கள் விவரம் 10ம் தேதி இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னையில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 29 லட்சத்து 31 ஆயிரமாகும்(ஏற்கனவே உள்ள புள்ளி விவரப் படி). இறுதி வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். இதனால் சென்னை வாக்காளர் எண்ணிக்கை உயரும்’’ என்றனர்.

சட்டப்பேரவை தேர்தலுக்கு இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியாகிறது

முக நூல்

Popular Posts