background img

புதிய வரவு

Showing posts with label Interview. Show all posts

ஒரு படத்தில் காமெடி நடிகர் வடிவேலு த்ரிஷா... த்ரிஷா... என்று த்ரிஷா புராணம் பாடிக் கொண்டிருப்பார். கடைசியில் அவருக்கு த்ரிஷா கிடைக்க மாட்டார். அதனால் விரக்தியடையாத அவர், த்ரிஷா இல்லன்னா திவ்யா... என்று டயலாக் பேசி மனதை திடப்படுத்திக் கொள்வார். அந்த நிலைமைதான் கோடம்பாக்கத்தில் டைரக்டராக அறிமுகமாக துடிக்கும் பல இளம் இயக்குனர்களின் நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது.

த்ரிஷாவுக்காகவே கதையை உருவாக்கிக் கொண்டு த்ரிஷா வீட்டு வாசலில் கதை சொல்ல காத்து கிடக்கிறது ஒரு கூட்டம். இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவுடன் கோடம்பாக்கத்திற்கு படையெடுப்பவர்களில் பலர் த்ரிஷாவை வைத்து ஒரு படமாவது பண்ண வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காக அவரிடம் கால்ஷீட் கேட்டு கால் கடுக்க காத்திருக்கிறார்கள் அந்த இளம் இயக்குனர்கள். ஆனால் அம்மணியோ, அனுபவம் இல்லாத இளம் இயக்குனர்களை தவிர்த்து வருகிறார்.

இதுபற்றி த்ரிஷா அளித்துள்ள பேட்டியில், நான் எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் அபியும் நானும், விண்ணைத்தாண்டி வருவாயா, மன்மதன் அம்பு போன்ற படங்கள்தான் என் அடையாளமாக இருக்கும் என நினைக்கிறேன். இத்தனைப் படங்களில் நடித்த பின்னர் மூன்று படங்கள்தான் என் அடையாளம் என சொல்லும் அளவுக்கு இருக்கிறது. இனி என்னை அடையாளப்படுத்தும் படங்களில்தான் நடிக்கப் போகிறேன். நிறைய அறிமுக இயக்குநர்கள் கதை சொல்ல காத்திருக்கிறார்கள். நான்தான் தவிர்த்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

த்ரிஷாவை மொய்க்கும் டைரக்டர்கள்!

சிரியோ சிரியென சிரித்துக் கொண்டிருக்கிறார் காமெடி நடிகர் சிங்கமுத்து. வடிவேலு அண்ட் கோ காமெடி கூட்டணியில் முக்கிய புள்ளியாக இருந்தவர் சிங்கமுத்து. சொத்து தகராறு காரணமாக வடிவேலு - சிங்கமுத்து இடையே மோதல் வெடித்து, கோர்ட் - கேஸ் என அலைந்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல் களத்தில் திமுகவுக்கு ஆதரவாக வடிவேலு களமிறங்கியதால், அவருக்கு போட்டியாக அவரது அந்தரங்க விஷயங்கள் எல்லாமும் தெரிந்த சிங்கமுத்து களமிறக்கப்பட்டார். வடிவேலு விஜயகாந்துக்கு எதிராக பேச... வடிவேலுக்கு எதிராக சிங்கமுத்து பேசினார். வடிவேலுவின் பிரசாரத்துக்கு கிடைத்த அளவு சிங்கமுத்து பிரசாரத்துக்கு ஆதரவு இல்லையென்றாலும்...‌ ஜெயித்தது என்னவோ சிங்கமுத்து பிரசாரம் செய்த அதிமுகதான்.

அதனால்தான் இப்போது சிரியோ சிரியென சிரித்துக் கொண்டிருக்கிறார் சிங்கமுத்து. தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெறுவதற்காக போயஸ் கார்டன் சென்ற சிங்கமுத்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறுகையில், தேர்தல் பிரசாரத்திற்கு புறப்படும்போது, இந்த வெற்றி எங்களுக்கு தெரியவில்லை. ஆனால், மக்களை பார்த்தபோது, அவர்களின் கண்களில் ஏக்கம் தெரிந்தது. பெரிய மாற்றத்தை மக்கள் விரும்பினார்கள். அதனால், வெளியில் சொல்ல பயந்து கொண்டே, இரட்டை இலைக்கு ஓட்டு போட்டு விட்டார்கள். இனி மக்கள் எதிர்பார்க்கும் அத்தனையும் நடக்கும், என்றார்.

வடிவேலு பிரசாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சிங்கமுத்து, தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் ஜெயிக்க வேண்டும் என்று வடிவேலு எங்கேயும் பிரசாரம் செய்யவில்லையே. எம்.ஜி.ஆர். பாட்டை பாடிக்காட்டி ஓட்டு கேட்டு விட்டு, எம்.ஜி.ஆர். வளர்த்த கட்சிக்கு ஓட்டு போடாதே என்றார். அவரது பிரசாரம் காமெடியில் முடிந்துவிட்டது, என்றார்.

என்ன ஒரு காமெடித்தனம்! சிரி சிரி சிங்கமுத்து!

புதுவை மாநில சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதில் 17 தொகுதிகளில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 15 இடங்களை பிடித்தது. இதில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட ரங்கசாமி 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால் என்.ஆர்.காங்கிரசின் பலம் 14 ஆக உள்ளது.

இந்த நிலையில் காரைக்கால் நிரவி-திருப்பட்டினம் தொகுதியில் இருந்து சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற வி.எம்.சி.சிவக்குமார் என்.ஆர்.காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதற்கான ஆதரவு கடிதத்தையும் ரங்கசாமியிடம் அளித்துள்ளார்.

இந்த கடிதம் கவர்னரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுயேட்சை எம்.எல்.வி.ன் ஆதரவு கிடைத்து இருப்பதால் ரங்கசாமி கட்சியான என்.ஆர்.காங்கிரசால் தனித்து ஆட்சி அமைக்க முடியும். இதனால் தனது ஆட்சியில் அ.தி.மு.க.வுக்கு பங்களிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து கவர்னர் இக்பால்சிங்கை சந்தித்து திரும்பிய ரங்கசாமியிடம் நிருபர்கள் எப்போது ஆட்சி அமைக்க போகிறீர்கள்? முதல்-அமைச்சராக எப்போது பதவி ஏற்பீர்கள்? உங்களது ஆட்சியில் அ.தி.மு.க.வுக்கு பங்கு உண்டா? ஜெயலலிதாவை எப்போது சந்திப்பீர்கள்? என பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

இந்த கேள்விகளுக்கு ரங்கசாமி பதில் அளிக்கும்போது, நேரடியாக ஆட்சியில் அ.தி.மு.க. பங்கேற்கும் என்று தெரிவிக்க வில்லை. அதற்கு பதிலாக தமிழக முதல்வர் டாக்டர் அம்மா அவர்களின் நல் ஆசியுடனும், ஆதரவுடனும் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமையும் என்று கூறினார். மேலும் பதவி ஏற்பதற்கான தேதியை முடிவு செய்தபின் தெரிவிப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

ஜெயலலிதா ஆசியுடன் ஆட்சி அமைப்போம்: ரங்கசாமி பேட்டி

“சித்திரம் பேசுதடி” படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பாவனா. தீபாவளி, அசல், ஜெயங் கொண்டான் படத்திலும் நடித்தார். மலையாளம், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார்.

அவர் சொல்கிறார், சினிமாவில் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. இங்கு கதாநாயகிகள் சீக்கிரமே காணாமல் போய் விடுகின்றனர். நடிகர்கள்தான் ரொம்ப நாள் நிலைத்து இருக்கிறார்கள். நடிகைகள் மார்க்கெட் போனதும் திருமணம் செய்து கொள்கின்றனர். அதன் பிறகு கணவர், குடும்பம், குழந்தை என வாழ்க்கை முடங்கி போகிறது.

