background img

புதிய வரவு

Showing posts with label IPL Cricket. Show all posts

ஐ.பி.எல் லீக் போட்டியில் காம்பிர் தலைமையிலான கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் நம்பர்-1 இடத்துக்கு முன்னேறியது. சொந்த மண்ணில் வீழ்ந்த ஷேவாக்கின் டெல்லி அணி, இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
டெல்லியில் நேற்று நடந்த ஐந்தாவது ஐ.பி.எல் தொடரின் 51வது லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

டெல்லி அணியில் கெவின் பீட்டர்சன், பவன் நேகிக்கு பதிலாக டேவிட் வார்னர், வருண் ஆரோன் வாய்ப்பு பெற்றனர். கொல்கத்தா அணியில் லாங்கே, இக்பால் அப்துல்லா நீக்கப்பட்டு, பிரட் லீ, பிரதீப் சங்வான் இடம் பெற்றனர்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணியின் தலைவர் ஷேவாக் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
டெல்லி அணிக்கு ஷேவாக், வார்னர் சேர்ந்து நல்ல துவக்கம் தந்தனர். பிரட் லீ வீசிய முதல் ஓவரில் வார்னர் திணற, மெய்டனாக அமைந்தது. மறுபக்கம் வழக்கம் போல் அதிரடி காட்டிய ஷேவாக், சங்வான் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். மீண்டும் பந்துவீச வந்த பிரட் லீ ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்து பதிலடி கொடுத்தார் வார்னர்.
இந்த நேரத்தில் காலிஸ் திருப்புமுனை ஏற்படுத்தினார். முதலில் ஷேவாக்கை(23) வெளியேற்றினார். அடுத்த ஓவரில் வார்னரையும்(21) பெவிலியனுக்கு அனுப்பினார்.
இதே ஓவரில் ஜெயவர்தனாவும் ஆட்டமிழந்ததாக எதிர் அணியினர் தெரிவித்தனர். பந்தை பிடித்த, விக்கெட் கீப்பர் பிரண்டன் மெக்கலம் உள்ளிட்ட கொல்கத்தா வீரர்கள் அப்பீல் செய்தனர்.
ஆனால், அம்பயர் நிராகரிக்க, கண்டம் தப்பினார். இது தொடர்பாக கொல்கத்தா அணித்தலைவர் காம்பிர், ஜெயவர்தனா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் பாட்யா ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து நம்பிக்கை தந்தார் ஜெயவர்தனா.
பொறுப்பாக விளையாடிய ஜெயவர்தனா(30), காம்பிரின் நேரடி த்ரோவில் ஆட்டமிழக்க, டெல்லி அணிக்கு சிக்கல் ஏற்பட்டது. படுமந்தமாக ஆடிய ராஸ் டெய்லரும்(16 ரன், 27 பந்து) வெளியேற, 14.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 100 ஓட்டங்கள் எடுத்து தவித்தது. பிரட் லீ பந்தில் யோகேஷ்(10) போல்டாக, வேகம் அப்படியே குறைந்தது.
கடைசி கட்டத்தில் இர்பான் பதான் போராடினார். பிரட் லீ வேகத்தில் அடுத்தடுத்து 2 பவுண்டரி அடித்தார். தொடர்ந்து நரைன் சுழலில் சிக்சர் விளாசினார். இவர் 36  ஓட்டங்களுக்கு நரைன் பந்தில் ஆட்டமிழந்தார். இதே ஓவரில் நமன் ஓஜா(2) வெளியேறினார். டெல்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 153 ஓட்டங்கள் எடுத்தது.
சுலப இலக்கை விரட்டிய கொல்கத்தா அணிக்கு காம்பிர், பிரண்டன் மெக்கலம் சேர்ந்து வலுவான அடித்தளம் அமைத்தனர். இர்பான் வீசிய முதல் ஓவரிலேயே மெக்கலம் வரிசையாக 2 பவுண்டரி அடித்தார்.
நதீம் சுழலில் காம்பிர் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். ஆரோன் பந்தில் காம்பிர் கொடுத்த கேட்ச்சை உமேஷ் நழுவவிட்டார். இதை பயன்படுத்திக் கொள்ளாத காம்பிர்(36) அடுத்த பந்தில் போல்டானார்.
பின் காலிஸ், மெக்கலம் சேர்ந்து கலக்கல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பொறுப்பாக ஆடிய மெக்கலம் இத்தொடரில் தனது முதல் அரைசதம் எட்டினார். உமேஷ் யாதவ் வீசிய போட்டியின் 16வது ஓவரில் காலிஸ்(30), மெக்கலம்(56) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து மனோஜ் திவாரியும்(8) வெளியேற, லேசான பதட்டம் ஏற்பட்டது. ஆனாலும் குறைவான இலக்கு என்பதால் பிரச்னை ஏற்படவில்லை.
யூசுப் பதான்(7*), தேபபிரதா தாஸ்(1*) சேர்ந்து வெற்றியை உறுதி செய்தனர்.  கொல்கத்தா அணி 18.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 154 ஓட்டங்கள் எடுத்து, தொடர்ந்து 6வது வெற்றியை பெற்றது. தவிர, முந்தைய போட்டியில் டெல்லியிடம் சந்தித்த தோல்விக்கும் பழிதீர்த்தது. ஆட்ட நாயகன் விருதை காலிஸ் வென்றார்.

