background img

புதிய வரவு

Showing posts with label Mp. Show all posts

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் யூன் 4ம் திகதி மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்க உள்ளார்.
கடந்த ஏப்ரல் 26ல் மத்திய அரசால் மாநிலங்களவை எம்.பி பதவிக்கு சச்சின் டெண்டுல்கர் பரிந்துரைக்கப்பட்டார்.
.பி.எல் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தால் அவரால் அப்போது பதவியேற்க முடியவில்லை.
இதனையடுத்து, சச்சின் வரும் யூன் 4ம் திகதி பதவியேற்றுக் கொள்வார் என்று மாநிலங்களவை இணை அமைச்சர் ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சச்சின் டெண்டுல்கருக்கு மாநிலங்களவைத் தலைவர் ஹமீத் அன்சாரி பதவிப் பிரமாணம் செய்துவைப்பார் எனவும் கூறப்படுகிறது.
சச்சினுடன் மாநிலங்களவை எம்.பியாக நியமிக்கப்பட்ட நடிகை ரேகா மற்றும் தொழிலதிபர் அனு ஆகா ஆகியோர் தற்போது முடிவடைந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே பதவியேற்றுக் கொண்டனர்.
மேலும், மாநிலங்களவை உறுப்பினராகும் முதல் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

சதநாயகன் சச்சின் 4ம் திகதி எம்.பி யாக பதவியேற்கிறார்

சென்னை: ஈழத்தில் போரை நிறுத்தக் கோரி திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தது அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, மக்களை திசை திருப்புவதற்காக போட்ட நாடகம் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது.

விக்கிலீக்ஸிடமிருந்து தி ஹிந்து நாளிதழ் பெற்ற தகவலை செய்தியாக வெளியிட்டுள்ளது. அதில் தமிழக மக்களை பல்வேறு பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புவதற்காக அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி பல்வேறு நாடகங்களை அரங்கேற்றியதாக அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் தயாநிதி மாறன் பேசுகையில், கூறியதாக பரபரப்புத் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

இதுதொடர்பாக தி ஹிந்து நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி:

2008ம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு, அமெரிக்க துணைத் தூதர்ஆண்ட்ரூ சிம்கின் பெயரில் ஒரு கடிதம் போனது. அதில் தயாநிதி மாறனுடன், அமெரிக்க அதிகாரிகள் பேசிய விவரத்தை குறிப்பிட்டுள்ளார். அதில், தயாநிதி மாறன் மற்றும் காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோருடன் பேசியதை குறிப்பிட்டுள்ளார் சிம்கின்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தனது கட்சி மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்யப் போவதாக கருணாநிதி அறிவித்திருப்பது ஒரு நாடகம் என்று தயாநிதி மாறன் அப்போது தெரிவித்தார். மின் வெட்டுப் பிரச்சினை, அதனால் ஏற்பட்டுள்ள மக்களின் கடும் கோபம் ஆகியவற்றிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காகவே கருணாநிதி இவ்வாறு அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செயலுக்கும், தனக்கும் தொடர்பு இல்லை என்பதாக காட்டிக் கொள்ளும் நாடகமே இது. தானும் இதில் பங்கேற்று ராஜினாமா கடிதம் கொடுத்ததாகவும் அவர் கூறினார். இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை விட தமிழக மக்களை பல்வேறு பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும் நோக்கமே கருணாநிதியிடம் இருந்தது.

மேலும் கருணாநிதி அரசு இதுவரை எந்த அரசு மீதும் இல்லாத அளவுக்கு மக்கள் மிகவும் கோபமாக இருப்பதாகவும் தயாநிதி மாறன் கூறினார்.

ஆனால் கருணாநிதி நடத்திய நாடகத்தால், திமுகவிடமிருந்து காங்கிரஸ் குறிப்பாக சோனியா காந்தி விலகத் தொடங்கினார். கருணாநிதியின் இந்த செயலுக்கு காங்கிரஸ் சரியான பதிலடியை பொருத்தமான நேரத்தில் கொடுக்கும். அது உறுதி.

பிரபாகரனைக் கொல்லத் துடித்த ராகுல் காந்தி

கருணாநிதியின் மகள் கனிமொழியை சமீபத்தில் சந்திக்க மறுத்தார் சோனியா. இதற்கு திமுக மீதான சோனியா காந்தியின் அதிருப்தி அதிகரித்ததே காரணம்.

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதற்குப் பழி வாங்க வேண்டும், பிரபாகரன் கொல்லப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் தீவிரமாக உறுதியாக உள்ளனர் என்றும் தயாநிதி மாறன் கூறியிருந்தார்.

திமுக தோற்கும்-தயாநிதி மாறன்

அதேபோல திமுக மீது ஊழல் கறை படிந்து விட்டது. இதை அகற்றாவிட்டால் திமுக பெரும் சரிவைச் சந்திக்கும் என்றும் அப்போது கூறியுள்ளார் தயாநிதி மாறன்.

இதன் மூலம் சட்டசபைத் தேர்தலில் திமுகவின் தோல்வியை அன்றே கணித்துள்ளார் தயாநிதி மாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்.கைவிட்டால் திமுகவுக்கு வழியில்லை-பீட்டர்

பீ்ட்டர் அல்போன்ஸ் கூறுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து தனது எம்.பிக்களை வாபஸ் பெற மாட்டார் கருணாநிதி என்று உறுதிபடக் கூறியிருந்தார். தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக, தான் வலுவாக இருப்பதாக காட்டிக் கொள்ளவே இவ்வாறு அறிவித்தார் (எம்.பிக்கள் ராஜினாமா செய்வதாக) கருணாநிதி. மற்றபடி, அனைத்துக் கட்சிக் கூட்டம், தீர்மானம் என்பதெல்லாம் சப்பைக் கட்டுதான்.