சினிமாவில் காதல் காட்சிகளில் நடித்துள்ளேன். ஆனால் நிஜத்தில் காதல் பற்றி எதுவும் தெரியாது. காதலித்தால் வாழ்க்கை நாசமாகி போகும். சிலர் காதலுக்காகவே உயிரை விடுகின்றனர். இதுபோன்ற செயல்களை நான் வெறுக்கிறேன். சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

"காதல், வாழ்வை நாசமாக்கி விடும்” -நடிகை பாவனா

காவலன் படத்திற்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட நெருக்கடிகளைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்த நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். அராஜக திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; தமிழ் திரையுலகையே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்றெல்லாம் விஜய் ரசிகர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் எதிர்பார்த்தது போலவே அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக முன்னணியில் இருப்பதையறிந்து மகிழ்ச்சியடைந்த நடிகர் விஜய் உடனடியாக தனது தந்தை எஸ்.ஏ.சி.,யுடன் போயஸ் கார்டனுக்கு புறப்பட்டுச் சென்றார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த விஜய், பின்னர் அளித்த பேட்டியில், `ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்று நான் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் விரும்பினார்கள். மக்களின் விருப்பம் இந்த தேர்தல் மூலம் நிறைவேறி இருக்கிறது. இத்தனை பெரிய மகத்தான வெற்றி பெற்ற ஜெயலலிதா அம்மாவுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சமயத்தில் என் மன்றங்களை சேர்ந்த ஒவ்வொரு மாவட்ட தலைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். நான் சொன்ன ஒரே ஒரு வார்த்தைக்காக மக்கள் இயக்கத்தை சேர்ந்த சகோதரர்கள் அனைவரும் அ.தி.மு.க. வெற்றிக்காக உழைத்து இருக்கிறார்கள். அவர்கள் உழைப்புக்கு, முக்கியமாக என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.

மக்கள் விருப்பம் நிறைவேறி இருக்கிறது : விஜய் கருத்து

சென்னை : ""பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்ற தி.மு.க.,வின் திட்டம் மக்களால் முறியடிக்கப்பட்டு விட்டது,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறினார். சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்திற்கு அக்கட்சி தலைவர் விஜயகாந்த், நேற்று பகல் 12:30 மணிக்கு வந்தார். அவருக்கு லட்டு ஊட்டி தொண்டர்கள், பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்த விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது: இது எனக்கு கிடைத்த வெற்றியல்ல; மக்களுக்கும், என கட்சி தொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றி. எங்கள் கட்சியின் வளர்ச்சி சிறப்பாகவே உள்ளது. குறிப்பாக கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், 8.33 சதவீத ஓட்டுகள் பெற்றோம். 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், 10.31 சதவீத ஓட்டுகள் பெற்றோம். விலைவாசி உயர்வு, ஸ்பெக்ட்ரம் ஊழல், மின்வெட்டு, குடும்ப அராஜகம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் தி.மு.க., ஆட்சிக்கு முடிவு கட்டியுள்ளனர்.

தி.மு.க.,விற்கு ஏற்பட்டுள்ள இந்த தோல்வியில், தி.மு.க., மற்றும் கருணாநிதி குடும்பத்திற்கு பங்கு உண்டு. அண்ணாதுரை கட்சியை தனது குடும்பமாக பார்த்தார். ஆனால், கருணாநிதி குடும்பத்தை கட்சியாக மாற்றியுள்ளார். குறிப்பாக பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்ற தி.மு.க.,வின் திட்டம், மக்களால் முறியடிக்கப்பட்டு விட்டது. தி.மு.க.,வின் அமைச்சர்கள் பலர் தோல்வியடைந்ததற்கு, கட்சியின் அராஜக நிலையே காரணம். ஸ்பெக்ட்ரம் வழக்கில் இனி பல திருப்பங்கள் நடக்கும். வழக்கு கோர்ட்டில் உள்ளதால் அதை பற்றி அதிகம் பேச முடியாது. இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

பணம் கொடுத்து ஜெயிக்கும் கலாசாரத்திற்கு முடிவு : விஜயகாந்த் பேட்டி

நயன்தாரா - பிரபுதேவா திருமணம் நடந்தால் பார்க்கலாம் என்று நடிகர் சிம்பு கூறியிருப்பது, அவர்கள் திருமணத்தில் புதிய சிக்கல் ஏதும் இருக்குமோ? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. வானம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படம் ஒஸ்தி. இப்படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. அதனைத் தொடர்ந்து நிருபர்களை சந்தித்த சிம்பு, நிருபர்களின் கேள்விகளுக்கு ‌ரொம்பவே கூலாக பதில் அளித்தார்.

திருமணம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த சிம்பு, எனது தங்கை திருமணத்துக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. அது முடிந்த பின்னர்தான் என் கல்யாணம் பற்றி யோசிக்க வேண்டும். கண்டிப்பாக என் திருமணம் காதல் திருமணமாகத்தான் இருக்கும். எனக்கு ஏற்ற பெண்ணாக அமைந்தால் உடனடியாக கல்யாணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன், என்றார்.

நயன்தாராவும், பிரபு தேவாவும் அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களாமே? என்ற கேள்விக்கு, நானும் பத்திரிகைகளில் படித்தேன். கல்யாணம் நடக்கட்டும் பார்க்கலாம் என்றார். நடிகர் சிம்பு இப்படி கூறியிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாரா - பிரபுதேவா கல்யாணத்தில் ஏதும் சிக்கல் உருவாகுமோ என்ற ‌பேச்சும் எழுந்துள்ளது.

நயன்தாரா திருமணத்தில் சிக்கலா? சிம்பு பேட்டியால் பரபரப்பு!!

கோடி கோடியா கொட்டிக் கொடுத்தாலும் மோசமான படங்களில் நடிப்பதாக இல்லை. மேலும் ஒரு படம் உருவாகிக் கொண்டிருக்கும்போதே அதைப் பற்றி ஆஹா ஓஹோ என புகழ்வது வேஸ்ட். நல்ல படமா இருந்தா ஓடும், என்றார் நடிகை த்ரிஷா.

ஹைதராபாதில் த்ரிஷா அளித்த பேட்டி:

ஒரு படத்தில் நடிக்கும் போது நடிகர், நடிகைகள் இஷ்டத்துக்கும் அடித்துவிடுகின்றனர். தாங்கள் நடிக்கும் படத்தை ஆஹா ஓஹோவென புகழ்ந்து பேசுகிறார்கள். ஆனால் படம் ரிலீசான பிறகு ஒரு சில நாட்களிலேயே தியேட்டரை விட்டு போய்விடுகிறது.

எனவே இந்த மாதிரி வெற்று பில்ட் அப் எதற்கு? தாங்கள் நடிக்கும் படங்களை தாங்களே மிகைப்படுத்தி பேசுவது எனக்கு பிடிக்காது. எல்லா படங்களும் வெற்றி பெறுவது இல்லை. படங்கள் ஓடுமா? ஓடாதா? என்பதை தீர்மானிப்பவர்கள் ரசிகர்கள். அவர்கள் முடிவுக்கு விட்டு விட வேண்டும்.

படம் ரிலீசுக்கு முன்பே அதை புகழ்வது ரசிகர்களை ஏமாற்றுவதுபோல் ஆகி விடும். நல்ல கதையம்சம் உள்ள படங்களையே தேர்வு செய்து நடிக்கிறேன். எனது கேரக்டர் நன்றாக இருந்தாலும் படம் வெற்றி பெற வேண்டும். கதாபாத்திரம் நன்றாக அமைந்தாலும் தோல்வி அடையும் படங்களில் நடிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.

கூடுதல் சம்பளம் தருவதாக ஆசை காட்டி, கோடி கோடியாகக் கொட்டினாலும் தோல்வி அடையும் படங்களில் நடிக்க மாட்டேன்," என்றார் த்ரிஷா.

சும்மா எதுக்கு பில்ட் அப்...நல்லாருந்தா படம் ஓடும் - த்ரிஷா

தேர்தல் முடிவுக்கு பிறகு தங்கபாலு தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார். நடிகரும், மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் தனது மகன் நடிகர் அஸ்வின் சேகர் திருமண நிச்சயதார்த்த அழைப்பிதழை கொடுக்க காரைக்குடி வந்தார். மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து அழைப்பிதழை கொடுத்தார்.