டெல்லியை வீழ்த்தி முதலிடத்தை பிடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

மும்பை : பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடனான பிளே ஆப் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மும்பை, வாங்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீசியது. பெங்களூர் தொடக்க வீரர்களாக அகர்வால், கிறிஸ் கேல் களமிறங்கினர். அதிரடி வீரர் கிறிஸ் கேல் 8 ரன் மட்டுமே எடுத்து அஸ்வின் சுழலில் ஆட்டமிழந்தார். அகர்வால் 34 ரன், டிவில்லியர்ஸ் 11 ரன்னில் வெளியேற பெங்களூர் அணி தடுமாறியது.

இந்த நிலையில், கோஹ்லி & போமர்ஸ்பாக் ஜோடி 4வது விக்கெட்டுக்கு கடுமையாகப் போராடி 48 ரன் சேர்த்தது. போமர்ஸ்பாக் 29 ரன் எடுத்து போலிஞ்சர் வேகத்தில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார். பெங்களூர் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது. கோஹ்லி 70 ரன் (44 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), திவாரி 9 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அடுத்து களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்து வென்றது. ரெய்னா ஆட்டமிழக்காமல் 73 ரன் விளாசினார். பத்ரிநாத் 34, டோனி 29, மார்க்கெல் 28 ரன் எடுத்தனர். இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

பைனலுக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்

4-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. மே 28-ந்தேதி வரை 51 நாட்கள் ஐ.பி.எல். திருவிழா நடக்கிறது.

கடந்த 3 ஐ.பி.எல். போட்டியிலும் 8 அணிகள் பங்கேற்றன. இந்த ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக புனே வாரியர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா ஆகிய 2 அணிகள் பங்கேற்கின்றன. 10 அணிகள் பங்கேற்பதால் போட்டி அமைப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டது. ஒவ்வொரு அணிக்கும் 14 “லீக்” ஆட்டம் இருக்கும் வகையில் போட்டி முறை அமைக்கப்பட்டது.10 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டது. இரண்டு பிரிவிலும் இடம் பெற்று அணிகள் விவரம்:-

குரூப் “ஏ”: டெக்கான் சார்ஜர்ஸ், டெல்லி டேர் டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே வாரியர்ஸ்.

குரூப்“பி”: சென்னை சூப்பர் கிங்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். அடுத்த பிரிவில் உள்ள 5 அணிகளில் ஒரு அணியுடன் மட்டும் 2 முறை மோத வேண்டும். மற்ற 4 அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி “ஏ” பிரிவில் உள்ள அணிகளில் புனே வாரியர்சுடன் மட்டும் 2 முறை மோதும். குலுக்கல் முறையில் இது முடிவு செய்யப்பட்டது. இன்றைய தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை அணியில் ஏற்கனவே விளையாடிய பெரும்பாலான வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். பேட்டிங்கில் கேப்டன் டோனி, ரெய்னா, முரளி விஜய், அல்பி மார்கல், பெலிசிஸ், ஆகியோரும், பந்துவீச்சில் சவுத்தி, அஸ்வின், ஜகாட்டி, சுதிப் தியாகி உள்ளனர். கடந்த 3 ஐ.பி.எல். போட்டியிலும் முத்திரை பதிக்க தவறியதால் இந்த ஆண்டுக்கான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. யூசுப்பதான், கேப்டன் காம்பீர், மார்கன் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் உள்ளனர்.

