background img

புதிய வரவு

Showing posts with label Pakistan. Show all posts

காஷ்மீர் தீவிரவாதிகள் 
இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் நிர்வாகத்துக்குள் போராட்டப் பயிற்சிக்காக சென்ற நூற்றுக்கணக்கான காஷ்மீர் செயற்பாட்டாளர்கள் மீண்டும் தாய் மண்ணுக்குத் திரும்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்திய ஆட்சிக்கு எதிராக போராடுவதற்கான பயிற்சியைப் பெறுவதற்காக பாகிஸ்தான் நிர்வாகத்துக்குள் சென்றிருந்த இவர்கள் இப்போது ஆயுதப் போராட்டத்தை வெறுப்பதாகக் கூறியுள்ளனர்.
இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில், ஏற்கனவே சுமார் 500 பேர் வரையான முன்னாள் போராளிகள் தாய் நாட்டுக்குத் திரும்பியுள்ளார்கள்.
பாகிஸ்தானிடமிருந்து தமக்கு ஒத்துழைப்புக் குறைந்துள்ளதாகவும் அதனால் இந்தியா அறிவித்திருந்த பொது மன்னிப்பை ஏற்று நாடு திரும்புவதாகவும் முன்னாள் கிளர்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தாய் மண் திரும்பும் காஷ்மீரிகள்

அஸ்லான் ஷா ஹொக்கி தொடரின் பரபரப்பான லீக் போட்டியில், இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி பெற்றது.
மலேசியாவில் உள்ள இபோ நகரில், 21வது சுல்தான் அஸ்லான் ஷா கிண்ண ஹொக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, மலேசியா, தென் கொரியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, அர்ஜென்டினா உள்ளிட்ட ஏழு அணிகள் பங்கேற்கின்றன.
நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி தனது பரம எதிரியான பாகிஸ்தான் அணியுடன் மோதியது. விறுவிறுப்பான இப்போட்டியில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
30வது நிமிடத்தில் கிடைத்தபெனால்டி கார்னர்வாய்ப்பை இந்தியாவின் சந்தீப் சிங் கோலாக மாற்றினார். இதற்கு பாகிஸ்தான் வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் பாகிஸ்தான் அணியின் கோலடிக்கும் முயற்சியை இந்திய கோல் கீப்பர் பாரத் செத்ரி அருமையாக தடுத்தார். தொடர்ந்து போராடிய பாகிஸ்தான் அணிக்கு 59வது நிமிடத்தில் கிடைத்தபெனால்டி கார்னர்வாய்ப்பை சோகைல் அபாஸ் கோலாக மாற்ற போட்டி 1-1 என்று சமநிலை அடைந்தது.
கடைசி நேரத்தில் சுதாரித்துக் கொண்ட இந்திய அணியின் சுனில், 69வது நிமிடத்தில் ஒரு சூப்பர் கோல் அடித்தார். இதனால் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்தது. ஆறு போட்டிகளின் முடிவில் 9 புள்ளிகளுடன் உள்ள இந்திய அணி, மற்ற போட்டிகளின் முடிவைப் பொறுத்து 3 அல்லது 4வது இடம் பிடிக்கலாம்.
நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 4-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. இதன்மூலம் 5 போட்டியில் 12 புள்ளிகள் பெற்ற நியூசிலாந்து அணி, முதன்முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
இங்கிலாந்து, தென் கொரியா அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது.
அஸ்லான் ஷா கிண்ண இறுதிச் சுற்றில் விளையாட இந்தியாவுக்கு லேசான வாய்ப்பு உள்ளது. இதற்கு, நாளை நடைபெறவுள்ள போட்டியில் இங்கிலாந்து அணி (8 புள்ளி), பாகிஸ்தானிடம் (3 புள்ளி) தோற்க வேண்டும்.
மற்றொரு போட்டியில் அர்ஜென்டினா அணி (9 புள்ளி), மலேசியாவிடம் (5 புள்ளி) அதிக கோல் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்திக்க வேண்டும். ஆனால் நல்ல பார்மில் உள்ள அர்ஜென்டினா, இங்கிலாந்து அணிகள் எளிதில் விட்டுக் கொடுக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்லான் ஷா ஹொக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

இஸ்லாமாபாத் தப்பும் தவறுமாக இந்தியா கொடுத்திருந்த 50 பேர் கொண்ட அதிகம் தேடப்படுவோர் பட்டியலை பாகிஸ்தான் நிராகரித்து விட்டது.

சமீபத்தில் இந்தியாவால் அதிகம் தேடப்படும் 50 பேரின் பட்டியலை பாகிஸ்தானிடம் அளித்திருந்தது இந்தியா. ஆனால் இதில் இரண்டு பேர் இந்தியாவிலேயே இருப்பது பின்னர் தெரிய வந்து இந்தியாவுக்கு பெரும் அசிங்கிமாகி விட்டது.

அதில் ஒரு நபர் சிறையி்ல் இருப்பதும், இன்னொரு நபர் ஜாமீனில் வெளியில் இருப்பதும், தானேவில் வசித்து வரும் தெரிய வந்தது.

சிபிஐக்கும், உள்துறை அமைச்சகத்திற்கும் இது பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தி விட்டது. இதையடுத்து புதிய திருத்தப் பட்டியலை விரைவில் அளிப்போம் என்று உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது.

இந்தநிலையில் இந்தியா கொடுத்திருந்த முதல் பட்டியலை தற்போது பாகிஸ்தான் அரசு நிராகரித்து விட்டது. இந்தப் பட்டியலில் இருப்பவர்கள் இந்தியாவில் இருக்கிறார்களா என்பதை முதலில் விசாரித்துப் பார்க்குமாறு இந்தியாவுக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் அட்வைஸ் கூறி மேலும் நம்மை அசிங்கப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் உள்நாட்டு அமைச்சகம், மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நீங்கள் எங்களுக்குக் கொடுத்த பட்டியலில் இருப்பவர்கள் இந்தியாவில் வசிக்கிறார்களா என்பதை நீங்கள் முதலில் விசாரித்துப் பாருங்கள். நீங்கள் கொடுத்த பட்டியலில் இருந்த 2 பேர் இந்தியாவிலேயே இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே மற்ற 48 பேரும் கூட இந்தியாவிலேயே இருக்கலாம். எனவே அதுகுறித்து முதலில் தெளிவாக விசாரணை நடத்தி விட்டுப் பின்னர் எங்களிடம் வாருங்கள் என்று தெரிவித்துள்ளது பாகிஸ்தான்.

இந்தியா கொடுத்திருந்த பட்டியலில் தாவூத் இப்ராகிம், லஷ்கர் இ தொய்பா தலைவன் ஹபீஸ் சயீத், மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட பிறமுக்கியத் தீவிரவாத தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா கொடுத்த 50 பேர் கொண்ட தேடப்படுவோர் பட்டியலை நிராகரித்தது பாக்.

முக நூல்

Popular Posts