பின்னர் மாலைமலர் நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடந்த முடிந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி 140 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. இந்த தேர்தல் எதிர்ப்பலைகள் இல்லாத தேர்தல். அரசு நலத்திட்டங்கள் மக்களிடம் பரவலாக சென்றுள்ளது. ஓட்டு எண்ணிக்கைக்கு உள்ள ஒரு மாத இடைவெளி வேட்பாளர்கள் தங்களது மனதை பக்குவப்படுத்தி கொள்ள வசதியாக இருக்கும். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் 63 தொகுதிகளை போராடி பெற்றனர். ஆனால் தங்கபாலு வேட்பாளர்கள் தேர்வு மூலம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை அழித்து விட்டார்.

தங்கபாலு காங்கிரஸ் கட்சியின் உண்மை விசுவாசிகள் 19 பேரை நீக்கம் செய்து அறிவித்தார். தற்போது இடைநீக்கம் என்று கூறுகிறார். தேர்தல் முடிவுக்கு பிறகு தங்கபாலு தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி. அரசியல் வியாபாரம் அல்ல. அரசியல் மூலம் நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகளை அதிகப்படுத்த விரும்பினேன். எதிராளிகளை சம்பாதிக்க அல்ல. சமூக சேவையில் ஈடுபட அரசியல் பதவி பயன்பட்டது.

மயிலாப்பூர் தொகுதியில் ரூ.330 கோடி செலவில் அரசின் நலத்திட்டங்களை செய்துள்ளேன். இதில் ஒரு பைசா கூட கமிஷனாக பெறவில்லை. தேர்தல் முடிவுக்கு பிறகு சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து எனது மகன் திருமண அழைப்பிதழை கொடுக்க உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் முடிவுக்கு பிறகு தங்கபாலு நீக்கப்படுவது உறுதி: நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி

ரசிகர்கள் பார்க்க தயாராக இருந்தால் நான் நீச்சல் உடையணிந்து நடிக்க தயாராக இருக்கிறேன் என்று நடிகை சினேகா கூறியுள்ளார். புன்னகை மற்றும் ஹோம்லியால் புகழ்பெற்றவர் நடிகை சினேகா. அம்மணியின் சிரித்த முகத்தை பிடிக்கா‌தவர்களே இருக்க முடியாது. தன்னைத் தேடி வந்த கவர்ச்சி வாய்ப்புகள் பலவற்றை மறுத்து, பல லட்சங்களை இழந்த சினேகா, சமீப காலமாக தனது கிளாமர் லட்சியத்தில் இருந்து இறங்கி வர ஆரம்பித்திருக்கிறார். இதுவரை நீச்சல் உடை, முத்தக்காட்சி, நெருக்கமான டூயட் பாடல்களில் நடிக்காத சினேகாவின் மனதில் இப்போது மனமாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டியில், நான் பத்து வருடங்களாக சினிமாவில் நடிக்கிறேன். எனக்கென்று ஒரு இமேஜையும் உருவாக்கி வைத்துள்ளேன். இதுவரை கவர்ச்சி வேடங்களில் நடித்தது இல்லை. குடும்ப பாங்கான வேடங்களிலேயே நடித்துள்ளேன். குடும்ப கதைகளா சினேகாவை கூப்பிடுங்கள் என்கிற அளவுக்கு எனது கேரக்டர் மக்கள் மனங்களில் பதிந்து உள்ளது. நீச்சல் உடையில் அறவே நடிப்பது இல்லை என்ற முடிவில் நான் இல்லை. கதைதான் முக்கியம் கதைக்கு நீச்சல் உடை கட்டாயம் தேவை என்ற நிலை ஏற்பட்டால் நீச்சல் உடையில் நடிக்க நான் தயார். என் ரசிகர்கள் எனது கவர்ச்சியை விரும்ப மாட்டார்கள். அவர்கள் விரும்பினால் நடிக்கத் தயார். சமீபத்திய படங்கள் எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தன. மேலும் படங்கள் கைவசம் உள்ளன. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறேன், என்று கூறியுள்ளார்.

நீச்சல் உடைக்கு நான் ரெடி ; பார்க்க நீங்க ரெடியா? - சினேகா

சென்னை : ""தமிழக சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்தது. 81 சதவீதம் வரை ஓட்டுகள் பதிவாகியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அளவிற்கு ஓட்டு சதவீதம் அதிகரித்ததற்கு, மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வு தான் காரணம்,'' என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார். மூன்று ஓட்டுச்சாவடிகளில் மட்டும், 15ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், அவர் தெரிவித்தார்.

இரவு அவர், நிருபர்களிடம் கூறியதாவது:ஓட்டுப்பதிவு குறித்த சதவீதம் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. பல ஓட்டுச்சாவடிகளில் கூட்டம் அதிகம் இருந்ததால், ஓட்டுப்பதிவு தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே, முழுமையான விவரம் நள்ளிரவுக்குள் அல்லது நாளை (இன்று) காலை தான் முழுமையான விவரம் தெரியவரும். எனினும், ஓட்டுப்பதிவு சதவீதம் 75 முதல் 81க்குள் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். மாநில அளவில் 65 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்ததாக, புகார்கள் வந்தன. அதில், 11 இயந்திரங்கள் சரி செய்யப்பட்டன. 54 இயந்திரங்களுக்கு பதில், புதிய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டன.திருவிடைமருதூரில் இரண்டு ஓட்டுச்சாவடிகளில் அடங்கிய வாக்காளர்கள், தேர்தலை புறக்கணித்துள்ளனர். ஓட்டுச்சாவடி இடம் மாற்றம் தொடர்பான பிரச்னையில், இந்த முடிவை எடுத்ததாக அவர்கள் கூறினர். இந்த ஓட்டுச்சாவடிகளில் தலா 1,300 ஓட்டுகள் இருந்தன. மாநில அளவில், பெரிய அளவில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.

நெய்வேலியில், 7.10க்கு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், ஒரு ஓட்டுச்சாவடியில் இருந்த ஓட்டுப்பதிவு இயந்திரம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. எனவே, அந்த ஓட்டுச்சாவடியில் மீண்டும் ஓட்டுப்பதிவு நடைபெற வாய்ப்புள்ளது. மேலும், கன்னியாகுமரியில் ஒரு ஓட்டுச்சாவடியிலும், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஒரு ஓட்டுச்சாவடியிலும் அமைக்கப்பட்டிருந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டுகள் பதிவாகவில்லை. எனவே, இந்த இரு ஓட்டுச் சாவடிகளிலும் மறு ஓட்டுப்பதிவு நடைபெறும்.இது குறித்து, தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்துள்ளோம். உத்தரவு வந்ததும், மறு ஓட்டுப்பதிவு 15ம் தேதி நடைபெறும். அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 86 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக, தூத்துக்குடியில் 74 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. கடந்த சட்டசபை தேர்தலை விட (70%), இந்த தேர்தலில் ஓட்டுப்பதிவு அதிகரித்ததற்கு, மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே அதிகளவில் ஏற்பட்ட விழிப்புணர்வு தான் காரணம்.

சென்னையில், நடுத்தர மக்களும், உயர்தட்டு மக்களும் அதிகளவில் குடும்பம், குடும்பமாக வந்து ஓட்டளித்தனர். தேர்தல் கமிஷன் மற்றும் அரசியல் கட்சியினர் ஏற்படுத்திய விழிப்புணர்வும், ஓட்டு சதவீதம் அதிகரித்ததற்கு முக்கிய காரணம். மத்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கு, படியை குறைத்துவிட்டதாக கூறப்பட்டது தவறு. முன்னாள் ராணுவ வீரர்களுக்கான படி, முந்தைய தேர்தலை விட 60 ரூபாய் குறைக்கப்பட்டது. இந்த தொகையை தருவதாக தெரிவித்துள்ளோம்.வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக, 11ம் தேதி இரவு 53 பேர் கைது செய்யப்பட்டனர். இது போன்று, 1,565 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், சம்பந்தபட்டவர்களுக்கு ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும். மாநிலத்தில், எந்த ஓட்டுச்சாவடிகளிலும் கள்ள ஓட்டு சம்பவம் நடைபெறவில்லை.இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.