சென்னை அணிக்கு எல்லா வகையிலும் நைட் ரைடர்ஸ் அணி சவாலாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கொல்கத்தா அணியை வீழ்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் கடுமையாக போராடும். இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்தப்போட்டி செட் மேக்ஸ் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தப்போட்டியின் தொடக்க விழா மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. இரவு 7.20 மணி வரை 50 நிமிடம் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறும். தொடக்க விழாவில் இந்தி சினிமா பிரபலங்கள் பங்கேற்கிறார்கள். கொல்கத்தா அணியின் உரிமையாளரும், நடிகருமான ஷாருக்கான்- ஸ்ரேயாவுடன் இணைந்து பங்கேற்கும் நடக நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிகிறது. தொடக்க விழா நிகழ்ச்சி விவரங்களை வெளியிட போட்டி அமைப்பாளர்கள் மறுத்து விட்டனர்.

மாலை 6.30 மணிக்கு தொடக்க விழா: கொல்கத்தா அணியை சென்னை வீழ்த்துமா?

பெங்களூரு: ஐ.பி.எல்., தொடர் அணியில் இடம் பெறும் கிரிக்கெட் வீரர்கள் இன்று பல கோடி ரூபாய்க்கு ஏலம் போயினர். கவுதம்காம்பீரை கோல்கட்டா ரைடர்ஸ் அணி 11. 04 கோடிக்கு விலைக்கு வாங்கியது. இது வரை முடிந்த ஏலத்தில் கவுதம்காம்பீர் அதிக விலைக்கு போய் முதலிடத்தில் உள்ளார். கங்குலி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் கெய்ல், லாரா, கிப்ஸ் , ரைடர் ஆகியோரைஎந்த அணி உரிமையாளரும் விலைக்கு வாங்க முன்வரவில்லை.
இந்திய வீரர்கள் 48 பேர் பங்கேற்கின்றனர். கடந்த 3 தொடர்களில் பங்கேற்ற வீரர்களில் ஒப்பந்தம் முடிந்ததால், நடக்கவிருக்கும் தொடருக்கான புதிய ஏலம் இன்றும், நாளையும் பெங்களூருவில் நடக்கிறது. புதிய அணிகளான கொச்சி, புனே அணிக்கு தேவையான அனைத்து வீரர்களையும் ஏலத்தில் எடுக்கிறது. ஒவ்வொரு அணியும், எந்தெந்த வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளனர் என்பது குறித்து அதிக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மொத்தம் 350 வீரர்கள் உள்ள இந்த ஏலத்தில், ரூ. 400 கோடிக்கும் மேலாக செலவிடப்படுகிறது.
வீரர்கள் விலை முழு விவரம் : இன்று நடந்த ஏலத்தில் வீரர்கள் எந்த விலைக்கு போயினர் என்ற முழு விவரம் வருமாறு:

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ஆர் ஆஸ்வின் 850,000 அமெரிக்க டாலர்
எஸ் பத்ரிநாத் 800,000 அமெரிக்க டாலர்
டோக் போலிங்கர் 700,000 அமெரிக்க டாலர்
மைக்கல் ஹசி 425,000 அமெரிக்க டாலர்
ட்வைன் ப்ராவோ 200,000 அமெரிக்க டாலர்
விரிதிமன் சாகா 100,000 அமெரிக்க டாலர்

டெக்கான் சார்ஜர்ஸ்

டேல் ஸ்டெயின் 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்
கேமரூன் ஒயிட் 1.1 மில்லியன் அமெரிக்க டாலர்
குமார் சங்ககாரா 700,000 அமெரிக்க டாலர்
கெவின் பீட்டர்சன் 650,000 அமெரிக்க டாலர்
ப்ரக்யான் ஓஜா 500,000 அமெரிக்க டாலர்
இஷாந்த் சர்மா 450,000 அமெரிக்க டாலர்
அமீத் மிஷ்ரா 300,000 அமெரிக் டாலர்
ஜே பி டூமினி 300,000 அமெரிக்க டாலர்
ஷிகார்தவான் 300,000 அமெரிக்க டாலர்