காங்கிரஸுடனும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியுடனும் இணைந்து இருப்பது ஒன்றுதான் திமுகவுக்கு உள்ள ஒரே வழி என்று கூறியிருந்தார் பீட்டர்.

ஆனால் தாங்கள் ராஜினாமா செய்யப் போவதாக திமுக கூறியது காங்கிரஸ் மேலிடத்தை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியது உண்மை. மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பாதையில் திமுக திரும்புகிறதோ என்று காங்கிரஸ் கருதியது என்று கூறியுள்ளார் பீட்டர்.

'திமுக, காங்கிரஸின் சுய நல உறவு'

இந்த இருவரின் பேச்சுக்களையும் வைத்துப் பார்க்கும்போது இரு கட்சிகளுமே ஒரு சுயநலத்தோடுதான் உறவு வைத்துள்ளன என்பது தெரிய வருகிறது. முதல்வர் பதவியில் நீடிக்க காங்கிரஸின் தயவு கருணாநிதிக்குத் தேவை. அதேபோல ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு டெல்லியில் நீடிக்க கருணாநிதியின் தயவு காங்கிரஸுக்குத் தேவை.

இதன் விளைவாகவே இந்த அரசியல் நாடகத்தை கருணாநிதி அரங்கேற்றியிருப்பதாக தெரிகிறது.

கருணாநிதியின் முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸ் போதிய அவகாசம் கொடுத்ததால் தனது நாடகங்களை முடித்துக் கொண்டார் கருணாநிதி என்று அந்த கேபிளில் சிம்கின் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் தெரிவிக்கிறது.

ஈழப் பிரச்சினையை வைத்து கருணாநிதி நாடகமாடினார் என்று தயாநிதி மாறனே அமெரிக்க அதிகாரிகளிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களை திசை திருப்ப ஈழப் பிரச்சினையில் கருணாநிதி போட்ட 'டிராமா'-தயாநிதி மாறன் அம்பலம்!

பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட பின்லேடனின் போட்டோவை அமெரிக்கா வெளியிட்டது. அது சர்ச்சையை ஏற்படுத்தியது. சுட்டுக் கொல்லப்பட்டது பின்லேடன் அல்ல. இப்படம் கிராபிக்ஸ் மூலம் செய்யப் பட்டது என அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் பேச்சு கிளம்பியது.

ஆனால் இதை அதிபர் ஒபாமா மறுத்தார். கொல்லப்பட்டது பின்லேடன்தான். டி.என். ஏ. சோதனை மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே சந்தேகப்பட வேண்டாம் என்று கூறினார்.

இந்நிலையில் பின்லேடனின் உடல் போட்டோவை அமெரிக்க எம்.பி.க்களை பார்க்க ஏற்பாடு செய்தார். உளவு பிரிவு மற்றும் ஆயுதப்படை சேவை கமிட்டிகளை சேர்ந்த எம்.பி.க்கள் உளவுத்துறை அலுவலகத்துக்கு சென்று அந்த போட்டோக்களை பார்த்தனர்.

பின்லேடன் உடல் போட்டோவை பார்த்த அமெரிக்க எம்.பி.க்கள்

டெல்லி: 2ஜி ஊழல் வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று நடந்து.

முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையொட்டி திமுகவைச் சேர்ந்த எம்பிக்கள் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.

விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது, இதய நோயாளியான திமுக எம்பி ஆதிசங்கர் திடீரென நீதிமன்றத்தில் மயங்கி விழுந்தார். இதனால் அந்த இடத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

2ஜி விசாரணை: நீதிமன்றத்தில் திமுக எம்பி மயங்கி விழுந்தார்

டெல்லி: 2ஜி ஊழல் வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று நடந்து.

முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையொட்டி திமுகவைச் சேர்ந்த எம்பிக்கள் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.

விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது, இதய நோயாளியான திமுக எம்பி ஆதிசங்கர் திடீரென நீதிமன்றத்தில் மயங்கி விழுந்தார். இதனால் அந்த இடத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில், காங்., தலைவர் தங்கபாலுவுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுப்பதால், அவரை நீக்கிவிட்டு, வேறு தலைவரை நியமிக்கலாமா என, கட்சித் தலைமை தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது. ஏற்கனவே, மத்திய அமைச்சர் சிதம்பரம், இதே கோரிக்கையை வலியுறுத்திய நிலையில், மத்திய அமைச்சர் வாசனும், சோனியாவை நேற்று சந்தித்து, தங்கபாலுவை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதையடுத்து, தமிழக காங்கிரசில், தேர்தல் முடிவுக்குப் பின், பெரிய மாற்றம் வரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியில் நாளுக்கு நாள், கோஷ்டிப் பூசல் வலுக்கிறது. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் துணைமேயர் கராத்தே தியாகராஜன், எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ., தென் சென்னை மாவட்டத்தலைவர் மங்கள்ராஜ் உட்பட, 19 பேரை, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, அதிரடியாக நீக்கினார்.நீக்கப்பட்ட மூவரும், மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், முன்னாள் அமைச்சர் இளங்கோவனின் ஆதரவாளர்கள். எனவே, தங்கபாலுவின் அதிரடி நீக்கம் நடவடிக்கை, தமிழக காங்கிரசுக்குள் பெரும் புயலை கிளப்பியுள்ளது. வேட்பாளர் தேர்வில் தங்கபாலு செய்த குளறுபடியால், அனைத்து கோஷ்டித் தலைவர்களும் தங்கபாலு மீது அதிருப்தி அடைந்தனர்.தங்கபாலுவுக்கு எதிராக, தினமும் நடந்து வரும் போராட்டத்தை, டில்லி மேலிடம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. உள்துறை அமைச்சர் சிதம்பரம், சோனியாவை சந்தித்து பேசியபோது, "தங்கபாலு, தன்னிச்சையாக கட்சியை நடத்துகிறார். கட்சியின் விதிமுறைகளுக்கு முரணாக, பலரையும் நீக்கம் செய்துள்ளார். இவரது தலைமை நீடிக்கக் கூடாது' என்ற கோரிக்கையை விடுத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று காலை 11.30 முதல், 12.05 மணி வரை, சோனியாவை, வாசன் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, தேர்தல் வெற்றி வாய்ப்பு, வேட்பாளர்கள் குளறுபடி, தமிழக காங்கிரஸ் தலைமை மீது தொண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி குறித்து, சோனியாவிடம் விளக்கியுள்ளார்.வாசன் தெரிவித்த அனைத்து விவரங்களையும், அமைதியாக கேட்டு கொண்டிருந்த சோனியா, "நீங்கள் ஏன் தமிழக காங்., தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள கூடாது?' என கேட்டதாகவும், அதற்கு வாசன், "நான் அகில இந்திய காங்கிரஸ் செயலராகவும், தமிழக காங்., தலைவராகவும் பணியாற்றியிருக்கிறேன்' என்ற பதிலை மட்டும் கூறியதாகவும், டில்லி வட்டாரங்கள் கூறுகின்றன.சோனியாவே கேட்டுக் கொண்டதால், தட்டிக் கழிக்காமல், வாசன் தலைவர் பதவியை ஏற்க முன் வருவாரா அல்லது தன் ஆதரவாளர்களுக்கு தலைவர் பதவியை பெற்றுக் கொடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போது, அவர் கேபின்ட் அமைச்சராக இருப்பதால், மாநில தலைவர் பதவியை விரும்பவில்லை.

மத்திய அமைச்சர் மற்றும் மாநில தலைவர் என்ற இரண்டு பதவிகளையும் கொடுத்தால், தலைவர் பதவியை ஏற்க வாசன் விருப்பம் தெரிவிப்பார். இல்லையென்றால் தன் ஆதரவாளர்களான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு தலைவர் பதவியை பெற்றுக் கொடுப்பார் என, அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிதம்பரம் தரப்பில், கடலூர் எம்.பி., கே.எஸ்.அழகிரியை தலைவராக்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. ஒட்டு மொத்த கோஷ்டித் தலைவர்களுக்கும் பொதுவானவர் என்ற அடிப்படையில், இளங்கோவனை தலைவராக நியமிக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.தேர்தல் முடிவு வெளியாகி, புதிய அரசுகள் அமைந்த பின், சில மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்கள் பதவி மாற்றப்படுகிறது. அந்த மாநில தலைவர்கள் மாற்றம் பட்டியலில், தமிழகமும் இடம் பெறும் என, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் காங்., தலைவருக்கு வலுக்கிறது எதிர்ப்பு: கட்சித் தலைமை தீவிர யோசனை

தஞ்சாவூர்: கருணாநிதியின் திட்டங்கள் பல மாநிலங்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறது என்று கனிமொழி கூறினார்.

தஞ்சை கீழவாசல் காமராஜர் சிலை முன், தி.மு.க., வேட்பாளர் உபயதுல்லாவை ஆதரித்து, கனிமொழி எம்.பி., வேனில் இருந்தபடி பேசியதாவது:"ஆண்டவனுடன் கூட்டணி' என, தி.மு.க., ஒருபோதும் கூறாது. "மக்களோடு கூட்டணி' என, யார் யாரோ கூறுகின்றனர். கருணாநிதி ஆட்சியின் சாதனைகளை, ஐந்தாண்டு மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை, சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதைக் கூறி, தலை நிமிர்ந்து கருணாநிதியும், தி.மு.க.,வினரும்தான் மக்களோடு கூட்டணி என கூற முடியும்.எதிர் கூட்டணியினர், "இதை நாங்கள் செய்துள்ளோம்' என, ஒரு வார்த்தை கூட கூற முடியாது. கருணாநிதியையும், தி.மு.க.,வினரையும் வசைபாடத்தான் தெரியும்.சுயமாக சிந்திக்கத் தெரிந்திருந்தால் எதிரணியினர் முன்னதாகவே தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கலாம். கருணாநிதியின் தேர்தல் அறிக்கையை அடியொற்றி அறிக்கை விட்டுள்ளனர். கம்யூனிஸ்டுகள் கேரளத்தில் இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என அறிவித்துள்ளனர். இலவச திட்டங்கள் மக்களை கெடுக்கும் எனக்கூறிய அவர்கள், கேரளத்தில் நிதிநிலை அறிக்கையிலும், மேற்கு வங்க தேர்தல் அறிக்கையிலும் கருணாநிதியின் திட்டங்களை பின்பற்றி உள்ளனர்.