ஓட்டு எண்ணிக்கை எங்கு நடக்கும்? சென்னை மாவட்டத்திற்கான ஓட்டு எண்ணிக்கை, அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி மற்றும் ராணி மேரி கல்லூரி ஆகிய மூன்று இடங்களில் நடைபெறும் என, பிரவீன்குமார் தெரிவித்தார். தொகுதி வாரியாக பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், இந்த மூன்று இடங்களிலும் பிரித்து பாதுகாப்புடன் வைக்கப்படும் என்றும், அவர் தெரிவித்தார்.

அதிக ஓட்டுப்பதிவுக்கு மக்களின் விழிப்புணர்வே காரணம் : பிரவீன்குமார் பேட்டி

தென் இந்தியா சினிமாவை கலக்கி வரும் வெள்ளாவி பொண்ணு டாப்சி, இப்போது இந்தியிலும் கால் பதித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் அசத்தியது போல் இந்தியிலும் அசத்துவேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

லூதியா‌னாவை சேர்ந்த டாப்சி தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானார். முதல்படத்திலேயே தமிழக ரசிகர்களின் மனதில் குடியேறிய அவர் இப்போது ஜீவாவுடன் வந்தான் வென்றான் படத்தில் நடித்து வருகிறார். தமிழில் முன்னணி நடிகர் பலரும் தப்சியுடன் நடிக்க போட்டி போட்டு வருகின்றனர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழியிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இந்தி படத்திலும் நடிக்க டாப்சிக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 1981ம் ஆண்டு வெளியான ரொமான்டிக் கலந்த காமெடி படமான ஜாஸ்மி பதூர் என்ற படம் ரீ-மேக் செய்யப்படுகிறது. இப்படத்தை டைரக்டர் டேவிட் தவான் இயக்குகிறார். இதில் நாயகியாக டாப்சி நடிக்க இருக்கிறார்.

இந்தி படத்தில் நடிப்பது குறித்து டாப்சி கூறியதாவது, இந்தி படத்தில் நடிப்பது மிகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவும் தீப்தி நாவல் நடித்த கேரக்டரில் நான் நடிக்க இருக்கிறேன் என்றது மிகுந்த ஆர்வத்தை தூண்டுகிறது. இந்த படம் இந்தியில் எனக்கொரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தரும். நிச்சயமாக இந்தியிலும் அசத்துவேன். என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

பாலிவுட்டிலும் அசத்துவேன்: டாப்சி நம்பிக்கை

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கோபி செட்டிப்பாளையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இடைவிடாத மின்வெட்டால் தொழில் வளர்ச்சியும், விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தவறான ஆட்சி நடக்கிறது. அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பேரலை வீசுகிறது. தி.மு.க. மீது சூறாவளியாக மக்களின் கோபம் திரும்பியுள்ளது. என்னுடைய ஆட்சி காலத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை விதித்தேன். ஆனால் தற்போது கள்ளச்சந்தையில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுகின்றன.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. வைகோவுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அவரை கூட்டணியில் சேர்க்க தேவையான முயற்சிகளை மேற்கொண்டேன். 12 தொகுதிகள் வரை ஒதுக்க முன் வந்தேன். ஆனால் அவர் அதிகம் எதிர்பார்த்ததால் அவருடைய கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை.

நான் ஏற்கனவே கூறியதை போல அவர் மீதான மதிப்பும், மரியாதையும் எப்போதும் உண்டு. எனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் 12 வழக்குளில் நான் குற்றமற்றவர் என்று நீதி மன்றம் தெரிவித்து உள்ளது. அதனால் மேம்பாக்காக என் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்துவதை மறுக்கிறேன். நான் ஊழல் செய்யவில்லை. என் கட்சியும் ஊழல் செய்ய வில்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அன்னாஹசாரேவுக்கு என் முழு ஆதரவு உண்டு.

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா தேவை என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அனைத்து சட்டங்களையும் நிலைநாட்ட மத்தியில் ஒரு வலிமையான அரசும், ஒரு வலிமையான பிரதமரும் இருக்க வேண்டும். ஆனால் தற்போது நம்மிடம் உள்ள பிரதமர் மவுனமாக இருக்கிறார். எதையும் செயல்படுத்த முடியாமல் செயலற்று போய் உள்ளார்.

தேச நலனில் அக்கறை இல்லாமல் உள்ளார். இதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு மட்டுமன்றி தேச பாதுகாப்புக்கும் ஒற்றுமைக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் மத்தியில் நமக்கு ஒரு வலிமையான அரசும் வலிமையான பிரதமரும் தேவை.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

அதிக தொகுதி கொடுக்க முடியவில்லை: வைகோவை கூட்டணியில் சேர்க்க முயற்சித்தேன்; ஜெயலலிதா பேட்டி

நாங்குநேரி பிரசாரத்தின்போது இன்று நடிகர், நடிகையர் பிறரைத் திட்டி வருகின்றனர். ஆனால் நான் யாரையும் திட்ட மாட்டேன் என்று கூறியுள்ளார் நடிகை ராதிகா.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இடம் பெற்று தென்காசி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது.

தென்காசியில் நடிகர் சரத்குமாரும், நாங்குநேரியில் எர்ணாவூர் நாராயணனும் போட்டியிடுகின்றனர். சரத்குமாரை ஆதரித்து அவரது மனைவி ராதிகா தென்காசி தொகுதி முழுவதும் தீவிரப் பிரசாரம் செய்து வருகிறார்.

நேற்று நாங்குநேரி தொகுதியில் நாராயணனை ஆதரித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், தற்போது நடிகர், நடிகைகள் பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்கள் ஒருவரையொருவர் வசைமாரி பொழிகின்றனர்.

ஆனால் நான் யாரையும் திட்ட மாட்டேன். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முற்போக்கு சிந்தனையுடன் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதை எண்ணிப் பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில், யாரையும் வசை பாடாமல் நாகரீகமாக பிரசாரம் செய்து வரும் ஒரே நடிகை ராதிகா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

