background img

புதிய வரவு

Showing posts with label Laden. Show all posts

மும்பை: ஒசாமா பின்லேடன் மரணம் குறித்து சிறைக் காவலர்களிடம் ஆர்வமாக கேட்டுள்ளான், மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த அஜ்மல் அமீர் கசாப்.

மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளான் கசாப். பின்லேடன் குறித்த செய்தி இவனையும் எட்டவே ஆர்வமாகி, சிறைக் காவலர்களிடம் பின்லேடன் எப்படி இறந்தான், யார் அவனைக் கொன்றது, எப்போது இந்த சம்பவம் நடந்தது, எங்கு நடந்தது என்பது குறித்து பல்வேறு கேள்விகளை ஆர்வத்தோடு கேட்டுள்ளான்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், அவனது செல்லுக்கு அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சிறைக் காவலர்கள் பின்லேடன் குறித்துப் பேசிக் கொண்டிருந்தபோது அது கசாப் காதில் விழுந்து விட்டது. இதையடுத்து பின்லேடன் எப்படி இறந்தான் என்பது குறித்து பல கேள்விகளை ஆர்வத்தோடு கேட்டான்.

இருப்பினும் பின்லேடன் மரணம் குறித்து மொட்டையாக மட்டுமே பதில் தந்தோம். விரிவாக எதையும் தெரிவிக்கவில்லை. இதைக் கேட்ட கசாப், புனிதப் போரில் பின்லேடன் தனது உயிரைத் தியாகம் செய்துள்ளார் என்று கூறினான் கசாப்.

பின்லேடன் இறந்தது குறித்து சிறைக் காவலர்களிடம் கேட்ட கசாப்

முக நூல்

Popular Posts