டில்லி டேர்டெவில்ஸ்

இர்பான் பதான் 1.0 மில்லியன் அமெரிக்க டாலர்
டேவிட் வார்னர் 750,000 அமெரிக்க டாலர்
மொர்னே மொர்கல்475,000 அமெரிக்க டாலர்
ஜேம்ஸ் ஹோப்ஸ் 350,000 அமெரிக்க டாலர்
ஆரோன் பிஞ்ச் 300,000அமெரிக்க டாலர்
நாமன் ஓஜா 270,000 அமெரிக்க டாலர்

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

டேவிட் ஹசி 1.4 மில்லியன் அமெரிக்க டாலர்
ஆடம் கில்கிறிஸ்ட் 900,000 அமெரிக்க டாலர்
தினேஷ் கார்த்திக் 900,000 அமெரிக்க டாலர்
பியுஸ் சாட்ஙா 900,000அமெரிக்க டாலர்
அபிஷேக் நாயர் 800,000 அமெரிக்க டாலர்
பீரவீன் குமார் 800,000 அமெரிக்க டாலர்
ஸ்டூவர்ட் போர்டு 400,000அமெரிக்க டாலர்
ரியான் ஹாரிஸ் 325,000 அமெரிக்க டாலர்

கொச்சி

மகிலா ஜெயவர்த்தனா 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்
முத்தையா முரளிதரன் 1.1 மில்லியன் அமெரிக்க டாலர்
ரவிந்த்ர ஜடேஜா 950,00 அமெரிக்க டாலர்
ஸ்ரீசந்த் 900,000 அமெரிக்க டாலர்
ஆர் பி சிங் 500,000 அமெரிக்க டாலர்
ப்ரண்டன் மெக்கல்லம் 475,000 அமெரிக்க டாலர்
பிராட் ஹோட்ஜ் 425,000 அமெரிக்க டாலர்
வி வி எஸ் லஷ்மண் 400,000 அமெரிக்க டாலர்
பார்த்தீவ் பட்டேல் 290,000அமெரிக்க டாலர்
ஸ்டீவன் ஸ்மீத் 200,000 அமெரிக்க டாலர்
ரமேஷ் பவார் 180,000 அமெரிக்க டாலர்

கோல்கட்டா நைட் ரைடர்ஸ்

கவுதம் காம்பீர் 2.4 மில்லியன் அமெரிக்க டாலர்
யுசூப் பதான் 2.1 மில்லியன் அமெரிக்க டாலர்
காலிஸ் 1.1 மில்லியன் அமெரிக்க டாலர்
மனோஜ் திவாரி 475,000அமெரிக்க டாலர்
ஷாகிப் அல் ஹசன் 425,000 அமெரிக்க டாலர்
பிரட் லீ 400,000 அமெரிக்க டாலர்
யோயின் மோர்கன் 350,000 அமெரிக்க டாலர்
பிரட் ஹாடின் 325,000 அமெரிக்க டாலர்

மும்பை இந்தியன்ஸ்

ரோகித் சர்மா 2 மில்லியன் அமெரிக்க டாலர்
ஆண்ட்ரு சைமண்ட்ஸ் 850,000 அமெரிக்க டாலர்
டேவி ஜேகோப்ஸ் 190,000 அமெரிக்க டாலர்
ஜேம்ஸ் ப்ராங்க்லின் 100,000அமெரிக்க டாலர்

புனே வாரியர்ஸ்

ராபின் உத்தப்பா 2.1 மில்லியன் அமெரிக்க டாலர்
யுவராஜ் சிங் 1.8 மில்லியன் அமெரிக்க டாலர்
ஆங்லோ மேத்யூஸ் 950,000 அமெரிக்க டாலர்
ஆசிஸ் நெக்ரா 850,000 அமெரிக்க டாலர்
கிரேம் ஸ்மீத் 500,000 அமெரிக்க டாலர்
காலம் பெர்குசான் 300,000 அமெரிக்க டாலர்
டிம் பெயின் 270,000 அமெரிக்க டாலர்
நாதன் மெக்கல்லம் 100,000 அமெரிக்க டாலர்