இந்தியாவில் பல மாநிலங்களுக்கு வழிகாட்டியாக கருணாநிதி திட்டங்கள் உள்ளன. அதை மாற்ற தமிழக மக்கள் நினைக்க மாட்டார்கள். சிலர் தோற்றுப்போனதும், மலை உச்சிக்கு ஓடிச்சென்று உயர நினைக்கின்றனர். 13 ஆண்டு ஆட்சியில் இல்லாதபோதும் தி.மு.க.,வினர் மக்கள் பிரச்னைகளுக்காக போராடி, சிறை சென்றனர்.ஜெயலலிதா தேர்தலில் தோற்றால் அடுத்த தேர்தலுக்குத்தான் வருவார். தேர்தல் நெருங்கும்போது அறிக்கை விடுவார்.தி.மு.க.,வின் கடந்த தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் சிதம்பரம், "கதாநாயகன்' என்று கூறினார். இம்முறை பெண்களுக்கான பல திட்டங்கள் உள்ளதால் இந்த தேர்தல் அறிக்கையை, "கதாநாயகி' என, கருணாநிதி கூறினார்.கடந்த முறை தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 7 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன் ரத்து செய்யப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் மூடப்பட்ட உழவர் சந்தை பொலிவுடன் மீண்டும் திறக்கப்பட்டது. தற்போது, நகரங்களில் நுகர்வோர் சந்தை அமைக்கப்படும் என கருணாநிதி அறிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் ஒரு குவிண்டால் நெல், 600 ரூபாய் என்று இருந்தது. தி.மு.க., ஆட்சியில் நெல் ஆயிரத்து 50 ரூபாயாகவும், கரும்பு டன் ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் வீடு தேடி, வேலை செய்யும் இடம் தேடி இடுபொருட்கள் வந்து சேரும், கருவுற்ற மகளை தாய் காப்பதுபோல, பணிபுரியும் பெண்களுக்கு நான்கு மாதம் விடுமுறை என அறிவித்துள்ளோம்.அ.தி.மு.க.,வினரால், "அம்மா' என அழைக்கப்படும் ஜெயலலிதா ஆட்சியில் அரசு ஊழியர்கள், பெண் ஊழியர்கள் இரவு உடையில் கைது செய்யப்பட்டு இரவில் இழுத்துச் செல்லப்பட்டனர். உடையைக்கூட மாற்ற அனுமதிக்கவில்லை. பத்திரிகையாளர்கள் அவர் ஆட்சியில் பட்டபாடு அனைவருக்கும் தெரியும்.ஜெயலலிதா மாறிவிட்டதாக சிலர் கூறுகின்றனர். "இத்தனை ஆண்டு மாறாத அவர் இனிமேலா மாறப்போகிறார். "அவர் ஆணவம் பிடித்தவர்' என, நான் கூறவில்லை. கருணாநிதி கூறவில்லை. அவரோடு பல ஆண்டுகள் இருந்த வைகோ கூறுகிறார்.

அவர் பத்திரிகையாளர்களை அழைத்து பேசலாம். ஆட்சிக்கு வந்தால் அவர் எப்படி நடந்து கொள்வார் எனவும் தெரியும். அப்படிப்பட்ட அ.தி.மு.க., ஆட்சி வராது. வந்தால் நமக்கு பயம், அச்சம்தான் அவரை நினைத்து தோன்றும்.சரித்திரத்தில் தான் பொற்கால ஆட்சியை படித்துள்ளோம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை நலத்திட்டங்கள் பெற்ற ஆட்சியாக கருணாநிதி ஆட்சி திகழ்கிறது.தி.மு.க., ஆட்சி நாத்திகர்கள் ஆட்சியல்ல. மக்களை மதிக்கத்தெரிந்த கருணாநிதி, ராஜராஜசோழன் கட்டிய பெரிய கோவிலின், ஆயிரமாவது ஆண்டு விழாவை கொண்டாடினார். இந்நகருக்கு, ரூ. 25 கோடி ஒதுக்கினார். பல கோவில்களில் குடமுழுக்கு நடத்தினார்.அவர் ஆட்சியில் பாரபட்சமின்றி, அனைத்து மக்களுக்குமான திட்டங்கள் வகுக்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆட்சியில் இதுபோல நடந்ததில்லை. கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் எதிரணியினர் உட்பட மூன்று லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். பள்ளி, கல்லூரி செல்லும் உங்கள் குழந்தைகள் மடியில் லேப்-டாப் தவழ தி.மு.க.,வுக்கு ஓட்டளியுங்கள்.இவ்வாறு கனிமொழி பேசினார்.

வேட்பாளர் உபயதுல்லா, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம், நகராட்சி தலைவர் தேன்மொழி உட்பட பலர் பங்கேற்றனர்.இதைத்தொடர்ந்து ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய தொகுதிகளில் அவர் பிரசாரம் செய்தார்.

தமிழகம் பல மாநிலங்களுக்கு முன்னோடி : கனிமொழி எம்.பி.,

தேர்தலுக்கு பிறகு கூட்டணி மந்திரி சபை அமைந்தாலும் அதில் பா.ம.க. சேர்ந்து கொள்ளாது என, ராமதாஸ் கூறினார்.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாகை மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.

முன்னதாக வேளாங்கண்ணியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும். கும்மிடிப்பூண்டி எல்லையிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வரை பல மாவட்டங்களுக்கு கடந்த 15 நாட்களாக சென்று வந்துள்ளேன்.

