background img

புதிய வரவு

Showing posts with label National competition farewell. Show all posts

34-வது தேசிய விளை யாட்டுப் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடை பெற்று வருகிறது. இதன் நிறைவு விழா இன்று மாலை நடக்கிறது. இந்த நிறைவு விழாவில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அஜய் மக்கான் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது அவர் நிறைவு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க முடிவு செய்துள்ளார். பாராளுமன்ற கூட்ட தொடர் காரணமாக அவர் நிறைவு விழாவில் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியை நடத்தும் அமைப்பாளர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது. இதனால் தனது பெயருக்கு களங்கம் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அவர் இந்த விழாவை புறக்கணிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் நிறைவு விழாவில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ்கல்மாடி பங்கேற்கிறார். அவருடன் நெருங்கி அமர்வது அல்லது நெருக்கமாக பேசுவது போன்ற சூழல் ஏற்படும். இதன் காரணமாக அஜய்மக்கான் தேசிய விளையாட்டு நிறைவு விழாவை புறக்கணிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

அஜய் மக்கான் சமீபத்தில் தான் மத்திய விளையாட்டுத் துறை மந்திரியாக பொறுப் பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய போட்டி நிறைவு விழா: மத்திய விளையாட்டு மந்திரி புறக்கணிக்க முடிவு; கல்மாடி பங்கேற்பதால் தயக்கம்

34-வது தேசிய விளை யாட்டுப் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடை பெற்று வருகிறது. இதன் நிறைவு விழா இன்று மாலை நடக்கிறது. இந்த நிறைவு விழாவில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அஜய் மக்கான் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது அவர் நிறைவு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க முடிவு செய்துள்ளார். பாராளுமன்ற கூட்ட தொடர் காரணமாக அவர் நிறைவு விழாவில் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியை நடத்தும் அமைப்பாளர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது. இதனால் தனது பெயருக்கு களங்கம் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அவர் இந்த விழாவை புறக்கணிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் நிறைவு விழாவில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ்கல்மாடி பங்கேற்கிறார். அவருடன் நெருங்கி அமர்வது அல்லது நெருக்கமாக பேசுவது போன்ற சூழல் ஏற்படும். இதன் காரணமாக அஜய்மக்கான் தேசிய விளையாட்டு நிறைவு விழாவை புறக்கணிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

அஜய் மக்கான் சமீபத்தில் தான் மத்திய விளையாட்டுத் துறை மந்திரியாக பொறுப் பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக நூல்

Popular Posts