background img

புதிய வரவு

Showing posts with label GK Vasan. Show all posts

திமுக தேர்தல் அறிக்கை மக்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது என, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.

சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரப் பாடல் சிடிக்கள் 'வெற்றி கீதம்' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த பிரச்சார பாடல் சிடிக்கள் வெளியீட்டு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வாசன் கலந்து கொண்டு பிரச்சார சிடியை வெளியிட்டார்.

விழாவில், வாசன் பேசும்போது,

மத்திய, மாநில அரசின் திட்டங்கள் தொலை நோக்கு பார்வையுடன் செயல்படுத்தப்படுகின்றன. திமுக தேர்தல் அறிக்கை மக்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஜனநயாக முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் ஓட்டு அளித்து வெற்றி பெறச் செய்வர். வரும் 30ம் தேதி நான் தேர்தல் பிரசாரத்தை துவங்கி அடுத்த மாதம் 11ம் தேதி வரை, 24 மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறேன் என்றார்.

திமுக தேர்தல் அறிக்கை: வாசன் பெருமிதம்

மத்திய மந்திரி ஜி.கே.வாசன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

லிபியாவில் போராட்டத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வரும் பணியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முனைப்புடன் செய்து வருகிறது. அவர்கள் வழிகாட்டுதலில் கப்பல்துறை அமைச்சரும் ஏற்கனவே காட்டியா என்ற கப்பலை லிபியாவுக்கு அனுப்பிவைத்தது. அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக துறைமுகங்களுக்கு அழைத்துச் செல்லும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து வெளியுறவுத்துறை மந்திரி கிருஷ்ணா, வெளிநாட்டுவாழ் இந்திய நலத்துறை மந்திரி வயலார் ரவி, ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி மற்றும் நான் இந்தியர்களை மீட்பது குறித்து பேசி, தற்போது இந்திய கப்பல் படையைச் சேர்ந்த 3 கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல்கள் லிபியாவிற்கு சென்று மீட்புப்பணிகளில் ஈடுபடும். கடந்த 7 ஆண்டுகளாக சோனியா வழிகாட்டுதலின் பேரில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக நேற்று வெளியிடப்பட்ட ரெயில்வே பட்ஜெட்டிலும் தமிழ் நாட்டுக்கான திட்டங்கள், ஆய்வு செய்ய வேண்டிய திட்டங்கள் பற்றி அறிவித்துள்ளது. தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக செயல் படுத்தி வருகிறது. காங்கிரஸ் இயக்கம் அகில இந்திய அளவில் வலுவான இயக்கமாக உள்ளது.

இதற்கு எடுத்துக்காட்டாக தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் காங்கிரசில் இணைந்து வருகிறார்கள். இன்று எனது முன்னிலையில் மதுரவாயல் தொகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., கம்யூனிஸ்டு, பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 250 பெண்கள் நகரசபை தலைவர் சேகர் தலைமையில் இணைந்துள்ளனர். இதேபோல கவுண்டம் பாளையத்தில் இருந்தும் 63 பேர் காங்கிரசில் இணைந்துள்ளனர்.

இவ்வாறு மத்திய மந்திரி ஜி.கே.வாசன் கூறினார்.

நிகழ்ச்சியில் டில்லி, தயாளன், மால்மருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

லிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர 4 கப்பல்கள்; சென்னையில் ஜி.கே.வாசன் பேட்டி

முக நூல்

Popular Posts