அங்கெல்லாம் எங்கள் கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுகிறது. இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் இந்த அலை ஜெயலலிதாவிற்கு எதிராக வீசப்போகிறது.

தமிழகத்திற்கு தேர்தலுக்கு பிறகு கூட்டணி மந்திரிசபை அமையுமா என்ற கேள்விக்கு முதல் அமைச்சர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு பிறகு கூட்டணி மந்திரி சபை அமைந்தாலும் அதில் பா.ம.க. சேர்ந்து கொள்ளாது என்றார்.

மந்திரி சபையில் பாமக சேராது: ராமதாஸ்

சட்டசபை தேர்தலில் போட்டியிடும் துணை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வேட்புமனுவில் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

க.அன்பழகன் (வில்லிவாக்கம்)

மொத்த சொத்து மதிப்பு- ரூ. 1 கோடியே 58 லட்சத்து 6 ஆயிரத்து 770, ரொக்கம்-ரூ. 6 ஆயிரம், மனைவியிடம் உள்ள ரொக்கம்- ரூ. 1,500, வைப்பு தொகை-ரூ. 28 லட்சத்து 55 ஆயிரத்து 232, மனைவி பெயரில் வைப்பு தொகை-ரூ. 6 லட்சத்து 44 ஆயிரத்து 940, மகன் பெயரில் கடன்-ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம், மனைவியிடம் உள்ள நகைகள் மதிப்பு-ரூ. 7 லட்சத்து 60 ஆயிரம், வாகனங்கள்-இல்லை, மனைவி பெயரில் உள்ள சொத்துக்கள்-ரூ. 98.40 லட்சம்.

மு.க.ஸ்டாலின் (கொளத்தூர்)

மொத்த சொத்து மதிப்பு- ரூ. 2.63 கோடி, ரொக்கம்-ரூ. 50 ஆயிரம், மனைவியிடம் ரொக்கம் - ரூ. 25 ஆயிரம். வைப்பு தொகை ரூ. 5 லட்சத்து 37 ஆயிரத்து 6, மனைவி பெயரில் வைப்பு தொகை ரூ. 11 லட்சத்து 80 ஆயிரத்து 868, பாண்டு-பங்குகள்-ரூ. 1 லட்சம், மனைவியிடம் உள்ள நகைகளின் மதிப்பு ரூ. 11 லட்சம், வாகனங்கள்-இல்லை, விவசாய நிலத்தின் மதிப்பு- ரூ. 17 லட்சத்து 67 ஆயிரம், மனைவி பெயரில் உள்ள விவசாயமற்ற நிலத்தின் மதிப்பு ரூ. 7 லட்சத்து 43 ஆயிரத்து 360, வீடு மதிப்பு-ரூ. 75 லட்சத்து 20 ஆயிரம், மனைவி பெயரில் உள்ள வீட்டின் மதிப்பு- ரூ. 69 லட்சம், இதர சொத்துக்கள் ரூ. 12 லட்சத்து 36 ஆயிரத்து 827.

எ.வ.வேலு (திருவண்ணாமலை)

மொத்த சொத்து மதிப்பு- ரூ. 8 கோடியே 11 லட்சத்து 40 ஆயிரத்து 423, ரொக்கம்-ரூ. 26 லட்சத்து 50 ஆயிரம், மனைவியிடம் ரொக்கம்- ரூ. 4 லட்சத்து 30 ஆயிரம், வைப்பு தொகை ரூ. 14 லட்சத்து 97ஆயிரத்து 523, மனைவியிடம் உள்ள நகைகள் மதிப்பு ரூ. 5 லட் சத்து 76 ஆயிரம், வாகனங்கள்-இல்லை, விவசாய நிலத்தின் மதிப்பு-ரூ. 1 கோடியே 75 லட்சத்து 75 ஆயிரத்து 500, மனைவி பெயரில் உள்ள விவசாய நிலத்தின் மதிப்பு- ரூ. 5 லட்சம், இதர சொத்துக்கள் - ரூ. 5 கோடியே 76 லட்சத்து 10 ஆயிரத்து 500.

க. பொன்முடி (விழுப்புரம்)

மொத்த சொத்து மதிப்பு ரூ. 3 கோடியே 95 லட்சத்து 41 ஆயிரத்து 190, ரொக்கம்-ரூ. 8 லட்சத்து 61 ஆயிரம், மனைவியிடம் ரொக்கம்- ரூ. 18 லட்சம், வைப்புத் தொகை-ரூ. 24 லட்சத்து 60 ஆயிரத்து 104, மனைவி பெயரில் உள்ள வைப்பு தொகை- ரூ. 1 கோடியே 48 ஆயிரத்து 697, நகைகளின் மதிப்பு- ரூ. 2 லட்சத்து 19 ஆயிரத்த 600, மனைவியிடம் உள்ள நகைகளின் மதிப்பு- ரூ. 75 லட்சம், டிராக்டர், டிரெய்லர், சுமோ வாகனங்களின் மதிப்பு- ரூ.2 லட்சத்து 89 ஆயிரம், மனைவியிடம் உள்ள வாகனங்களின் மதிப்பு ரூ. 12 லட்சத்து 65 ஆயிரத்து 256, மனைவி பெயரில் உள்ள பங்கு தொகை - ரூ. 65 லட்சத்து 36 ஆயிரம், கடன்- ரூ. 6 லட்சத்து 69 ஆயிரத்து 532, மனைவி பெயரில் கடன்-ரூ. 11 லட்சம்.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (குறிஞ்சிப்பாடி)

மொத்த சொத்து மதிப்பு- ரூ. 2 கோடியே 1 லட்சத்து 95 ஆயிரத்து 524, ரொக்கம்-ரூ. 10 ஆயிரம், மனைவியிடம் உள்ள ரொக்கம்-ரூ. 17 ஆயிரம், வைப்பு தொகை- ரூ. 6 லட்சத்து 25 ஆயிரத்து 81, வாகனங்களின் மதிப்பு-ரூ. 12 லட்சத்து 92 ஆயிரத்து 550, கடன்- ரூ. 18 லட்சத்து 56 ஆயிரத்து 29.

