background img

புதிய வரவு

Showing posts with label Isha and Zaheer khan. Show all posts

கிரிக்கெட் வீரர்கள் இந்தி நடிகைகளை திருமணம் செய்வது வாடிக்கையான ஒன்றாகி இருந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஜாகீர்கானும் இடம் பெற்றுள்ளார். இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் ஜாகீர்கான்.

28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி உலக கோப்பையை வெல்ல இவரது பங்களிப்பு முக்கியமாக இருந்தது. 21 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தை பிடித்தார். 2005-ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியா சென்ற போது நடந்த விழாவில் ஜாகீர்கானுக்கு இந்தி நடிகை இஷா சாவானியுடன் அறிமுகம் ஏற்பட்டது.

பின்னர் இதுவே காதலாக மாறியது. இரண்டு ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்தனர். 2007-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். கடந்த ஆண்டு இருவரிடையேயான காதல் மீண்டும் துளிர்த்தது. இந்த நிலையில் ஜாகீர்கானுக்கும், நடிகை இஷாவுக்கும் விரைவில் திருமணம் நடக்கிறது. இதை ஜாகீர்கானின் பெற்றோர் உறுதிப்படுத்தினர்.

இது தொடர்பாக ஜாகீர்கானின் தந்தை கூறும் போது, கிரிக்கெட்டில் ஜாகீர்கானின் கனவு முழுமையாகி விட்டது. எங்களது கனவு திருமணம் செய்து வைப்பது தான். வயது செல்வதால் ஜாகீர்கானின் திருமணத்தை தள்ளி வைக்க விரும்பவில்லை என்றார். கிரிக்கெட் வீரர்களில் மன்சூர் அலிகான், பட்டோடி, அசாருதீன் ஆகியோர் இந்தி நடிகைகளை திருமணம் செய்துள்ளனர். பல வீரர்கள் நடிகைகளுடன் சுற்றி திரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

ஜாகீர்கான்-நடிகை இஷா விரைவில் திருமணம்

முக நூல்

Popular Posts