background img

புதிய வரவு

Showing posts with label Film. Show all posts

“பச்சைக்கிளி முத்துச்சரம்” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. “ஆயிரத்தில் ஒருவன்” படத்திலும் நடித்தார். இப்படத்தில் நடித்தபோது ஆண்ட்ரியாவுக்கும் செல்வராகவனுக்கும் காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கப்பட்டது.

இதுவே செல்வராகவன்-சோனியா அகர்வால் விவாகரத்துக்கு காரணமாக அமைந்தது என்றும் கூறப்பட்டது. பின்னர் செல்வராகவன் “இரண்டாம் உலகம்” படத்திலும் ஆண்ட்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இதன் படப்பிடிப்பிலும் பங்கேற்று சில காட்சிகளில் நடித்தார். இந்த நிலையில் செல்வராகவன்- கீதாஞ்சலி திருமணம் நடந்தது. நீண்ட இடைவெளிக்கு பின் “இரண்டாம் உலகம்” படப்பிடிப்பை செல்வராகவன் மீண்டும் துவக்கி உள்ளார்.

இதில் நடிக்க ஆண்ட்ரியாவை அழைத்தபோது மறுத்து விட்டார். படத்தை முடித்து கொடுக்குமாறு செல்வராகவன் திரும்ப திரும்ப வேண்டியும் அவர் வரவில்லை.

இதையடுத்து ஆண்ட்ரியாவுக்கு பதில் ரிச்சா கங்கா பாத்யாய் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். ஆண்ட்ரியா நடித்த காட்சிகள் வெட்டி எறியப்பட்டு விட்டதாம்.

செல்வராகவன் படத்தில் நடிக்க நடிகை ஆண்ட்ரியா மறுப்பு

தமிழில் நம்பர் ஒன் நடிகையாக சில காலம் இருந்தார் தமன்னா. ஆனால் அமலா பாலின் வரவால் அவரைத் தேடிவந்த பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன. தற்போது தமன்னாவிடம் ஒரே ஒரு தமிழ்ப் படம்தான் இருக்கிறதாம்.
புதிய பட வாய்ப்புகள் ஏதும் வராததால் தெலுங்குப் படங்களின் பக்கம் தன் கவனத்தை திருப்பி விட்டாராம். தெலுங்கிலிருந்து வந்த சில பட வாய்ப்புகளைப் பரிசீலித்த தமன்னா ஒரேயடியாக நான்கு படங்களை ஒப்புக் கொண்டு விட்டாராம்.
தமிழில் இப்போதைக்கு நடிக்க வேண்டாம் என்றும், மறுபடியும் தெலுங்கில் நடிக்கலாம் எனவும் முடிவுசெய்துள்ளாராம் தமன்னா.

தெலுங்கு பக்கம் தாவிய தமன்னா...

தாராவில் நடந்த படப்பிடிப்பின் போது அஜீத்துக்கு காயம் ஏற்பட்டது. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் நடித்து முடித்தார்.
இதுகுறித்து வெங்கட் பிரபு கூறும்போது,

தாராவில் சேசிங் காட்சியொன்றை படமாக்கியபோது அஜீத் காலில் சுளுக்கு ஏற்பட்டு கடுமையான வலி ஏற்பட்டது. ஊன்று கோல் துணையோடு நடந்தார். அதை பார்த்தவர்கள் அஜீத் உடல் ஊனமுற்றவராக படத்தில் நடிக்கிறார் என்று நினைத்தனர். வலியை பொருட்படுத்தாமல் நடித்து முடித்தார் என்றார்.

