background img

புதிய வரவு

Showing posts with label Terrorist. Show all posts

இந்தியாவால் தேடப்படும் மிக முக்கியமான பயங்கரவாதிகளின் பட்டியலை இந்தியா வெளியிட்டுள்ளது.
அதில் மும்பை தொடர் குணடு வெடிப்பில் தொடர்புடைய ஹபீஸ் சையத், தாவூத் இப்ராஹீம் மற்றும் பாகிஸ்தானின் முன்னாள் மேஜர்கள் 5 பேர்களின் பெயர்களும், அதில் டைகர் மேனன், அயூப் மேமம், சாஜீத் மஜீர், அனீஸ் இப்ராஹீம் போன்றவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது

கடந்த மார்ச் மாதம் இந்தியா பாகிஸ்தானிடம் இப்பெயர் பட்டியலை அளித்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சையத் மற்றும் தாவூத் இப்ராஹீம ஆகியோர் பாகிஸ்தானில் உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஆனால் அதற்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா தேடும் பயங்கரவாதிகளின் பட்டியல் வெளியீடு

மும்பை: ஒசாமா பின்லேடன் மரணம் குறித்து சிறைக் காவலர்களிடம் ஆர்வமாக கேட்டுள்ளான், மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த அஜ்மல் அமீர் கசாப்.

மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளான் கசாப். பின்லேடன் குறித்த செய்தி இவனையும் எட்டவே ஆர்வமாகி, சிறைக் காவலர்களிடம் பின்லேடன் எப்படி இறந்தான், யார் அவனைக் கொன்றது, எப்போது இந்த சம்பவம் நடந்தது, எங்கு நடந்தது என்பது குறித்து பல்வேறு கேள்விகளை ஆர்வத்தோடு கேட்டுள்ளான்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், அவனது செல்லுக்கு அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சிறைக் காவலர்கள் பின்லேடன் குறித்துப் பேசிக் கொண்டிருந்தபோது அது கசாப் காதில் விழுந்து விட்டது. இதையடுத்து பின்லேடன் எப்படி இறந்தான் என்பது குறித்து பல கேள்விகளை ஆர்வத்தோடு கேட்டான்.

இருப்பினும் பின்லேடன் மரணம் குறித்து மொட்டையாக மட்டுமே பதில் தந்தோம். விரிவாக எதையும் தெரிவிக்கவில்லை. இதைக் கேட்ட கசாப், புனிதப் போரில் பின்லேடன் தனது உயிரைத் தியாகம் செய்துள்ளார் என்று கூறினான் கசாப்.

பின்லேடன் இறந்தது குறித்து சிறைக் காவலர்களிடம் கேட்ட கசாப்

பாகிஸ்தானில், வட மேற்கு பகுதியில் உள்ள மலைப் பகுதியில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர். அல்கொய்தா தீவிரவாதிகளுடன் இணைந்து வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெஷாவர் அருகேயுள்ள மார்தான் என்ற இடத்தில் பெண்கள் கல்லூரி உள்ளது. துப்பாக்கிகள் மற்றும் வெடி குண்டுகளுடன் தலிபான் தீவிரவாதிகள் அங்கு புகுந்தனர்.அவர்களை பார்த்ததும் அலறியடித்த படி மாணவிகள் ஓடினர். இந்த நிலையில் மாணவிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.மேலும் கையெறி குண்டுகளையும் வீசினர்.

இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. எங்கும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.தீவிரவாதிகள் வெறியாட்டத்தில் 30 மாணவிகள் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மார்தான் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதற்கிடையே, சிகிச்சை பெற்ற மாணவிகளில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய தீவிரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

பாகிஸ்தானில் பெண்கள் கல்லூரியில் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு; 30 மாணவிகள் காயம்

முக நூல்

Popular Posts