background img

புதிய வரவு

Showing posts with label IPL final Csk. Show all posts

மும்பை : பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடனான பிளே ஆப் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மும்பை, வாங்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீசியது. பெங்களூர் தொடக்க வீரர்களாக அகர்வால், கிறிஸ் கேல் களமிறங்கினர். அதிரடி வீரர் கிறிஸ் கேல் 8 ரன் மட்டுமே எடுத்து அஸ்வின் சுழலில் ஆட்டமிழந்தார். அகர்வால் 34 ரன், டிவில்லியர்ஸ் 11 ரன்னில் வெளியேற பெங்களூர் அணி தடுமாறியது.

இந்த நிலையில், கோஹ்லி & போமர்ஸ்பாக் ஜோடி 4வது விக்கெட்டுக்கு கடுமையாகப் போராடி 48 ரன் சேர்த்தது. போமர்ஸ்பாக் 29 ரன் எடுத்து போலிஞ்சர் வேகத்தில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார். பெங்களூர் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது. கோஹ்லி 70 ரன் (44 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), திவாரி 9 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அடுத்து களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்து வென்றது. ரெய்னா ஆட்டமிழக்காமல் 73 ரன் விளாசினார். பத்ரிநாத் 34, டோனி 29, மார்க்கெல் 28 ரன் எடுத்தனர். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

பைனலுக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்

முக நூல்

Popular Posts