background img

புதிய வரவு

Showing posts with label Poll. Show all posts

சென்னை: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு மற்றும் வன்முறை காரணமாக, தமிழகத்தில் 7 வாக்குச் சாவடிகளில் நாளை மறு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

தமிழகத்தில் 13ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. அப்போது சில வாக்குச்சாவடிகளில் மின்னணு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது.

இதையடுத்து 7 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் படி இங்கு நாளை மறு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், கிள்ளியூர் தொகுதி அனந்தமங்கலம், திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி தொகுதியில், ஆரணி நகர செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, தேனி மாவட்டத்தில், போடிநாயக்கனூர் தொகுதி சங்கராபுரம் ஆகிய வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மறு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

கடலூர் மாவட்டத்தில், நெய்வேலி தொகுதியில் சம்மட்டிக்குப்பம் வாக்குச்சாவடி மற்றும் சம்மட்டிக்குப்பத்தில் மற்றொரு வாக்குச்சாவடியில் வன்முறை காரணமாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் சேதமடைந்ததால் மறு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவிடை மருதூர் தொகுதியில் வளியவட்டம் வாக்குச்சாவடி மற்றும் அதே தொகுதியில் பருத்திக்குடி வாக்குச்சாவடி ஆகியவற்றில் ஆயிரக்கணக்கானோர் தேர்தலைப் புறக்கணித்ததால் அங்கு மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழகத்தில் 7 வாக்குச் சாவடிகளில் நாளை மறு வாக்குப் பதிவு

சென்னை: சென்னை மயிலாப்பூர் தொகுதியில் முதலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் ஜெயந்தி. ஆனால் பெரும் குழப்பம் ஏற்பட்டு கடைசியில் ஜெயந்தியின் கணவரான தங்கபாலுவே அங்கு வேட்பாளராகி விட்டார். இந்த நிலையில், இன்று காலை வாக்களிப்பதற்காக வேளச்சேரி கஸ்தூரிபாய் நகரில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்தார் ஜெயந்தி. ஆனால் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் புகைப்பட அடையாள அட்டை வைத்திருந்தும் கூட ஜெயந்தியால் வாக்களிக்க முடியவில்லை. இதனால் அவர் பெரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.

ஜெயந்தி தங்கபாலுவுக்கு ஓட்டு இல்லை

 கிருஷ்ணகிரியில் 535 ஓட்டாளர்கள் ஓட்டளிக்க மறுத்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஓசூர் தொகுதி மாசிநாயக்கன் பள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட தேரக்கப்பள்ளி கிராமத்தில் 535 ஓட்டாளர்கள் உள்ளனர்.

இவர்களுக்கு அடிப்படை வசதி ‌எதுவும் கிடைக்காத காரணத்தினால் யாரும் ஓட்டளிக்க வில்லை. ஓட்டுச்சாவடிகள் வெறுச்சோடி காணப்படுகின்றன

535 பேர் வாக்களிக்க மறுப்பு

தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருசெங்கோடு, பரமத்தி வேலூர், குமாரபாளையம், ராசிபுரம்(தனி), சேந்தமங்கலம் ஆகிய 6தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதில் திருச்செங்கோடு பகுதியில் சீனிவாசபாளையம் பூத் எண் 85ல் மட்டும் முரசு சின்னத்திற்கு ஓட்டளித்தால், ஓட்டு பதிவாகவில்லை என்று தே.மு.தி.க.,வினர் புகார் அளித்துள்ளனர்.

இதனால் அந்த பூத் எண்ணில் மட்டும் பதற்றம் நிலவுகிறது.

முரசு சின்னம் பதிவாகவில்லை: பதற்றம்

வாக்குப் பதிவு துவங்கிய சற்று நேரத்துக்கெல்லாம் வாக்குச் சாவடிக்கு வந்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இன்று காலை 8.20 மணிக்கு சென்னை சாலிகிராமம் காவேரி உயர்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் ஓட்டளித்தார்.

அவருடன் அவருடைய மனைவி பிரேமலதாவும் வாக்குச் சாவடிக்கு வந்து தன் வாக்கைப் பதிவு செய்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்படுகிறது. இருந்தும் கடைசி நேரத்தில் தேர்தல் ஆணைய கண்காணிப்பையும் மீறி 234 தொகுதிகளிலும் பரவலாக பணப் பட்டுவாடா அமோகமாக இருந்தது.