யாரையும் நான் பிரசாரத்தில் திட்ட மாட்டேன்-ராதிகா

மும்பை: இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து, இனிமையான நினைவுகளுடன் விடைபெறுகிறார் கிறிஸ்டன்.
தென் ஆப்ரிக்க அணியின் முன்னாள் வீரரான கிறிஸ்டன், கடந்த 2008ல் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். இவரது பயிற்சியில் பட்டை தீட்டப்பட்ட இந்திய அணி, டெஸ்ட் ரேங்கிங்கில் "நம்பர்-1' இடத்தை பெற்றது. சமீபத்தில் உலக கோப்பையை வென்று அசத்தியது. உலக கோப்பை தொடருடன் இவரது பயிற்சிக்காலம் முடிகிறது. இந்திய அணியில் தொடர வேண்டும் என, சச்சின், யுவராஜ் சிங் உள்ளிட்ட பலரும் வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்க மறுத்த கிறிஸ்டன் அளித்த பேட்டி:
இந்திய அணியில் பயிற்சியாளர் பதவியில் தொடர வேண்டும் என்று எல்லோரும் கேட்டுக்கொண்டனர். ஆனால் எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட இருப்பதால், இதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளேன். எனது 4, 7 வயதில் உள்ள இரு மகன்களும், தந்தையை கொஞ்சமாவது காண வேண்டும் என்று விரும்புகின்றனர். ஏற்கனவே கடந்த மூன்றாண்டுகளாக, அவர்களை விட்டு பிரிந்து அதிக தியாகம் செய்துவிட்டேன். இதனால் மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராகும் திட்டம் இல்லை.
ஒற்றுமைக்கு வெற்றி:
உலக கோப்பை வெல்வது என்பது எளிதானதல்ல. கடைசி 3 "நாக் அவுட்' போட்டிகளிலும் வெற்றிபெற்றது, எந்த ஒரு தனிப்பட்ட வீரராலும் அல்ல. ஒட்டுமொத்த அணியினர் இணைந்து, செயல்பட்டதுக்கு கிடைத்த வெற்றி. இதுபோன்ற திறமையைத் தான் நான் எதிர்பார்த்தேன்.
வலுவான அணி:
தற்போது இந்திய கிரிக்கெட் வலுவான நிலையில் உள்ளது. இதைக்கொண்டு இன்னும் நீண்ட காலத்துக்கு சிறப்பாக செயல்படலாம். வேகப்பந்து வீச்சில் மட்டும் சற்று தொய்வு உள்ளது.
அணியின் அடிப்படை வலுவாக இருக்கும் நிலையில், புதிதாக வரும் பயிற்சியாளர் இன்னும் சில புதிய ஆலோசனைகளைக் கொண்டு வரலாம். ஆனால் கடந்த மூன்றாண்டுகளாக செய்த பணியில், உடனடியாக எவ்வித மாற்றத்தையும், புதிய பயிற்சியாளர் கொண்டுவரத் தேவையில்லை.
கோஹ்லிக்கு பாராட்டு:
இந்திய அணியின் இளம் வீரர் விராத் கோஹ்லி, பெரிய போட்டிகளில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். இவர் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்கத் தயாராகி விட்டார். அதேபோல ரெய்னாவும், அபூர்வமான திறமை கொண்டவர். புஜாரா எதிர்காலத்தில் சிறந்த டெஸ்ட் வீரராக வருவார். பிரக்யான் ஓஜா இன்னும் சற்று கற்றுக்கொள்ள வேண்டும்.
ஜாகிர் அசத்தல்:
உலக கோப்பை தொடரில் முனாப் படேல், ஆஷிஸ் நெஹ்ரா சிறப்பாக செயல்பட்டனர். தற்போதைய நிலையில் ஜாகிர் கான் தான், உலகின் சிறந்த மிதவேக பந்து வீச்சாளர். நெருக்கடியான நிலையில் அசத்தும் இவர்தான் "நம்பர்-1' பவுலர். இவருக்கு, நல்ல "பார்ட்னர்' தேவைப்படுகிறது.
சாதித்த யுவராஜ்:
உலக கோப்பை தொடருக்காக பேட்டிங் மற்றும் பவுலிங்கிலும் கடின பயிற்சி செய்தார் யுவராஜ் சிங். கடைசியில் தொடர் நாயகன் விருது வென்றதை நினைத்து உண்மையில் பெருமைப்படுகிறேன். ஸ்ரீசாந்த் உண்மையில் சிறந்த பவுலர். கடைசியாக பங்கேற்ற ஏழு டெஸ்ட் போட்டிகளில் இவர் தான் எங்களுக்கு முக்கிய ஆயுதம். அவர் தனது திறமையை தொடர்ந்து வளர்த்துக்கொண்டு, கிரிக்கெட்டின் அடுத்த "லெவலுக்கு' செல்ல வேண்டும்.
ரசிகர்களுக்கு பாராட்டு:
இந்தியாவில் பணியாற்றியது வியக்கத்தக்கதாக இருந்தது. இந்திய மக்கள் எந்தளவுக்கு கிரிக்கெட்டை நேசிக்கின்றனர், என்மீது எந்தளவுக்கு பாசம் வைத்துள்ளனர் என்பதைப் பார்க்கும் போது, ஆச்சரியமாக இருந்தது. இங்கு எனக்கு அதிக நண்பர்கள் கிடைத்துள்ளனர்.
இவ்வாறு கிறிஸ்டன் தெரிவித்தார்.
---
ஐ.பி.எல்., பயிற்சியாளர்
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகி தென் ஆப்ரிக்கா செல்லும் கிறிஸ்டன் கூறுகையில்,""இப்போது தென் ஆப்ரிக்கா செல்லும் நான், மீண்டும் இந்தியா வருவது குறித்து யோசிப்பேன். ஏதாவது ஒரு ஐ.பி.எல்., அணியில் பயிற்சியாளராகும் திட்டம் உள்ளது. ஆனால் இது எப்போது நடக்கும் என்றுமட்டும் தெரியாது,'' என்றார்.
---
இந்தியாவுக்கு ஆதரவு
தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான போட்டி குறித்து கிறிஸ்டன் கூறுகையில்,"" தென் ஆப்ரிக்கா எனது தேசம். உலக கோப்பை தொடரில் தோல்வியடைந்த போது, மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் அவர்கள் காலிறுதியில் அடைந்த தோல்வி, எங்களுக்கு மகிழ்ச்சி தந்தது. தென் ஆப்ரிக்க அணியுடன் பல முறை விளையாடி இருந்தாலும், எனது இதயம் 100 சதவீதம் இந்திய அணிக்கு ஆதரவாகத்தான் இருக்கும்,'' என்றார்.

விடைபெறுகிறார் கிறிஸ்டன்!

மும்பை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'கஜினி' ஆமிர்கான் மற்றும் டோணி ஆகியோர் ஒரே இடத்தில் குழுமியிருக்கும்போது சாதிக்க முடியாதது என்று எதுவுமே இல்லை என்று இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றி குறித்து சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வர்ணித்துள்ளார்.

அமிதாப் பச்சனுக்கு ஒரு மூட நம்பிக்கை உண்டு. அதாவது அவர் இந்திய அணி விளையாடுவதை டிவியில் பார்க்க மாட்டாராம். அப்படிப் பார்த்தால் இந்தியா தோற்று விடும் என்பது அவரது நம்பிக்கை. ஆனால் நேற்று அவரால் அப்படிப் பார்க்காமல் இருக்க முடியவில்லையாம்.

போட்டியை முழுமையாக வீட்டில் உட்கார்ந்து டிவியில் பார்த்துள்ளார் அமிதாப். அந்த அனுபவத்தை ட்விட்டரில் இப்படிக் கூறியுள்ளார் அமிதாப்.

என்னால் டோணி தலைமையிலான இந்திய அணி விளையாடியதை பார்க்காமல் இருக்க முடியவில்லை. 2 விக்கெட் இழப்புக்கு 33 ரன்களை இந்தியா எடுத்திருந்தபோது ஏன் டிவி முன்பு உட்கார்ந்தோம் என்றுதான் நினைத்தேன். ஆனால் போகப் போக என்னால் எழுந்திருக்க முடியவில்லை. டோணி அடித்தாரே அந்த கடைசி சூப்பர் சிக்ஸ், அதை விளக்கவே வார்த்தை இல்லை.

அதுசரி, ஒரே இடத்தில் ரஜினி, கஜினி (ஆமிர்கான்), டோணி ஆகியோர் இருந்தால், சாதிக்க முடியாதது என்று எதுவுமே கிடையாதே!.

ஏதோ நாடே சுதந்திரமடைந்தது போல இந்த வெற்றியை மக்கள் கொண்டாடியது என்னைக் கவர்ந்துள்ளது. என்ன ஒரு ஆட்டம், என்ன ஒரு ஆட்டம். அட்டகாசமான போட்டி. என்னால் மறக்க முடியாது என்று கூறியுள்ளார் அமிதாப்.

ரஜினி, கஜினி, டோணி ஒன்றாக இருந்தால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை-அமிதாப்

மும்பை: ஒருவேளை இறுதிப் போட்டியில் இந்தியா மட்டும் தோற்றிருந்தால், என்னை கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்திருப்பார்கள் என்று கூறியுள்ளார் கேப்டன் டோணி.

கபில்தேவுக்கு அடுத்து இந்தியாவின் சிறந்த கேப்டனாக உருவெடுத்து விட்டார் டோணி. கங்குலியால் வென்று தர முடியாமல் போன உலகக் கோப்பையை டோணி வென்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் உயரிய இடத்தைப் பிடித்துள்ளார்.

இருப்பினும் நேற்றைய போட்டியின்போது டோணியின் சில முடிவுகள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தின. அத்தோடு மட்டுமல்லாமல், தப்பு செய்கிறாரே டோணி என்ற விமர்சனமும் கூட எழுந்தது. ஆனால் இந்தியா பெற்ற வெற்றியும், டோணி ஆடிய ஆட்டமும் அத்தனையையும் துடைத்துப் போட்டு விட்டது.

இருந்தாலும் தன்னை நோக்கி எழுந்த, விஸ்வரூபம் எடுக்கக் காத்திருந்த ஏவுகணைகள் குறித்து டோணியும் அறிந்தே வைத்திருந்தார் போலும். போட்டியின் முடிவில் இதுகுறித்து அவரே குறிப்பிட்டார்.