“மங்காத்தா” படப்பிடிப்பில் நடிகர் அஜீத் காயம்

தாராவில் நடந்த படப்பிடிப்பின் போது அஜீத்துக்கு காயம் ஏற்பட்டது. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் நடித்து முடித்தார்.
இதுகுறித்து வெங்கட் பிரபு கூறும்போது,

தாராவில் சேசிங் காட்சியொன்றை படமாக்கியபோது அஜீத் காலில் சுளுக்கு ஏற்பட்டு கடுமையான வலி ஏற்பட்டது. ஊன்று கோல் துணையோடு நடந்தார். அதை பார்த்தவர்கள் அஜீத் உடல் ஊனமுற்றவராக படத்தில் நடிக்கிறார் என்று நினைத்தனர். வலியை பொருட்படுத்தாமல் நடித்து முடித்தார் என்றார்.

பொன்னர் சங்கர் படத்தை பார்த்த பலரும் பாராட்டி வரும் நிலையில் ஒரு சிலர் ஒரு சில குறைகளையும் சுட்டிக் காட்டி வருகிறார்கள். இப்படியொரு பிராமாண்ட படத்தை கொடுத்த தியாகராஜன் பாராட்டு மழையில் நனைந்தபோதிலும், எந்தவித ஈகோவும் இல்லாமல் சில திருத்தங்களை செய்ய முன்வந்திருக்கிறார். படத்தை பார்த்த சில திரையுலக விஐபிக்கள் முக்கியமாக ஒரேயொரு குறையை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். அதாவது குஷ்புவும், ஜெயராமும் இறந்த பின்னர் தனது பெற்றோர் இறந்து விட்டதை பார்த்து பிரசாந்த் அதிர்ச்சி அடையாதது பற்றி விமர்சித்திருக்கிறார்கள். அட்லீஸ்ட் அவர்கள் மரணம் குறி்தது ஒரு டயலாக்காவது பேசியிருக்கலாம் என்றும் விமர்சனம் வந்துள்ளது. இதையடுத்து அந்த காட்சியை மட்டும் மீண்டும் படம்பிடித்து படத்தில் இணைக்க முடிவு செய்த தியாகராஜன், இதற்கான சூட்டிங்கையும் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்.

பொன்னர் சங்கர் ரீ-சூட்டிங்!

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 8 மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. நடிகர், நடிகைகள் பலர் வாக்குப்பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற உள்ளனர். இதற்காக சிலர் வெளியூர் படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பியுள்ளனர்.

ரஜினிகாந்த் ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் ஓட்டு போட்டு வருகிறார். இம்முறையும் “ராணா” படப் பிடிப்புக்கு இடையில் நாளை ஓட்டுப் போடுகிறார். டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஸ்டெல்லா மேரி கல்லூரியில் ஆயிரம் விளக்கு தொகுதிக்கான வாக்கைப் பதிவு செய்கிறார்.

நடிகர் கமல் ஆழ்வார் பேட்டையில் உள்ள சென்னை பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டு போடுகிறார்.தே.மு.தி.க. தலைவரும் நடிகருமான விஜயகாந்த் சாலி கிராமத்தில் வசிக்கிறார். இது விருகம்பாக்கம் தொகுதியில் வருகிறது. அவர் சாலி கிராமம் ஆவிச்சி பள்ளியில் ஓட்டு போடுகிறார்.

சூர்யாவும் அவரது மனைவி ஜோதிகாவும் தியாகராயநகர் இந்தி பிரச்சார சபா வாக்குச் சாவடியில் ஓட்டு போடுகின்றனர். இதே வாக்குச்சாவடியில் சிவக்குமார், கார்த்தி ஆகியோரும் ஓட்டு போடுகிறார்கள்.

நடிகர் அஜீத்தும் அவரது மனைவி ஷாலினியும் திருவான்மியூர் வால்மீகி நகரில் உள்ள சென்னை பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டு போடுகின்றனர். அடையார் பாரத் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் ஓட்டு போடுகிறார்.

படப்பிடிப்புகள் ரத்து: ரஜினி,கமல்,விஜய்,அஜீத், சூர்யா ஓட்டு போடுகின்றனர்

முக நூல்

Popular Posts