இருந்தும் இதையும் மீறி 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி முன்னிலை பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பணப்பட்டுவாடாவை மீறி வெற்றி பெறுவோம்: விஜயகாந்த்

அ.தி.மு.க., பொதுசெயலாளர் ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கத்தில் 11 மணி நிலவரப்படி 32 சதம் ஓட்டுப்பதிவானது.

இந்த தொகுதியில் இதுவரை எவ்வித வன்முறையும் இல்லை. திருச்சியில் மொத்தம் இதுவரை 29 சத ஓட்டுக்கள் பதிவாகியிருக்கிறது.

ஸ்ரீரங்கத்தில் 32 சதவிதம் வாக்குப்பதிவு

அ.தி.மு.க., பொதுசெயலாளர் ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கத்தில் 11 மணி நிலவரப்படி 32 சதம் ஓட்டுப்பதிவானது.

இந்த தொகுதியில் இதுவரை எவ்வித வன்முறையும் இல்லை. திருச்சியில் மொத்தம் இதுவரை 29 சத ஓட்டுக்கள் பதிவாகியிருக்கிறது.

வீரபாண்டி ஆறுமுகத்தின் மகள் நிர்மலா, வீரபாண்டி தொகுதிக்கு உட்பட்ட பூலாவரி கிராம வாக்குச் சாவடியில் ஓட்டளித்தார். அப்போது அவர், தன் கையில் மை வைத்துக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

அதிகாரிகள் வற்புறுத்தவே, கையில் அலர்ஜி ஏற்படும் என்பதால் தான் மை வைத்துக்கொள்ள முடியாது என்று வாதிட்டார்.

இதனால் வேறு வழியின்றி அதிகாரிகள் அவர் விரலில் மை வைக்காமலேயே ஓட்டளிக்க அனுமதித்தனர். இதற்கு அதிமுகவினர் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மை வைக்காமல் ஓட்டு போட்ட வீரபாண்டி ஆறுமுகம் மகள்

வீரபாண்டி ஆறுமுகத்தின் மகள் நிர்மலா, வீரபாண்டி தொகுதிக்கு உட்பட்ட பூலாவரி கிராம வாக்குச் சாவடியில் ஓட்டளித்தார். அப்போது அவர், தன் கையில் மை வைத்துக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

அதிகாரிகள் வற்புறுத்தவே, கையில் அலர்ஜி ஏற்படும் என்பதால் தான் மை வைத்துக்கொள்ள முடியாது என்று வாதிட்டார்.

இதனால் வேறு வழியின்றி அதிகாரிகள் அவர் விரலில் மை வைக்காமலேயே ஓட்டளிக்க அனுமதித்தனர். இதற்கு அதிமுகவினர் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட போயஸ் தோட்டத்தில் வசித்து வருகிறார்.

இவர் தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி சாவடியில் வாக்களித்தார். முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் இந்த சாவடியில் வாக்களித்தார்.

பின்னர் அவரை செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டனர். அப்போது அவர், ’’விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் மக்கள் ஒரு நல்ல ஆட்சியை எதிர்ப்பார்க்கின்றனர்’’ என்று கூறினார்.

ரஜினிகாந்த் எப்போதும் வாக்களித்துவிட்டு கைகைளை மட்டும் உயர்த்தி காட்டிவிட்டு போய்விடுவார். இந்த முறை அவர் விலைவாசி உயர்வை பற்றி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் ஒரு நல்ல ஆட்சியை எதிர்ப்பார்க்கிறார்கள் : ரஜினி பேட்டி

நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட போயஸ் தோட்டத்தில் வசித்து வருகிறார்.

இவர் தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி சாவடியில் வாக்களித்தார். முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் இந்த சாவடியில் வாக்களித்தார்.

பின்னர் அவரை செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டனர். அப்போது அவர், ’’விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் மக்கள் ஒரு நல்ல ஆட்சியை எதிர்ப்பார்க்கின்றனர்’’ என்று கூறினார்.

ரஜினிகாந்த் எப்போதும் வாக்களித்துவிட்டு கைகைளை மட்டும் உயர்த்தி காட்டிவிட்டு போய்விடுவார். இந்த முறை அவர் விலைவாசி உயர்வை பற்றி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 234 தொகுதிகளிலும் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் வசிப்பதால் அத்தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரீஷ் கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

இந்த தொகுதியில் அதிமுக சார்பில் வளர்மதி போட்டியிடுகிறார்.