டோணி கூறுகையில், இன்றைய போட்டி எனக்கு மிகக் கடுமையான ஒன்று. போட்டித் தொடர் முழுவதும் யுவராஜ் சிங் அபாரமாக ஆடி வந்தார். நல்ல பார்மிலும் அவர் உள்ளார். இந்த நிலையில் அவருக்குப் பதில் நான் களம் இறங்கியது பல கேள்விகளை எழுப்பும் என்பதை நான் அறிவேன். இருப்பினும் அந்த நேரத்தில் நான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தேன்.

ஒருவேளை எனது முடிவு தவறாகப் போயிருந்தால், நான் சரியாக ஆடாமல் போயிருந்தால் நிச்சயம் நான் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருப்பேன்.

ஆனால் நான் எடுத்த முடிவு சரியானதே. எனது முடிவை கிர்ஸ்ட்னும் கூட ஆதரித்தார். ஒரு வேளை நான் முன்னரே பேட் செய்யாமல் போயிருந்தால் அடுத்தடுத்து இடது கை வீரர்களாக மாறியிருக்கும். கம்பீர், யுவராஜ், சுரேஷ் ரெய்னா என தொடர்ந்து இடது கை ஆட்டக்காரர்களாக களம் இறங்கியிருப்பார்கள். அது பெரிய ரிஸ்க்காகவும் மாறியிருக்கும்.

மேலும், இலங்கை அப்போது ஸ்பின்னர்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் நான் இறங்குவதுதான் சரியானதாக இருக்கும் என கருதி அந்த முடிவை எடுத்தேன். அது சரியானதாகவே இருந்தது.

அதேபோல இன்னும் கூட நிறைய கேள்விகளுடன் பலரும் காத்திருந்தனர். ஏன் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. ஏன் ஸ்ரீசாந்த்தை சேர்த்தீர்கள் என்பது போல பல கேள்விகள் உள்ளன. ஆனால் நாம் கோப்பையை வென்று விட்டோம். எனவே இந்த கேள்விகளுக்கு இப்போது இடமில்லை என்று நான் கருதுகிறேன்.

முரளிதரனின் பந்து வீச்சை நான் வெற்றிகரமாக சந்தித்தேன். நான் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸில் இடம் பெற்றிருந்த முரளிதரனுடன் விளையாடியது உபயோகமாக இருந்தது. அவரது தூஸ்ரா வித்தைகளை நெருக்கமாக இருந்து பார்க்க முடிந்தது. அவரது பந்து வீச்சின் ரகசியத்தையும் அறிய முடிந்தது. எனக்குத் தெரியும் என்பது அவருக்கும் தெரியும். எனவேதான் இறுதிப் போட்டியில் அவரது பந்துகளை என்னால் எளிதில் அடிக்க முடிந்தது.

நானும் கம்பீரும் சேர்ந்து நீண்ட காலத்துக்குப் பிறகு இணைந்து ஆடினோம், நிலைத்து ஆடினோம், சிறப்பாக ஆடினோம். ரிஸ்க்கான ஷாட்கள் வேண்டாம் என்று முடிவு செய்து அதற்கேற்ப ஆடினோம். அதற்கு நல்ல பலன் இருந்தது என்றார் டோணி.

இந்தியா மட்டும் தோற்றிருந்தால் என்னை வறுத்தெடுத்திருப்பார்கள்-டோணி

தர்மபுரி மாவட்டத்தில் தே.மு.தி.க மற்றும் அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு..தி.க. தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.

அவர் தர்மபுரி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கரை ஆதரித்து தர்மபுரி பஸ் நிலையம் அருகே உள்ள ராஜகோபால் கவுண்டர் பூங்கா பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். மாலை 3.15 மணியளவில் அங்கு பிரசாரம் செய்தார்.

அவருடன் வேட்பாளர் பாஸ்கர் கை கூப்பி நின்றவாறு நின்றார். அவரை விஜயகாந்த் அறிமுகம் செய்து வைத்தார். இதை யடுத்து வேட்பாளர் பாஸ்கர் அதே வாகனத்திற்குள் உட்கார்ந்து கொண்டார். அந்த சமயத்தில் விஜயகாந்த் பேசும் போது மைக் சரியாக வேலை செய்யவில்லை.

அதோடு விஜயகாந்த் பேசும் போது வேட்பாளர் பாஸ்கர் என்பதற்கு பதிலாக பாண்டியன் என்று கூறினார். அப்போது வேட்பாளர் என் பெயர் பாஸ்கர் என கூறமுயற்சித்ததாகவும், இதைக்கேட்ட விஜயகாந்த் வேட்பாளரை பிரசார வாகனத்திலேயே பொதுமக்கள் மத்தியில் தாக்கியதாக பரபரப்பாக பேசப்பட்டது.

மேலும் வேட்பாளரை தாக்க வில்லை. உதவியாளரைத்தான் தாக்கினார் என்றும் பேசப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தர்மபுரி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

தர்மபுரியில் நேற்று தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருந்த போது கேப்டன் பேசிய மைக்கில் பேட்டரி கழன்றி கீழே விழுந்தது. அதை எடுத்து கொடுக்குமாறு தனது உதவியாளரிடம் கூறினார். அவர் எடுத்து கொடுத்த பின்பு தொடர்ந்து அவர் பேச ஆரம்பித்தார்.

மீண்டும் அந்த பேட்டரி கீழே விழுந்தது. அப்போதும் அதை எடுத்து கொடுக்க சொன்னார். உதவியாளர் எடுத்து கொடுத்தார். பேட்டரியை தான் அவர் கையால் 2, 3, முறை தட்டினார். ஆனால் வேட்பாளரை தாக்கிவிட்டார் என்று தவறாக தகவல் பரப்பி விடப்பட்டு இருக்கிறது.

இந்த சம்பவத்தின் போது நானும், பாலக்கோடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.அன்பழகனும் பிரசார வேனுக்குள் சீட்டில் அமர்ந்திருந்தோம். மேலும் நான் கட்சி கலர் அணிந்த துண்டு கழுத்தில் அணிந்திருந்தேன். என் தலையிலும் முடி அதிகளவில் உள்ளது. ஆனால் விஜயகாந்த் தாக்கியது போல் காட்டப்பட்டது சித்தரிக்கப்பட்ட காட்சி. எனது வெற்றியை தடுக்க இது போன்ற ஒரு பிரசாரத்தை செய்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தர்மபுரியில் நடந்த பிரசாரத்தில் விஜயகாந்த் என்னை தாக்கினாரா? தே.மு.தி.க. வேட்பாளர் பரபரப்பு பேட்டி

சென்னை: மு.க.ஸ்டாலின்தான் என்னுடைய அரசியல் வாரிசு என்பது கேள்விக் குறியாக வாய்ப்பில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சிஎன்என்-ஐபிஎன் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டி விவரம்:

எனது சாதனைகளை நம்புகிறீர்களா இல்லையா?:

கேள்வி: இந்தத் தேர்தலில் தமிழக வாக்காளர்கள் முன் திமுக வைக்கும் கேள்விகள் என்ன?

கருணாநிதி: திமுக அரசு 1967ம் ஆண்டு முதல் இதுவரையில் ஆற்றியுள்ள சாதனைகளில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?, இல்லையா?. நாங்கள் நம்பகமானவர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்களா?. இல்லையா?, நாங்கள் அறிவித்த திட்டங்கள், வாக்குறுதிகள் ஆகியவற்றை நிறைவேற்றியிருக்கிறோமா?, இல்லையா?. அப்படி நிறைவேற்றக் கூடிய அளவுக்கு ஆற்றலும், அறிவும் அதே நேரத்தில் அக்கறையும் உள்ளவர்கள் நாங்கள் என்பதை நீங்கள் உணருகிறீர்களா?, இல்லையா?. தமிழ்நாட்டில் உள்ள ஏழை-எளிய மக்களுக்கு பாடுபடுகின்ற அரசு இது என்பதை, அடித்தட்டு மக்களுக்காக உழைக்கின்ற அரசு இது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?, இல்லையா?. இத்தகைய கேள்விகளைத்தான் நான் வாக்காளப் பெருமக்களிடம் முன் வைக்க விரும்புகிறேன்.