தா.மோ.அன்பரசன் (பல்லாவரம்)

மொத்த சொத்து மதிப்பு- 5 கோடி, ரொக்கம்-ரூ. 2 லட்சம், மனைவியிடம் ரொக்கம்- ரூ. 40 ஆயிரம், வைப்பு தொகை- ரூ. 21 லட்சத்து 68 ஆயிரத்து 439, வாகனங்களின் மதிப்பு-ரூ. 22 லட்சத்து 90 ஆயிரம், மனைவி பெயரில் உள்ள வாகனங்களின் மதிப்பு- ரூ. 2 லட்சத்து 75 ஆயிரம், நகைகளின் மதிப்பு- ரூ. 10 லட்சம், மனைவி பெயரில் உள்ள நகைகளின் மதிப்பு- ரூ. 22 லட்சத்து 20 ஆயிரம், கட்டிடங்கள், வணிக வளாகங்கள் உள்பட இதர சொத்துக்களின் மதிப்பு- ரூ. 4.4 கோடி.

மதிவாணன் (கீழ்வேளூர்)

மொத்த சொத்து மதிப்பு- ரூ. 88.26 லட்சம், ரொக்கம்- ரூ. 10 ஆயிரம், வைப்புத் தொகை - ரூ. 1 லட்சத்து 45 ஆயிரத்து 942, மனைவி பெயரில் வைப்பு தொகை- ரூ. 4 லட்சம், வாகனங்களின் மதிப்பு ரூ. 53 ஆயிரம், நகைகளின் மதிப்பு- ரூ. 30 ஆயிரம், மனைவி பெயரில் உள்ள நகைகளின் மதிப்பு- ரூ.1 லட்சத்து 40 ஆயிரம், விவசாய நிலங்களின் மதிப்பு- ரூ. 47 ஆயிரத்து 725, கட்டிடங்களின் மதிப்பு- ரூ. 8 லட்சம், கடன் தொகை ரூ. 81 ஆயிரத்து 939.

சட்டசபை தேர்தலில் போட்டி: அமைச்சர்கள் சொத்து விவரம்

புதுடில்லி : ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து விலகுவதாக தி.மு.க., அறிவித்த பின்னும், காங்கிரஸ் தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. மனம் திறக்க இரு தரப்பினரும் தயக்கம் காட்டி வருகின்றனர். அதனால், தி.மு.க., அமைச்சர்கள் ஆறு பேரும் இன்று டில்லி சென்று, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ராஜினாமா கடிதங்களை அளிக்கின்றனர். இதற்கிடையில்,முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி, மத்தியில் ஆட்சிக்கு முழு ஆதரவு தர முன்வந்திருக்கிறது.
வரும் சட்டசபை தேர்தலுக்காக தி.மு.க., - காங்கிரஸ் இடையே நடைபெற்று வந்த தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து, மத்தியில் ஆட்சியில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து தி.மு.க., அமைச்சர்கள் விலகுவது என, அந்தக் கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.தி.மு.க.,வின் இந்த முடிவால், காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடையவில்லை. அந்தக் கட்சியின் தலைவர்கள் யாரும் பீதியடைந்தது போன்ற அறிக்கை விடாததோடு, கூட்டணியை புதுப்பிப்பதற்காக தி.மு.க.,வை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரியவில்லை. இரு தரப்பினரும் மனம் திறந்து பேசாமல் பெரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.
"தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தீவிர ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில், பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவர்' என, காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கூறினர். காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அரசியல் விவகார ஆலோசகர் அகமது படேலும் நேற்று ஆலோசனை நடத்தினாலும் தகவல் ஏதும் வெளிவரவில்லை. மேலும் மே.வங்கம் மற்றும் கேரளாவில் அதிக இடங்களைப் பெறும் திட்டத்திற்கு தி.மு.க.,வுடன் அணிசேராமல் இருப்பது நல்லது என்ற கருத்து பொதுச் செயலர் ராகுலிடம் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில், ஸ்பெக்ட்ரம் விவகாரம் இந்த இருமாநிலங்களிலும் அதிகம் எதிரொலிக்காமல் இருக்க இது உதவும் என்ற கருத்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், சென்னையில் நேற்று நிருபர்களிடம் பேசிய தி.மு.க., பார்லிமென்டரி கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு, ""காங்கிரசைச் சேர்ந்த யாரும் எங்கள் கட்சித் தலைவர்களை தொடர்பு கொண்டு பேசவில்லை. எங்கள் கட்சியைச் சேர்ந்த ஆறு மத்திய அமைச்சர்களும் நாளை (இன்று) டில்லி சென்று தங்களின் ராஜினாமா கடிதங்களை, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சமர்ப்பிப்பர்,'' என்றார்.
அதே நேரத்தில், மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க., அமைச்சர்கள் விலகுவதால் ஏற்படும் ஆதரவு இழப்பை சரிக்கட்ட, முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியின் ஆதரவைப் பெறும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாக டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மூன்று நாட்களுக்கு முன், பிரதமர் மன்மோகனுடன் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் நீண்ட நேரம் சந்தித்து பேசியுள்ளார்.
தவிரவும், உத்தர பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியை வீழ்த்த பலமான கூட்டணி வேண்டும் என, காங்கிரஸ் விரும்புகிறது. அதற்காக சமாஜ்வாடி கட்சியுடன் இணக்கமாக இருப்பதை விரும்புகிறது. ஏற்கனவே, மத்திய அரசுக்கு சமாஜ்வாடி கட்சி வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்தாலும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இரு கட்சிகளும் நெருக்கம் கொள்வது உ.பி.,யில் சமாஜ்வாடி கட்சிக்கு வசதியாகும். அதனால், வெளிப்படையாக சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் ஆதரவு கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக லக்னோவில் நிருபர்களிடம் பேசிய முலாயம் சிங், "மத்திய அரசில் சமாஜ்வாடி கட்சி சேருமா என்பது அனுமானத்தின் அடிப்படையிலான கேள்வி. எங்கள் கட்சி ஏற்கனவே மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதால், அரசுக்கு ஆபத்து என்ற கேள்விக்கே இடமில்லை' என்றார்.