ஜெயலலிதா வாக்களித்தார்

சென்னை : தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு பலத்த பாதுகாப்புடன் துவங்கியது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டளித்து வருகின்றனர். தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பு பலம‌டங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெறும் : ஜெ.,
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா சென்னையில் இன்று காலை 9 மணியளவில் ஓட்டுப் போட்டார். ஓட்டு அளித்து விட்டு நிருபர்களுக்கு பேட்டியளித்த ஜெயலலிதா : சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி அதிக பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெரும் என்றார்.

மக்கள் தி.மு.க., பக்கம் : ஸ்டாலின் : துணை முதல்வர் ஸ்டாலின் சென்னை கோபாலபுரத்தில் இருக்கும் ஓட்டுச்சாவ‌டியில் ஓட்டுப் போட்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் தி.மு.க., அரசு மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது. சொன்னது மட்டும் அல்லாமல் சொல்லாத பல நலத்திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது. எனவே தி.மு.க., ஆட்சிக்கு மீண்டும் வர வேண்டும் என்ப‌தே மக்கள் விருப்பம். தி.மு.க., கூட்டணி 220 தொகுதிகளில் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

கருணாநிதி வாக்களிப்பு : சென்னை கோபாலபுரம் சாரதா பள்ளி ஓட்டுச்சாவடியில் முதல்வர் கருணாநிதி ஓட்டு போட்டார்.

வரிசையில் நின்று வைகோ ஓட்டு : ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் தொகுதிக்கு உட்பட்ட கலிங்கப்பட்டி பள்ளியில் ஓட்டுப் போடுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டுப்போட்டார். சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதை ம.தி.மு.க., புறக்கணித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை ஓட்டுப்பதிவு துவங்கியது சில நிமிடங்களில் ஓட்டுச்சாவடிக்கு வந்த வைகோ ஓட்டு போடுவதற்காக ஆர்வத்துடன் காத்திருந்து ஓட்டளித்தார்.

இயந்திரக் கோளாறு : தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ராஜபாளையம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் ஒரு சில ஓட்டுச்சாவ‌டிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் ஓட்டுப்பதிவு தாமதமாக துவங்கியது. ராஜபாளையம் 41 வது வார்டு பூத் எண் 105ல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டதால் ஓட்டுப்பதிவு 40 நிமிடங்கள் தாமதமாக துவங்கியது.தர்மபுரி டவுன் நகராட்சி பள்ளியில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் அரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. ராமநாதபுரத்தில் ஸ்வாஸ் பள்ளியில் ஓட்டுச்சாவடி எண் 105ல் இயந்திரக் கோளாறு காரணாக ஓட்டுபதிவு 5 நிமிடங்கள் ‌தாமதமாக துவங்கியது.

திருச்சியில் ஜரூர் : திருச்சியில் இன்று காலை 7 மணி முதலே வாக்காளர்கள் ஓட்டுப்போட ஓட்டுச்சாவடிகளில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியதில் இருந்து வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திருச்சி மேற்கு தொகுதியில், அவர் பிளாஸம் பள்ளியில் மாவட்ட கலெக்டர் மகேசன் காசிநாதன் ஓட்டளித்தார்.

ஸ்ரீரங்கத்தில் ஆர்வம் : அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்து வருகின்றனர். நீண்ட வரிசையில் நின்று மக்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்து வருகின்றனர்.

விஜயகாந்த், அன்பழகன், சிதம்பரம் ஓட்டு : தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் சென்னை சாலிகிராமத்தில் ஓட்டுப்போட்டனர். அமைச்சர் அன்பழகன் அண்ணாநகரில் ஓட்டுப் போட்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சிட்டலாச்சி நினைவு அரசுப் பள்ளியில் மத்திய அமைச்சர் சிதம்பரம் அவரது குடும்பத்தாருடன் ஓட்டு போட்டார்.

ஆத்தூரில் பரபரப்பு : சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கெங்கவல்லி (தனி) தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சமூக சமத்துவ படை கட்சி தலைவர் சிவகாமி ஐஏஎஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் ஓட்டுப்பதிவு துவங்கியதும், தனது தொகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளை பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில், ‌பெரியபுழல்வாசல் கிராமத்தில், உள்ள ஓட்டுச்சாவடியை பார்வையிட வந்தார். ஓட்டுச்சாவடிக்கு அருகில், தஇமுகவினர் பேட்ச், தொப்பி உள்ளிட்டவைகளை கொடுத்து திமுகவிற்கு ஓட்டளிக்குமாறு தேர்தல் பிரசாரம் செய்வதைக் கண்டார். இதுகுறித்து, அவர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் செய்‌தார். இந்த புகாரின் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், அவர் தனது கட்சியினருடன் சேர்ந்து திடீர் சாலைமறியலில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் பெரும்பரபரபப்பு நிலவி வருகிறது.