இலவசங்கள் எதற்காக?:

கேள்வி: தேர்தல் அறிக்கையில் பல இலவசத் திட்டங்களை அறிவித்துள்ளீர்கள். 2006ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் இலவச கலர் தொலைக் காட்சி பெட்டிகளை வழங்கினீர்கள். தற்போது லேப்-டாப், கிரைண்டர், மிக்ஸி வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறீர்கள். தேர்தலில் வெற்றித் தோல்வியை நிர்ணயிப்பது இலவச திட்டங்கள் மட்டும் தானா?

கருணாநிதி: இலவச சலுகைகள் என்பது வாக்குகளைப் பெறுவதற்காக அல்ல. ஏழை-எளிய மக்கள் தமிழகத்தில் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்களை வாழ வைக்க வேண்டும் என்ற குறிக்கோள் திமுக அரசுக்கு இன்று, நேற்றல்ல- இந்த இக்கத்தை தொடங்கியதே அந்த ஏழைகளை வாழ வைப்பதற்காகத்தான். ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காண்போம் என்பது தான் எங்கள் தலைவர் அண்ணாவின் முழக்கம். எழைகளின் முகங்களிலே அந்தச் சிரிப்பைக் காண்பதற்காகத்தான் நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கின்ற முயற்சிகளில் இந்த இலவச திட்டங்களும் ஒன்றாகும்.

தேர்தலுக்குப் பின்னும் கூட்டணி தொடருமா?:

கேள்வி: கட்சிகளிடையே தொகுதி ஒதுக்கீடு பற்றிய பேச்சுவார்த்தை நடந்தபோது காங்கிரசுக்கும், திமுகவிற்கும் இடையே கருத்து மாற்றங்கள் ஏற்பட்டன. தேர்தலுக்குப் பிறகும் இந்தக் கூட்டணி தொடரும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?

கருணாநிதி: இரண்டும் அகில இந்திய அளவில் இல்லாவிட்டாலும், இந்திய அளவில் காங்கிரசும், தமிழ்நாட்டளவில் திமுகவும் பெரிய கட்சிகள் என்பதை நாங்கள் பரஸ்பரம் உணர்ந்தவர்கள். எங்களுக்கு ஒரு சில கொள்கைகள், லட்சியங்கள் இருக்கின்றன. அவைகளை நிறைவேற்றுவதற்காக எங்களுக்கு மத்திய அரசின் உதவி தேவைப்படுகிறது. உதாரணமாக தமிழைச் செம்மொழியாக ஆக்க வேண்டும் என்பதற்காக நூற்றாண்டு காலத்திற்கு முன்பு நாங்கள் திட்டம் வகுத்து- பரிதிமாற்கலைஞர் என்ற சூரிய நாராயண சாஸ்திரிகள் தமிழ் செம்மொழியாகாக வேண்டுமென்பதற்காகக் குரல் கொடுத்தார்.

அந்தக் குரல் என்ன ஆகுமோ என்ற அளவுக்கு இடையில் வந்த ஆட்சியாளர்கள் அதைப் பற்றி கவலைப்படாமல் இருந்தபோது, சோனியா காந்தி வந்து தான் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தர அவர்களே முன்னின்று முயற்சித்து மறைந்த கல்வி அமைச்சர் அர்ஜுன் சிங் உதவியோடு தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தார்கள்.
ஆகவே நாங்கள் மாறுபடுவதாக இருந்தால், எங்களுக்கும் மத்தியிலே அமைகிற அரசுக்கும் மாறுபட்ட கொள்கைரீதியாக வித்தியாசங்கள் இருக்கலாம், அதாவது திட்டங்கள் தமிழகத்திற்கு இன்னும் நிறைய வேண்டும் என்று கருணாநிதி போராடுவதின் காரணமாக ஏற்படுகிற மாறுபாடுகள் இருக்கலாம்.

ஆனால் அடிப்படைக் கொள்கைகளில் எங்களுக்கும் அவர்களுக்கும் அதாவது மதவாதத்தை ஒழிப்பது, இந்தியாவில் சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவது போன்றவற்றில் நாங்கள் இருவரும் மாறுபட்டவர்கள் அல்ல.

கூட்டணி ஆட்சியா?:

கேள்வி: இந்த முறை திமுக தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகக் குறைவாக 121 இடங்களில் தான் போட்டியிடுகிறது. தேர்தலில் திமுக வென்றாலும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையப் போகிறது என்பதற்கான முன் அறிவிப்பதாக இதனை எடுத்துக் கொள்ளலாமா?

கருணாநிதி: அரசியல் மாற்றங்களைப் பொறுத்தவரையில் ஒரே கட்சியின் ஆட்சியா? அல்லது கூட்டணி ஆட்சியா? என்பதை தேர்தல் முடிந்த பிறகு தான் சொல்ல முடியும்.
மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுங்கட்சியாக இருந்தாலும், தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே கூட்டணி அமைத்து அந்தக் கூட்டணியில் பல கட்சிகள் இணைந்து- இடதுசாரிக் கட்சிகள், பார்வர்டு பிளாக் எல்லாம் இடம் பெற்று,அரசு அமைக்கிறார்கள்.

அதே நேரத்தில் தமிழ்நாட்டு மக்களும் மற்றவர்களும் தமிழகத்தில் ஒரே கட்சியின் ஆட்சி நீடிக்க வேண்டுமென்று தான் கருதுவார்கள் என்று எண்ணுகிறேன். ஒரு வேளை 'வோட்டிங் பேட்டன்' (voting pattern) என்று சொல்வார்களே, அதிலே மாற்றம் ஏற்பட்டு கூட்டணி ஆட்சி அமைந்தால் தான் ஒரு அரசு நிலைத்திருக்க முடியும் என்ற சூழ்நிலை தோன்றினால் நாங்கள் அப்போது மற்ற கட்சிகளோடு கலந்து பேசி அதைத் தீர்மானிப்போம்.

அரசியல் வாரிசு முக ஸ்டாலின்தான்:

கேள்வி: 12வது முறையாக வேட்பாளராக நீங்கள் போட்டியிடுகிறீர்கள். இந்தத் நேரத்தில் உங்கள் மகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் உங்களுடைய அரசியல் வாரிசு என்பதில் ஏதாவது கேள்விக்குறி இருக்க முடியுமா?

கருணாநிதி: எந்த கேள்விக் குறிக்கும் இடம் இல்லாமல் வளர்ந்தவர் தான் மு.க. ஸ்டாலின். நான் அரசியலில் நுழைந்து அறிஞர் அண்ணா தலைமையில் ஒரு அரசியல் கட்சியின் முக்கிய பொறுப்பை ஏற்றுக் கொள்பவனாக இருந்து, பொருளாளராக அண்ணா அவர்களால் நியமிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த பொறுப்பை நான் எப்படி நிறைவேற்றினேனோ, அதற்கு அண்ணா காட்டிய அன்பும் என்னிடம் அவர்கள் வைத்த நம்பிக்கையும், அதற்கு கொஞ்சமும் குந்தகம் இல்லாமல் எப்படி நான் நடந்து கொண்டேனோ, அதைப் போலவே என்னுடைய தலைமையில் மு.க.ஸ்டாலின் தொண்டாற்றி வருகிறார்.

என்னிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்ற கழகத் தோழர்கள் கழகத்திலே இருக்கின்ற முன்னணியினர் பொதுக்குழு உறுப்பினர்கள் எல்லாம் மு.க.ஸ்டாலினிடமும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே ஸ்டாலின் மீதான நம்பிக்கை குறித்து கேள்விக் குறி எழ எந்தவித நியாயமும் இல்லை.

திமுக சங்கர மடம் அல்ல!:

கேள்வி: ஸ்டாலினை அடுத்த தலைவராக திமுகவில் அனைவரும் ஏற்பார்களா?