தி.மு.க., மத்திய மந்திரிகள் இன்று ராஜினாமா : இருதரப்பும் மனம் திறக்க பெரும் தயக்கம்

மதுரை: 6வது முறை மட்டுமல்ல, 7 வது முறையும் கருணாநிதியே முதல்வராவார் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடந்த மேலூர் காவிரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு அழகிரி பேசுகையில்,

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.28 கோடியில் கட்டப்பட்டுள்ள உயிர் காக்கும் சிகிச்சைப் பிரிவு வசதி தமிழகத்திலேயே மதுரை மாவட்டத்தில்தான் உள்ளது.

மதுரையில் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததை அடுத்து முதல்வரிடம் பேசி அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்போது புதிய வளாகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் மாநகராட்சிக்கு உள்பட்ட சுடலை முத்துப்பிள்ளை காலனியில் 330 அடுக்கு மாடி வீடுகள், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் எல்லீஸ் நகரில் 752 வீடுகள், அவனியாபுரம் நகராட்சிக்கு உள்பட்ட அருப்புக்கோட்டை சாலையில் 192 வீடுகள், ராஜாக்கூர் பெரியார் நகரில் அரசின் மானியத்துடன் 720 வீடுகள் என, மொத்தம் 1994 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, தற்போது திறக்கப்பட்டுள்ளன.

ரூ.780 கோடி மதிப்பிலான மேலூர் காவிரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் சுமார் 12 லட்சம் மக்கள் பயன்பெறுவர்.

தி.மு.க. ஆட்சியில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நலத் திட்டங்கள் சென்றடைகின்றன. ஏழை, எளிய மக்கள் இந்த ஆட்சியை மறக்க மாட்டார்கள். 6-வது முறையல்ல; 7-வது முறையாகக் கூட தமிழக முதல்வராக கருணாநிதி தேர்வு செய்யப்படுவார் என்றார் அழகிரி.

6வது முறை மட்டுமல்ல, 7வது முறையும் கருணாநிதியே முதல்வராவார்-அழகிரி

சென்னை: தி்முக, காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு நேற்றைக்குள் முடிவாகி விடும் என்ற சூழ்நிலை பிரகாசமாக இருந்த நிலையில் திடீரென அதில் பெரும் இழுபறி ஏற்பட்டு விட்டது. இதற்கு அமைச்சர் துரைமுருகனின் பேச்சுதான் காரணம் என்று பரவலாக பேசப்படுகிறது.

தமிழக சட்டசபைத் தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன. இன்னும் ஓரிரு நாளே அதற்கு உள்ளது. இந்த நிலையில் அதிமுக கூட்டணி கிட்டத்தட்ட பல முக்கிய வேலைகளை முடித்து விட்டது. தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மட்டுமே சீட் ஒதுக்க வேண்டியுள்ளது. அதுதொடர்பான பேச்சுக்களும் கூட சரியான திசையில் செல்வதாக கூறப்படுகிறது.

ஆனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியால் பெரும் இழுபறியாக உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு இரு கட்சிகளுக்கும் இடையே சுமூக தீர்வு ஏற்படும் நிலை ஏற்பட்டதாக தெரிகிறது. ஆனால் கடைசி நேரத்தில் அதில் பெரிய தொய்வு ஏற்பட்டு விட்டது.

இதற்கு முக்கியக் காரணம், திமுக பேச்சுவார்த்தைக் குழுவில் இடம் பெற்றிருந்த அமைச்சர் துரைமுருகன்தான் என்று கூறப்படுகிறது. அவர் கிண்டலாகப் பேசியதால் கோபமடைந்த காங்கிரஸ் ஐவர் குழுவில் இடம் பெற்றிருந்த மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரமும், ஜி.கே.வாசனும் அறிவாலயத்திலிருந்து கிளம்பிச் சென்று விட்டனராம்.

இதனால்தான் நேற்றே முடிவாகியிருக்க வேண்டிய தொகுதிப் பங்கீடு விவகாரத்திற்கு தடங்கல் ஏற்பட்டு விட்டதாம்.