முதல் 2 மணி நேரத்தில் 13 சதவீதம் : தமிழகம் முழுவதும் முதல் 2 மணி நேரத்தில் 13 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகின. தமிழக சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்து வருவதால் முதல் 2 மணி நேரத்தில் 11 சதவீதம் ஓட்டு பதிவாகியுள்ளது.

ராமநாதபுரம் 9.2 % : ராமநாதபுரத்தில் 10 மணி நிலவரப்படி 9.2 சதவீதம் ஓட்டுப்பதிவாகியுள்ளது. காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. கல்கிணற்று வலசை, கொட்டியன்வலசை, ஓம் சக்தி நகர் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் ஓட்டுச் சாவடிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டதால், ஓட்டுப்பதிவு ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது.

தர்மபுரியில் 7.04% : தர்மபுரி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் காலை 8 மணி முதல் 9 மணிக்குள் 7.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டளித்து வருகின்றனர்.

நாகப்பட்டினத்தில் 10% : நாகப்பட்டினம், ஸ்ரீவேலூர் பகுதிகளில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், ஓட்டுப்பதிவு துவங்கிய முதல் 1 மணிநேரத்தில் 10 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக அப்பகுதி தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சியில் 9 சதவீதம் : திருச்சியில் இன்று காலை 8 மணிமுதல் 9 மணிவரையிலான காலகட்டத்தில் 9 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டசபை தேர்தல் : வாக்காளர்கள் ஆர்வம் ; ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு

திமுக தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவர் சென்னை கோபாலபுரத்தில் வசிப்பதால், கோபாலபுரத்தில் உள்ள சாரதா பள்ளி சாவடியில் வாக்களித்தார். கோபாலபுரம் ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ளது.

ஆயிரம் விளக்குதொகுதியில் திமுக சார்பில் ஹசன் போட்டியிடுகிறார்.

கலைஞர் வாக்களித்தார்

இன்று காலை 8 மணி முதல் ஓட்டுப் பதிவு துவங்குகிறது. மாலை 5 மணிக்கு முடிந்துவிடும். மறக்காமல் உங்கள் ஓட்டை, மனசாட்சிப் பொதுவாக யார் நல்லவர் எனக் கருதுகிறீர்களோ, எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தால் நல்லது என நினைக்கிறீர்களோ... அவர்களுக்குப் போடுங்கள்...

மாலை 5 மணி வரை காத்திருக்கத் தேவையில்லை. கள்ள ஓட்டு போடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை, தேர்தல் கமிஷன் பெருமளவு மேற்கொண்டுள்ளது. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலும், அடையாள அட்டையும், பூத் சிலிப்பும் வழங்கப்பட்டுள்ளன.

இருந்தாலும், தவறு நடப்பதற்கான எந்த சந்தர்ப்பத்தையும் அளிக்காமல், நாமே முந்திக்கொண்டு நமது ஓட்டைப் பதிவு செய்வது நல்லது.

கண்டிப்பா ஓட்டுப்போடுங்க... காதுல பூ சுத்தற விஷயமா அரசியல் தெரிஞ்சாலும் இது உங்க ஜனநாயக கடமை

இன்று காலை 8 மணி முதல் ஓட்டுப் பதிவு துவங்குகிறது. மாலை 5 மணிக்கு முடிந்துவிடும். மறக்காமல் உங்கள் ஓட்டை, மனசாட்சிப் பொதுவாக யார் நல்லவர் எனக் கருதுகிறீர்களோ, எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தால் நல்லது என நினைக்கிறீர்களோ... அவர்களுக்குப் போடுங்கள்...

மாலை 5 மணி வரை காத்திருக்கத் தேவையில்லை. கள்ள ஓட்டு போடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை, தேர்தல் கமிஷன் பெருமளவு மேற்கொண்டுள்ளது. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலும், அடையாள அட்டையும், பூத் சிலிப்பும் வழங்கப்பட்டுள்ளன.

இருந்தாலும், தவறு நடப்பதற்கான எந்த சந்தர்ப்பத்தையும் அளிக்காமல், நாமே முந்திக்கொண்டு நமது ஓட்டைப் பதிவு செய்வது நல்லது.

முக நூல்

Popular Posts