கருணாநிதி: திராவிட முன்னேற்ற கழகம் ஒரு ஜனநாயக இயக்கம், அடுத்தது யார் என்ற கேள்விக்கு நாமே ஒருவரைப் பிடித்து வைத்து, இவர் தான் அடுத்தது என்று சொல்லக்கூடிய இயக்கம் அல்ல இது. அதாவது மடாதிபதிகள் நடத்துகின்ற மடம் அல்ல இது. மடாதிபதி என்றால், உதாரணம் சொல்ல வேண்டுமேயானால் சங்கரமடம் இருக்கிறது அல்லவா, அந்த மடத்திலே பெரியவர் சங்கராச்சாரியார் இருந்து, தனக்கு பின்னர் இவர் தான் என்று ஒருவரை அடையாளம் காட்டி விட்டு சென்றார். அதை அந்த மடத்தை சேர்ந்தவர்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். அதைப் போல திராவிட முன்னேற்ற கழகம் ஒரு மத ஸ்தாபனம் அல்ல. இது ஜனநாயகரீதியான ஸ்தாபனம். ஜனநாயகத்தில் தலைவர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதை போல தான் இயக்கத் தோழர்கள், கழகச் செயலாளர்கள் எல்லாம் சேர்ந்து இவர் இந்தப் பொறுப்பு வகிக்க தகுதியானவர் என்று கருதினால் அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

யார்-யாரோ சேர்ந்து கொண்டு சில குடும்பங்கள் உருவாகின்றன:

கேள்வி: நீங்கள் குடும்ப அரசியலை ஊக்குவிக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளதே?

கருணாநிதி: எனக்கு குடும்பம் இருப்பது தான் பெரிய தொல்லையே. என் குடும்பத்தைப் பற்றி பேசுபவர்கள், முதலில் அவர்களுக்கு குடும்பம் இருக்கிறதா இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும். குடும்பம் நடத்துவது என்றால் திருமணமாகி ஆணும், பெண்ணும் சேர்ந்து அவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகள், அண்ணன், தம்பி இவர்கள் தான் குடும்பம் என்று அர்த்தம் அல்ல.

துணைக்கு யார்-யாரோ சேர்ந்து கொண்டு சில குடும்பங்கள் உருவாகின்றன. நான் அப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல. ஒரு நேர்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன்.

கலைஞர் டிவி விவகாரம்-ஊழலே அல்ல:

கேள்வி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழலில் சிபிஐ உங்கள் மகளையும், மனைவியையும் விசாரித்ததோடு கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் கணக்குகளையும் விசாரித்துள்ளது. அதனால் எதிர்க்கட்சிகள் உங்களுக்கு தெரியாமல் எதுவும் இதிலே நடைபெற்றிருக்க முடியாது என்று சொல்கிறார்கள். இதற்கு என்ன பதில் கூறுகிறீர்கள்?

கருணாநிதி: இது ஊழலே அல்ல. இதைப் பற்றி பகிரங்கமாக எங்கள் பத்திரிகையிலே விளக்கம் வெளியிட்டுள்ளோம். கலைஞர் டி.வியில் என் பெயர் இடம் பெற்றிருக்கிறதே தவிர எனக்கு அதில் எந்தவிதமாக உரிமையும் கிடையாது. அதில் என்னுடைய மகள் (உதவியாளரிடம் விசாரித்து விட்டு) 20 சதவீதம் பங்குதாரர். என்னுடைய மனைவி தயாளு 60 சதவிகித பங்குதாரர்.

சரத்குமார் 20 சதவிகித பங்குதாரர். இந்த விவரத்தையே நான் விசாரித்து விட்டு தான் கூறுகிறேன் என்பதை நீங்கள் பார்க்கலாம். கலைஞர் டி.வி. கருணாநிதிக்கு சொந்தமானதல்ல. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அதிலே பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு எழுந்தவுடனேயே அதைப் பற்றி பத்திரிகைகளில் சரத்குமார் ஒரு விளக்க அறிக்கையினைத் தந்திருக்கிறார்.

அது எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கிறது. ஒரு கடனை அடைப்பதற்காக ஒருவரிடம் கடன் பெற்றார்கள். பிறகு பெற்ற கடனை வட்டியோடு திருப்பிக் கொடுத்து விட்டார்கள். அதற்கான வருமான வரி தொகை எல்லாம் தரப்பட்டு அந்த ஆதாரங்களையும் காட்டியிருக்கிறார்கள். இதற்குப் பிறகு அது எப்படி ஊழலாகும் என்று எனக்குத் தெரியவில்லை.

பம்பையடிக்கும் அரசியல் பூசாரிகள்:

கேள்வி: இந்த ஊழல் குற்றச்சாட்டால் திமுகவின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விட்டதா?

கருணாநிதி: சைபர், சைபர், சைபர், சைபர் என்று போட்டு இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்று சொல்லும் போது ''பல்லுக்கு பல் இரு காதம், பல்லிடுக்கு மூன்று காதம்'' என்று அந்த காலத்தில் பூசாரிகள் பம்பை அடிப்பார்கள். அதைக் கேட்டு இன்னொருவர் ஆமாம், ஆமாம் என்பார். மக்களும் அதை கேட்டு தலையட்டிக் கொண்டிருப்பார்கள்.

'காதம்' என்றால் பத்து மைல் தொலைவு. பல்லுக்கு பல் இரு காதம் என்றால் இருபது மைல் தூரம். பல்லிடுக்கு மூன்று காதம் என்றால் முப்பது மைல். அந்த அளவிற்கு பல்லுக்கிடையே இடைவெளி என்றால் வாய் எந்த அளவிற்கு இருக்கும் என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல், ஆமாம், ஆமாம் என்று ஒப்புக் கொண்டு பூசாரி பம்மை அடிப்பதைப் போல பாமர மக்களை ஏமாற்றிட ஒரு சில அரசியல்வாதிகள் பம்பை அடிக்கிறார்கள்.

அது தான் உண்மை என்று வேறு சிலர் பம்பை அடிக்கிறார்கள். அந்த விஷயத்தைப் பற்றி நான் விரிவாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகின்ற காரணத்தால் எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஊழலா, இல்லையா என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டியது உச்ச நீதிமன்றம். அதிலே நான் தலையிட விரும்பவில்லை.

அந்த நிறுவனத்துக்கு கடனைக் கொடுத்தவர்கள் மீது வழக்கு இருக்கலாம். கடன் வாங்கிய பணம் ஊழல் பணம் என்று சொல்வது முறையல்ல. அது நீண்ட விசாரணைக்கு பிறகுதான் தெரியும்.

இவ்வாறு தனது பேட்டியில் கருணாநிதி கூறியுள்ளார்.

ஸ்டாலின்தான் அரசியல் வாரிசு என்பது கேள்விக்குறியாக வாய்ப்பில்லை!-கருணாநிதி

கற்பு முடிந்து போன விஷயம்; அது பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்று நடிகை குஷ்பு கூறினார். ஏற்கனவே பெண்களின், கற்பு குறித்து தனது கருத்தை வெளியிட்டு பிரச்னையில் சிக்கியவர் நடிகை குஷ்பு. ஜெயா டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த அவர் தற்போது தி.மு.க.வில் ஐக்கியமாகி விட்டார். வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதராக பிரசார களமிறங்கியிருக்கும் குஷ்பு, முதன் முதலாக தனது பிரசாரத்தை மதுரையில் "பிளையிங் கிஸ் கொடுத்து நேற்று தொடங்கினார்.

முன்னதாக மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை அவரது வீட்டில் சந்தித்த குஷ்பு, பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கற்பு குறித்த கேள்விகளுக்கு மழுப்பலான பதிலை தெரிவித்தார். பெண்களின் "கற்பு குறித்து கருத்து வெளியிட்ட உங்களுக்கு பிரசாரத்தின் போது பிரச்னைகள் வந்தால்? என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த குஷ்பு, கற்பு முடிந்து போன விஷயம்; இதற்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சொல்லியாச்சு, என்று கூறினார். அதைத்தொடர்ந்து கற்பு குறித்து உங்களது கருத்தால், உங்கள் மீது பெண்கள் தவறான அபிப்ராயம் வைத்துள்ளனர். அது பிரசாரத்தில் பிரதிபலித்தால், பிரச்னை ஏற்படுமே? என்று கேட்டதற்கு, கேள்வி கேட்ட நிருபரை பார்த்து, நீங்கள் அ.தி.மு.க.,வா? என, டென்ஷனாக கேட்டு விட்டு, பேட்டியை முடித்துக் கொண்டு பிரசாரத்துக்கு புறப்பட்டார்.

கற்பு முடிந்து போன விஷயம் - குஷ்பு பேட்டி

முக நூல்

Popular Posts