நாங்கள் 200 தொகுதிகள் லோக்சபா தேர்தலில் கொடுங்கள் என்று கேட்டால் சும்மா இருப்பீர்களா, சும்மா மிரட்டாதீர்கள் என்று கிண்டலாக துரைமுருகன் கூறியதே சிக்கலுக்குக் காரணம் என்கிறார்கள்.

தங்களை திமுக தரப்பு சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லையே என்று காங்கிரஸ் மத்தியில் கோபம் எழுந்துள்ளதாம்.

அதேசமயம், இன்னும் ஓரிரு நாளில், அனேகமாக இன்றைக்குள் கூட தொகுதிப் பங்கீடு சுமூக முடிவை எட்டும் என்று திமுக, காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

தொகுதிப் பங்கீடு இழுபறி: துரைமுருகன் கிண்டலால் காங். கோபம்?

34-வது தேசிய விளை யாட்டுப் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடை பெற்று வருகிறது. இதன் நிறைவு விழா இன்று மாலை நடக்கிறது. இந்த நிறைவு விழாவில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அஜய் மக்கான் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது அவர் நிறைவு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க முடிவு செய்துள்ளார். பாராளுமன்ற கூட்ட தொடர் காரணமாக அவர் நிறைவு விழாவில் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியை நடத்தும் அமைப்பாளர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது. இதனால் தனது பெயருக்கு களங்கம் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அவர் இந்த விழாவை புறக்கணிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் நிறைவு விழாவில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ்கல்மாடி பங்கேற்கிறார். அவருடன் நெருங்கி அமர்வது அல்லது நெருக்கமாக பேசுவது போன்ற சூழல் ஏற்படும். இதன் காரணமாக அஜய்மக்கான் தேசிய விளையாட்டு நிறைவு விழாவை புறக்கணிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

அஜய் மக்கான் சமீபத்தில் தான் மத்திய விளையாட்டுத் துறை மந்திரியாக பொறுப் பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய போட்டி நிறைவு விழா: மத்திய விளையாட்டு மந்திரி புறக்கணிக்க முடிவு; கல்மாடி பங்கேற்பதால் தயக்கம்

34-வது தேசிய விளை யாட்டுப் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடை பெற்று வருகிறது. இதன் நிறைவு விழா இன்று மாலை நடக்கிறது. இந்த நிறைவு விழாவில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அஜய் மக்கான் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது அவர் நிறைவு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க முடிவு செய்துள்ளார். பாராளுமன்ற கூட்ட தொடர் காரணமாக அவர் நிறைவு விழாவில் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியை நடத்தும் அமைப்பாளர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது. இதனால் தனது பெயருக்கு களங்கம் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அவர் இந்த விழாவை புறக்கணிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் நிறைவு விழாவில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ்கல்மாடி பங்கேற்கிறார். அவருடன் நெருங்கி அமர்வது அல்லது நெருக்கமாக பேசுவது போன்ற சூழல் ஏற்படும். இதன் காரணமாக அஜய்மக்கான் தேசிய விளையாட்டு நிறைவு விழாவை புறக்கணிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

அஜய் மக்கான் சமீபத்தில் தான் மத்திய விளையாட்டுத் துறை மந்திரியாக பொறுப் பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார நெருக்கடி எதிரொலி:
 
 பாகிஸ்தானில், மந்திரிசபை கலைப்பு;
 
 பிரதமர் கிலானி நடவடிக்கைபொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பாகிஸ்தானில் மந்திரிசபை கலைக்கப்படுகிறது. பாகிஸ்தானில் பெனா சிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி மந்திரிசபை ஆட்சியில் உள்ளது. அதிபராக பெனா சிரின் கணவர் ஆசிப் அலி சர்தாரி உள்ளார். யூசுப் ரசா கிலானி பிரதமராக பதவி வகிக்கிறார்.

தற்போது, இவரது அமைச்சரவையில் 50-க்கும் மேற்பட்டோர் மந்திரிகளாக உள்ளனர். பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. லஞ்ச ஊழல் பெருகி விட்டது. எனவே, தற்போதுள்ள பெரிய அளவிலான மந்திரிசபையை கலைத்து விட்டு சிறிய மந்திரி சபையை அமைக்க வேண்டும் என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் செரீப்) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தயவில் ஆட்சி நடத்தும் பிரதமர் கிலானி அவர்களின் கோரிக்கைக்கு பணிந்தார். எனவே தனது மந்திரிசபையை கலைக்க முடிவு செய்துள்ளார். இந்த முடிவு ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்திலும் முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, தனது அமைச் சரவையில் உள்ள அனைத்து மந்திரிகளையும் ராஜினாமா செய்யும்படி பிரதமர் கிலானி கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி அனைத்து மந்திரிகளும் தங்களது ராஜினாமா கடிதத்தை அவரிடம் கொடுத்துள்ளனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) புதிய மந்திரிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் பதவி ஏற்க உள்ளனர். அனேகமாக 10 முதல் 15 பேர் மட்டுமே மந்திரிகளாக நியமிக்கப்படுவார்கள் என தெரிகிறது.

இந்த தகவலை பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜஹாங் கீர்பாதர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி எதிரொலி: பாகிஸ்தானில், மந்திரிசபை கலைப்பு; பிரதமர் கிலானி நடவடிக்கை

முக நூல்

Popular Posts