ராஜஸ்தான் ராயல்ஸ்

ரோஸ் டெய்லர் 1 மில்லியன் அமெரிக்க டாலர்
ஜோகன் போத்தா 950,000 அமெரிக்க டாலர்
ராகுல் டிராவிட் 500,000 அமெரிக்க டாலர்
பால் காலிங்வுட் 250,000 அமெரிக்க டாலர்

பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்

சவுரப் திவாரி 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்
ஏபி டி வில்லியர்ஸ் 1.1 மில்லியன் அமெரிக்க டாலர்
ஜாகிர் கான் 900,000 அமெரிக்க டாலர்
புஜாரா 700,000அமெரிக்க டாலர்
திர்க் நான்ஸ் 650,000அமெரிக்க டாலர்
தில்ஷான் 650,000அமெரிக்க டாலர்
டேனியல் வெட்டோரி 550,000அமெரிக்க டாலர்

காம்பீர் சாதனை : இன்றைய ஏலத்தில் கவுதம் காம்பீர் அதிக ஏலத்தில் எடுக்கப்பட்டார். இது ஐ.பி.எல்., வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்தார்.

விலைபோகாதவர்கள் : தமிம் இக்பால், சமாரா கபுகேடேரா, முரளி கார்த்திக், அஜந்தா மெண்டிஸ், கிரெம் ஸ்வான், ஜேம்ஸ் ஆண்டர்சன், தில்காரா பெர்ணாண்டோ, லுக் ரைட், மேட் ப்ரையர், மார்க் பவுச்சர், கிரேம் மனோ, பிரையன் லாரா, கிப்ஸ், ஜெசி ரைடர், சவுரவ் கங்கூலி மற்றும் கிறிஸ் கெயில்

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக "டுவென்டி-20' தொடர் நடந்தது. நான்காவது தொடர் வரும் ஏப்., 8 ல் துவங்குகிறது. இதில் சென்னை, மும்பை, டில்லி போன்ற 8 அணிகளுடன் சேர்த்து, புதியதாக புனே கொச்சி என மொத்தம் 10 அணிகள் இம்முறை பங்கேற்கின்றன.

வீரர்கள் தக்கவைப்பு :சென்னை சூப்பர் கிங்ஸ் (தோனி, ரெய்னா, முரளி விஜய், ஆல்பி மார்கல்), மும்பை இந்தியன்ஸ் (சச்சின், ஹர்பஜன், போலார்டு, மலிங்கா) அணிகள் தங்களது 4 வீரர்களை தக்கவைத்துக் கொண்டன. ராஜஸ்தானின் வார்ன், வாட்சன், பெங்களூருவின் விராத் கோஹ்லி மற்றும் டில்லியின் சேவக் ஆகியோரை அந்தந்த அணிகள் தக்க வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்றைய ஏலத்தில் ஒவ்வொரு அணியும் ரூ.20 கோடி முதல் ரூ. 45 கோடி வரை செலவிடுகிறது.

கோல்கட்டா, டெக்கான், பஞ்சாப் அணிகள் அனைத்து வீரர்களையும் விடுவித்துள்ளதால், இந்த அணியின் உரிமையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை முழுவதையும் பயன்படுத்தலாம்

காம்பீர் ரூ. 11 கோடிக்கு ஏலம்; விலை போகாத கங்குலி; ஐ.பி.எல்., வீரர்கள் விலை விவரம்

பெங்களூரு: ஐ.பி.எல்., தொடர் அணியில் இடம் பெறும் கிரிக்கெட் வீர்கள் இன்று பல கோடி ரூபாய்க்கு ஏலம் போயினர். இந்திய வீரர் கவுதம்காம்பீரை கோல்கட்டா ரைடர்ஸ் அணி 11. 04 கோடிக்கு விலைக்கு வாங்கியது. இது வரை முடிந்த ஏலத்தில் கவுதம்காம்பீ‌ரே அதிக விலைக்கு போய் முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர்கள் 48 பேர் பங்கேற்கின்றனர். கடந்த 3 தொடர்களில் பங்கேற்ற வீரர்களில் ஒப்பந்தம் முடிந்ததால், நடக்கவிருக்கும் தொடருக்கான புதிய ஏலம் இன்றும், நாளையும் பெங்களூருவில் நடக்கிறது.
புதிய அணிகளான கொச்சி, புனே அணிக்கு தேவையான அனைத்து வீரர்களையும் ஏலத்தில் எடுக்கிறது. ஒவ்வொரு அணியும், எந்தெந்த வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளனர் என்பது குறித்து அதிக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மொத்தம் 350 வீரர்கள் உள்ள இந்த ஏலத்தில், ரூ. 400 கோடிக்கும் மேலாக செலவிடப்படுகிறது.

வீரர்கள் விலை முழு விவரம் : இன்று நடந்த ஏலத்தில் வீரர்கள் எந்த விலைக்கு போயினர் என்ற முழு விவரம் வருமாறு: எந்த அணி வாங்கியது என்பது அடைக்குறிப்புக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.

கவுதம் காம்பீர்- ரூ. 11. 04 கோடி ( கோல்கட்டா வைட் ரைடர்ஸ் அணி ) இலங்கை அணி வீரர் தில்சன் ரூ. 2. 9 கோடி ( ராயல் சேலஞ்ச் பெங்களூரு) ஜாகீர்கான் ரூ. 4. 1 கோடி (ராஜஸ்தான் ராயல் சேலஞ்சர்) , நியூஸிலாந்து வீரர் ரோஸ்டைலர் - 4. 6 கோடி ( ராஜஸ்தான் ராயல் சேலஞ்சர்) , யூசூப் பதான் - ரூ. 9. 66 கோடி, (கோல்கட்டா நைட் ரைடர்ஸ்) , இங்கிலாந்து வீரர் பீட்டர்சன் - ரூ. 2. 9 கோடி ( டெக்கான் சார்ஜர்) , இலங்கை வீரர் மகேலா - ரூ. 6.9 கோடி (கொச்சி அணி), யுவராஜ்சிங்- ரூ. 8. 28 கோடி ( சகாரா புனே வாரியார் அணி )

தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் - ரூ. 5. 1 கோடி ( ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ) , ஜெயவர்த்தனே - 6. 9 கோடி ( கொச்சி அணி) , ஒயிட் - ரூ. 5.1 கோடி ( டெக்கார் சார்ஜர்ஸ் ), காலீஸ் - ரூ. 5.1 கோடி ( கோல்கட்டா நைட் ரைடர்ஸ்), ரோகித்சர்மா- ரூ. 9 . 2 கோடி ( மும்பை இந்தியன்) ஆஸி., வீரர் - ரூ. 3. 9 கோடி ( மும்பை இந்தியன் அணி) , ‌சங்ககரா- ரூ. 3. 2 கோடி ( டெக்கான் சார்ஜர் ). கில்கிறிஸ்ட் - ரூ. 4. 1 கோடி ( கிங்ஸ்லெவன்) , டிராவிட் - ரூ. 2. 3 கோடி (ராஜஸ்தான் ராயல்ஸ் ) , தென்ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் - ரூ. 2. 3 கோடி (புனே வாரியர்ஸ் ) , உத்தப்பா - ரூ. 9. 7 கோடி (புனே), தென்ஆப்பிரிக்க வீரர் போத் - ரூ. 4 .4 கோடி ( ராஜஸ்தான் ராயல் அணி) , லஷ்மன் -ரூ. 1. 84 கோடி (கொச்சி அணி )

கோல்கட்டா, டெக்கான், பஞ்சாப் அணிகள் அனைத்து வீரர்களையும் விடுவித்துள்ளதால், இந்த அணியின் உரிமையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை முழுவதையும் பயன்படுத்தலாம்.

ஐ.பி.எல்., வீரர்கள் என்ன விலை ? அணியில் யார் ? யார் ? : காம்பீர் ரூ. 11 கோடிக்கு ஏலம் போனார்

முக நூல்

Popular Posts